Wednesday, December 26, 2012

அதிகமாக விரும்பினேன் குறைவான தேவைக்கு !

அதிகமாக விரும்பினேன் குறைவான தேவைக்கு
தேவையானது கிடைத்த பின் விரும்பியதை விரும்பவில்லை

அளவுக்கு மேல் நேசித்தேன் அடைவதற்கு
அடைத்தபின் நேசிப்பதை விரும்பவில்லை

நேசம் வந்தது விளையாட்டாக
நேசம் போனதும் விளையாட்டினால்

உள்ளே வரும் வழி தெரிந்தது
வெளியே போகும் வழி தெரியவில்லை

திருமணம் செய்ய திருமணமாகாதவர் ஆசைப்பட்டார்
திருமணமானவர் திருமணம் முறிக்க ஆசைப்பட்டார்

சந்தைக்கு சரக்கு நிறைய  வந்தது விலை குறைந்தது
சந்தைக்கு சரக்கு வரவு குறைந்தது விலை ஏற்றமானது

மின்சாரம் அதிகமானது தொழிற்சாலைகள் வரவானது
மின்சாரம் குறைவானது தொழிற்சாலைகள் மூடப்பட்டன

மின்சாரம் அதிகமானது இனாம் மின்சாரம் வழக்கப்பட்டது
மின்சாரம் குறைவானது இனாம் மின்சாரம் நிறுத்தப்பட்டது


இனாம் கொடுக்கும் பழக்கம் அதிகமானது
வேலை கற்கும் மக்கள் குறைவாயினர்

அளவோடு கிடைக்க ஆசை அதிகமானது
அதிகமாக கிடைக்க ஆசை அடக்கமானது

அதிகமாக கிடைத்த பொருளை விரையம் செய்வார்
குறைவாக கிடைத்த பொருளை பங்கு போட இசையார்

நீடித்த வாழ்வு வேண்டுவார்
நினைத்தது கிடைக்காமல் தவிப்பார்

”வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு. யாண்டும் இடும்பை இல”

No comments: