Showing posts with label குர்ஆன். Show all posts
Showing posts with label குர்ஆன். Show all posts
Tuesday, February 23, 2016
குர்ஆன் ஓதுதலை ஒவ்வொரு ஸூராவாக கேட்கவும் மற்றும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்
In the Name of Allah, the Most Beneficent, the Most Merciful
மக்கா மஸ்ஜிதுல் ஹரம் இமாம் அப்துர் ரஹ்மான் சுதைஸ் குர்ஆன் ஓதுதலை ஒவ்வொரு ஸூராவாக கேட்கவும் மற்றும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்
Download Complete audio recitation of the Holy Qur’an, in Arabic from Abdul Rahman Al-Sudais அப்துர் ரஹ்மான் அல் சுதைஸ்
Friday, February 27, 2015
குர்ஆன் மற்றும் தமிழ்,ஆங்கில பாடல்கள் கேளுங்கள்
| -Al-Fatiha_Basfar.mp3 Download | |||||||
| Al-Muallim_Who is the loved one.mp3 Download |
|||||||
| SamiYusuf who is the loved one.mp3 Download |
|||||||
| Surah Burooj (Yahya Hawwa).mp3 Download |
|||||||
| -Luqman_Mishary_A.mp3 Download |
|||||||
| Beauty Tips for My Sisters in Islam.mp3 Download |
|||||||
| ILLALLAH BY KAMAL UDDIN.mp3 Download |
|||||||
| Nasheed - Free ( Hijab ).mp3 Download |
|||||||
| Al-Mursalat_Mishary.mp3 Download |
|||||||
| An-Naziat_Ghamidi.mp3 Download |
|||||||
| - Yusuf Islam - Mountain of Light.mp3 Download |
|||||||
| -AL-Infitar_Ghamidi.mp3 Download |
|||||||
| Ahmed Bukhatir Forgive me nasheed.mp3 Download |
Thursday, May 8, 2014
பிரபஞ்சத்தின் பார்க்க வேண்டிய அற்புதக் காட்சி
பிரபஞ்சத்தின் விரிவு
பிரபஞ்சத்தின் அற்புத அளவு
பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் எண்ணிக்கை அநேகமாக உலகின் அனைத்து கடற்கரை மணல் துகள்கள் எண்ணிக்கை போன்று உள்ளது .
பிரபஞ்சத்தின் மொத்த பொருள்கள் கணக்கிலடங்காதவை.
விண்மீன் குழுவில் கோடிக் கணக்கில் நட்சத்திரங்கள்
Friday, January 11, 2013
உன்னையே நேசிக்கிறேன்
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
112:1 قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
112:1. (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
112:2 اللَّهُ الصَّمَدُ
112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
112:3 لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
112:4 وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை - குர்ஆன்
=======================================================================
உன்னையே நேசிக்கிறேன்
உன்னையே .(உன்னிடமே) யாசிக்கிறேன்
உன்னையே நாடுகிறேன்
உன்னையே போற்றுகிறேன்
உன்னையல்லால் யார் உதவுவார்
உன்னையல்லால் யாரைக் கேட்போம்
உன்னை நாடியோர் கை விடப்படார்
உன்னை நோக்கி ஓர் அடி வைத்தால்
என்னை நோக்கி ஓடி வருவாய்
சிந்தனைகள் ,கருத்துகள் .தூண்டுதல்கள் அனைத்தும் இறைவனது அருட்கொடை அது உங்களின் ஒருவனாக நானும் இருப்பதின் வெளிப்பாடு . தனியே பிறப்பது இருவரின் கூட்டு முயற்சி. வந்தவுடன் அரவணைத்து வாழ்த்துவோர் அநேகம் . அவர்களின் நன்மையை நாடும் ஒருவனாக இருப்பதிலேயே என் உயர்வின் அடித்தளமாக அமையும் . தூற்றுவோர் இருக்க துவள வேண்டியதின் நிலைப்பாடு வேண்டாம் . தூக்கிச் செல்வோர் வசை பாடி இசை பாட இறைவனும் என்னை கனலில் விட்டு விடுவதை நான் அஞ்சுகிறேன். தென்றலாய், தேன் மதுரச் சுவையாய் இருக்கட்டும் உங்கள் வாய் மொழி.
நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்வதில்லை - எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள் [குர்ஆன் 10:44]
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம்.
குர்ஆன் 2:21
Habibi means 'My love' or 'My beloved'. .
Friday, December 28, 2012
ஆளுமை சக்தி பெற்றதாய் நினைப்போர் ஆணவ புத்தி பெற்று களிக்கின்றனர் !

ஆளுமை சக்தி பெற்றதாய் நினைப்போர்
ஆணவ புத்தி பெற்று களிக்கின்றனர்
மானம் போக ஆணவம் அடங்கும்
இருந்த இடம் அறியாமல் இருளில் மூழ்குவர்
வேண்டாம் இந்த வீணான விளம்பரம்
வேண்டியவர் இருந்த இடம் விட்டு அகல்வர்
உம்மையே நீர் அறிந்தால்
உமக்கோர் உண்மை விளங்கும்
ஓரிடம் உண்மையின் உறைவிடம்
ஓதி உம்மை அறிய ஓரிடம்
உமை ஒளி பெறச் செய்யும் ஓரிடம்
உமக்குள் உள்ளதனை நீர் அறிவீர்
யென் நேரமும் இறைவனை நேசித்து
இயன்றதனை செவ்வனே செய்வீர்
துன்பம் வர துவளா நிலை வேண்டும்
இன்பம் வர குதியா நிலை வேண்டும்
இரு நிலையிலும் பொறுமை காண
இதயமெனும் இருட் கோட்டையை
இறைவனிடம் இதயத்தை ஒப்படைப்பின்
இதயத்தின் இருள் மறைய
இதயத்தில் ஒளி வீசும்
முகம்மதுவை முன்னிலைத் தலைவராய்
முன்னிறுத்தி முயற்சியை கையாள்வீர்
யென்னிலையிலும் இடர்களை தவிர்பீர்
அறிவின் ஒளி நிறைவு பெற நிறைவடைவீர்
"ரப்பி ஜித்னி இல்மா"( رَّبِّ زِدْنِي عِلْمًا என்ற துதி பாடி
“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!”
யெனச் சொல்லச் சொல்ல கற்றது மனதில் பதியும்
பெற்ற அறிவு பொறுமையைத் தரும்
ஆணவம் அடங்கி மங்கிப் போகும்
இறைவனைத் தொழு
இருலோகப் பயனைப் பெரு
----------------------------------------------------------------------------------------------
குர்ஆன் 2:32. “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்;
குர்ஆன் 20:114 فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ ۗ وَلَا تَعْجَلْ بِالْقُرْآنِ مِن قَبْلِ أَن يُقْضَىٰ إِلَيْكَ وَحْيُهُ ۖ وَقُل رَّبِّ زِدْنِي عِلْمًا
குர்ஆன் 20:114. ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; “இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!
Source : http://www.tamililquran.com/
Monday, December 3, 2012
Tuesday, November 13, 2012
குர் ஆனை புரிந்து கொள்ள மொழிபெயர்ப்புகள் போதாது!
குர் ஆனை புரிந்து கொள்ள மொழிபெயர்ப்புகள் போதாது!
திருக் குர் ஆனை நாம் ஆழமாக புரிந்து கொள்ள – அதன் மொழிபெயர்ப்புகள் போதாது என்பது ஏற்றுகொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும்.
ஒரு எடுத்துக் காட்டு:
வ ஆஷிரூஹுன்ன பில் ம’-ரூஃப்! – இது சூரத்துன் நிஸாவின் 19 வது வசனத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே.
இதற்கு எப்படி மொழிபெயர்க்கப் படுகிறது என்று பார்ப்போமா?
“இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் – இது தமிழில் குர் ஆன் வலை தளத்தின் மொழிபெயர்ப்பு. ஜான் ட்ரஸ்ட் மொழிபெயர்ப்பும் இதுவே.
“மேலும் அவர்களுடன் அழகான முறையிலும் நடந்து கொள்ளுங்கள்” – இது சவூதி அரசால் வெளியிடப்பட்டுள்ள சங்கைமிக்க குர் ஆன் மொழிபெயர்ப்பில் இருந்து.
“அவர்களோடு நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள்.” – இது IFT – யின் திருக்குர் ஆன் மொழிபெயர்ப்பிலிருந்து.
“மேலும் அவர்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத்தன்மையுடனும்) நடந்து கொள்ளுங்கள்” – இது அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்களின் மொழிபெயர்ப்பு.
ஆனால் அரபி மூலத்தில் உள்ள இரண்டு சொற்களையும் நாம் சற்று ஆழமாக இங்கே பார்ப்போம்.
ஒன்று: ஆஷிர் (அய்ன் – ஷீன் – ரா)
இம்மூலச் சொல்லிலிருந்து பிரிகின்ற பல சொற்களுடன் திருமறை வசனங்கள் இடம் பெற்றுள்ளன.
முதலில் ஆங்கில அகராதி மொழிபெயர்ப்பை எடுத்துக் கொள்வோம்.
‘Ashara – to divide into tenths; to be on intimate terms, associate (closely with someone). associate with one another
‘Ishrah – (intimate) association, intimacy, companionship, relations, (social) intercourse. company. conjugal community, community of husband and wife
‘Ishaar – with young, pregnant(animal)
‘Asheer – companion, fellow, associate, friend, comrade
‘Asheerah – clan, kinsfolk, closest relatives, tribe
அகராதியில் காணப்படும் அனைத்து பொருள்களையும் நாம் உற்று நோக்கினால் – ஆஷிர் என்ற சொல்லின் பொருள் – நெருக்கம், நெருங்கியிருப்பவை, நெருங்கிய தோழமை ஆகியவற்றைச் சுற்றியே இருக்கின்றன என்றே புரிகிறது. இது ஏன் மொழிபெயர்ப்ப்புகளில் பிரதிபலித்திடவில்லை என்பதே எம் கேள்வி.

Wednesday, September 12, 2012
குத்பா அரபி மொழியில்தான் இருக்க வேண்டுமா?
وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّلْعَالِمِينَ
மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. 30:22Source: http://www.tamililquran.com/
'குத்பா அரபு மொழியில் இருக்க வேண்டும் என்பதற்கு எந்த ஹதீஸ்களிலும் ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் குத்பாவை அரபி மொழியில்தான் உரையாற்றினார்கள்.
அல்லாஹ் (இறைவன் ) மக்களுக்கு வழிகாட்டியாக ஒரு லட்சத்து இருபத்து நாலாயிரம் நபிமார்களை அனுப்பியுள்ளான். ஆனால் குர்ஆனில் இருபத்தைந்து நபிமார்களின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டுள்ளான். அதனால் ஒவ்வொரு மொழி பேசுபவர்களுக்கும் நபி வந்திருப்பது உறுதி . தமிழ் மக்களுக்கும் ஒரு நபியை இறைவன் அனுப்பி இருப்பான் என்றும் நாம் நம்பலாம் . நமக்கு அவர் யார் என்பது தெரியாமல் இருக்கலாம் . அந்தந்த பகுதியில் அனுப்பப் பட்ட நபிகள் அந்த மொழியிலேயே பேசி மக்களை நல்வழிப் படுத்தினார்கள் . இறுதியாக அனுப்பப் பட்ட இறைத்தூதர்தான்
எம் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.
ஏதாவது ஒரு மொழியில்தான் உலகளாவிய
இறைத்தூதரை அனுப்ப முடியும் என்ற ஒரே
அடிப்படையில் தான் முகம்மது நபிக்குத் தெரிந்த
அரபு மொழியில் குர்ஆன் அருளப்பட்டது
அரபு மொழி நபியின் தாய்மொழி மற்றும் அவர்கள் பிறந்து வளர்ந்த நாட்டின் மொழி . அரேபிய நாட்டில் நபிகள் நாயகம் இருந்தமையால் குர்ஆனும் அரபிய மொழியில் இறக்கப் பட்டது. நபிகள் நாயகம் .அரபிய நாடு அல்லாத மற்ற நாட்டு மன்னர்களுக்கும் மற்ற தலைவர்களுக்கும் அரபி மொழியிலேயே கடிதம் அனுப்பினார்கள் . அவர்கள் மொழி பெயர்ப்பாளர்களை வைத்து தனது கடிதத்தின் பொருளை அறிந்துக் கொள்வார்கள் என்பதை நாயகம் அறிவார்கள்.
ளுகர் தொழுகை நான்கு ரக்அத்தாக இருக்க ஜும்மா தொழுகை இரண்டு ரக்அத்தாக உள்ளது.ஆனால் குத்பாவின் சிறப்பு அந்த விடுபட்ட இரண்டு ரக்அத்திற்கு தொழுகைக்கு கொடுக்கப்படும் சிறப்பினைக் கொண்டது. அதனால்தான் குத்பா நடைபெறும் பொது நாம் அவசியம் கலந்து கொள்வதும் பேசாமல் அமைதி காப்பதும் அவசியமாகின்றது.
அதற்கு குத்பா ஒரு மார்க்க விளக்கமாக, அல்லாஹ்வை துதி செய்வதாகவும் மற்றும் இறைவனின் அருள் நாடி வேண்டப்படுவதாக அமைதல் வேண்டும் . குதுபா ஒரு சாதாரண மேடைப் பேச்சு போன்று ஒரு காலும் அமைந்து விடக் கூடாது. குத்பாவிற்கென்று சில விதி முறைகள் கையாளப் பட வேண்டிய அவசியம் உள்ளது . அதில் ஒரு துண்டாடப் படாத இறைவசனமும் அவசியம் சேர்க்கப் படவேண்டும். இதில் எந்த வகையிலும் தவறுகள் வந்து விடாமல் இருப்பதற்குத் தான் முதலிலேயே தயாரிக்கப்பட்டதனை வைத்து குதுபா உரை நிகழ்த்தும் வழக்கம் கடைப் பிடிக்கப்படுகின்றது. பல நாடுகளில் (அரேபிய ,மலேசிய மற்றும் பல இஸ்லாமிய நாடுகளில் அரசே குத்பா உரையை தயார் செய்து கொடுத்து விடுகின்றது.)
Sunday, July 15, 2012
நன்மையை தேடும் ரமலான்.(துபாய் வாழ் தமிழ் முஸ்லிம்களிடம் பேட்டி -ஆங்கில வீடியோ இணைப்பு )
இறைவனால் இஸ்லாமியர்களுக்கு தரப்பட்ட சிறப்பான மாதங்களில் ரமலான் மாதமும் ஒன்று.இறைவனது அருளால் அருளப்பட்ட குர்ஆனின் முதல் வரிகள் ரமலான் மாதத்தில் கிடைத்தாலும் ரமலான் சிறப்புடையாதாக இருக்கின்றது. இஸ்லாமிய ஐந்து முக்கிய கடமைகளில் ரமலானும் இருக்கின்றது. நன்மையை தேடுவதற்கும் பாவங்களைப் போக்கிக் கொள்வதற்கும் சிறப்பான மாதமாகவும் இருக்கின்றது . ரமலான் மாதத்தினை முஸ்லிம் மக்கள் மிகவும் ஆர்வமாக வரவேற்று அம்மாதம் முழுவதும் சிறப்பு மிக்க நோன்பினை கடைப்பிடித்து மகிழ்கின்றனர். மைந்தனின் ஆரோகியதிற்கும் மகிழ்வுக்கும் வழி காட்டும் ரமலானை வரவேற்போம் மற்றும் அதற்குரிய சிறப்பினையும் மரியாதையும் கொடுப்போம். நோன்பு நோற்றுவிட்டு அதனை திறக்கும்போது ஏற்படும் மகிழ்வே சிறப்பானது. உலகில் பல்வேறு நாட்டில் உள்ள முஸ்லிம்கள் பல்வேறு முறையில் நோன்பு திறக்கும் ஆகாரத்தினை அருந்தியும் உண்டும் மகிழ்கின்றார்கள். முதலில் ஒரு இனிப்பு அதுவும் பேரித்தம் பழம் சாப்பிடுகின்றனர். இது நபிவழியாக மட்டுமில்லாமல் உடலுக்கு உடன் சத்து தரக் கூடியதாக உள்ளது. தமிழ்நாட்டில் சிறப்பாக தயாரிக்கப் பட்ட நோன்புக் கஞ்சி அருந்தி நோன்பு திறக்கின்றனர். நோன்பு நேரத்தில் சோர்வு வந்தாலும் நோன்பு கஞ்சி அருந்தி நோன்பு திறக்கும் போது அது அனைத்து சக்தியையும் தந்து விடுகின்றது.
தமிழ்நாட்டு முஸ்லிம் மக்கள் மற்ற நாடுகளில் வாழ்ந்தாலும் நோன்பு கஞ்சி தாங்களாகவே தங்கள் வீட்டில் தயாரித்தாவது அதனைக் கொண்டு நோன்பு திறக்கின்றனர். நோன்பின் அருமையை அறிந்து தற்பொழுது மற்ற மார்க்க சகோதரர்களும் இதனை நம் முஸ்லிம்கள் போல் நோன்பு வைக்க விரும்பி செயல்பட விரும்புகின்றனர். ஆனால் நம் மார்க்கத்தில் உள்ள ஒரு சிலர் மட்டும் அதன் அருமையை அறியாமலும் அந்த ரமலான் மாதத்திற்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்காமல் இருப்பது மிகவும் வருந்த வேண்டியதாக உள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு நல்வழிக் காட்ட நாம் இறைவனிடம் வேண்டுவோம்.
Ramadan in Dubai is a unique and different experience due to the fact that people from different parts of the world live and bring their own cultural heritage to this cosmopolitan city.
Monday, May 28, 2012
குர்ஆன் அல்லாஹ்வினால் அருளப்பட்ட திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை,
இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;,
இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.(குர்ஆன்- 2:2)
Sahih International
And who believe in what
has been revealed to you, [O Muhammad], and what was revealed before you, and
of the Hereafter they are certain [in faith].
(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின்
மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை)
உறுதியாக நம்புவார்கள்.2:4
Sahih International
Those are upon [right]
guidance from their Lord, and it is those who are the successful.
இவர்கள் தாம் தங்கள் இறைவனின்
நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.
And if you are in doubt about what We have sent down upon Our Servant [Muhammad], then produce a surah the like thereof and call upon your witnesses other than Allah , if you should be truthful.(குர்ஆன்- 2:5)
இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற)
நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால்,
(அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை(யெல்லாம்
ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொன்டு வாருங்கள்.(குர்ஆன்- 2:23)
Thursday, April 19, 2012
குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால்,...
குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது நிசப்தமாக இருங்கள் - (இதனால்) நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள்.
Surat Al-Jumu`ah (The Congregation, Friday) - سورة الجمعة
Surat Al-Jumu`a
உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக... நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.86:13
அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 16 வசனம் 89 -ல் கூறுகிறான்: -
"மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம்."

ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்
62:10 பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள், அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.
62:11 இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர், "அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும், மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
Monday, October 24, 2011
உருவாக்குவதில் இருமை (ஜோடி) - Duality in Creation
குர்ஆன் 36:36. பூமி
முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய)
இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன்
மிகவும் தூய்மையானவன்.
குர்ஆன் 31:10. அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கிறீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான்; மேலும் அதன் மீது எல்லா விதமான பிராணிகளையும் அவன் பரவவிட்டிருக்கின்றான்; இன்னும் நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான, வகை வகையான (மரம், செடி, கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம்.
குர்ஆன் 20:53. “(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்; இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்” (என்று இறைவன் கூறுகிறான்).
மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து, அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான். இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான். அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அல்குர்ஆன் 13:3
36:36. பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.
51:49. நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம்.

36:24. “(எனவே, நான் அவன் ஒருவனையே வணங்காவிட்டால்) அப்போது நான் நிச்சயமாக, வெளிப்படையான வழிகேட்டில் இருப்பேன்.
Friday, October 14, 2011
ஒரு அலமாரியில் உயர்ந்த நிலையில் ...!
நேர்த்தியான அச்சிட்டு ஒரு புத்தகம் இருக்கிறது
என் பெயர் தெரிய , இங்கே சில குறிப்புகள் உள்ளன...
அழகிய அட்டையில் மற்றும் காட்சிக்கு இனிமையாய் நன்றாக பிணைக்கப்பட்டுள்ளது
ஆனால் முஸ்லிம்கள் இதயத்தில் நான் அரிதாக காணப்படுவன் நான்!
ஒரு அலமாரியில் உயர்ந்த நிலையில்
நான் வரிசைப் படுத்தப்பட்டு அழகாக வைக்கப்பட்டு இருக்கிறேன்
மரியாதையுடன் அதிகமாக முத்தம் நிறைய கிடைக்கப் பெறுகின்றேன்
ஆனால் எனது முக்கியத்தினை அவர்கள் எப்போதும் இழந்து விடுவதனை பார்கின்றேன்!
ஒரு மென்மையான குரலில் அவர்கள் என்னை ஓதாமல்
என்னை உள்ளே வைத்து புறக்கணிக்கப்படுவது வேதனையானது.
அதனால் வரும் இழப்பு என்னைப் பாராமல் ஓதாமல் ஒதுங்கி இருப்பவர்களுக்குதான்
என்பதனை அவர்கள் அறியாமல் இருப்பது வேதனை!
உண்மையாக சொல்கிறேன், இந்த நேரத்தில் எனக்கு இது பழகிவிட்டது
எனது அருமையினை பயன்படுத்துவது மிக மிக அரிதாக உள்ளது!
நான் உலகத்தில் மாற்றம் கொண்டு வர முடியும்.
நான் ஒரு அதிசயம், என் வார்த்தை புரிந்துக் கொள்வதில் உயர்வு உள்ளது.
நான் உங்கள் காப்பாளர் , நான் உங்கள் வழிகாட்டியாக இருக்கிறேன்,
என்னைப் பயன் படுத்திக் கொண்டோர் உயர்வடைவார்.
எனக்கு பெயர் வைத்தவன் எல்லாம் வல்ல அல்லாஹ்
எனது புனித பெயர் குர்ஆன்.
----------------------
அல்லாஹ்வின் அருளை அலமாரியில் வைத்து அழகு பார்க்கும் நிலை வேண்டாம் .
அல்குரானையும் ,கிதாபினையும் ஒத வேண்டும் மூடி அழகு பார்ப்பதில் என்ன பயன்.
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.
தயவு செய்து கீழ் உள்ள லிங்குகளை கிளிக் செய்து ஓதுங்கள்
Al Qura`n explorer
QuranFlash
Qurantour.com
Tanzil.info
Monday, August 29, 2011
ஆள்பவனே நீ யார்! உன்னிடம் சில கேள்வி ?
ஆள்பவனே நீ யார்? ஆனா ! பெண்ணா அல்லது பல்முகமா.!
ஆணுமல்ல, பெண்ணுமல்ல தனித்தவன் உருவமற்றவன்.
இப்படித்தான் இருக்க முடியும்.
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.- குர்ஆன்112:1
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.- குர்ஆன்112:2
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.-குர்ஆன்112:3
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. குர்ஆன்-112:4 நீ ஆந்திராவா, கேரளாவா, தமிழ்நாடா, அரபு நாடா அல்லது பணக்கார அமெரிக்காவா !
அனைத்தும் உன் ஆதிக்கமாக உள்ளதால் உலகமே உன் நாடுதான்.
ஏன் இத்தனை உலகம் படைத்தாய் ! சுவனம், நரகம், பூமி மற்றும் பிரபஞ்சம் !
وَاسَّمَاءَ بَنَيْنَهَابِاَيْدٍ وَّاِنَّالَمُوْسِعُوْن َ “மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்” (51:47)
நாம் வாழும் பூமிப்பந்தானது நமது சூரிய குடும்பத்தின் நவகிரக உறுப்பினர்களில் ஒன்றாகும். நமது பூமியை விட பல மடங்கு பெரிய கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. நமது சூரியன் ஒரு நட்சத்திரம். இதேப்போன்று கோடானுக் கோடி நட்சத்திரங்கள் இந்த விண்ணில் வலம் வருகின்றன. இரவில் வானத்தை அண்ணாந்துப் பார்த்து, நட்சத்திரங்களின் அழகை கண்டு நாம் வியந்து போற்றுகின்றோம்.
2:29. அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்.
4:1. மனிதர்களே! உங்கள்
இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே
ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;
பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி
உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;
அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக்
கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும்
(ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே
இருக்கின்றான்.
சுவர்க்கம் மட்டும் படைத்து ஆதம் அவ்வாவை உலவ விட்டு அத்துடன் இப்லீசையும் படைத்து தவறு செய்ய தூண்டி பூமிக்கு அனுப்பி வைத்து எங்களை பன்மடங்காக்கி மரணமடையச் செய்வதின் நோக்கம் என்ன!
இறந்தால் இறப்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்கின்றனர். ஆனால் படைத்தவன் அழைத்துக்கொண்டான் என சொல்லாமல் இருக்கும் போது எங்களை படைக்க உனக்கு ஏன் இந்த அக்கறை . உன்னைத் தொழ படைத்தாய். நாங்கள் தொழுது உன் மனம் மகிழ்வடையலாம் என்பதைவிட எங்கள் மனம் மகிழ்வடையும் என்பதனை நீ அறிவாய்.
இன்னும் உன்னைப் பற்றி கேட்க அறிவினையும் உடல் நலத்தினையும் தா! இன்ஷா அல்லாஹ் உன்னை எப்பொழுதும் என் நினைவில் வைத்து தொடர விரும்பும்...
ஆணுமல்ல, பெண்ணுமல்ல தனித்தவன் உருவமற்றவன்.
இப்படித்தான் இருக்க முடியும்.
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.- குர்ஆன்112:1
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.- குர்ஆன்112:2
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.-குர்ஆன்112:3
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. குர்ஆன்-112:4 நீ ஆந்திராவா, கேரளாவா, தமிழ்நாடா, அரபு நாடா அல்லது பணக்கார அமெரிக்காவா !
அனைத்தும் உன் ஆதிக்கமாக உள்ளதால் உலகமே உன் நாடுதான்.
ஏன் இத்தனை உலகம் படைத்தாய் ! சுவனம், நரகம், பூமி மற்றும் பிரபஞ்சம் !
நாம் வாழும் பூமிப்பந்தானது நமது சூரிய குடும்பத்தின் நவகிரக உறுப்பினர்களில் ஒன்றாகும். நமது பூமியை விட பல மடங்கு பெரிய கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. நமது சூரியன் ஒரு நட்சத்திரம். இதேப்போன்று கோடானுக் கோடி நட்சத்திரங்கள் இந்த விண்ணில் வலம் வருகின்றன. இரவில் வானத்தை அண்ணாந்துப் பார்த்து, நட்சத்திரங்களின் அழகை கண்டு நாம் வியந்து போற்றுகின்றோம்.
2:29. அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்.
சுவர்க்கம் மட்டும் படைத்து ஆதம் அவ்வாவை உலவ விட்டு அத்துடன் இப்லீசையும் படைத்து தவறு செய்ய தூண்டி பூமிக்கு அனுப்பி வைத்து எங்களை பன்மடங்காக்கி மரணமடையச் செய்வதின் நோக்கம் என்ன!
இறந்தால் இறப்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்கின்றனர். ஆனால் படைத்தவன் அழைத்துக்கொண்டான் என சொல்லாமல் இருக்கும் போது எங்களை படைக்க உனக்கு ஏன் இந்த அக்கறை . உன்னைத் தொழ படைத்தாய். நாங்கள் தொழுது உன் மனம் மகிழ்வடையலாம் என்பதைவிட எங்கள் மனம் மகிழ்வடையும் என்பதனை நீ அறிவாய்.
இன்னும் உன்னைப் பற்றி கேட்க அறிவினையும் உடல் நலத்தினையும் தா! இன்ஷா அல்லாஹ் உன்னை எப்பொழுதும் என் நினைவில் வைத்து தொடர விரும்பும்...
Wednesday, June 15, 2011
நண்பர்கள் மனம் வீசும் மலர்கள்
கண்களுக்கு ஒளி எப்படி அவசியமோ, சுவாசப்பைக்கு காற்று எப்படி தேவையாக இருக்கிறதோ, இதயத்துக்கு அன்பு எப்படி வேண்டப்படுகிறதோ அது போன்று தான் மனித நேயத்துக்கு நண்பர்கள் இன்றியமையாதவர்களாக இருக்கிறார்கள்.
அன்பு (முஹப்பத்), நேசம் (மவத்தத்) போன்ற சொற்கள் திருக் குர் ஆனில் பல தடவைகள் பயன் படுத்தப் பட்டுள்ளன. இறைவனே கருணையாளனாகவும் (ரஹ்மான்), அன்புள்ளவனாகவும் (ரஹீம்) தான் இருக்கின்றான். நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்; அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்;. எவர் ஈமான் கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம். (அல்-குர்ஆன் 5:55)
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.(அல்-குர்ஆன் 3:103)
நட்பு -திருக்குறள் முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு. மு.வ உரை:

முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.திரு.பரிமேலழகர் உரை முகம்நக நட்பது நட்பு அன்று - கண்டவழி அகமொழிய முகமாத்திரமே மலரும் வகை நட்குமது நட்பாகாது; நெஞ்சத்து அகம் நக நட்பது நட்பு - அன்பால் அகமும் மலர நட்குமதே நட்பாவது. (நெஞ்சின்கண் நிகழ்வதனை 'நெஞ்சு' என்றார்.இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான் இரண்டும் ஒருங்கே மலர வேண்டும் என்பது பெற்றாம்.)
Subscribe to:
Posts (Atom)