Showing posts with label பாராட்டு. Show all posts
Showing posts with label பாராட்டு. Show all posts

Wednesday, December 12, 2012

தகுதியுடையவரை பாராட்டுங்கள்! புகழுங்கள்!

மனிதன் பாராட்டுக்கும் புகழுக்கும் மிகவும் ஆர்வமுள்ளவன். மனிதனை பாராட்டும்போது அவனுக்கு ஒரு உத்வேகம் தரப்படுகின்றது. அதன் காரணமாக இன்னும் சிறப்பாக தன் வேலையை செய்கின்றான். பாராட்டும்,புகழ்ச்சியும் பொருளற்றதாக, நியாயமற்றதாக இருக்கக் கூ டாது. வேண்டாம் வீணான புகழ்ச்சி  அந்த பாராட்டும் புகழும் மனிதனை நிலைகுலையச் செய்து  விடுகின்றன என்பது உண்மை. அனைத்துக்கும் அளவுகோல் உண்டு. இந்த நிலையை புகழ்வதிலும் பாராட்டுவதிலும் கடைபிடிக்க வேண்டும்.

நியாயம்  வழங்கப்பட்டவர் நியாயம் வழங்கியவரை பாராட்டுகின்றார்
உடல் நலம் பாதிக்கப் பட்டவர் உடல் நலம் பெற்றதற்கு மருத்துவரைப் பாராட்டுகின்றார்
கல்வி கற்றவர் கற்பித்த ஆசிரியரை பாராட்டுகின்றார்
ஆதாயம் பெற்றவர் அதற்கு   உதவியரை பாராட்டுகின்றார்
காரியம் ஆவதற்காக ஒருவர் ஒருவரை பாராட்டுகின்றார்
ஒன்று மட்டும் மறந்து விடுகிறார்!
அனைத்துக்கும் மற்றும்  அந்த பாராட்டுதளுக்கும்  அந்த தகுதியை தந்தவர் யார் ? என்பதனை!
அனைத்து பாராட்டுதளுக்கும் அந்த தகுதியை தந்தவன் இறைவன் ஒருவன் உள்ளான் என்பது நம் மனதில் வராமல் போவது தன்னை மறந்த செயலாகும்.


அல்லாஹ் (இறைவன்) இன்றி ஓர் அணுவும் அசையாது .புகழுக்கெல்லாம் உரியவன் இறைவன் ஒருவனே .நம்மை படைத்தவன் அவனே.




அல்ஹம்து : புகழ் யாவும்
லில்லாஹி : அல்லாஹ்வுக்கே (ஏக இறைவனுக்கே )
ரப்பில் ஆலமீன் :  அகிலத்தாரை வளர்ப்பவன்
[All] praise is [due] to Allah , Lord of the worlds

அவன் நினைவின்றி நாம் வாழ்தல் நன்றி கெட்ட செயல். இறைவன் இன்றி பாராட்டுபவனும் பாராட்டப்படுபவனும் இருக்க முடியாது . ஆதலால் நாம்  இறைவனுக்கு கொடுக்கும் பாராட்டல் அவனை வைத்து தொடங்குவதும் அவனை தொழுது நிற்பதுமாகும்

Sunday, July 1, 2012

நீ என்னை பாராட்டு நான் உன்னை பாராட்டுகின்றேன்!


  நீ என்னை பாராட்டு  நான் உன்னை பாராட்டுகின்றேன்! இது சொல்லாமல் சொல்லும் வேண்டுதல். இதனை சிலர் முன்பே திட்டமிட்டும் செயல்படுவர். உன்னை ஒருவர் உன் பேச்சுத் திறமைக்காக பேச அழைப்பார். அழைத்தவரை பாராட்டவேண்டுமல்லவா! அதோடு நிறுத்தி விட்டால் நல்லதல்ல மேடையில் உள்ளவரையும் மற்றவரையும் பாராட்ட வேண்டும். பாராட்டுதலினாலேயே அவர்கள் மயங்க வேண்டும் அது சிறிது நேரம்  அதிகமானால் கேட்க வந்தவர்கள் அந்த இடத்திலேயே தூங்கிவிட வேண்டும் அல்லது அந்த நேரத்தில் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேச வாய்ப்பு கிடக்க வேண்டும் அல்லது இடைவேளை கிடைத்துவிட்டதாக முடிவு செய்து வெளியில்  சென்று  தேவையானதை  முடித்து விட்டு வரவேண்டும்.
 
      உயிரோடு உள்ளவர்களைப்  பாராட்டுவதால்   உனக்கு ஒரு ஆதாயம் கிடைக்கும் . பாராட்டப்பட  வேண்டியவர்க்கு அதற்கு தகுதியானவரா என்ற சிந்தனை தேவையில்லை. புகழ்ச்சிக்கு   அடிமையாகதவன் யார்! ஒருவனுக்கு மிகவும் பிடித்தது அவன் பெயர் அல்லது மரியாதையுடன் அவரை அழைக்கும் பெயர். இறந்தவர்களை பாராட்டுவதால் அவர்  எவ்வளவு சேவை செய்திருந்தாலும் பயன் கிடைக்காது. கிடைக்கலாம் அவரின் குடும்பத்தினைச் சார்ந்த அல்லது  அவர் விரும்பியவர் அந்த மேடையில் இருந்தால்! நம்மிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லையெனில் நம் மூதாதையர்  அருமைகளைப் பற்றி பேசித்தானே காலத்தை ஓட்ட வேண்டும்.ஒருவரை பாராட்டுவதுபோல் சிலேடையாக் விமர்சனம் செய்பவர்களும் உண்டு.
நன்றி காட்டுவதற்காக பாராட்டி மகிழ்வது இயல்புதான் அதையே காரியம் ஆவதர்க்காகவே பாராட்டுவதும் ஒரு திறமைதான்.

    ஒருவரை பாராட்டுவதால் அவர் மேலும் நல்ல செயல்கள் செய்வதற்கு தூண்டப்படலாம். அந்த பாராட்டே அவருக்கு 'தலைகனம்' தந்து தாழ்ந்துப் போவதற்கும் வழிவகுக்கலாம். மிதமிஞ்சியது ஆபத்தானது. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம (பாசனம்) ஒரு சிலர் தன்னைத்தானே பாராட்டிக் கொள்வார்கள் அதிலும்  பெரிய விளம்பரமாக செய்யவும் முற்படுவார்கள். தானே செய்துக் கொள்பவர்களும் உண்டு  அதற்காக பணம் கொடுத்து மற்றவர்களை செய்யும்படி தூண்டுபவர்களும் உண்டு.     

 பாராட்டாதவன் பாராட்டப்பட தகுதி இல்லாமல் போய் விடுவான். அதனால் பாராட்டியே பிழைத்துக்கொள்ள ஒரு வழி இருக்கும்போது அதை ஏன் நழுவ விடுவானேன்!.
வளர்க  பாராட்டும் செயல்