"உலகம் மண்தான். ஆனால், அது உழைப்பவருக்கு வயல். உழைக்க மறுப்பவருக்குக் சுடுகாடு. பாடுபடுபவருக்குக் கருவறை. படுக்க நினைப்பவருக்குக் கல்லறை!"
வயல் வாங்கி விவசாயம் செய்தேன் ஆற்றில் நீர் வராமல் வயலுக்கு நீர் கிடைக்காமல் செடிகள் வாடின. செடிகள் வாட நான் வாடினேன்.'உழைப்பால் உயரலாம்' என்ற வாக்கு என்னை வயலில் உழைக்க வைத்தது. போட்ட பணம், உழைத்த உழைப்பு அத்தனையும் வீணானது . வாங்கிய கடன் அரசுக்கும் பாக்கி பத்து வட்டிக்கு கொடுத்த மற்றவருக்கும் பாக்கி . கடன் கொடுத்தவர் தொல்லை தாங்க முடியவில்லை 'சோடா விற்றவனுக்கு மூடி மிச்சம்' விவசாயம் செய்தவனுக்கு வரப்பு மிச்சம்.
கல்லணை நிற்கிறது கரிகாலனும் நிற்கிறான் என்னால் நிற்க முடியவில்லை. படுத்தால் படுத்த இடத்திலேயே கல்லறை கட்டி சமாதியாக்கி 'பூ' போடுவார்கள். கொடுத்த கடனை தள்ளுபடி செய்ய யாரும் வரமாட்டார்கள். உலகம் மண்தான் என் தலையில் இருப்பதும் மண்தானோ! அரசு கொடுக்கும் இனாமை வாங்கி ஒரு வேலையும் செய்யாமல் உண்டு படுத்து தூங்கி இருக்கலாம்.
ஆல மரத்தடியில் மற்ற செடிகள் வளராது. அன்னிய நாட்டுக்காரன் புகுந்த இடத்தில் நாம் எப்படி வளர முடியும். நாமும் அன்னிய நாட்டுக்கு போக வேண்டியதுதான்.
அப்பவே ஆல மரத்தடியில் உறங்கியவர் சொன்னார் .
ஏனப்பா இப்படி உறங்குகிறாய் எனக் கேட்டேன்! ஏதாவது வேலை செய்தால் என்ன!
வேலை செய்தால் என்ன கிடைக்கும் ?
பணம் கிடைக்கும் ! பணம் கிடைத்தால் (பதினாறும் பெற்று ) அனைத்தும் கிடைக்கும்
அனைத்தும் கிடைதால் என்ன செய்வது?
அனைத்தும் கிடைத்த பின் நிம்மதியாக தூங்கலாம்.
அதைத்தானே செய்கின்றேன்,அதை ஏன் கெடுத்தீர்கள் நீங்கள் உங்கள் வேலைக்கு போங்கள் என்னை தூங்க விடுங்கள் என்றான்.
No comments:
Post a Comment