வந்தார் வேண்டாத வேலை செய்வார்
வேண்டியதையும் விரும்பித் தருவார்
வேண்டாததையும் வெதும்பத் தருவார்
அள்ளித் தருவது அளவோடு இருக்கும்
அள்ளிப் போவது அதிகமாக இருக்கும்
எம்மிடத்தில் எப்போதும் இரு
இருக்கும்வரை தொல்லை தராமல் இரு
இத்தனை நாட்கள் என்னோடு இருந்தாயே
இன்னுமா என் இதயத்தில் இடம் பிடிக்காமல் இருந்தாய்
நீ விரும்பியதை நான் அறிந்திருக்க
நான் விரும்பியதை நீ அறியாமல் போனதேன்
உனக்கொரு கொள்கை எனக்கொரு கொள்கை
ஒற்றுமை வேண்டி கொள்கையை இணைப்பதில்லை
கொள்கையின் அடிப்படையில் நாம் சேரவில்லை
தேவையின் அடிப்படையில் நாம் சேர்ந்தோம்
உன் கொள்கை உன்னோடு
என் கொள்கை என்னோடு
இக் கொள்கை நம்மை இணைத்தது
ஒற்றுமையாய் இருக்க அவரவர் கொள்கையை மதித்தல் வேண்டும்
வேற்றுமை விரும்பின் விட்டுக் கொடுக்கும் மாண்பு மறைந்து விடும்
நெருப்போடு நீர் சேர்ந்தால் நெருப்புதான் அனையும்
என்னோடு நீ மோதினால் நீ அழிவாய்
நான் நீர், நீ நெருப்பு
நெருப்பின்றி வாழலாம் நீரின்றி வாழ முடியுமோ
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”- குர் ஆன்: 109:6.
No comments:
Post a Comment