Showing posts with label வணிகச்சந்தை. Show all posts
Showing posts with label வணிகச்சந்தை. Show all posts

Friday, December 21, 2012

பயண அனுபவங்கள் – ( சீனா பகுதி 11)

தொழுகைக்கான நேரம் வருவதை அறிந்து கொண்ட நான் எனது நண்பரையும் கூட அழைத்துக்கொண்டு நேராக ப்ரேயர் ஹாலை நோக்கி நடந்தேன். இஸ்லாமியர்களுக்கென தனியாக அவர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றாகிய தொழுகையை நிலை நிறுத்திக்கொள்வதற்காக கூடம்மொன்று அங்கே காணப்படும். வணிகச்சந்தையில் கலந்துகொண்டுள்ள பெரும்பாலான இஸ்லாமிய வாடிக்கையாளர்கள் இங்கு நடைபெறுகிற தொழுகையில் பங்குபெற்று தங்களின் கடமையை சிறப்புடன் நிறைவேற்றிக்கொள்வது எனக்கு மகிழ்ச்சியை தந்தன.

அங்கே எனது கடமையும் நிறைவேற்றிக்கொண்டு அங்கிருந்து பகல் உணவருந்துவதற்காக எனது நண்பரையும் கூட அழைத்துக்கொண்டு நேராக உணவகம் நோக்கி நகர்ந்தோம்.

வணிகச்சந்தையில் துரித உணவகம் மற்றும் சுயமாக தேர்ந்தெடுத்து சாப்பிடும் பல வகை உணவுகள் [ Buffet ] அடங்கிய இஸ்லாமிய உணவு விடுதி என இருந்தாலும் அதிகமானோர் துரித உணவகத்திற்கு விரும்பி செல்கின்றனர்.

பலவகை உணவுகள் [ Buffet ] அடங்கிய உணவு விடுதியைப் பொறுத்தவரை வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் உணவுகளைப் பிரித்து இருவேறு விலைகளை என நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகின்றன. குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் இங்கும் கூட்டம் எப்போதும் அலைமோதும்.

Thursday, December 6, 2012

பயண அனுபவங்கள் – சீனா- (பகுதி 10)

புதிதாக தயாரிக்கப்பட்ட  மாடல் ஒன்றைக் கண்டவுடன் எங்களின் சந்தைகளாகிய  Middle East & North Africa ஆகிய இரு பகுதிகளுக்குரிய ஏற்றதொரு பொருளாக இருந்ததால் இவற்றை இறக்குமதி செய்து சந்தைப்படுத்தினால் விற்பனை படு ஜோராக இருக்கும் என்று எண்ணியவுடன் உடனடியாக ஆர்டர் எடுக்க வேண்டும் என்று தோன்றியது. பொருளின் தரம், விநியோகக் காலம், பணம் செலுத்தும் முறையில் அவர்களின் கட்டுப்பாடுகள், எங்களுடைய எதிர்பார்ப்புகள், விலை பேரம் பேசுதல் போன்ற சாதாரண நடைமுறைகளை உறுதி செய்துவிட்டு அவர்களிடமிருந்து  Proforma Invoice  ஐ கேட்டேன்.

Proforma Invoice  என்றால் என்ன என்பது பற்றி சிறுகுறிப்பு ஒன்றை தர ஆசைப்படுகிறேன். ஒரு நிறுவனமொன்றில் விற்பனைக்காக குறிப்பிட்ட பொருள் ஒன்றை நாம் ஆர்டர் செய்யும் முன் அனைத்து விவரங்கள் அடங்கிய உத்தேச பட்டியல் ஒன்றைப் பெறுவது அவசியமானது. குறிப்பாக நாம் ஆர்டர் செய்யக்கூடிய பொருட்களின் எண்ணிக்கை, விலை, பேக்கிங் முறை, விநியோகக்காலம், பணம் செலுத்தும் முறை, வங்கி விவரங்கள், விநியோகக்கூடிய இடம் போன்றவற்றுடன் நமது கூடுதல் தேவைகள் என்ன என்பது பற்றியும் தெளிவாக அதில் குறிப்பிடப்பட வேண்டும். இறுதியாக நமது நிறுவனம் சார்பாக அவர்களிடமிருந்து விற்பனை ஒப்பந்தம் [ Sales Contract ] செய்யும் முன் இவை நமக்கு மிகவும் பயன் தரக்கூடியதாக அமையும்.

அவர்களிடமிருந்து விற்பனை ஒப்பந்தத்தை [ Sales Contract ] அனைத்து விவரங்களுடன் எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பக் கேட்டுக்கொண்டு அங்கிருந்து அடுத்தடுத்த பூத்தை நோக்கி நகர்ந்தேன்.