Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Wednesday, July 16, 2014

அணு உலைகளின் அறிவியல் விளக்கங்கள்

அணு உலைகளின் உள்வடிவமைப்பு மற்றும் இயக்கம்; ஒரு சிறுகுறிப்பு!

யுரேனியம் மற்றும் ப்ளூட்டோனியம் போன்ற அணுசக்தி வேதியற்பொருட்களிலிருந்து மின் உற்பத்திசெய்ய, அவற்றை அணு உலைகளில் அடைத்துவைத்து பயன்படுத்துவார்கள். அணு உலைகளில் பல வகைகள் உண்டு. சமீபத்திய, பெரும்பாலான  நாடுகளில் மின்னுற்பத்திக்காக பயன்படுத்தப்படுவது கொதிக்கும் தண்ணீர் அணுஉலை அல்லது Boiling water reactor, BWR என்னும் ஒருவகை அணுஉலையே! ஜப்பானில் ஃபுகுஷிமாவிலும் இதுதான் பயன்படுத்தப்படுகிறது! இது 1950களில் அமெரிக்காவின் GE/ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

கொதிக்கும் தண்ணீர் அணு உலை (Boiling water reactor, BWR)

Tuesday, December 18, 2012

IOF : பொருட்களின் இணையம் ! .. தெரிஞ்சுக்கோங்க !

Internet-of-Things“இன்டர்நெட் ன்னா என்னங்க ? ” என யாரிடமாவது கேட்டால் நம்மைப் பார்த்து அவர்கள் வயிறு வலிக்கச் சிரிக்கக் கூடும். “இந்தியாவுக்குச் சுதந்திரம் கெடச்சுடுச்சா?” என கேட்பதைப் போல அதரப் பழசான விஷயமாகிப் போய்விட்டது அது !

இணையம் வந்த காலத்தில் ஒரு மின்னஞ்சல் வைத்திருப்பது கௌரவமாகப் பார்க்கப் பட்டது. “ஒரு மெயில் அனுப்பிட்டு வரேன்” என்று சொல்லி விட்டு இன்டர்நெட் கஃபேக்குப் போவது அப்போதைய இளசுகளின் “ஸ்டைல்” ! அங்கே கியூவில் நின்று ஒரு மெயில் அனுப்பி விட்டு வருகையில் ஏதோ தொழில்நுட்பத்தையே கரைத்துக் குடித்த பெருமை அவர்கள் முகத்தில் மிளிரும்.

பிறகு கம்ப்யூட்டர்கள் விலை குறைந்தன. இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்தது. கணினிகள் வீடுகளின் அறைகளுக்குள் வந்து விட்டன. போன் வயரைக் கனெக்ட் பண்ணி இன்டர்நெட்டில் கட்டை வண்டி மாதிரி பயணித்தோம். பிறகு அறைக் கணினிகள், மடிக்கணினிகளால் மவுசு இழந்தன. போன் வயர் டயல் இணைய சேவையானது பிராட்பேண்ட்களால் காணாமல் போச்சு.

Friday, August 31, 2012

முஸ்லிம்கள் ஏன் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளார்கள்?


 உலகளவில் முஸ்லிம்கள் ஏன் மிகவும்  பின்தங்கிய நிலையிலும், திறனற்றும் மற்றும்  பலமற்றும் உள்ளார்கள்?
உலகில் பலர் இஸ்லாத்தில் இணைந்துக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாத்தின் அருமையான தத்துவம் அவர்களை இஸ்லாத்தில் இணைய வைக்கின்றது.

இஸ்லாம் வளர்கின்றது . உண்மைதான். வெறும் வளர்ச்சி மட்டும் போதாது . கடந்த காலத்தில் இஸ்லாம் ஸ்பெயினில்  காணாத வளர்ச்சியா!
கி.பி 712 லிருந்து கி.பி 1492 வரை ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி. 780 ஆண்டுகள் அந்த மண்ணில் நீதி மிக்கதொரு ஆட்சி நிலைத்திருந்தது.

இஸ்லாமிய ஆட்சியில் இஸ்பெயினில் 780  ஆண்டுகள் இருந்தன! இப்பொழுது மாறிப்போனது!  வளர்ச்சியுடன் அறிவையும் பயன்படுத்தக் கூ டிய ஆற்றலும் பெற்றிருக்க வேண்டும்

 
(  "ஒரு முஸ்லிம் என்பவன் மார்க்கத்தில்  மட்டுமே சிறந்தவனாக இருக்க வேண்டுமா? உலக
அரங்கில் முன்னுக்கு நிற்பவனாக அவன் இருக்கக் கூடாதா?
ஏன்?
உலக அரங்கில் பல மதத்தவர்கள் இருக்கின்றார்கள். இவர்களுள் முஸ்லிம்களின்
சாதனைகள் என்ன? எத்தனை புதிய கண்டுபிடிப்புகளைச் செய்திருக்கிறார்கள்.
எத்தனை பேர் ஆய்வாளர்களாக இருக்கிறார்கள்? எத்தனை பேர் அறிவியல்,
பொருளாதாரம், விண்வெளி ஆராச்சி போன்ற பல துறைகளிலும் நோபல் பரிசுகளைப்
பெற்றவர்களாக இருக்கிறார்கள் அல்லது பெறுகின்ற தகுதியுடையவர்களாக
இருக்கிறார்கள். அவர்களெல்லாம் எந்தெந்த நாடுகளில் அதிகம் இருக்கிறார்கள்.
உலக அரங்கில் ஒரு முஸ்லிமின் முகம் எது?")

உலகில்  ஒரு மதிப்பீட்டின்படி 1.476.233.470 முஸ்லிம்கள் உள்ளனர்
ஆசியாவில் ஒரு பில்லியன், ஆப்பிரிக்காவில் 400 மில்லியன்,
அமெரிக்க, ஐரோப்பாவில் 44 மில்லியன் மற்றும் ஆறு மில்லியன்.

நம்மைப்  போன்ற முஸ்லிம்கள் விநோதமாக ,அதிசியமாக மற்றும்  அதிர்ச்சியுடனும் பார்க்கும் பார்வை!>>>

ஏன் ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியா போன்ற  முஸ்லீம் நாடுகள் மட்டுமே மேற்கு நாட்டு கிரிஸ்துவர்களால்   தாக்கப்பட்டு  வருகின்றன என்பதனை நினைத்து.  இது  ஒன்றும் அதிசியமான செய்தி அல்ல.

இஸ்லாத்தினை வளர விடாமல் பல்லாண்டுகளாக தொடந்து வந்த முயற்சி இப்பொழுதும் தொடர்கின்றது.

இஸ்லாத்தினை வளர விடாமல் தடுப்பது   புனிதப் போராகவே கிரிஸ்துவர்களால் கருதப்படுகின்றது .

பிறைக்கும் சிலுவைக்கும்(wars between Christians and Muslims ... Crescent and the Cross,) நடந்த சரித்திரப்போரில்இதனையும்  கிரிஸ்துவர்கள் இணைத்து விட்டார்கள் அதற்க்கு முத்தாய்ப்பு வைத்தது போல் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் அதை சுற்றி வளைத்து ஒரு சிலுவை போர் என அத்தாட்சி கொடுத்து விட்டார்.

. முஸ்லீம் நாடுகள் பெரும்பாலும் உயிர்வாழ மேற்கு நாடுகளை சார்ந்து இருக்கும் நிலை.