ஹாங்காங் சீனாவின் மகுடமாக திகழ்கின்றது . 90 % சீன மக்கள் நிறைந்த ஹாங்காங்கில் " திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற மனதோடு இந்தியர்கள் பிரிட்டன் ஆட்சி காலத்தில் அதிகமாக ஹாங்காங்கில் சென்று தங்குவதற்கு உள்ள வாய்ப்பினை உருவாக்கிக் கொண்டார்கள் .பலர் குடி உரிமைப் பெற்றும் வாழ்கின்றார்கள் .
ஹாங்காங் ஏர்போர்ட் ரொம்ப அழகு.. இரு பக்கமும் மலையும், கடலும் சூழ்ந்த அழகான லேண்ட்ஸ்கேப்.. ரொம்ப சுத்தம்...
(ஹாங்காங்
21.10. 1970.
நேரம் பகல் 12.30
அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு தம்பி முகம்மது அலி எழுதுவது.
அஸ்ஸலாமு அலைக்கும் . இறைவன் அருளால் நலமே சைகோனிலிருந்து சனி மாலை ஐந்து மணிக்கு கேத்தே பசிபிக் விமானத்தில் பறப்பட்டு ஒன்பது மணிக்கு ஹாங்காங் வந்து சேர்ந்தேன். விமானப் பயணம் மிகவும் மகிழச்சியைத் தரக் கூ டியது என்பது உண்மையாயினும் அது பயங்கரமானது என்பதனையும் இப் பிரயாணத்தில் அனுபவத்தில் அறிந்துக் கொண்டேன்
பிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது! (பகுதி-2)
நம் தமிழ்நாட்டு மக்கள் அங்கு அதிகமாக இருப்பதைக் காணலாம் .அவர்கள் வைர மற்றும் உயர் ரக மாணிக்கக் கற்கள் வியாபாரம் செய்தும் வருகின்றனர் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு மக்களில் காயல்பட்டினம் ,கீழக்கரை நீடூர் சார்ந்தவர்களும் அதிகமாக உள்ளார்கள் . சுற்றுலா வரும் மக்களுக்கு உணவு கிடைப்பதற்காக மக்கள் அருமையான தமிழ் நாட்டு உணவுக் கிடைக்க குறிப்பாக நீடூரைச் சார்ந்தவர்கள் முதன் முதலில் உணவகம் ஆரம்பித்தார்கள் .
1 comment:
பயனாளிகளுக்கு பயன்தரும் தகவல்கள் !
தொடர வாழ்த்துகள்...
Post a Comment