Friday, December 21, 2012

ரெடிமேட் பதில்

 காலம் அவசரமானது . முன்போல் தையல்காரரிடம் துணி கொடுத்து தைப்பதில்லை. எல்லாம்  ரெடிமேட் கடைக்கு போகின்றோம். அவசர உணவு 'பாஸ்ட் புட்' பிளாஸ்டிக் பாட்டலில் அடைக்கப்பட்ட காசு கொடுத்து குடிக்க தண்ணீர். இன்னும் எவ்வளவோ!
இன்னும் சில கேள்விக்கு பதில் தேவைப்படலாம்  . அதற்கு இது உதவும்.

அப்பா கேட்டால்
ஏன்டா தேர்வுலே மார்க் குறைஞ்சிடுச்சி


வாத்தியார் சரியா பாடம் கொடுக்குலே

பள்ளிக்கூடம் சீருடை போடாமல் போனால்
ஆசிரியை கேட்டால்

நேத்து போன கரண்ட் இன்னும் வரலே சீருடையை அம்மா துவைக்கிலே
காலையிலேயும்   கரண்ட் வரலே வேன் வந்திடுச்சி  அதனாலே டாய்லேட் 
கூட பள்ளிக்கூடத்திலே போகிக்கிலாமென்று வந்துட்டேன் மேடம்


பள்ளிக்கூடம் தாமதமாக போனால்
வாத்தியார் ஏன்டா லேட்?
 

லேட்டாயிடுச்சி சார்!

கல்லூரியில் பிரின்சிபால் கேட்டால்?

ட்ராபிக் அதிகம்

அப்பா கேட்டால் பரிச்சைக்கு படிக்கலையா இன்னும் தூங்குரே

அலாரம் வேலை செய்யலே

அம்மா ‘இன்டர் வியூ போகலியா?’ என்றால்


பூனை குறுக்கே வந்திடுச்சு அப்புறமா போறேன் கேட்டால் பதில் சொல்ல நினைவு இருக்கட்டும்

அலுவலகத்தில் அதிகாரி கேட்டால்

டயர் பஞ்சர் ஆயிடுச்சி சார்

காதலி கேட்டால்

அப்பா குறுக்கே வந்துட்டார்


கேட்டால் ரெடி  மேட் பதில்  நினைவில்  இருக்கட்டும்

No comments: