Showing posts with label பள்ளிவாசல். Show all posts
Showing posts with label பள்ளிவாசல். Show all posts

Friday, July 18, 2014

எழுத்தால் போட முடியாத எடை ......... கவிஞர் வாலி

 இஸ்லாம் குறித்து கவிஞர் வாலி:
எழுத்தால் போட முடியாத எடை .........

கவிஞர் வாலி

பாடம் பயில நான்பள்ளிவாசல் புகுந்த

பிராயந்தொட்டு தொழுகை புரிய பள்ளிவாசல்

புகுவாரோடு பழகி நின்றவன்!

அவர்களது அன்பை ஆரா

அமுதமாய் தின்றவன் !

என் ஒவ்வொரு பருவத்திலும்

எனக்கு ஒத்தாசை பண்ணிய பெருமக்கள்

இஸ்லாமிய இனத்தவர்

அவரெலாம் - தண்ணீர் கலவா தாய்ப்பால் மனத்தவர் !

Tuesday, December 11, 2012

பள்ளிவாசலுக்கு தொழுவதற்கு வருபவர்களை யாராலும் தடைசெய்ய முடியாது


பள்ளிவாசலுக்கு தொழுவதற்கு வருபவர்களை யாராலும் தடைசெய்ய முடியாது.

ஷியா கொள்கையை பின்பற்றும் முஸ்லிம்கள் முதல் மூன்று கலிபாக்களையும் ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல மற்றும் அந்த மூன்று கலிபாக்களையும் குறைவாகவும் சொல்வார்கள் . அவர்கள் (ஷியா) பள்ளிவாசலுக்கு தொழுவதற்கு வர நம்மால் தடை செய்ய முடியாது .காரணம் அவர்கள் குர்ஆனையும்    நபியாக முகம்மது நபி (ஸ. அ ) அவர்களை  ஏற்றுக் கொண்டவர்கள் . இதனை ஹஜ் செய்பவர்கள் பார்க்கலாம் .( தடுப்பவர்களை நீதி மன்றமே தண்டிக்கும் நினைவில்  கொள்ளட்டும் ) இந்நிலை இருக்கும் போது நாம் நம்மில் சிலரை தடை செய்கிறோம்?
  ஒருவரது உள்ளத்தில் எத்தகைய எண்ணம் உள்ளது என்பதை இறைவன் மட்டுமே அறிவான்.  தொழுகைக்கு வருபவர் அவர் முஸ்லிமாக இருந்தால் அவரை அனுமதித்தே ஆக வேண்டும். ( தொழுகைக்கு வரும்போது (மதுவை குடித்து வரக் கூடாது. அவ்விதம் இருப்பின் அவரை வெளியேற்றலாம் மற்றும்  தொழுகைக்கு இடையூராக இருப்பவரையும் வெளியேற்றலாம்)

தொழுகைக்கு வருபவர் ஒலு செய்திருக்க வேண்டும் .   அது அவரது கடமை .ஒழு இல்லையேல் தொழுகையே  கூடாது. ஆனால் நாம் யாரிடமும் 'நீ ஒலு செய்தாயா?' என்று கேட்பதில்லை. ஆனால் மார்க்கத்தில் கடமையாக்கப்படாத ஒன்றை 'தொப்பி போட்டு தொழு இல்லையென்றால் பள்ளிவாசலுக்கு வராதே' என்பது மிகவும் தவறாகும்
பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வர தடை செய்தல்  பெரிய குற்றமாகும். இந்நிலை நீடிக்குமானால் பிரிவுகளை உருவாக்குவதற்கு நாமே வழி வகுக்கின்றோம். இதனால் தேவையில்லாமல் பிரிவுக்கு ஒரு பள்ளிவாசல் உருவாகின்றது.

இறையில்லங்களில் சுதந்திரமாக  தொழுகையில் ஈடுபட ,நடத்தப்பட இடமளித்தல் வேண்டும் . அவற்றை தடுப்பதற்கு
எவருக்கும் அதிகாரமில்லை .அதுபோன்றே வணக்கத்தலங்களில் பணிவுடன் அச்சத்துடன் நுழைதல் வேண்டும்.இறையில்லங்களை  அவமதித்தல்  கூ டாது.

 And seek help through patience and prayer, and indeed, it is difficult except for the humbly submissive [to Allah ]
Qur'an- 2:45

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்
. குர்ஆன்  - 2:45

 10:59. (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?”


 2:114   وَمَنْ أَظْلَمُ مِمَّن مَّنَعَ مَسَاجِدَ اللَّهِ أَن يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَىٰ فِي خَرَابِهَا ۚ أُولَٰئِكَ مَا كَانَ لَهُمْ أَن يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ ۚ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ

 And who are more unjust than those who prevent the name of Allah from being mentioned in His mosques and strive toward their destruction. It is not for them to enter them except in fear. For them in this world is disgrace, and they will have in the Hereafter a great punishment.Qur'an- 2:114
இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.
-குர்ஆன்  - 2:114

Wednesday, August 29, 2012

துன்பம் துவள இறைவனை அணுகும்போது இறைவனோடு ஒன்றுபடுதல் முழுமையாக இருக்கும்

விரும்பாததின் மேல் விருப்பப்படு!
துயரமும் நன்மையைத் தரும் ஆற்றல் உள்ளது .அது உன்னை இறைவன் பக்கம் இழுக்கும்.  துன்பம்  துவள  இறைவனை  அணுகும்போது இறைவனோடு ஒன்றுபடுதல் முழுமையாக இருக்கும்  நீ விரும்பாத மனைவி உனக்கு கிடைத்து விட்டால் அவளை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை .அதற்க்கு மாறாக அன்பை கொடுத்து அவளை உன் மனதோடு ஒன்ற வழியை நாடு! . நம் குழ்ந்தை தவறு செய்தால் நாம் அவனை ஒடுக்குவோமா! அல்லது ஒதுக்கிவிடுவோமா! அவனிடத்து உள்ள பாசம் போய் விடுமா ?  நாம் நினைத்தது நடக்கவில்லை என்பதால் இறைவனை குறை சொல்வதுபோல் உள்ளது, எந்த காரியமும் ஒரு நன்மைக்காகவே  இருக்கும் என்பதனை நம்பாதவனுக்கு காலம் முழுதும் கவலைதான்
நினைத்ததெல்லாம் கிடைத்துவிட்டால் மகிழ்வில்லை .வாடைக்குப்பின் தென்றல்  வரும் .தென்றல் முடிய கோடை வரும் . தென்றல் மட்டும் இருந்தால் கோடைகாலத்தில் கிடைக்கும் பலன் கிடைக்காமல் போய்விடும் . நல்ல கொடையில்தான் நிலங்கள் பாலமாக வெடித்து பயிர் வளர வழி வகுக்கும் . பின்பு மழை வந்தால் செடிகள் தழைக்கும் .
காலமே மாறி, மாறி வரும் நிலையினை நாம் விரும்பும் போது மனதில் மட்டும் மகிழ்வு மட்டும் குடி இருக்க வேண்டும்
என்ற பேராசை ஏன்? நிழலின்  அருமையை  வெயிலுக்குப் பின் அறியமுடிகின்றது . வாழ்வின் நிலையும் அதுதான் .துன்பம் வந்து மறையும்  போதுதான் மகிழ்வினை  முழுமையாக அறிய முடியும் இருளுக்குப் பின் ஒளி உண்டு.
  110:3. உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.

Saturday, June 25, 2011

தமிழில் குத்பாப் பிரசங்கம்

குத்பாப் பிரசங்கம்


தாவூத்ஷா காலத்தில் தமிழ் நாட்டில் பள்ளிவாசல்களில் குத்பாப் பிரசங்கம் அரபியில் நடந்தது. தமிழில் நடத்த வேண்டும் என்று அவர் போராடினார். தானே 54 குத்பா சொற்பொழிவுகளைத் தமிழில் எழுதி, நூலாக அச்சிட்டு வெளியிட்டார். “குத்பாப் பிரசங்கம்” என்ற அந்த நூல் பற்றிய விளம்பரம்:

“பள்ளிவாசல்களில் கூடியிருப்பவர்கள் குறட்டை விட்டுத் தூங்கிய போதிலும் அரபு மொழியிலேயே குத்பாவை ஓதி, அவர்களைத் தாலாட்டி மேலும் உறங்க வைத்தாலும் வைக்கலாமேயொழிய ஜும்ஆ பிரசங்கங்களைத் தாய்மொழியில் புரியக் கூடாது என்று தொண்டை கிழியக் கத்தித் திரிந்த முரடர்களின் காலம் அஸ்தமித்துப் போய்விட்டது.

Saturday, March 12, 2011

மண்ணால் கட்டப்பட்ட பழங்கால பள்ளிவாசல்( மசூதி )

  ஆயிரம் வருடத்திற்கு முன்பு மண்ணால் கட்டப்பட்ட மிகவும் பழைய மசூதி
ஆப்ரிக்காவில் திம்புக்து  பள்ளிவாசல்... 
                             ஆப்ரிக்காவில் உள்ள  லாராபங்க பள்ளிவாசல்

Tuesday, March 1, 2011

அந்தத் தோற்றம்! உரை லாவகம்! அத்துடன் ..





by டாக்டர் ஹிமானா சையத்
1987 – ல் சுறுசுறுப்பான எழுத்துலகப் பிரவேசம் . 89 -ல் வெளியூர்களிலிருந்து விழாக்களுக்கான அழைப்புகள்! மாவட்டத்துக்குள் மட்டுமே விழாக்களில் கலந்து கொள்ள முடியும் என்ற தொழில்சார்ந்த சூழல்! ஆனால் ஓர் எல்லையில் வெளிமாவட்டங்களுக்கும் சென்றாகவேண்டிய கட்டாயம் நேர்ந்தது. காரணம், விழாவுக்கு அழைத்தவர்கள் சமுதாய முன்னோடித் தலைவர்கள் அல்லது மிக நெருக்கமான வாசகர்கள்.
  சமுதாய விழாக்களில் மறக்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய கூட்டங்கள் கூடுவது தஞ்சை மாவட்டத்து பள்ளிவாசல் திறப்பு விழாக்களில்தான். எனக்குக் கிடைத்த அத்தகைய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் சிந்தனைச் சித்தர் நீடூர் சயீது ஹாஜியார் அவர்கள் என்பதையும், மயிலாடுதுறை மஸ்ஜிதே மஹ்மூதியா திறப்பு விழா அது என்பதையும் ஏற்கனவே ஊற்றுக்கண்ணில் சொல்லியிருந்தேன். அந்த விழாவில் ஊர் திரும்பும்போது ஹாஜியார் மறக்காமல் சொன்ன இன்னொரு விசயம் முக்கியமானது.”அடுத்த முறை நாம் சந்திக்கும் போது உங்களை தாடியுடன் சந்திக்க வேண்டும் ” என்ற வேண்டுகோள்தான் அது.
அதற்கு முன் அது பற்றிய சிந்தனை இருந்ததில்லை என்பதே உண்மை. உண்மையில் அடர்த்தியான தாடி எனக்கில்லை. ” முடி அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும்போது எப்படி தாடி வைப்பது? ” என்று கேட்டேன். உடனே பதிலைத் தயாராய் வைத்திருந்த ஹாஜியார் “அப்படிப் பட்ட தாடியைத்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் மிகவும் ரசித்திருக்கிறார்கள்” என்றார். இன்ஷா அல்லாஹ்” என்று சொல்லிவிட்டு ஊர் திரும்பிவிட்டேன். ஆனால் அதற்கான ஆயத்தம் செய்யவில்லை. அன்றாடம் ஷேவிங் தொடர்ந்தது. மெல்ல மெல்ல ஹாஜியார் அவர்கள் சொன்னதும் மறந்தும் போனது எனலாம்.

Friday, October 29, 2010

அவசியம் இந்த வலைப்பூ நீங்கள் பார்க்க வேண்டும்---மஸ்ஜித் ஆன்லைன் அருமையான வெப் சர்வீஸ்

நல்ல வாய்ப்பு .அவசியம் இந்த வலைப்பூ நீங்கள் பார்க்க வேண்டும் .உங்கள் பள்ளிவாசல் (மஸ்ஜித் ) உலக  அளவில் அறியப்பட மற்றும்  உதவி நாட ,கட்டுமான பணிக்கு இனாமாக விளம்பரம்
 செய்ய பயன் படுத்திக்கொளுங்கள்.
 
 Please visit http://www.masjids.in/about-us/

Please click  :http://www.masjids.in/

for getting your Masjid a Free Website!

 Mosque Pictures  -Around the World































Source :http://www.masjids.in/