Showing posts with label உணவு. Show all posts
Showing posts with label உணவு. Show all posts

Thursday, December 5, 2013

தன் குஞ்சு பொன் குஞ்சுதான்.

வீட்டில் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்தால் அவர்களிடத்து பாசம் அதிகமாகும். அவர்களுக்கும் நம் மீது நேசம் மிகும். வீட்டில் இருக்கும்போது கணினியில் காலத்தை வெகு நேரம் செலவிடாமல் மனைவிக்கு உதவியாக இருக்கும்போது சமைக்கவும் தெரிந்துக் கொள்வது நல்லது. அதனால் மனைவிக்கு வீட்டு வேலை குறையும் .
சமைப்பதில் பொதுவாக பெண்கள் தங்கள் தாயிடம் கற்று வந்த சமையல் முறைதான் (அதிகமான பெண்களுக்குத்) தெரியும். ஆண்கள் அப்படியல்ல. எதிலும் புதுமை காண்பவர்கள்.அதனால் பலவகையில் சமைத்துக் கொடுப்பதில் ஆர்வம் காட்டுவர். சமையல் புதுமையாக இருப்பதால் வீட்டில் அனைவரும் உணவை விரும்பி சாப்பிடுவர்.

Friday, December 21, 2012

பயண அனுபவங்கள் – ( சீனா பகுதி 11)

தொழுகைக்கான நேரம் வருவதை அறிந்து கொண்ட நான் எனது நண்பரையும் கூட அழைத்துக்கொண்டு நேராக ப்ரேயர் ஹாலை நோக்கி நடந்தேன். இஸ்லாமியர்களுக்கென தனியாக அவர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றாகிய தொழுகையை நிலை நிறுத்திக்கொள்வதற்காக கூடம்மொன்று அங்கே காணப்படும். வணிகச்சந்தையில் கலந்துகொண்டுள்ள பெரும்பாலான இஸ்லாமிய வாடிக்கையாளர்கள் இங்கு நடைபெறுகிற தொழுகையில் பங்குபெற்று தங்களின் கடமையை சிறப்புடன் நிறைவேற்றிக்கொள்வது எனக்கு மகிழ்ச்சியை தந்தன.

அங்கே எனது கடமையும் நிறைவேற்றிக்கொண்டு அங்கிருந்து பகல் உணவருந்துவதற்காக எனது நண்பரையும் கூட அழைத்துக்கொண்டு நேராக உணவகம் நோக்கி நகர்ந்தோம்.

வணிகச்சந்தையில் துரித உணவகம் மற்றும் சுயமாக தேர்ந்தெடுத்து சாப்பிடும் பல வகை உணவுகள் [ Buffet ] அடங்கிய இஸ்லாமிய உணவு விடுதி என இருந்தாலும் அதிகமானோர் துரித உணவகத்திற்கு விரும்பி செல்கின்றனர்.

பலவகை உணவுகள் [ Buffet ] அடங்கிய உணவு விடுதியைப் பொறுத்தவரை வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் உணவுகளைப் பிரித்து இருவேறு விலைகளை என நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகின்றன. குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் இங்கும் கூட்டம் எப்போதும் அலைமோதும்.

Friday, November 9, 2012

மிகப்பெரிய சமூகக்குற்றம்

                                       ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!!

 

உலகளவில், ஆண்டுதோறும் உற்பத்தியாகும் உணவில், மூன்றில் ஒரு பங்கு வீணாக்கப்படுகிறது என்றும், இவ்வாறு வீணாக்கப்படும் அனைத்துவகை உணவைக் கொண்டும் பசியில் வாடிக் கொண்டிருக்கும் ஐம்பது கோடி பேருக்கு உணவு அளிக்கலாம் என்ற கருத்தை ஐ.நா வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு [  F.A.O ] தெரிவித்துள்ளது.

திருமணம் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் பரிமாறப்படும் உணவுகள் அதிகளவில் வீணாக்கபடுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளது நமக்கு மிகவும் வேதனை தருவதாக இருக்கின்றது.

வசதிபடைத்தோர் தங்களை சமூகத்தில் ‘நாங்கதானுங்க உசத்தி’ என்று காட்டிக்கொள்வதற்காக திருமண நிகழ்ச்சிகளை பயன்படுத்திக் கொள்கின்றனர். இதற்காக அவர்கள் விநியோகம் செய்யும் அழைப்பிதழ் முதல் பரிமாறும் தட்டுவரை எடுத்துக்கொள்ளும் ஆடம்பர பகட்டுகள் இருக்கிறதே ! சற்றுத் தூக்கலாகவே இருக்கும். வசதி படைத்தோரை மட்டும்தான் அழைப்பார்கள், ஏழை எளியோரை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உண்டு மகிழ்ந்து மீதியுள்ளவற்றை வேஸ்ட்டாக தூக்கி வீசப்படுவது நம்மிடம் ஏழை எளியோர் உள்ளனரே ! என்பதை மறந்து விடுவதுதான்.

Sunday, June 17, 2012

சாப்பிடுங்கள் .அறிந்துகொள்ளுங்கள் நகருங்கள்


 உணவு உடல் உறுதிக்கு .அவசியம் அறிவு மூளைக்கு இன்றியமையாதது . அசைந்து ,நடந்து மற்றும் ஓடி உடலை உறுதிப் படுத்திக் கொள்வதும் அவசியம் படித்தல் மனதை தூண்டுகிறது,உடற்பயிற்சி உடலை உறுதிப்படுத்துகிறது Reading Is To the Mind What Exercise Is To the Body. இத்தனையும் இங்கே தரப்பட்டுள்ள காணொளிகள் மகிழ்வை தரும்