Sunday, December 9, 2012

விஸ்வரூபம் எதிர்ப்புக்கு முஸ்லிம்கள் வருத்தப்படுவார்கள் - கமல் இன்று அறிக்கை

அஸ்ஸலாமு அலைக்கும்,

கமல் தன்னுடைய விஸ்வரூபம் படத்தை DTH-இல் முதலில் வெளியிட முயற்சி செய்துள்ள நிலையில், அதனால் ஏற்பட்ட விமர்சனங்களுக்கு பதிலாக மூன்று பக்க அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில் ஒரு கேள்வியாக, இது முஸ்லிம்களுக்கு எதிரான படமா என்பதற்கு சற்றே வீரியமாக பதில் அளித்துள்ளார். அவர் அறிக்கையில் இருந்து,

"முடிவாக இது முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் படம் என்று சந்தேகப்படுகிறதாம் ஒரு சில முஸ்லிம் அமைப்புகள். இந்த முஸ்லிம்கள் படத்தை பார்த்து, மனம் மாறி, தேவையில்லாமல் கமல்ஹாசனை சந்தேகப்பட்டு விட்டோமே என்று மனதிற்குள் வருந்துவர். அவர்கள் மனதிற்குள் வருந்தினால் மட்டும் போதாது. நான் விடமாட்டேன். சகோதரனைச் சந்தேகப்பட்டதற்கு பிராயச்சித்தமாக அந்த முஸ்லிம் சகோதரர்கள் அடுத்த பக்ரீத்துக்கு அண்டாஅண்டாவாக பிரியாணி விருந்தளிக்க வாக்களிக்க வேண்டும்.

அத்தனை பிரியாணியையும் நான் ஒரு ஆள் சாப்பிட இயலாது. ஆதலால் நம் அன்பின் சான்றாக பசித்த ஏழைப் பிள்ளைகளுக்கு அதை விருந்தாக்குங்கள் எப்போதும் போல அக்குழந்தைகளின் சாதி-மதம் பார்க்காமல் அதைச்செய்யுங்கள். அப்பெரு விருந்தில் கலந்துகொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்"

அறிக்கையை முழுமையாக படிக்க: http://tamil.oneindia.in/movies/heroes/2012/12/kamal-blasting-statement-on-viswaroopam-dth-release-165997.html



வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
 -------------------------------------------------------------------------

No comments: