முதன் முதலாய் பார்த்தது என் தாயை ,
முதன் முதலாய் வந்த வார்த்தை அ'ம்மா'
முதன் முதலாய் என்னைச் சுற்றி நின்றது என் உறவுகள்!
முதன் முதலாய் பார்த்தும் அறியாமல் விழித்தது அவர்களை நோக்கி
முதன் முதலாய் எனக்கு நடந்த அறுவை சிகிச்சை தொப்புள் கொடி நீக்கம்
முதன் முதலாய் நான் அருந்தியது தாய்பால்
முதன் முதலாய் கிடைத்த ஊட்டச் சத்து தாய்பால்
முதன் முதலாய் தாய்பால் தந்தது பாசம்
முதன் முதலாய் நான் இழந்தது கருவறையின் வளர்ச்சி
முதன் முதலாய் நான் எழுப்பிய ஒலி உலகின் காற்றின் ஊடல் விளைவு
முதன் முதலாய் தவழ முனையும் போது என்னை இடித்தது தரை
முதன் முதலாய் நான் பிரமித்தது என் நிழலைக் கண்டு
முதன் முதலாய் நிமிர்ந்து நின்றது கண்ணாடியில் என் உருவத்தைக் கண்டு
முதன் முதலாய் தலையின் நெற்றியை வைத்தேன் ஊர எத்தனிக்க
("ஊர தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன்")
அனைத்தும் என்னை விட்டு அகன்றாலும்
இறுதிவரை நெற்றியை தரையில் வைப்பது அகலாது
இது எனக்காக அல்ல அது இறைவனைத் தொழுவதற்காக
No comments:
Post a Comment