உள் மனதின் நம்பிக்கை அதிகம்
உடல் உணர்வுகள் உயர்வு
வலிமை உயர்வை தருகிறது
கவனக் குறைவு தடுமாறுகிறது
அறிவு வழி காட்டுகிறது
தன்னை உருவாக்க தன் முயற்சி
தன்னை உயர்த்த பிறரை தாழ்த்தி அல்ல
தன்னை மேம் படுத்த சமுதாயம் தேவை
தன்னை உயர்த்துவதே சமுதாய மேம்பாடுக்கே
தனி மரம் தோப்பாகாது
தனி மனிதன் சமுதாயமாக முடியாது
தனி மனிதனின் உயர்வு சமுதாயத்தில் அடக்கம்
தனித்து வாழ விரும்புவன்
வழி தவறிய மனிதன்
Showing posts with label சமுதாயம். Show all posts
Showing posts with label சமுதாயம். Show all posts
Saturday, February 1, 2014
Friday, March 15, 2013
இன்று ஒரு துண்டுப் பிரசுரம் எனக்குக் கிடைத்தது. அதில் சமுதாயத்தில் சிலரை குறைகூறி எழுதப்பட்டிருந்தது. ஆனால்..
ஒரு துண்டுப் பிரசுரம் குறைகூறி எழுதப்பட்டிருந்தது. நோட்டீஸ் போட்டவர் பெயரோ அச்சகத்தின் பெயரோ பிரசுரத்தில் இல்லை. யார் போட்டார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் சந்தேகத்தோடு பார்க்கும் கேவலமான நிலை.
**************
பெற்றோரை நேசிக்கும் பிள்ளைகள் இதுபோன்ற பாவங்களைச் செய்யுமா?
****************
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல ... சிலர் பார்வைக்கு இவனாக இருக்குமோ... அவனாக இருக்குமோ என்ற சந்தேகத்தை இதுபோன்ற " மொட்டை " நோட்டீஸ்கள் ஏற்படுத்துகின்றன.
****************
மொட்டைக் கடிதம் , மொட்டை நோட்டீஸ் போன்றவை சமுதாயத்தைக் கொல்லும் நச்சுக் கிருமிகள். இப்படி " மொட்டை " போடுகின்றவர்கள் " டெங்கு " கொசுவை விட ஆபத்தானவர்கள். அதுகூட ஒன்றிரண்டு பேரைத்தான் கொல்லும். இது சமுதாயத்தையே கொல்லும்.
****************
தாங்கள் சொல்லும் செய்தி உண்மையாக இருக்குமானால் அதை தைரியமாக தங்கள் பெயரைப் போட்டு நோட்டீஸ் போடுங்கள். அது ஆண்மை. பெயர் போடாமல் நீங்கள் என்னதான் உண்மைச் செய்தி போட்டாலும் அதுக்கு மதிப்பில்லை.
**************
சமுதாயம் குறித்த கவலை உங்களுக்கு இருக்கிறதா? நோட்டீஸ் கூட வேண்டாம்.. உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். அதைப் பற்றிய ஆரோக்கியமான விவாதத்தில் கலந்து கொள்ளுங்கள். நீங்கள் தரும் தகவல் தவறாக இருந்தாலும் கூட பிரச்சினை இல்லை. சுய முகத்தோடு வாருங்கள்.
Friday, December 21, 2012
நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும்.
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
-திருக்குர்ஆன் 3:104
"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.
-திருக்குர்ஆன் 13:11
"செவி, பார்வை, இதயம் இவை ஒவ்வொன்றும் மறுமை நாளில் அதன் செயல் பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படும்."
திருக்குர்ஆன் 17:36
''இறந்தவரை மூன்று விஷயங்கள் பின் தொடர்கின்றன. அவை அவனது குடும்பம், அவனது சொத்து, அவனது செயல்கள் ஆகும். இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டும் தங்கி விடுகிறது. அவனது குடும்பமும், அவனது சொத்தும் திரும்பி விடுகின்றன. அவனது செயல் தங்கி விடுகிறது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரளி)
நூல்கள்: புகாரி , முஸ்லிம்
"உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்,) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது; (இவன் அல்லாது) அது வாயை அடைந்து விடாது – இன்னும் நிராகரிப்போர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை".
-திருக்குர்ஆன் 13:14
Tuesday, September 27, 2011
இணைந்தது எங்கள் சமுதாயம் !
கூத்தாநல்லூர்
இளைஞர் இயக்கம் நடத்திய சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று கூத்தாநல்லூர்
செல்வி மஹால்-ல் நடைபெற்றது. கூத்தாநல்லூர் ஜமாதார்களும், சமூக
ஆர்வலர்களும், இளைஞர்களும், சமுதாய இயக்கத்தை சேர்ந்த மாநில நிர்வாகிகளும்,
மாவட்ட நிர்வாகிகளும், நகர நிர்வாகிகளும், கூத்தாநல்லூர்-ஐ சேர்ந்த
அனைத்து கட்சி மற்றும் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு
சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின்
துவக்கமாக A.A. அர்ஷத் அலி கிராத் ஓதி துவக்கி வைத்தார். செய்யத் நாசர்
அவர்கள் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். JMR. ரஹ்மத்துல்லாஹ்
அவர்கள் இவ்விழா-வை தலைமை ஏற்று தந்து சிறப்பித்தார்கள். கல்வி மற்றும்
மருத்துவம் பற்றி TNTJ மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் Dr. M. சர்வத் கான்
MBBS அவர்கள் சிறப்புரை ஆற்றினார். சமுதாயத்தில் இளைஞர்களின் பங்கு என்ற
தலைப்பில் SDPI மாநில செயலாளர் A.அபுபக்கர் சித்திக் அவர்கள் சிறப்புரை
ஆற்றினார். சமுதாய ஒற்றுமை என்ற தலைப்பில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில
துணை செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தலைமை
ஏற்றி தந்து சிறப்பித்த JMR. ரஹ்மத்துல்லாஹ் அவர்களுக்கு தக்பீர் ஹஜ்
சர்வீஸ் நிறுவனர் Lion. N.S. சிராஜி தீன் அவர்கள் பொன்னாடை போற்றினார்.
நிகழ்ச்சியின் இறுதியாக கூத்தாநல்லூர் இளைஞர் இயக்க தலைவர் K.J. செய்யது
யூசுப் தீன் அவர்கள் கொள்கை விளக்க உரை மற்றும் நன்றி உரை ஆற்றினார்.
Thursday, April 7, 2011
முதியோர் இல்லம்
அழுது புலம்பும்
பிரசவத்தில்;
அரை மயக்கத்திலும் உன்
அழும் குரலுக்கு
ஆனந்தமாய் நான் அன்று!
பாலுக்கு ஏங்கி
உன் சிவந்த
இதழ்கள் இரண்டும்
பிதிங்கியதைக் கண்டு;
மனம் பதுங்கியக்
காலம் அன்று!
பள்ளிக்கு
முரண்டுப் பிடிக்கும்
உன் பாதம்
இரண்டையும் பக்குவமாய்
திருப்பியக் காலம் அன்று!
நீ மெத்தப் படிக்க
ஒத்த வீட்டையும்
விற்றுத் தீர்த்து;
உன் படிப்பிற்குத்
தீணியானது அன்று!
Subscribe to:
Posts (Atom)




