Tuesday, December 11, 2012
பள்ளிவாசலுக்கு தொழுவதற்கு வருபவர்களை யாராலும் தடைசெய்ய முடியாது
பள்ளிவாசலுக்கு தொழுவதற்கு வருபவர்களை யாராலும் தடைசெய்ய முடியாது.
ஷியா கொள்கையை பின்பற்றும் முஸ்லிம்கள் முதல் மூன்று கலிபாக்களையும் ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல மற்றும் அந்த மூன்று கலிபாக்களையும் குறைவாகவும் சொல்வார்கள் . அவர்கள் (ஷியா) பள்ளிவாசலுக்கு தொழுவதற்கு வர நம்மால் தடை செய்ய முடியாது .காரணம் அவர்கள் குர்ஆனையும் நபியாக முகம்மது நபி (ஸ. அ ) அவர்களை ஏற்றுக் கொண்டவர்கள் . இதனை ஹஜ் செய்பவர்கள் பார்க்கலாம் .( தடுப்பவர்களை நீதி மன்றமே தண்டிக்கும் நினைவில் கொள்ளட்டும் ) இந்நிலை இருக்கும் போது நாம் நம்மில் சிலரை தடை செய்கிறோம்?
ஒருவரது உள்ளத்தில் எத்தகைய எண்ணம் உள்ளது என்பதை இறைவன் மட்டுமே அறிவான். தொழுகைக்கு வருபவர் அவர் முஸ்லிமாக இருந்தால் அவரை அனுமதித்தே ஆக வேண்டும். ( தொழுகைக்கு வரும்போது (மதுவை குடித்து வரக் கூடாது. அவ்விதம் இருப்பின் அவரை வெளியேற்றலாம் மற்றும் தொழுகைக்கு இடையூராக இருப்பவரையும் வெளியேற்றலாம்)
தொழுகைக்கு வருபவர் ஒலு செய்திருக்க வேண்டும் . அது அவரது கடமை .ஒழு இல்லையேல் தொழுகையே கூடாது. ஆனால் நாம் யாரிடமும் 'நீ ஒலு செய்தாயா?' என்று கேட்பதில்லை. ஆனால் மார்க்கத்தில் கடமையாக்கப்படாத ஒன்றை 'தொப்பி போட்டு தொழு இல்லையென்றால் பள்ளிவாசலுக்கு வராதே' என்பது மிகவும் தவறாகும்
பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வர தடை செய்தல் பெரிய குற்றமாகும். இந்நிலை நீடிக்குமானால் பிரிவுகளை உருவாக்குவதற்கு நாமே வழி வகுக்கின்றோம். இதனால் தேவையில்லாமல் பிரிவுக்கு ஒரு பள்ளிவாசல் உருவாகின்றது.
இறையில்லங்களில் சுதந்திரமாக தொழுகையில் ஈடுபட ,நடத்தப்பட இடமளித்தல் வேண்டும் . அவற்றை தடுப்பதற்கு
எவருக்கும் அதிகாரமில்லை .அதுபோன்றே வணக்கத்தலங்களில் பணிவுடன் அச்சத்துடன் நுழைதல் வேண்டும்.இறையில்லங்களை அவமதித்தல் கூ டாது.
And seek help through patience and prayer, and indeed, it is difficult except for the humbly submissive [to Allah ]
Qur'an- 2:45
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்
. குர்ஆன் - 2:45
10:59. (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?”
2:114 وَمَنْ أَظْلَمُ مِمَّن مَّنَعَ مَسَاجِدَ اللَّهِ أَن يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَىٰ فِي خَرَابِهَا ۚ أُولَٰئِكَ مَا كَانَ لَهُمْ أَن يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ ۚ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ
And who are more unjust than those who prevent the name of Allah from being mentioned in His mosques and strive toward their destruction. It is not for them to enter them except in fear. For them in this world is disgrace, and they will have in the Hereafter a great punishment.Qur'an- 2:114
இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.
-குர்ஆன் - 2:114
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
சமிபத்தில் நான் driving theory கிளாஸ் சென்ற போது , டீச்சர் நமாஸ் செய்யவதற்காக ஒரு 15 நிமிடம் டைம் கொடுத்தார்கள் , கிளாஸ்ல் இருந்த எல்லா முஸ்லிம்களும் சென்றார்கள் , ஒருவர் மட்டும் செல்லவில்லை , நான் பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டேன் , ஏன் இவர் மட்டும் போகவில்லை என்று , அதற்க்கு அவர் ஷியா முஸ்லிம்கள் அவர்களிடம் சேர்ந்து தொழ மாட்டார்கள் என்று , அவர் குஜராத்தை சேர்ந்த போரி முஸ்லிம் ஆவார் , எங்களை போன்ற முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இது பெரிய ஆச்சர்யமாக இருந்தது . எனக்கும் கூட பள்ளிவாசலில் எப்படி தொழுகிறார்கள் , என்ன போதிக்கிறார்கள் என்று பார்க்க ஆசை உண்டு , ஆனாலும் அனுமதிப்பதில்லை என்று நினைக்கிறேன் . சர்ச்சில் எல்லோரையும் அனுமதிக்கிறார்கள் , மத , சாதி வேறுபாடின்றி . முஸ்லிம்கள் தொழுகையை ஒரு மறை பொருளாகவே வைத்திருக்கிறார்கள் . இந்து மதத்தில் உள்ள சாதி வெறியை காட்டிலும் அதிகமாக இந்த ஷியா , சன்னி பிரச்னை உலக முழுவதும் இன்று காண படுகிறது , இந்த நிலை மாறவேண்டும் . உங்களுடைய கட்டுரைக்கு நன்றி .... RST ஷர்ஜாஹ் .
Post a Comment