வம்பு வளர்ப்பது நம் பண்பல்ல
வம்பு வளர்பவனை தடுப்பது நம் கடமை
வம்பு வளர்பவனை திருத்துவது மாண்பு
நமக்கேன் வம்பென ஒதுங்கி வாழ்வது சிறப்பாகாது
ஒதுங்கி வாழ்வோர் ஒதுக்கப் படுவார்கள்
பதுங்கி வாழ்வோர் பிடிக்கப் படுவார்கள்
சிந்தி சிறத்தையோடு செயல்படு
தவறு செய்பவன் மனிதன்
தவறு செய்பவதிலிருந்து தானாக திருந்துவது கடினம்
தவறு செய்பவரை மற்றவர் திருத்துவது எளிமை
தவறு செய்ய நாடாதவராக நாமிருந்து
தவறு செய்வரை திருத்துபவராக நாம் இருப்பது உயர்வு
தவறு செய்யாமல் இருக்க இறைவனை வேண்டு
இறைவனிடம் வேண்டியதை செயல்படுத்த விருப்பு
கடமையற்றவன் கடிவாளம் அற்றவன்
கடமையைச் செய் முடிவை இறைவனிடம் விட்டு விடு
தீமையைக்
கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும்.
அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இதுதான் ஈமானின்
இறுதிநிலையாகும். (அபூ ஸயீது அல் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லிம் 78) -
நபிமொழி
No comments:
Post a Comment