Showing posts with label பிரச்சனைகள். Show all posts
Showing posts with label பிரச்சனைகள். Show all posts

Saturday, December 15, 2012

பெண்ணுடைய வாழ்வு பாழாகிவிட அனுமதிப்போமா?

“… … அண்மையில் கோப்பன்ஹேகில் உலகப் பெண்கள் பிரச்சினை குறித்த ஒரு கருத்தரங்கம் நடந்தது.  பெண்ணினத்திற்கு சமத்துவம் வேண்டும்; பெண்கள் முன்னேற வேண்டும் என்றெல்லாம் அந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
 1400 ஆண்டுகளுக்கு முன்னமேயே தாய்குலத்திற்கான பிரச்சனைகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக தீர்த்துவைக்கப்பட்டுவிட்டன.  ஆகவே, இஸ்லாமிய சமுதாயத்தில் பிரச்சனைக்கே இடமில்லை.  காலப்போக்கில் நாம் மாற்றான் கலாசாரத்திற்கு அடிமையாகி, அலைக்கழிந்துவிட்டோம்.  நம்மை நாமே சீரழிவைத் தேடிக்கொண்டோம்.  அரபு நாடுகளிலே பெண்களுக்கு மஹர் கட்டியே திருமணம் நடைபெறுகிறது.  அங்கு ஆண் ஏழையாகிவிடுகிறான் - பெண் பணக்காரியாகிறாள்! இந்த விழாவில் கலந்து கொள்ள பயந்து கொண்டு கோழைகள் பலர் வரவில்லை.  மஹர் தான் நம் சட்டம்.  ஹிந்துக்களிடையேதான் இந்த வரதட்சனைப்பழக்கம்!  பெண்களுக்கு அங்கே சொத்துரிமை இல்லாததால், பெண்ணுக்கு சீராக ஹிந்துத் தந்தை மகளுக்குக் கொடுப்பதில் நியாயமிருக்கிறது.  ஆனால் இஸ்லாத்தில் பெண்ணுக்கு சொத்துரிமை இருக்கிறது.  ஆகவே வரதட்சணைத் தேவையில்லை.