Saturday, June 30, 2012

முஸ்லிம் உலகமும் மற்றும் சினிமாவும்

முஸ்லிம்களுக்கு  என்று ஒரு கொள்கையும் ஒரு கோட்பாடும் உள்ளது. சினிமா பார்ப்பது கூடாது என்பது  அதன் கொள்கை .அறிவைத் தேட இஸ்லாம் வற்புறுத்துகின்றது அது சீன தேசத்திலிருந்தாலும் நாம் சென்று கற்று வருவது நல்லது.சினிமா ஒரு மோசமான விளைவுகளை உண்டாக்குவது என்பது உண்மை. ஆனால் அது கல்வி கற்பதற்காக பார்க்க நேரிடும்போது அதனைப் பார்ப்பதில் தவறு இருப்பதாக முடிவுக்கு வந்து விடக் கூடாது.நவீன உலகில் அருமையான தொலக்காசிகள் கல்விக்காகவும் சிறப்பான படங்களைத் தருகின்றன.குறிப்பாக டிஸ்கவரி சேனல் போன்றவை  
இங்கு ஆங்கிலத்தில் பார்த்ததை தரப்பட்டுள்ளது. பாருங்கள்

இசை - ஓர் இஸ்லாமியப் பார்வை !

அஸ்ஸலாமு அலைக்கும்,

அதிரைநிருபர் தளத்தில், ‘அதிரையில் சுழற்றியடித்த காற்றும் இசை இரைச்சலும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானதும், இதன் தொடர்ச்சியாக வந்த பின்னூட்டங்களில், இஸ்லாத்தில் இசை கூடும் என்று அன்பு சகோதரர் ஒருவரால் ஒரு சில வாதங்கள் எடுத்துவைக்கப்பட்டன. அச்சகோதரரின் வாதத்தின் மூலம், அவர் சொல்லும் இசைக்கான வரைவிலக்கணம் எது என்று அவரிடமே கேட்டேன், சரியான பதில் வரவில்லை, இருப்பினும், அறிவைத் தேடும் முயற்சியில், இசை வெறுக்கப்பட வேண்டியதா? என்ற கேள்வியுடன் மீண்டும் ஒரு முறை என்னுடைய முயற்சியை ஆரம்பித்தேன். கடந்த ஓரு மாதமாக எனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படியில், முடிந்தவரை திருக்குர்ஆன் மற்றும் நபிகளாரின் பொன்மொழிகள், மற்றும் குர்ஆன் சுன்னாவைப் போதிக்கும் மார்க்க அறிஞர்களின் தொகுப்புகளை ஆய்வு செய்து, இந்தக் கட்டுரையை எழுதியுள்ளேன். மனிதன் என்ற முறையில் இந்தப் பதிவில் தவறு இருப்பின், அதற்குப் பொறுப்பு நானே. இந்த ஆய்வு சரியாக இருந்தால், அதற்குப் போதுமானவன் அல்லாஹ் ஒருவனே.

Friday, June 29, 2012

தேரிழந்தூர் தாஜுதீன் "நம்மோடு தாஜ் " பாகம் -4



தேரிழந்தூர் தாஜுதீன் "நம்மோடு தாஜ் "
 தேரிழந்தூர் தாஜுதீன் Moon T. V க்கு பேட்டி

தீனிசைத் தென்றல், அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.

ஒரு செயல் மற்றொரு செயலுக்கு வழிவகுக்கும்

ஒரு செயல் மற்றொரு செயலுக்கு வழிவகுக்கும்

ஒரு செயல் மற்றொரு செயலுக்கு வழிவகுக்கும்.இதில் உண்மை இருப்பதும் உண்மை.
 இதில் உண்மை உண்டு என்று சொல்வோர் பலர் இருக்க 
'உண்மை கிடையாது' என்று  சொல்லுமளவுக்கு சிலர் நம்பிக்கை வைப்பதில் பலருக்கு நகைப்பை கொடுத்தாலும்
அந்த சிலர் அதில் முழு நம்பிக்கையோடு நம்புகின்றனர்.

நாடுவது கிடைக்கும்.
பகுத்துணர்ந்து செயல்படுதல் நன்மை தரும் .
கற்றவருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு .
நீருக்கு நிறமில்லை இதுவும் உண்மை .
இப்படி பல உண்மைகள் .

முதலில் தத்துவம் பின்பு ஆய்வு அடுத்து அதன்மீது முழுமையான நம்பிக்கை.
இது பலரும் நம்புவது.அதற்கு மாறாக தானும் தவறான பாதையில் தொடர மற்றவரையும் அந்த பாதையில் தொடர முயல்கின்றனர்.

Thursday, June 28, 2012

இலவசமாக mozRank சரிபார்க்கவும்.மற்றும் இணைய தள அதிகார சோதனை

உங்கள் இணையத்தளம் மற்றும் வலைப்பூ  தரத்தை பாருங்கள்
அலெக்ஸா ரேங்க் ஹிட்
பேஜ் தரவரிசை mozRank இணைய தள அதிகார சோதனை மற்றும் பல

 இலவசமாக mozRank சரிபார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள்

Tuesday, June 26, 2012

மறந்துவிட்ட சத்தியங்கள்

மறந்துவிட்ட சத்தியங்கள்


 வாழ்வில் நம்மையே நினைத்துக் கொண்டிருக்கின்றோம்  . மற்றவர்களைப் பற்றியும் நினைத்துப் பாருங்கள் . நம்முடன் வரப்போவது நாம் செய்த தொண்டுகளும் நற்சேவைகளும்தான். உற்றார் உறவினர் மற்றோர் நாம் உயிரோடு இருக்கும் போது நம பெயரைச் சொல்லி அழைப்பார்கள்.  நம உயிர் நம்மை விட்டு பிரிந்து விட்டால் நம உடலை அடக்கம் செய்வதில் துரிதம் காட்டி அடக்கம் செய்வதில் முற்படுவர். அப்பொழுது அவர்கள் நமக்கு தந்துள்ள பெயர் முஸ்லிமாக  இருந்தால்  "மொவுத்தை" எப்பொழுது அடக்கம் செய்யப் போகின்றார்கள். கிறிஸ்டியனாக  இருந்தால் பிணத்தினை  எப்பொழுது அடக்கம் அல்லது  ஹிந்துவாக இருந்தால் எப்பொழுது  சுடுக்காட்டுக்கு  போகின்றார்கள்.  போய் விட்டது  நம பெயர். வந்தது மொவுத் அல்லது பிணம் என்ற புதிய  பெயர்.

'பட்டாமணியார் வீட்டில் யாராவது இறந்தால் ஆயிரம் பேர். பட்டாமணியார் இறந்துவிட்டால் பத்து பேர்' . அவரே போய் விட்டார் இனிமேல் அவரை அணுக வேண்டிய அவசியமில்லை. இதுதான் உலகம்

 கொடுத்த வாக்குறுதிகளை செயல் படுத்திவிடுங்கள். அது மக்களிடமாகவும் இருக்கலாம். இறைவன் நாடியதை அவனுக்கு கொடுத்த வாக்குறுதிகளை  செயல்படுத்திவிடுங்கள். அவைகள்தான் உங்களை தொடரக் கூடியவைகள்.
''இறந்தவரை மூன்று விஷயங்கள் பின் தொடர்கின்றன. அவை அவனது குடும்பம், அவனது சொத்து, அவனது செயல்கள் ஆகும். இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டும் தங்கி விடுகிறது. அவனது குடும்பமும், அவனது சொத்தும் திரும்பி விடுகின்றன. அவனது செயல் தங்கி விடுகிறது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் -அறிவிப்பவர்: அனஸ் (ரளி)
நூல்கள்: புகாரி , முஸ்லிம்

Monday, June 25, 2012

பெண்கள் ஏன் அழுகின்றனர்

Picture source


பெண்கள் ஏன் அழுகின்றனர்


கவலை  கவ்வியதாலும்  அல்லது  நினைத்த  காரியம் சாதிக்க வேண்டியும்  இருக்கலாம்

உண்மையிலேயே அழுகின்றார்களா அல்லது அழுவதுபோல் பாவனை செய்கின்றார்களா!

அழுதால் தன மீது பரிதாபப் பட்டு தன மீது கணவனுக்கு இறக்கம் வர தன்னை அமைதிப்படுத்த வருவதனை விரும்புகின்றார்களா!

தன பிறந்த இடத்தினை அதிகமாக நேசிக்க புகுந்த இடம் பிடிக்காததினால் அழுகின்றார்களா!

தன்மீது யாரும் கருணைக் காட்டவில்லையே என்ற ஆதங்கம் அவர்களை அழும் நிலைக்கு தள்ளி விட்டதா

அனைத்து வேலையும் தானே செய்யும் நிலை இருந்தும் ஒருவரும் பாசம் காட்டாமல் நிந்திக்கின்றார்களே என்ற நினைப்பு அவர்களை அழச் செய்துவிட்டதா

ஆண்களைவிட பெண்கள் உணர்ச்சி மிக்கவர்கள் அதனால் அவர்களை அறியாமல் அழுகை வந்துவிடுகின்றதா?

தான் எதிபார்த்த வாழ்வு கிடைக்க வில்லையே என நினைத்து அழுகிறார்களா.

தான் பாசம் காட்டி அன்போடு வளர்த்த பிள்ளைகள் அவர்கள் மனைவி வந்த பின் நம்மை மத்க்கவில்லையே என்பதனை நினைத்து அழுகின்றார்களா மகன் தன்னிடம் அன்பாக பேச மாட்டானா என்ற ஏக்கமா

"தாயின் காலடியில் சுவனம் இருக்கிறது" - நபி மொழி

கலைகளை கண்டு களிப்பது ஒரு கலை!

 இறைவனால் அருளப்பட்ட  அனைத்துமே அழகு. இயற்கையின் அழகைக் கண்டு மகிழ்வதில் மனம் அமைதி அடைவதுண்டு. கலையை ரசித்துப் பார்பதிலும் ஒவ்வொருவருக்கும் ஒரு வேறுபாடு ஏற்படுவதும் இயல்பு. ஒருவருக்கு பிடித்தது ஒருவருக்கு பிடிக்காமல் போகலாம்.ஆனால் அந்த கலை உருவாக்கப் பட்டதே ஒரு மகிமைதான். இறைவன் மனிதனுக்கும் ஒரு திறமையைக் கொடுத்து ஒரு கலையை உருவாக்கக் கூடிய ஆட்றலை
தந்துள்ளான். கலை என்பது ஒரு சிலையை வடிப்பது மட்டுமல்ல. அது அழகிய ஓவியமாகவோ,கவிதையாகவோ,கட்டிடமாகவோ மற்றும் பல வகைகளில் இருக்கலாம். அந்த அற்புத கலை படைப்புகள் பல கால ஓட்டத்தில் பல காரணங்களுக்காக சிதைந்துவிட்டதனயும் நாம் அறிகின்றோம். அது இயற்கையால் ஏற்பட்டதாக அல்லது மனிதனால் உண்டாக்கப்பட்ட போர், அரசியல், மத நோக்கங்கள் மற்ற பல காரணங்களும் இருக்கின்றன. உருவாக்குவது கடினம் அழிப்பது எளிமை.
எப்பொழுதும்  ஒரு கலை ஒரு  கலாச்சார பாரம்பரியங்களை விளக்கக் கூடியதாகவும் ஒரு சரித்திர காலத்தினை நமக்கு அறிவிப்பதாகவும் அமையலாம். இழந்தவைகளை   மீட்பதில் பெரு முயற்சி எடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் தாஜ்மகால்,மொகஞ்சதார மற்றும் அஜந்தா ஓவியங்கள் சிலைகள் ,மகாபலிபுரத்தில் காணப்படும்  கருங்கல் சிற்பம், மதுரை மீனாதி  மீனாட்சி அம்மன் கோவில் இன்னும் பல உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு கலாச்சார பாரம்பரியங்களை விளக்கக் கூடியதாக அமைந்துள்ளன.

 கீழ் உள்ள படங்கள்  பாரிசில் எடுத்த  படங்கள்


Sunday, June 24, 2012

இடம் அறிந்து ஆள் அறிந்து பேசுவது உத்தமம்!


  இமாம்  பிரசங்கத்தில் 'உங்களுக்கு ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் சொல்ல விரும்புகின்றேன். நான் இவ்வளவு காலம் கழித்து ஒரு வீடு கட்ட முடிவு செய்துள்ளேன். அதற்கு தேவையான பணம் இருக்கிறது' இது மகிழ்வான செய்தி.
'அந்தப் பணம் உங்கள் பாக்கெட்டிலிருந்து வெளி வர மறுக்கின்றது அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.' இது வருத்தமான செய்தி.

  

  ஒரு இமாம் தன்னுடைய பிரசங்கத்தில் சொன்னார் ' நான் இந்த ஊரை விட்டு வேறு ஊர் போக திட்டமிட்டுள்ளேன்'
உடனே ஒருவர் மிகவும் வருத்ததுடன் ' நீங்கள் போகக் கூடாது' என்று வருத்தமாக சொன்னார்.
அதற்கு அந்த இமாம் 'கவலைப்படாதீர்கள் என்னை விட சிறந்த இமாம் உங்களுக்காக வர இருக்கிறார்' என்று சொன்னார். பதிலுக்கு வருத்தமடைந்த அந்த வாலிபர் இது எந்த ஹதீஸில் இருக்கிறது' என வினவினார்.


Saturday, June 23, 2012

நான் ஒரு தமிழ்ப்பற்றாளன், ஆனால் வெறியன் அல்ல


நீடூரலி அண்ணா,
என் பெயருக்கான விளக்கத்தை ஒருவருக்கு நான் எழுதினேன்.அதை அப்படியே உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். buhari@gmail.com என்பதை நான் கம்பெனித் தொடர்புகளுக்குப் பயன்படுத்துவேன்.ஆகவே நான் தான். நானே தான். ஐயம் வேண்டாம்.
*
ஹசன் புஹாரி என்று பலரும் என் பெயரை எழுதுகிறார்கள்.

இப்போது நீங்கள் ஹசன் என்று எழுதி இருக்கிறீர்கள்.
என் பெயரை மீண்டும் ஒருமுறை இச்சபையில் கூறுகிறேன்.
என் பெயர் புகாரி, என் தந்தையின் பெயர் அசன்பாவா
புகாரி என்பதை புஹாரி என்றுதான்
நானும் எழுதிக்கொண்டிருந்தேன்
ஆனால் இடையில் வரும் க என்ற எழுத்து,
ஹ என்ற ஓசையையே பெறும் என்பதால்
புகாரி என்று எழுதுகிறேன்
ஹ ஜ ஷ ஸ போன்ற எழுத்துக்கள்
தமிழ் எழுத்துக்கள் அல்ல
சமஸ்கிருத மொழியை எழுதுவதற்காக
உருவாக்கப்பட்ட எழுத்துமுறை
நான் ஒரு தமிழ்ப்பற்றாளன், ஆனால் வெறியன் அல்ல
ஆகவே அவசியமான இடங்களில் மட்டுமே
கிரந்தம் பயன்படுத்துவேன்
புகாரி என்பது சரியாகவே உச்சரிக்கப்படும் வகையில்
அமைந்திருப்பதால் அப்படியே பயன்படுத்துகிறேன்

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும்' நிலைதான்! + எப்படி யுனித்தமிழ் தட்டச்சுவது?


ஆக்கமும்,ஊக்கமும்,சித்தனையும்,படைப்பு மனமும் உண்டு ஆனால் அதனை கவிதை வடிவில் கொடுக்க ஆசை. ஆசைப் படுவது இயல்பு. அதற்கும் முயற்சியும் தேவை. சட்டியியல் இருந்தால்தேனே அகப்பையில் வரும். நினைததேல்லாம் கிடைத்துவிட்டால் இறைவனை மறப்பாய்.    கவிதை எழுத தாளாத ஆசை. கற்றது மறந்தது செய்யுள் எழுதுவதற்குரிய யாப்பிலக்கண இலக்கணம் காணாமல் போனது. இலக்கணத்தை  .தொலைத்ததை தேட முயற்சிகின்றேன். கவின் பிறக்கிறான் பேச்சாளன் உருவாக்கப்படுகின்றான்.நான் கவினாக பிறக்கவில்லையோ! அதனை படைத்தவனே அறிவான். குறை என்னிடமிருக்க எல்லாம் வல்ல அருட்கொடையானை குறை சொல்வது பெரிய குற்றம். அவன் செய்வது அனைத்தும் நன்மைக்கே! வயதும் வளர்கின்றது. கடந்த காலத்தில் தொழிலிலேயே நாட்டம்போய் ஆடி ஓடி ஓய்ந்த காலத்தில் நினைவாற்றல் குறைந்தாலும்  உளப்பூர்வமான தொடர்ந்த முயற்சி  துணை செய்யும் என்ற நம்பிக்கை. நம்பிக்கையே வாழ்வு. கணினியை கையாள்வதற்கே இத்தனை காலம். கற்பனை ஓட்டம் வந்து ஓட அதனை நிறுத்தி தமிழில் மாற்றி டைப் செய்து கணினியில் கொடுக்க கூகுல் தமிழ் உதவாமல்  உபத்திரவம் தருவதில் குழப்பம் கொடுப்பது 'குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும்' நிலைதான். நினைத்தவை மறக்கடிக்க 'டைப் இன் தமிழ் கூகுல் மொழி பெயர்ப்பு-Type in Tamil Translation' உதவி செய்கின்றது  ஒரு நாளாவது மீன் கிடைத்துவிடும் என்பது திண்ணம். 
வாழும் வரை ஏதாவது செய்ய வேண்டும், ஓய்வு எடுத்தால் நம்மை அனைவரும்  ஓரம் கட்டி விடுவார்கள் அத்துடன் நாமும் பல வீணான சிந்தனைக்கும் உள்ளாக்கப் படுவோம். அதன் விளைவு கவலையில் முடியும் இருக்கும் வரை நமக்கு தெரிந்ததை மற்றவருக்கும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் என்னை ஆட்டிப் படைகினறது. நாம் என்ன புதுமையாகவா தந்துவிடப் போகின்றோம் என்ற தாழ்வு மனப்பான்மை வராமல் தடைப் போடுகின்றேன். அழுக்கு சேரஆடையை துவைக்க முற்படுகின்றோம்.படிக்க அறிவின் ஒளி கூடுகின்றது. நாம் ஏதோ மனதுக்கு வந்ததை எழுத அதனை நாம் படிக்க ஒரு சாதனை செய்ததுபோல் மகிழ்வு வரத்தான் செய்யும் அதில் மற்றவருக்கு ஒரு பொறி கிடைத்து அதனை அவர்கள் சிறப்பாக்கி விடலாமல்லவா!

முகம்மது அலி ஜின்னா

முடிவுக்கு வா

                                                            முடிவுக்குவா
நீயும் நானும்
செய்துகொண்டிருப்பதென்ன
சிந்தையுண்டா உனக்கு
கயிறிழுத்துப் பார்க்கிறோம்
வாழ்ந்த வாழ்க்கைக்கு
கேவலம் இல்லையா
முடிவுக்கு வா

*

பலசாலியல்ல....
வாழக் கிடத்ததை
வாழாதிருப்பவர்

பலசாலியல்ல....
வாழ்வை விட்டுவிட்டு
வறட்டுத் தனம் பற்றிக்கொண்டவர்

பலசாலியல்ல....
உறவை வெளியேற்றி
வெறுமையில் அமிழ்ந்தவர்

பலசாலியல்ல...
வளையத் தெரியாது
வம்படி நிற்பவர்

எப்போழுதுதான்முடிவுக்கு வருவது!

 பலபேர் வாழ்கையில் கணவன் மனைவி இருவருக்கும்  விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம் இல்லாமல் பலநாட்கள் தம்பதிக்குள் பேசாமல் இருந்ததனை நான் அறிந்திருக்கின்றேன். ரசத்தில் சிறிது அதிக உப்பு  சேர்தமையால் கணவன் மனைவியை கோபமாக பேச அவள் வருத்தமடைந்து வாயடைத்துப்போய் அதில் இருவருக்கும் மவுன விரதமாக மாறி சில நாட்கள் ஓடியதும் உண்டு .
"நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்)விட்டுவிடுவார்கள்."
 அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி

வாழும் ஒவ்வொரு நாளும் முக்கியமானது, இழந்த  மகிழ்வு இழந்ததுதான், அதற்கு முக்கிய காரணம் கோபதையும் தாபத்தையும்  விட்டுக்  கொடுத்து முடிவுக்கு கொண்டு வராமல் போனதுதான்.
"உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியரிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவர்களே" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).
நூல்கள்: அஹ்மத், திர்மிதீ.

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது." - குறள்
மு.வ உரை:
இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.  -
திருக்குறள்  -45

Friday, June 22, 2012

என்னை மன்னித்து - அஹ்மத் புக்ஹதிர் (ஆங்கிலம் வரிகள் இணைப்புடன் ).Forgive Me - Ahmed Bukhatir (English Subtitles).avi


என்னை மன்னித்து - அஹ்மத் புக்ஹதிர்
இன்று, ஒரு பஸ் மீது,
நான் தங்க முடி கொண்ட ஒரு பெண்ணைப் பார்த்தேன்.

AHMED BUKHATIR FORGIVE ME WHEN I WHINE LYRICS
Today, upon a bus,
I saw a girl with golden hair.
And wished I was as fair.
When suddenly she rose to leave,
I saw her hobble down the aisle.
She had one leg and wore a crutch.
But as she passed, she smiled.
Oh God, forgive me when I whine.
I have two legs the world is mine.

With feet to take me where I `d go.
With eyes to see the sunset's glow.
With ears to hear what I'd know.
Oh God, forgive me when I whine.
I have blessed indeed, the world is mine.

I stopped to buy some candy.
The lad who sold it had such charm.
I talked with him, he seemed so glad.
If I were late, it `d do no harm.
And as I left, he said to me,
"I thank you, you've been so kind.
You see," he said, "I `m blind"
Oh God, forgive me when I whine.
I have two eyes the world is mine.

With feet to take me where I `d go.
With eyes to see the sunset's glow.
With ears to hear what I'd know.
Oh God, forgive me when I whine.
I have blessed indeed, the world is mine.


I saw a child with eyes of blue.
He stood and watched the others play.
He did not know what to do.
I stopped a moment and then I said,
"Why don't you join the others, dear?"
He looked ahead without a word.
And then I knew. He couldn't hear.
Oh God, forgive me when I whine.
I have two ears the world is mine.

With feet to take me where I `d go.
With eyes to see the sunset's glow.
With ears to hear what I'd know.
Oh God, forgive me when I whine.
I have blessed indeed, the world is mine

Thursday, June 21, 2012

சமூகம் குறித்த அப்பாவின் மதிப்பீடும், அக்கறையும் அவரளவுக்கு எனக்கில்லையோ !

போன ஞாயிறு கொஞ்சம் ஓய்வாக இருந்தேன். வீட்டு லைப்ரரியில் சேகரிப்பில் இருந்த பழைய புத்தகங்களை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். பழைய ‘குமுதம்’ இதழ் ஒன்று கிடைத்தது. எந்த புத்தகம் வாங்கினாலும் உடனே அட்டையிலோ, முதல் பக்கத்திலோ தன்னுடைய கையெழுத்தை போட்டு வைத்துக் கொள்வது அப்பாவின் வழக்கம். அதுபோலவே புத்தகத்தில் அவரை கவர்ந்த வாசகங்கள் ஏதேனும் இருந்தால் அடிக்கோடிட்டு வைத்திருப்பார். கட்டுரைகள் அருகே அப்பிரச்சினை குறித்த அவரது கருத்தை சுருக்கமாக (வாசகர் கடிதம் மாதிரி) எழுதிவைப்பார். இதழைப் புரட்டும்போது உள்ளே ‘பிரார்த்தனை கிளப்’ பகுதியில் prayed என்று எழுதி கீழே கையெழுத்திட்டிருந்தார். நீண்டநாள் கழித்து அவரது அழகான கையெழுத்தை கண்டது மகிழ்ச்சியை தந்ததோடு, வேறு சில சிந்தனைகளையும் கிளறியது.


குமுதம் ‘பிரார்த்தனை கிளப்’ என்கிற பகுதியை இந்த தலைமுறை குமுதம் வாசகர்கள் எவ்வளவு பேர் அறிந்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆசிரியர் எஸ்.ஏ.பி-க்கு கூட்டுப் பிரார்த்தனையில் நம்பிக்கை அதிகம். பிரார்த்தனை மூலமாக இறைவனிடம் எதையும் சாதித்துவிடலாம் என்கிற கருத்தை கொண்டிருந்தவர். எனவேதான் தன்னுடைய இதழில் ‘பிரார்த்தனை கிளப்’ என்கிற வாசகர்கள் அமைப்பை உருவாக்கியிருந்தார். நோய் நொடியில் இருப்பவர்கள், அறுவைச்சிகிச்சைக்காக காத்திருப்பவர்கள் என்று இன்னலில் இருப்பவர்கள் குமுதத்துக்கு கடிதம் எழுதிப் போடுவார்கள். பிரார்த்தனை கிளப் பகுதியில் அக்கடிதம் பிரசுரிக்கப்படும். கீழே ஆசிரியர் ‘இவருக்காக இன்ன நேரத்தில் அனைவரும் அவரவர் வழிபடும் இடத்தில் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவோம்’ என்று வாசகர்களை கோருவார்.

சிறுவயதில் அப்பகுதியை வாசிக்கும்போது ‘டைம் வேஸ்ட்’ என்று நினைப்பேன். எங்கோ இருக்கும் யாருக்கோ எதற்காகவோ யார் மெனக்கெட்டு பிரார்த்திப்பார்கள் என்றெல்லாம் கருதியிருக்கிறேன். ஆனால் என்னுடைய அப்பாவே அதை தொடர்ச்சியாக பின்பற்றி வந்திருக்கிறார் என்பது எனக்கு கொஞ்சம் லேட்டாகத்தான் தெரிந்தது. பிற்பாடு நானெடுத்த குட்டி கணக்கெடுப்பு ஒன்றில் அப்போதிருந்த குமுதம் வாசகர்கள் (பிரார்த்தனையில் நம்பிக்கை கொண்டவர்கள்) பெரும்பாலான பேர் நேரமெடுத்து, மெனக்கெட்டு இந்த கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துகொள்ளும் வழக்கம் கொண்டவர்கள் என்பதை அறிந்துகொண்டேன். உள்ளகரம் ஆயில்மில் அருகே ஒரு யாக்கோபு சர்ச் உண்டு. ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை அந்த தேவாலயத்துக்கு சென்றபோது, குமுதம் புத்தகத்தை வைத்துக்கொண்டு ஒரு அன்பர் மனமுருக ‘யாருக்கோ’ பிரார்த்திருத்துக் கொண்டிருந்ததை கூட கண்டிருக்கிறேன்.

உங்கள் அப்பா வாழ்ந்த காலம் அப்படி ! நீங்கள் வாழும் காலம் இப்படி! நூறு வயதிற்கும் வாழ்க்கை

 அன்று வாய்ப்புகளை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை . கிடைத்ததை வைத்து நிம்மதியாக,மகிழ்வாக வாழ்ந்தார்கள்.
50,000 மேல் 100 ஆண்டுகள் மேல்( நூறு வயதிற்கும் மேல்) வாழும்  மக்கள் தொகை ஐக்கிய அமெரிக்க உள்ள  நாடுகளில்   வளர்ந்து வருகிறது.
 அவர்களிடமிருந்து   நாம் நூறு வயதிற்கும் மேல்  வாழ்வது எவ்வாறு என்பதனை   கற்று கொள்ள முடியும்.
குற்றம் செய்ய தூண்டுதலும் இல்லை அதற்கு அவசியமும் மற்றும் வாய்ப்புமில்லை அதனால் தவறு செய்துவிட்டு வருந்த வேண்டிய அவசியமுமில்லை. குற்றம் செய்தாலல்லவா குற்றவுணர்வு இருக்கும் .
இக்காலம் குற்றம் செய்துவிட்டு பெருமையாக பேசி மகிழும் காலம் . உத்தமன் என்ற போலி வேடம் போடும் காலம்.
குற்றம் செய்வது இயல்பு அதனை நினைத்து வருந்தி திருந்தி வாழ்வது உயர்வு. சமூகம் ஒரு நல்ல சமூகமாக அமைய வழி நடத்துபவர் உயர்வானவராக இருப்பது அவசியம்.
தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி . நாம் தேர்ந்தெடுப்பதெல்லாம் தன்னலம் கருதி ஒரு சார்புடையதாக இருப்பதால் அது  நல்ல கண்ணோட்டத்தில் இல்லை . 

நீங்கள் விரும்பும் நல்லதை உங்கள் சகோதரனுக்கும் கொடுக்க வேண்டியது உங்கள் கடமை . அறிவு ஆற்றல் அனைத்தும்  இருந்தும் அதனை நமக்குள் அடக்கி வைத்தல் தவறு. சிந்தனை செயல்படுத்தப்பட்டு அதனை மற்றவர்க்கும் ஏற்றி வைப்பது உங்கள் கடமையல்லவா!

 தலைவராக தேர்ந்தெடுப்பவரை நல்லவராகவும் ,சிந்தனைத் திறன் மிக்கவராகவும்,இறை நம்பிக்கை உள்ளவராகவும்,செயல்பாட்டுத் திறமை மிக்கவராகவும் உள்ளவராக தேர்ந்தெடுக்க வேண்டும்.
 “மக்களை கண்காணிக்கும் தலைவரிடம் அவருடைய பொறுப்பில் உள்ள குடிமக்கள் குறித்து கேள்வி கேட்கப்படும்” (புகாரி முஸ்லிம்) என்பது  நபி மொழி.
“மக்களில் ஒரு சாரார் மேலுள்ள வெறுப்பு அக்கிரம் செய்யும்படி உங்களை தூண்டாதிருக்கட்டும் நீங்கள் நீதி செலுத்துங்கள் அது தான் தக்வாவுக்கு மிக நெருங்கியது.” (5:8)
சேவை மனப்பான்மை – “சமூகத்தின் தலைவர் மக்களின் சேவகராவார்” (அத் தாரமி) எனும் நபி மொழிக்கேற்ப சேவை மனப்பான்மை கொண்டவராய் தலைவர் திகழ்தல் வேண்டும்.
“அணுவளவு கர்வம் உள்ளவர் சுவனத்தில் நுழைய மாட்டார்”. (முஸ்லிம்)

மனிதன் நல்லவன் மக்கள் கொடியோர். "உலகம் ஒரு நாடக மேடை அதில் ஒவ்வொரு மனிதனும் நடிகன்"

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்,"நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர மக்களின் பொறுப்பாளர்ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண்/ தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன்/ தன் பொறுப்புகளுக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண்/ தன் கணவனின் வவீட்டாருக்கும்/ அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள. அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவருடைய பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புபக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்." (நூல்: புகாரீ - ஹதீஸ் எண் : 713
விளக்கப்படம்: நூறு வயதிற்கும் வாழ்க்கை 
தயவு செய்து கண்கவர் விளக்கப்படம் பாருங்கள் இதில் சில சுவாரசியமான சிறப்பம்சங்கள் காணக் கிடைகின்றன நூறு வயதிற்கும் மேல் வாழும் மக்கள் தொகை பட்டியல் பார்க்க கீழ் உள்ளதை கிளிக் செய்யுங்கள்.

http://en.wikipedia.org/wiki/Category:Indian_centenarians

 http://en.wikipedia.org/wiki/Lists_of_centenarians


Wednesday, June 20, 2012

இசை எவ்வாறு கல்வியைக் கற்பதற்கும் உதவுகின்றது

   இசை எவ்வாறு கல்வியைக் கற்பதற்கும் உதவுகின்றது
ஆய்வின்படி செடியின் நல்ல வளர்ச்சிக்கு நல்ல இசையை கேட்கச் செய்கின்றனர்.இசையைக் கேட்டு மரம் செடி கொடிகள் கூட   நன்கு வளர்கின்றன. வயிற்றில் வளரும் குழந்தைக்கு மென்மையான இசையைக்  கேட்டு மகிழ்வதாகவும் அதனால் அந்த பிறக்கப் போகும்  குழந்தைக்கு இசை ஓரளவு உதவி செய்வதாகவும் சொல்கின்றனர். கருவில் இருக்கும் போதே இசையை கேட்டு வளரும் குழந்தைகள் புத்திசாலிகளாகவும், தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும் வளர்வார்கள் என்று ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும் தெரிவித்துள்ளனர்.

மென்மையான  நல்ல இசையை கேட்கும்போது நமது மூளையின் பல பகுதிகள்  தூண்டப்பட்டு உற்பத்தி அதிகரிக்க   நினைவுகளை நிறுத்தி வைக்க  உதவுகின்றது .அதற்கு இந்த விளக்கப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதனைப் பார்த்து உங்கள் கருத்தினை தெரிவியுங்கள்.

கருப்பு நிறமா கலங்காதே!! கலக்கு.

.யாருக்கு எது கிடைக்கவில்லையோ அதுமேல் நாட்டம் அதிகம். கருப்பாய் இருந்தால் வெள்ளையின் மீது விருப்பம் இருக்கும்.வெள்ளையாய் இருப்பின் கருப்பின் மீது காதல் வரும் கருப்பு தலை மேல் வெள்ளை பாதத்தில். உயரமானவன் கட்டையான பெண்ணை விரும்புவான். குட்டையானவள் உயரமான கணவனை விரும்புவாள். ஆனால் உயர்ந்த கொள்கைகள் குப்பையிதான் மதிக்கப்படாமல் கிடக்கும் .அந்த குப்பையில் பணத்தாள் கிடந்தால் ஓடி எடுப்பான். நாமே கீழே விழுந்தால் நம் உடலைப் பார்க்காமல் சிதறிப்போன பணத்தினை பொறுக்குவோம்.

பொதுவாக நாம் பார்க்கின்றோம் கறுப்பர்களுக்கு இனிய குரல் வளத்தை இறைவன் தந்துள்ளான் கருபர்களே உலகில் சிறந்த விளையாட்டு வீரர்களாக நிறைந்து உள்ளார்கள்.உலகில் கருப்பர்கள்தான் மக்கள் தொகையிலும் அதிகம். காம்பியா நாட்டில் வாழும் மக்கள் கருப்பர்கள் ஆனால் அந்த நாட்டில் கருப்பு காக்காவை பார்க்க முடியாது. அங்கு இருக்கும் காக்காக்கள் அனைத்தும் வெள்ளை நிறம் உடையதுதான். கருப்பு நிறமுடையவர்கள் உணர்ச்சிபூர்வமான உற்சாகத்துடன் களையாக இருப்பார்கள் .கருப்பான சருமம் கொண்டவர்களை வெப்பத்தினால் உண்டாகும் தோல் வியாதிகள் வருவது குறைவு. சாதனை செய்வதிலும் அவர்கள் குறைவதில்லை. 
கருப்பு பணம் வைத்திருப்பதுதான் தவறு. கருப்பு நிறமுடன் இருப்பது தவறில்லை. தான் ஒரு கருப்பு நிறமுடையவன் என்ற தாழ்வு மனப்பான்மை மட்டும் ஒரு காலமும் வரக் கூடாது. அவ்விதம் நினைத்திருந்தால் வெள்ளையர்கள் நிறைந்த நாட்டில் ஆப்ரகாம்லிங்கனும்,ஒபாமாவும் உயர்ந்த பதவிக்கு வந்திருக்க முடியுமா! நாம் தான் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கின்றோம். குழந்தை பிறந்தவுடன் 'குழந்தை  கருப்பா சிவப்பா' என முதல் கேள்வியை வினவுகின்றோம். குழந்தை கிடைத்ததே இறைவனது அருள். அதிலும் கூன், குருடு மற்ற குறைகள் இல்லாமல் இருப்பதற்கே இறைவனிடம் காலமெல்லாம் நன்றிக் கடனாக இறைவனைத் தொழுது வரவேண்டும். பிறப்பு ஒன்று இருக்கும்போது இறப்பு என்பது உறுதியாகிவிடுகின்றது. இதற்கிடையில் இதில் எந்த நிறத்தில் பிறந்தால் என்ன? வாழ்ந்த காலத்தில் என்ன சேவை செய்தோம்! என்பதுதான் முக்கியம். கருப்பு நிறமுடன் வந்து விட்டதால் கலங்காதே! அது உன் தவறல்ல! நீ தவறு செய்யாமல் வாழ்வதே உனக்கு உயர்வு. வாழும் காலத்தில் சாதனை செய்.       



ஆசையை தூண்டுகிரார்கள்!

எங்கு பார்த்தாலும் விளம்பரங்கள் . டீவியை திறந்தாலும் விளம்பரம். ஆசைப்படுவது மனித இயல்பு.அது எதில் இருக்க வேண்டும் அது எதுவரை இறுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம் .ஆசைப்டுவதிலும் ரசிப்பதிலும் வித்தியாசம் இருக்கிறது. ரசனயை யாரும் தடுக்க முடியாது அதுவும் மனதிற்குள் இருக்கும்வரை. ரசிப்பதை ருசிக்க நினைக்கும்போது அது நமக்கு உடமையானதாக இருக்க வேண்டும். கண்டதெற்கெல்லாம்  ஆசைப்படுவது  ஆபத்தின் விளைவாக இருக்கும். சிலவற்றில் நாம் ஆசைப்பட்டு நாம் அடைந்துவிட்டாலும் அது நம்மோடு அது நிலைத்து நிற்குமா! என்ற  முன்யோசனை வேண்டும்.
அளவான குடும்பம், நிலையான போதுமான வருமானம் இருப்பதால் நிம்மதியாக வாழ்க்கை இனிதாக,மகிழ்வாக இருக்கும் நிலையில் தூண்டுதலின் காரணத்தால் சில ஆசைகள் வந்து விட்டன.  அதனை தூண்ட வைத்தது விளம்பரங்களே. எங்கு பார்த்தாலும் விளம்பரங்கள் . டீவியை திறந்தாலும் விளம்பரம்.
வீட்டில் உள்ளவர்க்கும் ஓர் ஆசை வந்து விட்டது.

'எல்லோரும் கார் வைத்திருக்கிறார்களே நாமும் ஒரு புதிய கார் வைத்திருந்தால் வசதியாக இருக்கும் அத்துடன் சமுதாயத்தில் ஒரு மதிப்பு கிடைக்கும்'
'கார் வாங்குவதற்கு தேவையான பணமில்லையே!'
'அதான் இன்சால்மெண்டில் தருகின்றார்களே'
 'இன்சால்மெண்டில் வாங்கினால் இன்சால்வென்ட் ஆக  வேண்டிய நிலை வந்துவிடும்'
'நீங்கள் நல்லதே நினைக்க மாட்டீங்களா! விருப்பமில்லையென்றால் விடுங்கள்'
வீட்டில் நடந்த விவாதத்திற்குப் பின் ஒரே குழப்பம். நம்மீது அக்கறையுள்ள அண்ணனிடம் சென்று ஆலோசனைக் கேட்டேன்.அவருக்கு கார் வைத்திருந்த அனுபவமுண்டு.
'உனக்கு யாராவது வேண்டாதவர்கள் இருந்தால் அவருக்கு ஒரு கார் இனாமாக வாங்கிக் கொண்டு. அதிலேயே அவர் பல தொல்லைக்கு ஆளாகிவிடுவார்' என்றார். அவர் சொன்னதை வீட்டில் சொன்னேன்.
'அவங்கெல்லாம் கார் வைத்திருக்காங்க நாமும் கார் வாங்கினால் நமக்கு மதிப்பு கூடிவிடும் என்ற நினைப்போ!'
  கார் வாங்கியாச்சு. பெட்ரோல் போட்டு பணம் கரைய சிறிது சிறிதாக குடும்பத்தில் பணப் பற்றாக்குறை தொடங்கி விட்டது.கட்டுப்படுத்தாத மனது கவலையை தந்தது .  (அதிக) ஆசையே துன்பத்திற்குக் காரணம்


கார் உரிமையாளர் உண்மை செலவு
ஒரு கார் வாங்க விரும்புவர்கள் முதலில் சித்திக்க வேண்டியது.
 ஒரு கார் செலவு கொள்முதல் விலையில் முடிவடையவில்லை என்று நன்கு கவனமாக இருக்க வேண்டும். தேய்மானம், எரிபொருள் செலவுகள், காப்பீடு, பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல், மற்றும் விற்பனை வரி: இது  போன்ற கூடுதல் கவலைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.  வாங்கிய உடன் தகுதிவாய்ந்த சில யோசனைகளை இந்த விளக்கப்படம் விளக்கும். இந்த தகவல்  பயனுள்ளதாக அமையும்.



ஆசை

Tuesday, June 19, 2012

ஆசை

பற்றற்றத் துறவியும்
பற்றறுக்கப் பிறக்கும்
ஈரெழுத்து மந்திரம்
ஈர்த்திடும் தந்திரம்

தன்னம்பிக்கை மரத்தின்
தகர்க்கவியலாத ஆணிவேர்

வாழ்க்கை வணிகத்தின்
வட்டியில்லா முதலீடு

தாம்பத்திய இசையில்
தார்மீகச் சுருதி

அளவுக்கு மிஞ்சினால்
அஃதே நஞ்சாகும்
அளவோடிருந்தால்
ஆசையுன்னிடம் தஞ்சமாகும்

கடவுள் பக்திக்கும் ஆசை
காதலைச் சொல்லிடும் ஆசை
படிப்பின் பிடிப்பிலும் ஆசை
பணத்தின் தேடலும் ஆசை

ஆசையின்றி அகிலமும் அசையாது
ஆசைப்படுதல் ஆக்கத்தின் விசையாகும்

“கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்,

Monday, June 18, 2012

இசை கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லையா - 7

சித்திக்: மதி மயக்கம். அவரவர் ஈடுபாடு கொள்ளும் விசயங்கள் எனகூறலாம்

நா
உணவில் மயக்கம் உண்டு.
ஆனால் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை

செவி
சொற்பொழிவுகளில் மயக்கம் உண்டு
ஆனால் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை

கண்
காட்சிகளில் மயக்கம் உண்டு
ஆனால் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை

மூக்கு
வாசனையில் மயக்கம் உண்டு
ஆனால் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை

தோல்
தொடு உணர்வில் மயக்கம் உண்டு
ஆனால் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை

ஐம்புலன்களும் மயங்கும் தன்மை வாய்ந்தவை
மயங்காதவை புலன்களே அல்ல

புலன்கள் முழுவதுமாய் அடங்குவது
அடக்கமாகும் நாளில்தான்

எனது பிங்க் நிறமுடைய இதயத்தை திரும்ப பெற விழைகின்றேன் !

இதயம் மெல்லிய சிகப்பு (பிங்க்) நிறமுடையது அதனுள் அடங்கிக் கிடக்கும் நினைவோட்டங்கள் மனதை சில நேரங்களில் மென்மையாகவும் , சில  நேரங்களில் கனமாகவும் ஆக்கிவிடுகின்றதே. உன் விளையாட்டை யார் அறிவார்! ஆனால் அதனை மென்மையாகவே வைத்துக்கொள்ள விரும்புகின்றேன். முயன்றால் முடியும் . முழுமையாக முடியாவிட்டாலும் ஓரளவு இனிமை படுத்த இறைவனை சிந்திப்பது மூலமாகவும் நல்ல எண்ணங்கள் மற்றும் அழகை கண்டு ரசிப்பத்தின் வழியாகவும் முயற்சிக்கலாம் 

வாழும் வாழ்க்கை குறைவானது பின் ஏன் தேவை
யில்லாமல் வருத்தத்திலேயே மூழ்கிக் கிடக்க வேண்டும்!
மற்றவர்களை நேசி அது சுவற்றில் அடித்த பந்து திரும்பி வருவதுபோல் நாம் கொடுத்த நேசம்
நமக்கே  திரும்ப சிறப்பாக வரும்    ஒவ்வொன்றும் ஒரு காரணத்தின் விளைவே.

 ’குழல் இனிது, யாழ் இனிது’ என்ப, தம் மக்கள்

    மழலைச் சொல் கேளா தவர்.

நூல்: திருக்குறள்

 "குழல் இனிது; யாழ் இனிது என்ப தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்."


                                     கனிவான நோக்கு கவர்ந்து விடும் ஆற்றல் கொண்டது


குழந்தைகளைப் பாதுகாப்போம் !


ஒரு காலத்தில் ஒரு டஜன் பிள்ளைகளைப் பெற்று ஒரு கவலையும் இல்லாமல் நமது முன்னோர்கள் வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைக்கு ஒன்றோ இரண்டோ குழந்தைகளை வைத்துக் கொண்டு நமது பெற்றோர்கள் படும் பாடு சொல்லி மாளாது ! காரணம் சமூகத்தில் நிலவுகின்ற அச்சுறுத்தும் நிகழ்வுகள்.

“ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்” என்பதெல்லாம் பழைய மொழிகளாகிவிட்டன. இன்று பிள்ளைகளெல்லாம் கிரில் கேட்டுகளுக்கு உள்ளே கிரிமினல்களைப் போல அடைபட்டுக் கிடக்க வேண்டிய சூழல்.

குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக நிகழும் தொந்தரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்தகைய அச்சுறுத்தல்களிடமிருந்து அவர்களைப் பாதுகாக்க பெற்றோர் அதிக விழிப்புடன் இருக்க வேண்டியிருக்கிறது ! குழந்தைகளின் உடல் நலம் குறித்த பாதுகாப்பு உணர்வுகள் இன்னொரு பக்கம் பெற்றோர் முன்னால் வந்து நிற்கின்றன.

வீட்டுக்கு உள்ளேயும், வீட்டுக்கு வெளியேயும் குழந்தைகளுக்கு ஆபத்துகள் காத்திருக்கின்றன. அது  மனிதர்கள், விலங்குகள், அஃறிணைகள் என எந்த வடிவத்திலும் வரலாம் ! குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி ?

போட்டியில்லை : கலாம் அறிவிப்பு!

போட்டியில்லை : கலாம் அறிவிப்பு!:

குடியரசுத் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.

மனச்சோர்வுக்கு ஆளாக்கப் படும் குழந்தைகள்!

ஆங்கிலத்தில் ஒரு சொல். Depression.
இதற்கு ஆங்கிலத்தில் இப்படி பொருள் கொள்கிறார்கள்: “The state of feeling very sad (and anxious) and without any hope.
தமிழில் இதனை – “ஆழ்ந்த கவலையில் மூழ்கியிருக்கும் நிலை” என மொழி பெயர்க்கலாம்.
அந்தக் கவலைக்குக் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு விடிவு தெரியாத நிலையில் விரக்தியும் சோகமும் நிலை கொள்வதால் இதனை மனச் சோர்வு என்றும் பொருள் கொள்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஆழ்ந்த கவலை எதனால் ஏற்படுகின்றது, இந்நிலை ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன என்பதை ஆய்வதற்கு முன்பு சில தகவல்கள்…
இந்த ஆழ்ந்த கவலை என்பது நவீன உலகம் நமக்களித்த “பரிசு” என்றால் அது மிகையில்லை!
நமது இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டை – “The Age of Meloncholy” – அதாவது மனிதர்களை விரக்திக்கு இட்டுச் செல்லும் காலம் என்று வர்ணிக்கிறார்கள். (கடந்த இருபதாம் நூற்றாண்டை – “The Age of Anxiety” - அதாவது பதற்றத்தின் காலம் என்று வர்ணித்தார்களாம்.)
நவீன வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்த எல்லா நாட்டு மக்களையும் தொற்றிக் கொண்டிருக்கின்ற ஒரு நோய் தான் இது!
கட்டுக்கோப்பான, கட்டுப்பாடான குடும்ப அமைப்பு சிதறிப் போனமை,
அதிகரித்துக் கொண்டே செல்கின்ற திருமண முறிவுகள்.
குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் அலட்சியம்;
வேலைப் பளுவின் காரணம் காட்டி – குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்காமை.
இறை நம்பிக்கையின் அடிப்படையில் வாழத் தவறியமை.
மற்றவர்களைப் பற்றிய அக்கரையற்ற சமூகச் சூழல்.
மனதுக்கு ஆறுதல் அளிக்க என்று எந்த ஒரு அமைப்பும் இல்லாத நிலை.
இப்படிப்பட்ட காரணங்களாலேயே குழந்தைகள் சோக மயம் ஆகிறார்கள்.
இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் – இந்த ஆழ்ந்த கவலை தொற்றிக் கொள்கின்ற வயது என்ன தெரியுமா? பத்து வயதிலிருந்து பதிமூன்று வயதுக்குள்! அதாவது நமது சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும்.
கவலைப் படுவது என்பது வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒரு அம்சம் தானே – இதற்குப் போய் ஏன் கவலைப் படுகிறீர்கள் என்று கேட்கப் படலாம்.
சின்னச் சின்னப் பிரச்னைகள் ஏற்படுவதும், அது பற்றிக் கவலைப் படுவதும், பின்னர் பிரச்னை தீர்ந்து விட்டால் அதிலிருந்து விடுபட்டு விடுவதும், வாழ்க்கையின் யதார்த்தமே.
ஆனால் நாம் இங்கே சொல்ல வருவது ஆழ்ந்த கவலை குறித்து. அதுவும் சிறிய வயதிலேயே தொற்றிக் கொள்கின்ற ஒரு எதிர்மறை மன நிலை குறித்து.
சிறு வயதிலேயே ஆழ்ந்த கவலைக்கு ஆட்பட்டு விடுபவர்கள் தான் – பின்னாட்களில் மனச் சோர்வாளர்களாக ஆகி விடுகிறார்கள் என்பதும் ஆய்வுகள் தெரிவிக்கும் செய்தியாகும்.
அப்படியானால் இந்த Depression குறித்து நாம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
குழந்தைகளுக்கு கவலை எப்படி ஏற்படுகிறது?
குறிப்பாக இரண்டு சூழல்களில் தான் குழந்தைகள் கவலைக்கு ஆளாகிறார்கள்:
ஒன்று: தன் முயற்சியில் தோல்வி அடைந்திடும் போது.
ஒரு காரியத்தில் இறங்குகிறான் ஒரு சிறுவன். அதில் தோல்வி அடைகின்றான். அல்லது ஒன்றை அடைந்திட முயற்சி செய்கின்றான். அது அவனுக்கு கிட்டிடவில்லை. அடுத்து என்ன செய்தால் தான் நினைத்தது கைகூடும் என்று அவனுக்குத் தெரியவில்லை. தான் எதற்கும் இலாயக்கில்லை என்று எண்ணத் தொடங்குகிறான். அப்போது தான் அவனை கவலை தொற்றிக் கொள்கிறது!
இரண்டு: மற்றவர்களோடு பழகுவது எப்படி என்பது புரியாத போது.
கவலைக்கு இன்னொரு காரணம் அவன் மற்றவர்களோடு பழகும் போது ஏற்படுகின்றது. ஏதோ ஒரு தேவைக்காக மற்ற ஒருவனை அணுகுகின்றான். அதை அவன் மறுத்து விடுகின்றான். இவன் அவனை விட்டு விலகி விடுகின்றான். தொடர்பை முறித்துக் கொள்கின்றான். மறு படி அவன் வந்து “சமாதானம்” பேசினாலும் அதனை இவன் ஏற்பதில்லை. அவன் எதிரே வந்தாலும் தலையைத் திருப்பிக் கொண்டு விலகிச் சென்று விடுகின்றான். இப்படியாக அவன் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்கின்றான். விளைவு: கவலை!!!
இப்படிப்பட்ட இரண்டு சூழ்நிலைகளில் இருந்தும் இத்தகைய சிறுவர்களைக் காப்பாற்றிட வேண்டியது யார் பொறுப்பு?
பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு இதில் நீங்காப் பொறுப்பு இருக்கிறது என்கிறார்கள் வல்லுனர்கள்.
சோக வயப்பட்ட குழந்தைகள் – படிப்பில் கவனம் செலுத்திட இயலாது! இப்படிப்பட்ட குழந்தைகள் பள்ளியிலிருந்து இடையிலேயே நின்று விடும் நிலையும் (drop out) ஏற்பட்டு விடுகிறது.
எனவே – ஆசிரியர்கள் அன்றாடம் நடத்துகின்ற பாடங்களோடு சேர்த்து – தோல்வியைச் சந்திப்பது எப்படி என்றும், அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நடப்பது எப்படி என்றும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்திட வேண்டும். (மேலை நாடுகளில் சில பள்ளிகளில் இவ்வாறு சொல்லிக் கொடுக்கத் தொடங்கி விட்டனர்).
அடுத்து பெற்றோர்கள்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் காட்டினால்? தந்தை எப்போதும் வேலை வேலை என்று தனது தொழிலில் பிஸியாக இருந்து விட்டால்? தாய்க்கு தன் பிள்ளைகளைப் புரிந்து கொள்ளத் தெரியவில்லை என்றால்? கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்தால்? கணவனும் மனைவியும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டிருந்தால்……..? என்னவாகும் குழந்தைகள்?
குழந்தைகளின் கவலைகளை நீக்கிடப் போதுமான விழிப்புணர்வு இன்னும் ஏற்படாத காரணத்தினால் தான் உலக அளவில், சோகத்துக்கு ஆளாகின்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றதாம். இதற்கு வழி ஒன்றை நாம் கண்டே ஆக வேண்டும் தானே!
குழந்தைகளின் கவலைகளைப் போக்கிட இஸ்லாம் என்ன தீர்வு தருகின்றது?

Sunday, June 17, 2012

சாப்பிடுங்கள் .அறிந்துகொள்ளுங்கள் நகருங்கள்


 உணவு உடல் உறுதிக்கு .அவசியம் அறிவு மூளைக்கு இன்றியமையாதது . அசைந்து ,நடந்து மற்றும் ஓடி உடலை உறுதிப் படுத்திக் கொள்வதும் அவசியம் படித்தல் மனதை தூண்டுகிறது,உடற்பயிற்சி உடலை உறுதிப்படுத்துகிறது Reading Is To the Mind What Exercise Is To the Body. இத்தனையும் இங்கே தரப்பட்டுள்ள காணொளிகள் மகிழ்வை தரும்

நாம் ஏன் மகிழ்வாக இல்லை?

  என் முடி இப்போது வெள்ளையாகி  விட்டது , இளமையில் இருந்த  மகிழ்ச்சி இப்பொழுது எங்கே காணாமல் போய்விட்டது.வயது வளர முடியின் நிறம் மாறுவது இயற்கை. மனதில் மாறுபடும் மகிழ்வும் குறைந்து வருவது இயற்கையாகிவிடுமோ! வயதானால் உள்ளம் பண்பட்டு துயரம் தொலைவதற்கு என்னதான் வழி!

அதற்கும் ஒரு வழியை இறைவன் காட்டாமலா இருப்பான்!

ஆசை,அளவிற்கு மீறிய விருப்பம், நினைத்தது கிடைக்காமல் போகும்போது ஏற்படும் விரக்தி ,கிடைத்ததை இழக்கும் போது அனுபவிக்கும் துயரம் அத்தனையும் வாழ்வோடு ஒன்றியதுதான். அனைத்தையும் சமநிலையாக எடுத்துக்கொள்ளும்   பக்குவம் எப்போழுதுதான் வரும்?

Friday, June 15, 2012

அண்டத்தின் வியக்கத்தக்க அளவு


அண்டத்தின் வியக்கத்தக்க அளவு

அண்டத்தின் வியக்கத்தக்க அளவு
பிரபஞ்சத்தின் யுனிவர்ஸ் 2 + மற்றும் அது விரிவடையும் அதிசியம்மிக்க கண்ணோட்டம் 

உலகின் கடற்கரையில் கொட்டிக்கிடக்கும் மணல்கள் நம் எண்ணிக்கையில் அடங்காதவை போல்  பிரபஞ்சத்தில் கொட்டிக்கிடக்கும் நட்சத்திர கூட்டங்களும் நம் எண்ணிக்கையில் அடங்காதவையாகவே 10,000 கோடி, ஒரு விண்மீன் குழுவில் நட்சத்திரங்களாக உள்ளன.
இறைவனின் ஆற்றல் அறிய நம்மால் முடியுமா! நாம் அதனைக் கண்டு வியப்படையலாம்   

மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்.(Quran 51:47)


நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம் (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?(Quran 41:53)

விரிவடையும்  யுனிவர்ஸ் 2 பார்க்க மெதுவாக உங்கள் சுட்டியை(மொவுசை) நகர்த்துங்கள்
யுனிவர்ஸ் எப்படி பெரியதாக  பார்க்க  தயவு செய்து  இங்கே கிளிக் செய்து அதன் அருமையைப் பாருங்கள்
யுனிவர்ஸ் எப்படி பெரியதாக  பார்க்க  தயவு செய்து  இங்கே கிளிக் செய்து அதன் அருமையைப் பாருங்கள்
Please cilck here to see http://htwins.net/scale2/ 

See How Big The Universe Is 
GOD EXISTS ALLAH(God) EXISTENCE BEST PROOF 100% ISLAM IS THE WAY JESUS MOHAMMED NOAH MOSES ABRAHAM ALL MESSENGERS OF THE SAME GOD FINAL BOOK REVELATION TORAH BIBLE QURAN JUDAISIM CHRISTIANITY ISLAM ONE GOD

வருத்தம் ஏன் ! மனம் மகிழ்வுடன் வாழ்ந்து விடு .

நாம் நம்மைப் பற்றிய எண்ணுவது  ஒருபுறம் இருக்கட்டும்; மற்றவர்களைப் பற்றி சிறிது  யோசித்துப் பாப்போம் !

மிதியடி இல்லையே என்று எண்ணாமல் கால் இல்லாமல் இருப்பவர்களைக் கண்டு ஆறுதல் அடை. பொருள் வாங்க பணம் இல்லையே என்று வருந்தாமல் நமக்கு கடன் இல்லை என
நிம்மதி கொள். வீட்டில் இறப்பு ஏற்பட்டால் கண் கலங்காதே! எத்தனையோ குடும்பங்கள் அடியோடு எதிர்பாராத வகையால் இயற்கையின் சீற்றத்தால் அழிந்துவிடுவதனை பார்க்கின்றோம்.
குழந்தைகள் படிக்க வைக்க  பணம் இல்லையே என்று வருத்தம் அடைவோர்    குழந்தைப் பெறும் பாக்கியம் இல்லாத தம்பதியர்கள்பார்த்து அமைதி அடைந்து நாம் பாக்கியம் பெற்றோர் என கருதட்டும்.தேவை மனவுறுதியும், ஆரொக்கியமும், தியாக மனப்பான்மையும், குழந்தைகளை இறைவன் அளிக்கும் மிகப்பெரும் செல்வம் என்று கருதும் மன நிலையும் தான். பணங்காசுகளோ, வசதிவாய்ப்புகளோ அல்ல.

வருத்தம் வேதையினை தந்து உடல் நலனை பாதித்துவிடும். மகிழ்ச்சி உற்சாகத்தினை தந்து ஆற்றல் உள்ளவர்களாக மாற்றும். எடுத்ததெற்கெல்லாம் குறை காண்பது தாழ்வு மனபான்மைக்கு வழி வகுத்துவிடும். வாழும் கடைசி நிமிடம் வரை மகிழ்வாக வாழ  வேண்டும். .

Thursday, June 14, 2012

மனித நேயத்துடன் அமைந்த இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள்.

                                               (கெய்ரோவில் அல் அஹர் பல்கலைக்கழக பள்ளிவாசல்)
அறிவைப் பெறுவது அனைவருக்கும் அவசியம்.அறிவை அடைவது சிந்தனையை  தூண்ட வழிவகுக்கும். சிந்தனையும் அறிவும் ஒரு ஒளிதரும் விளக்கு போல்.  ஒளி கிடைத்துவிட்டது!நல்லது கெட்டது தெரிந்து விட்டது. அல்லவை விடுத்து  நல்லவைதனை  செயல்படுத்துவது ஒவ்வொருமனிதனுக்கும் கடமையாகின்ன்றது.
உலகில் இருவித கல்வி கற்பிக்கப் படுகின்றது. ஒன்று மார்க்கக் கல்வி மட்டொன்று உலகக் கல்வி. இரு கல்வியும் அவசியம் தேவை. அதற்கு ஒரு வழிகாட்டியும் அவசியம் . முஸ்லிம்களுக்கு   குர்ஆன் மற்றும் சுன்னாஹ்  முக்கிய ஆதாரங்கள் (நபி முஹம்மது மரபுகள்). குர்ஆனுக்கு விளக்க உரையாக முகம்மது நபி (ஸல்)வாழ்ந்து காட்டினார்கள்.அவர்கள் மொழியும் அவர்களது வாழ்வும் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருந்ததால் குர்ஆனும்  மற்றும் சுன்னாஹ் முஸ்லிகளுக்கு வழிகாட்டியாக உள்ளது.

'நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.

 மார்க்க அறிவை பெறுவது முஸ்லிம்களுக்கு கடமையாக உள்ளது. இதனை 'மதரசா'க்களில் சொல்லிக் கொடுக்கின்றனர். ஆனால் அங்கு உலக கல்வியை கற்றுக்  கொடுப்பதில் குறைவு இருப்பதனைக் காண்கிறோம் . உலகில் ஏற்படும் மாற்றத்திற்கு தகுந்ததுபோல் அங்கும் மற்ற கல்வியையும் இணைப்பது  சிறப்பாக இருக்கும் .இதனை மார்க்க அறிஞர்கள்  ஊக்குவிக்க வேண்டும்.
'ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

Wednesday, June 13, 2012

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி ?


குழந்தையோடு பேசுகிறீர்களா ?

உங்கள் குழந்தையின் பாதுகாப்புக்கு முதல் தேவை என்ன தெரியுமா ?

உங்களிடம் உங்கள் குழந்தை பாதுகாப்பை உணர்வது தான். “என்ன பிரச்சினைன்னாலும் உம்மா பாத்துப்பாங்க, வாப்பா பாத்துப்பாங்க” எனும் ஆழமான நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்க வேண்டியது அவசியம்.

அதற்கான முதல் தேவை குழந்தைங்க கூட போதுமான அளவு நேரம் செலவிடறது ! குழந்தைகளோட மனநிலை எப்படி இருக்கு ? அவர்களுடைய நாள் எப்படி கழிந்தது ? அவர்கள் என்ன பண்ணினாங்க ? போன்ற எல்லா விஷயங்களையும் அன்புடன் கேட்டறியுங்கள். அவர்களுக்கு ஒரு நல்லதொரு ஆறுதலாக இருக்க வேண்டியது அவசியம்.

குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள், பதின் வயதுப் பிள்ளைகளிடமெல்லாம் அதிக நேரம் மனம் திறந்த உரையாடலில் செலவிடுங்கள். அவர்களுடைய வழிகளைச் செம்மைப் படுத்தவும், அச்சுறுத்தல்கள் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளவும் உங்கள் உரையாடல் உதவ வேண்டும். அவர்களுடைய பயங்கள், கவலைகள் எல்லாம் உங்களுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும்.

“இதெல்லாம் நான் எப்படி உம்மா கிட்டே சொல்வது” என குழந்தை நினைக்கக் கூடாது. “எதுவா இருந்தாலும் உம்மா கிட்டே சொல்வேன்” என குழந்தை நினைக்குமளவுக்கு இயல்பாகப் பழகுங்கள்.

பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில்


வானக் கரிய வாவியில் மின்னி நீந்திடும்
சிலவேளை
வீழ்வதாய்ப் போக்குக் காட்டும்
ஊணுண்ணிப் பட்சியென மீன்கொத்தி நிலா
மேற்கிலிருந்து கிழக்காய் நகர்ந்து நகர்ந்து கொத்திட
காலையில் செவ்வாகாயம் வெறிச்சோடிக் கிடக்கும்

இடித்திடித்துக் கொட்டிய
நேற்றின் இரவை நனைத்த மழை
உனதும் எனதுமான ஏகாந்தப் பொழுதொன்றை
நினைவுறுத்திக் கொண்டேயிருந்ததில்
அச்சமுற்றிருந்தேன் நான்

மின்சாரம் தடைப்பட்டெங்கும்
அந்தகாரம் மேவிய பொழுதில் கண்மூடி
விழித் திரைக்குள் உனையிறக்கியிருந்தேன்
உதறப்பட்ட காலத்தின் துளிகளோடு
உன் மீதான எனது சினங்களும்
ஆற்றாமைகளும் வெறுப்பும்
விலகியோடிப் போயிருக்கவேண்டும்
நினைத்துக் கொண்டேயிருந்தேன் உன்னையே

இசை கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லையா - 6

சபீர்: சிந்தையை மயக்கும் புத்தியை மழுங்கச் செய்யும் இசைக் கருவிகள் மார்க்கத்தில் தடுக்கப்பட்டிருந்தால் தடுக்கப்பட்டதுதான். மார்க்கத்தில் எல்லா கேள்விகளுக்கும் சாமான்யன் புரிந்து கொள்ளும் விதத்தில் பதில் கிடைத்துவிடுவதில்லை. நம்பிக்கையே ஆன்மிகத்தின் அடிநாதம். எனவே, தொடர்ந்து விவாதிக்க விரும்பினால் தயை செய்து மார்க்க ஆதாரங்களை வைத்து விவாதிக்கவும்.

”தடுக்கப்பட்டிருந்தால்” என்ற ஒரு சொல்லை அழகாகப் பயன்படுத்தி இருக்கிறீர்கள். இது நாகரிகமான செயல். பலரும் ஐயமே அற்றவர்களைப்போல தடாலடியாக முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அதை அடுத்தவர்களின்மீது ராணுவத்தனமாகப் புகுத்தப் பார்க்கிறார்கள். அதனாலேயே அவர்கள் இஸ்லாத்தில் மேன்மையானவர்கள் என்று காட்டிக்கொள்ள முயல்கிறார்கள். அவர்களின் பிழை அவர்களுக்குப் புரிவதே இல்லை. ஆனால் விபரம் தெரிந்தவர்களுக்கு அவர்களின் பிழை அழகாகத்தெரியும் அவர்களும் மிக அழகாக ஓர் நகைப்பை அள்ளித் தெளிப்பார்கள்.

குரல் வழி இசையும், கருவி வழி இசையும் தடுக்கப்பட்டதற்கு வலுவான ஆதாரங்கள் குர்-ஆனில் இல்லை. உறுதியற்ற ஹதீசுகள், அவற்றை புரிந்துகொள்ளும் நிலை ஆகியவற்றில் தடுமாற்றம் அவ்வளவுதான்.

குர்-ஆனில் தெளிவாக எவை தடுக்கப்படவில்லையோ அவற்றை நாம் செய்யலாம் அல்லது அனுபவிக்கலாம்.

Tuesday, June 12, 2012

இதுதான் இஸ்லாம், .

 இதுதான் இஸ்லாம்,
ஓர் இறைவன் ,ஒரே குர்ஆன் ,ஒரே கிப்லாஹ்,ஒரே உம்மாஹ்
ஒற்றுமை உயர்வு தரும் , பிரிவு வீழ்ச்சியை தழுவும்


One Creator. One Quran. One Qiblah. One Ummah.
United We Stand. Divided We Fall.


 இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்
 நம்பிக்கை (கலிமா)
"இறைவன் ஒருவனே. அவனே அல்லாஹ், முஹம்மது அவரது தூதர்." என மனதளவில் ஒவ்வொறு முஸ்லிமும் நம்பவேண்டும்

பிரார்த்தனை (தொழுகை)
ஒவ்வொரு முஸ்லிமும் தினமும் ஐந்து முறை தொழுகை நடத்த வேண்டும்.

நோன்பு
ஒவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாக ரமலான் மாதத்தில் பகல் வேளையில் உண்ணா நோன்பு இருக்க வேண்டும் (விதி விலக்கு உண்டு)
தானம் (ஜக்காத்)
ஒவ்வொரு முஸ்லிமும் ஆண்டுக்கு ஒருமுறை தனது மொத்த செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கை ஏழை எளியோருக்கு தானம் செய்ய வேண்டும்.( விதி விலக்கு உண்டு)

புனித பயணம் (ஹஜ்)
வசதி வாய்ப்பு படைத்த ஒவ்வொரு முஸ்லிமுக்கும், தனது வாழ்நாளில் ஒருமுறை புனித பயணம் (ஹஜ்) செய்ய வேண்டும்
(விதி விலக்கு உண்டு)



குர்ஆன் 
முஸ்லிம்களின் புனித நூல் ஆகும். முகம்மது நபிக்கு இறைவனால் அருளப்பட்டதாக குர்ஆன் நம்பப்படுகின்றது. மொத்தமாக அன்றி சிறுக சிறுக கால நேரத்திற்கு ஏற்ப குர்ஆன் அருளப்பட்டது. இது சூரா எனப்படும் 144 அத்தியாயங்களை கொண்டது. 

கிப்லா
உலகெங்கும் வாழும் இஸ்லாமியர் அனைவரும் சவுதி அரேபியா நாட்டின் மக்கா நகரில் உள்ள காபாவை முன்னோக்கி தொழுவார்கள்.


 உம்மாஹ்
 உம்மாஹ் ஒற்றுமைக்காக பாடுபடுதல் (Striving for Unity in Ummah).






ஓர் இறைவன் ,ஒரே குர்ஆன் ,ஒரே கிப்லாஹ்,ஒரே உம்மாஹ்
ஒற்றுமை உயர்வு தரும் , பிரிவு வீழ்ச்சியை தழுவும்


One Creator. One Quran. One Qiblah. One Ummah.
United We Stand. Divided We Fall.