Showing posts with label நீடூரலி. Show all posts
Showing posts with label நீடூரலி. Show all posts

Saturday, June 23, 2012

நான் ஒரு தமிழ்ப்பற்றாளன், ஆனால் வெறியன் அல்ல


நீடூரலி அண்ணா,
என் பெயருக்கான விளக்கத்தை ஒருவருக்கு நான் எழுதினேன்.அதை அப்படியே உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். buhari@gmail.com என்பதை நான் கம்பெனித் தொடர்புகளுக்குப் பயன்படுத்துவேன்.ஆகவே நான் தான். நானே தான். ஐயம் வேண்டாம்.
*
ஹசன் புஹாரி என்று பலரும் என் பெயரை எழுதுகிறார்கள்.

இப்போது நீங்கள் ஹசன் என்று எழுதி இருக்கிறீர்கள்.
என் பெயரை மீண்டும் ஒருமுறை இச்சபையில் கூறுகிறேன்.
என் பெயர் புகாரி, என் தந்தையின் பெயர் அசன்பாவா
புகாரி என்பதை புஹாரி என்றுதான்
நானும் எழுதிக்கொண்டிருந்தேன்
ஆனால் இடையில் வரும் க என்ற எழுத்து,
ஹ என்ற ஓசையையே பெறும் என்பதால்
புகாரி என்று எழுதுகிறேன்
ஹ ஜ ஷ ஸ போன்ற எழுத்துக்கள்
தமிழ் எழுத்துக்கள் அல்ல
சமஸ்கிருத மொழியை எழுதுவதற்காக
உருவாக்கப்பட்ட எழுத்துமுறை
நான் ஒரு தமிழ்ப்பற்றாளன், ஆனால் வெறியன் அல்ல
ஆகவே அவசியமான இடங்களில் மட்டுமே
கிரந்தம் பயன்படுத்துவேன்
புகாரி என்பது சரியாகவே உச்சரிக்கப்படும் வகையில்
அமைந்திருப்பதால் அப்படியே பயன்படுத்துகிறேன்