Friday, June 1, 2012

இயற்கைக்கு மாறாக நெடுநாள் வாழ விருப்பமா!


பல்லாண்டுகள்  வாழ பல்லோரது விருப்பம்.  அதற்கு ஆசை  மட்டும் காரணமாக இருந்தால் போதுமா! மனதில் உறதி வேண்டும் அதற்கு ஆவன  செய்ய முற்படவேண்டும்
பல்லாண்டுகள் வாழ்ந்து இறைவனைத்  தொழுது நன்மையைத் தேடி செய்த பாவமான காரியங்களுக்கு பரிகாரம் தேட வேண்டும் என்பது சிலரது விருப்பம். அதற்காக நோய்வாய்ப் பட்டாலும் நெடுநாள் வாழ வேண்டும் என்பார்கள் உடல்நிலையில் வியாதி   வரும்போதுதான் நாம் நம்மை உணர்ந்து  தவறு  செய்வதிலிருந்து  திருந்தவும் செய்கின்றோம் அத்துடன் அல்லாமல் நாம் நோய்பட்டிருக்கும்போதுதான் நாம் இறைவனிடம் மனதார  மன்னிப்பு நாடுகிறோம் அதனால் நம் பாவமும் நம்மை விட்டு  நீங்குகின்றது என்ற ஆழமான நம்பிக்கை.
 உடல் நலமாக இருக்கும்போது இனி புகை பிடிக்கக் கூடாது என்று பிரசவ வைராக்கியம் செய்பவர்களுண்டு மற்றும் அதனை நடைமுறை படுத்துபவர்களுண்டு.

இயற்கையாக சில ஆகாரங்களும் மற்றும் சில செயல்பாட்டு முறைகளும்,வந்த வழிகளும் நெடுநாள் வாழ  துணை செய்வதனை நாம் அறிவோம்.தாய்  கொடுக்கும் சீமைப்பாலும் தொடர்ந்து  கொடுத்து வரும் தாய்ப்பாலும் மிகவும் சக்தி வாய்ந்தவை. தாய்ப்பால் குடித்து  வரும்  குழந்தைக்கு  எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கின்றது.
கம்பு, கேவுறு, பூஞ்சை, நல்ல காளான், தேன் மகரந்தம் மற்றும் சில இயற்கை உணவுகள் நன்மை  தரும் 
சிலருக்கு தன முன்னோர்கள்  வழி வந்த சிறப்பான ஜீன்கள் வாழ் நாட்களை அதிகமாக்கிறது. மனிதர்களின் குணாதிசயங்களை அவர்களின் ஜீன்கள்  நிர்ணயிப்பதாகசொல்கின்றார்கள்

நன்கு செயல்படும் மூளை நல்ல ஆரோகியமான வாழ்விற்கு வழிகாட்டி அது அல்லவைகளை தவிர்த்து நல்லவைகளை நாடும் பண்பினை தூண்டக்கூடியது. அறிவு வளர தொடந்து  படிக்கும் முறையினை கையாண்டு வரவேண்டும். படிக்க படிக்க தனது அறிவு வளர்வதோடு  மூளையில் உள்ள செல்களும் பன்மடங்கு பெருகும்.  கலைஞர்  கருணாநிதி, நடிகர் சிவகுமார் போன்றோர்களின் நினைவாற்றலைக்  கண்டு அனைவரும்  அதிசியக்கின்றனர். அவர்கள் தொடர்ந்து படிப்பதும் அதனைப் பயன்படுத்துவதும் அவர்களை நீடித்த மகிழ்வான வாழ்வுக்கு இட்டுச்செல்ல வழி வகுக்கின்றது.    

படிப் பதனை நிறுத்திவிட்டால் அந்த செல்கள் குறைய ஆரம்பிக்கும் அதுவே நம் அறிவு வளர்ச்சியை நிறுத்துவதோடு நினைவாற்றலையும் குறையச் செய்து வாழ்வின் வாழும் நாட்களை குறைத்து விடும்.
அதிகமான மொழிகளை தெரிந்துக்கொள்வது நமது நினைவாற்றலை தூண்டுவதொடு வாழ்வின் ஆயுளை நீடிக்கச் செய்கின்றது.
 Let us read a book every day

வயது வந்தவர்கள் வயதாகிவிட்டதாக  எக்காலத்திலும் நினைக்காமல் தொடர்ந்து தேவையான அளவுக்கு இயற்கையாக பாலியல்  விளையாட்டில் மகிழ  வேண்டும் . அதற்காக செயற்கை முறையில் மருந்து எடுத்துக்  கொள்ளக் கூடாது. மனமிருந்தால் வழியுண்டு. மனமே ஒரு உந்துச் சக்தி .

மலைகளில் வாழும் மக்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர். அவர்களுக்கு இயற்கை அழகை கண்டு மகிழ்கின்றார்கள். தூய்மையான காற்றை சுவாசிக்கின்றனர்.மலை மேடு பள்ளங்களில் நடந்து  உடலுக்கு தேவையான உடம்பின் உறுதியினை உண்டாக்கிக் கொள்கின்றார்கள்.

நாத்திகக் கொள்கை கொண்டவர்களை விட இறை பக்தியுடையோர் நீண்ட ஆண்டுகள் வாழ்கின்றனர்.அருளில்லார்க்கு அவ்வுலகமில்லை பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை  ஆனால் பொருளையே நாடியே வாழ்ந்தவர்கள் அவ்வுலகத்தினை இழப்பர் அருளை மட்டும் நாடி வாழ்பவர் இவ்வுலகத்தினை இழப்பர். இரண்டும் இரண்டு கண்கள். பொருளை நாடி ஓடி நன்முறையில்  சேர்த்து அதனை அருள் கிடைக்கும் வழியில் செலவு செய்யும்   போது ஆத்மா திருப்தி வர வாழ்நாட்கள் அதிகமாக வழி உண்டாகும்  

 அசைவ உணவு உண்பவர்களைக்  காட்டிலும் சைவ உணவு சாப்பிடுவதும் நன்மை தரும். வயதான பின்பும் பல் விழுந்த பின்பும் புதிய போலிப் பல் கட்டிக்கொண்டு  மாமிச உணவை சாப்பிட்டு அது செரிக்காமல்  பல வியாதிக்குள்ளாகின்றார்கள்  . பல் விழுவதும் நரை வருவதும் நமக்கு ஒரு எச்சரிகை என்பதனை உணராமல் இருக்கின்றோம்.

  செல்வம் வர மன மகிழ்வுதான்.செலவ்த்தினை தேடுங்கள். பணக்கார நாடுகளின் மக்கள்  வாழும் ஆயூள்   நிலை சதவீதம் அதிகமாக உள்ளது . செல்வம் கிடைத்து அதனை முறையாக பயன்படுத்தி மகிழ  வேண்டும் . பணம் மட்டும் வாழ்வினை மகிழ்வாக்கிடமுடியாது, அது வாழ்கையின் தேவைகளை நிறைவு செய்வதற்கு பயன் படலாம்,அதையே நன்முறையாக பயன்படுத்துவதில்தான் மகிழ்வு உன்டாக்கி வாழ்நாளையும்  கூட்டுகின்றது.

  பொதுநல தொண்டு செய்பவர்கள் மிக மகிழ்வாக இருப்பார்கள். நான் குறிப்பிடுவது அரசியல் சார்ந்ததல்ல..உண்மையான தொண்டு.  வீதியில் தடையாக கிடக்கும் பொருளை  நீக்குவதும் ஒரு தொண்டுதான், மற்றவர்கள் போற்ற   வேண்டும் என்பதர்க்காக இல்லாமல் தன மனதிற்கு இயற்கையாக உண்டாகும  தொண்டு செய்ய வேண்டும் என்ற  மனப்பக்குவம் வாழ்வை நீடிக்கும்.

அனைத்தும் அறிந்தவன் இறைவன். வாழ்வை நீடிப்பதும் குறைப்பதும் அவன் கையில்..இருப்பினும் ஒட்டகத்தைக் கட்டி இறைவனை நாடுவது நம் பொறுப்பு. எல்லாம் அவன் வசம் என்று  இல்லாமல் நம் முயற்சியோடு சேர்ந்த வேண்டுதல் உயர்வானது.     'நீ இறைவனை  நம்பு; ஆனால் உன் ஒட்டகத்தைக் கட்டி வை'  - நபிமொழி 
4 comments:

பழனி.கந்தசாமி said...

மிகவும் நல்ல தகவல்கள்.
எனக்கு ரொம்ப நாளாக ஒரு கேள்வி மனதைக் குடைந்து கொண்டு இருக்கிறது. நீங்களும் உங்கள் தலைப்பில் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். "இயற்கைக்கு மாறாக" என்று.

அப்படி அதிக நாள் வாழ்ந்து நாம் என்ன சாதிக்கப் போகிறோம்? இயற்கைக்கு மாறாக நாம் ஏன் செயல்பட வேண்டும்?

இந்தக் கேள்விக்கு அவரவர்கள்தான் பதில் சொல்ல முடியும். இருந்தாலும் உங்கள் பார்வைக்கு கொண்டு வந்தேன்.

nidurali said...

அன்புள்ள டாக்டர் அவர்களுக்கு,
வணக்கம் . தங்கள் கருத்துரையை நான் மிகவும் விரும்புகிறேன். அதில் சில அறிவுகளை நான் பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு . அன்புடன்

அதிரை சித்திக் said...

அற்புதமான ஆக்கம்..

நம் வாழ்நாளை பயனுள்ளதாக கழிக்க

நல்ல யோசனைகளை தந்தீர்கள் ஆதாரபூர்வமாக ..

மலைவாழ் மக்களின் ஆயுள் காலம் கூடுதளுக்கான காரணம்

நடை மற்றும் சுத்தமான் காற்று ..

புத்தகம் படிப்பதன் மூலம் மூலை சிறப்பாக செயல் படுகிறது

ஞாபக சக்தி கூடுகிறது ஆதர பூர்வ எடுத்துக்காட்டு ..

இறை பகியுடையோர் இறவன் மீது பொறுப்பு சாட்டுவதன் மூலம்

மனப்பாரம் குறையும் என நல்ல கருத்துக்களை எடுத்துவைத்து

அசத்திவிட்டீர்கள் முத்தாய் பாய் மூன்று வீடியோமூலம் தங்களின்

பாணியில் சிறப்பித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்

nidurali said...

அண்ணன் அதிரை சித்திக் அவர்களுக்கு தாங்கள் அவ்வொப்பொழுது கொடுத்து வரும் கருத்துரைகள் என்னை மகிழ்விக்க வைத்து உற்சாகப் படுத்துகின்றது . மிக்க நன்றி. தொடர்ந்து உங்கள் கருத்துகளை கொடுங்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails