அளவான குடும்பம், நிலையான போதுமான வருமானம் இருப்பதால் நிம்மதியாக வாழ்க்கை இனிதாக,மகிழ்வாக இருக்கும் நிலையில் தூண்டுதலின் காரணத்தால் சில ஆசைகள் வந்து விட்டன. அதனை தூண்ட வைத்தது விளம்பரங்களே. எங்கு பார்த்தாலும் விளம்பரங்கள் . டீவியை திறந்தாலும் விளம்பரம்.
வீட்டில் உள்ளவர்க்கும் ஓர் ஆசை வந்து விட்டது.
'கார் வாங்குவதற்கு தேவையான பணமில்லையே!'
'அதான் இன்சால்மெண்டில் தருகின்றார்களே'
'இன்சால்மெண்டில் வாங்கினால் இன்சால்வென்ட் ஆக வேண்டிய நிலை வந்துவிடும்'
'நீங்கள் நல்லதே நினைக்க மாட்டீங்களா! விருப்பமில்லையென்றால் விடுங்கள்'
வீட்டில் நடந்த விவாதத்திற்குப் பின் ஒரே குழப்பம். நம்மீது அக்கறையுள்ள அண்ணனிடம் சென்று ஆலோசனைக் கேட்டேன்.அவருக்கு கார் வைத்திருந்த அனுபவமுண்டு.
'உனக்கு யாராவது வேண்டாதவர்கள் இருந்தால் அவருக்கு ஒரு கார் இனாமாக வாங்கிக் கொண்டு. அதிலேயே அவர் பல தொல்லைக்கு ஆளாகிவிடுவார்' என்றார். அவர் சொன்னதை வீட்டில் சொன்னேன்.
'அவங்கெல்லாம் கார் வைத்திருக்காங்க நாமும் கார் வாங்கினால் நமக்கு மதிப்பு கூடிவிடும் என்ற நினைப்போ!'
கார் வாங்கியாச்சு. பெட்ரோல் போட்டு பணம் கரைய சிறிது சிறிதாக குடும்பத்தில் பணப் பற்றாக்குறை தொடங்கி விட்டது.கட்டுப்படுத்தாத மனது கவலையை தந்தது . (அதிக) ஆசையே துன்பத்திற்குக் காரணம்
கார் உரிமையாளர் உண்மை செலவு
ஒரு கார் வாங்க விரும்புவர்கள் முதலில் சித்திக்க வேண்டியது.
ஒரு கார் செலவு கொள்முதல் விலையில் முடிவடையவில்லை என்று நன்கு கவனமாக இருக்க வேண்டும். தேய்மானம், எரிபொருள் செலவுகள், காப்பீடு, பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல், மற்றும் விற்பனை வரி: இது போன்ற கூடுதல் கவலைகளை கருத்தில் கொள்ள வேண்டும். வாங்கிய உடன் தகுதிவாய்ந்த சில யோசனைகளை இந்த விளக்கப்படம் விளக்கும். இந்த தகவல் பயனுள்ளதாக அமையும்.
ஆசை
Via: InsuranceQuotes.org
No comments:
Post a Comment