Sunday, June 24, 2012

இடம் அறிந்து ஆள் அறிந்து பேசுவது உத்தமம்!


  இமாம்  பிரசங்கத்தில் 'உங்களுக்கு ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் சொல்ல விரும்புகின்றேன். நான் இவ்வளவு காலம் கழித்து ஒரு வீடு கட்ட முடிவு செய்துள்ளேன். அதற்கு தேவையான பணம் இருக்கிறது' இது மகிழ்வான செய்தி.
'அந்தப் பணம் உங்கள் பாக்கெட்டிலிருந்து வெளி வர மறுக்கின்றது அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.' இது வருத்தமான செய்தி.

  

  ஒரு இமாம் தன்னுடைய பிரசங்கத்தில் சொன்னார் ' நான் இந்த ஊரை விட்டு வேறு ஊர் போக திட்டமிட்டுள்ளேன்'
உடனே ஒருவர் மிகவும் வருத்ததுடன் ' நீங்கள் போகக் கூடாது' என்று வருத்தமாக சொன்னார்.
அதற்கு அந்த இமாம் 'கவலைப்படாதீர்கள் என்னை விட சிறந்த இமாம் உங்களுக்காக வர இருக்கிறார்' என்று சொன்னார். பதிலுக்கு வருத்தமடைந்த அந்த வாலிபர் இது எந்த ஹதீஸில் இருக்கிறது' என வினவினார்.




  ஒருவர் இமாமுடன் கேட்டார் ' அது என்ன எழுந்து நின்றுக் கொண்டு ஆடிக் கொண்டே பாடிக்கொண்டே இறைவனை புகழ்ந்து 'திக்ரு' செய்கிறார்களே.அது சரியா?' என்றார்.
அதற்கு அந்த இமாம் குத்தலாக ' அது எங்கே நடக்கிறது சொல்லுங்கள் நானும் அதில் கலந்து கொள்ள  வேண்டும் . உடம்பில் கொழுப்பு சத்து அதிகமாகிக் கொண்டே வருகின்றது. அதனைக் குறைக்க வேண்டும்' என்றார்      

 
  இஸ்லாமிய கணவனும் மனைவியும்  விமானத்தில் பிரயாணம் செய்துக் கொண்டிருந்தாகள்.அவர்களது பின்புறம் உள்ள இருக்கைகளில் இரண்டு இள வயது வாலிபர்கள் அமர்ந்துக் கொண்டு சிறிது சப்தமாக பல அசிங்கமான வார்த்தைகளை பேசிக் கொண்டிருந்தனர். முன் இருக்கையில்  இருந்தவர் 'தயவு செய்து மெதுவாக பேசுங்கள்' என்றார். அதனை அவர்கள் கண்டுக் கொள்ளாமல் இன்னும் சப்தமாக பேச ஆரம்பித்தனர் .
ஒருவர் சொன்னார் 'என்  பாஸ் (முதலாளி) என்னை ஒரு வேலை நிமித்தமாக சவுதி அரேபியா போகச் சொன்னார்.அங்கு முஸ்லிம்கள் அதிகமாக இருகின்றார்கள் அதனால் நான் அங்கு போக மறுத்துவிட்டேன்' என்றார்.
அவர் நண்பர் சொன்னார் '  என்  பாஸ் (முதலாளி) என்னை பாகிஸ்தான் போகச் சொன்னார். நானும் அங்கே இஸ்லாமியர்கள் அதிகம் உள்ளார்கள் அதனால் நானும் போக மறுத்துவிட்டேன்' என்றார்.
இவர்கள் இவ்விதம் அந்த முஸ்லிம் தம்பதியர்களுக்கு வெறுப்பு வரும்படி பேசிக் கொண்டே வந்தனர்.
மிகவும் வேதவையுடன் முன் இருக்கையில்  இருந்தவர் எழுந்து ' நீங்கள் இவ்வாறு பேசக் கூடாது நாமெல்லாம் சகோதரர்கள். நீங்கள் இவ்விதம் பேசியதற்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்டு சுவனம் செல்ல முயலுங்கள்' என்றார்.
அதற்கு  உடனே கோபமாக பதில் சொன்னார்கள் ' நாங்கள் சுவனம் வர முயல மாட்டோம் காரணம் அங்கேயும் முஸ்லிம் அதிகம் இருப்பார்கள் ' என்றார்கள்.
இதனைக் கேட்டதும் அந்த இஸ்லாமியர் இறைவா இவர்களை மன்னித்து திருந்தச் செய் என மனதிற்குள் வேண்டிக் கொண்டு அமைதியாக அமர்ந்து விட்டார்.

 

 ஒருவர் மற்றவரை பள்ளிவாசலுக்கு 'இறைவனைத் தொழுது நல்ல மனிதாக மாறி சுவனம் செல்ல வாழ்கையை அமைத்துக் கொள்' என்று சொல்லி  தொழ அழைத்தார்.
அதற்கு மற்றவர் 'சுவனம் வேண்டாம் அங்கெல்லாம் அதிகமாக தாடி வைத்த  இமாம்களும் அறிவுரை சொல்பவர்களும் இருப்பார்கள். அங்கேயும் நான் வந்து அவர்கள் சொல்வதை கேட்க விரும்பவில்லை  நரகத்தில்தான் விலைமாது பெண்களும், குடிப்பவர்களும் மற்றும் என் நண்பர்களும் இருப்பார்கள் அங்கேயே நான் போகிறேன் நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்' என்று சொன்னார்.  . 

No comments: