Showing posts with label ஆசை. Show all posts
Showing posts with label ஆசை. Show all posts

Sunday, October 26, 2014

ஆசை....! சுமைகள்....!

ஆசை....!

கடலலையில் கலந்து
கரையைத் தொட்டுவிட ஆசை....

காற்றில் மிதந்து
மேகத்தை தொட்டுவிட ஆசை....

நதியில் நீந்தி
கடலில் கலந்துவிட ஆசை....

மழையில் நடந்து
முழுவதும் நனைந்து விட ஆசை....

அன்பைப் பகிர்ந்து
நட்புகளில் நிலைத்துவிட ஆசை....

ஏகஇறையை வணங்கி
அவனருளில் அடங்கிவிட ஆசை...
 

Monday, April 21, 2014

எதிர்பார்க்கும் போது கிடைக்காத பாசம்

எதிர்பார்க்கும் போது
கிடைக்காத பாசம்
எப்பொழுதேனும்
கிடைத்திடுமா?

இருவேறு திசையில்
பயணிக்கும் நாமும்
எதிர் எதிர் காணும்
நாள் வருமா?

Saturday, November 9, 2013

ஆழ்மனதில் மனதில் அடங்கியிருந்து கனாவாய் காட்சி கொடுத்தாயோ!


மூளையில் ஏற்படும் இரசாயன நிலை மாற்றத்தினால் தூக்கத்தின் நிலை மாறுபடுகின்றது.
ஆழ்ந்த தூக்கம், தடைப்பட்ட தூக்கம் என்ற பல நிலைகள் தூக்கத்திலும் உண்டு.
அதிகமான கனவுகள் மகிழ்வைத் தரக்ககூடியதாக இருந்தாலும் சில கனவுகள் நம்மை அதிசிய வைக்கும் நிலையில் இருக்கும். தினமும் கனவுகளின் காட்சி தொடர்ந்து வருவதும் ,அச்சமூட்டக் கூடியதாக குழந்தைகள் காணும் கனவுகள் காண்பதும் மனோ நிலையில் பாதிப்பை உண்டாக்கும் .

குழந்தைகளுக்கு தேவையற்ற பயம் தரக் கூடிய நிகழ்வுகளை காண வைப்பதும் பயமூட்டி வளர்ப்பதனாலும் இம்மாதிரியான பயம் காட்டக் கூடிய கனவுகள் குழந்தைகளைப் பாதிக்கின்றது. இருதயம் பட படக்க கண் விழித்து அலறுகின்றது.

Wednesday, July 17, 2013

வளைகுடா வாழ்க்கை

விசாயிருந்தால் மட்டுமே
விசாரிக்கப்படுவார்!

திரும்ப்பிப் போவதாயிருந்தால்
விரும்பிப் பழகப்படுவார்!

தோசைக்குள்ள மரியாதை
அப்பத்துக்கும் இடியப்பத்துக்கும் இல்லை!

ஆசையை அடக்கி வைத்து
ஆகாயத்தில் பறப்பவனுக்கே பாசவலை!

வெள்ளைக் கைலியின்
வெளுப்பு மஞ்சளாகு முன்பு

முல்லைக் கொடி மனையாளை விட்டும்
முந்திப் பயணமானிகினால் தான் அன்பு!

Sunday, November 18, 2012

சொந்த வீடு (கவிதை)


வரைமுறையாய் கட்டிய வீட்டை
அறைஅறையாய் சென்று
கண் குளிர ரசித்தான்...!

அரையாண்டு உழைப்பில்
வானுயர்ந்த தன் கனவை
அணுவணுவாய் புசித்தான்...!

தரைமுதல் தளம் வரை - பல
தலைமுறை தாங்கும்படி
நிலையாய் கட்டுவித்தவன்..!

நரைவிழுந்த அப்பாவுக்கு
நடுக்கூடப் பக்கத்தில் - தனி
அறையை ஒப்புவித்தான்..!

மனைவி மக்களுக்கு
மேல்தள அறைதனை - அவரவர்
விரும்பியபடி தந்தவன்...

ஆளுக்கொரு அறையை
ஆளச்செய்து விட்டு
ஆசையாய் கட்டிய இல்லத்தில்
தான் மட்டும் தங்காமல்...

தன் பிழைப்பைத் தேடி  - பொருள்
ஈட்ட பறந்து சென்றான்
கட்டிய வீட்டின் கடனை அடைக்க
அயல்நாடுக்கு ,,,,!

by Suresh Subramanian
ரிஷ்வன் கவிதைத் துளிகள்
Source : http://www.rishvan.com

Saturday, August 4, 2012

ஆசையாக ஓடிவந்தேன் அமெரிக்காவே

 ஆசையாக ஓடிவந்தேன் அமெரிக்காவே
2012 பெட்னா வெள்ளிவிழா கவியரங்கத்தில் பாடிய பாடல். வாழ்வாங்கு வாழ்வதற்காக அமெரிக்கா வந்த ஒரு தமிழன் வருத்தத்தோடு பாடும் தெருப்பாடல். டை கட்டி கோட்டு சூட்டு போட்ட அமெரிக்கத் தமிழன் மனம் நொந்தால் சென்னை மெரினாவில் நிற்பதாய் நினைத்து இப்படிப் பாடுவானோ என்ற கற்பனையில் உருவான பாடல்.




ஆசையாக ஓடிவந்தேன் அமெரிக்காவே - இப்போ
    அத்தனையும் ஒடஞ்சிபோச்சே அமெரிக்காவே
பாசமான ஊரை விட்டேன் அமெரிக்காவே - இப்போ
    படுறபாடு கொஞ்சமில்லே அமெரிக்காவே

காதலிச்சேன் வெள்ளைக்காரி அமெரிக்காவே - அவ
    கழுத்தறுத்துப் போட்டுட்டாளே அமெரிக்காவே
வளைஞ்சி நெளிஞ்சி ஒருத்தன் வந்தான் அமெரிக்காவே - வந்து
    கட்டிக்கலாம் வாரியான்னு கேட்டுட்டானே

வீடு வாங்கி செட்டில் ஆனேன் அமெரிக்காவே - அதை
    வங்கிக்காரன் ஆட்டைபோட்டான் அமெரிக்காவே
காலமெல்லாம் உழைச்ச காசு அமெரிக்காவே - இப்போ
    கடங்காரன் ஆயிப்புட்டேன் அமெரிக்காவே

காலையில வேலையில சேத்துக்கறான் - அந்த
    ராத்திரிக்கே வேலைவிட்டு தூக்கிடறான்
வெள்ளக்காரன் மேனேஜரா இருந்துக்கரான் - நான்
    மேல போனா காலவாரி விட்டுடுறான்

சேந்து படிச்ச பசங்க எல்லாம் அமெரிக்காவே - அங்க
    ஜில்லா கலெக்டர் ஆயிட்டாங்க அமெரிக்காவே
சொந்த ஊரப் போல சொகம் ஏதும் இல்லே - இதை
    சொல்லப் போனாக் கேட்க ஒரு நாதி இல்லே


Source : http://anbudanbuhari.blogspot.in

Wednesday, June 20, 2012

ஆசையை தூண்டுகிரார்கள்!

எங்கு பார்த்தாலும் விளம்பரங்கள் . டீவியை திறந்தாலும் விளம்பரம். ஆசைப்படுவது மனித இயல்பு.அது எதில் இருக்க வேண்டும் அது எதுவரை இறுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம் .ஆசைப்டுவதிலும் ரசிப்பதிலும் வித்தியாசம் இருக்கிறது. ரசனயை யாரும் தடுக்க முடியாது அதுவும் மனதிற்குள் இருக்கும்வரை. ரசிப்பதை ருசிக்க நினைக்கும்போது அது நமக்கு உடமையானதாக இருக்க வேண்டும். கண்டதெற்கெல்லாம்  ஆசைப்படுவது  ஆபத்தின் விளைவாக இருக்கும். சிலவற்றில் நாம் ஆசைப்பட்டு நாம் அடைந்துவிட்டாலும் அது நம்மோடு அது நிலைத்து நிற்குமா! என்ற  முன்யோசனை வேண்டும்.
அளவான குடும்பம், நிலையான போதுமான வருமானம் இருப்பதால் நிம்மதியாக வாழ்க்கை இனிதாக,மகிழ்வாக இருக்கும் நிலையில் தூண்டுதலின் காரணத்தால் சில ஆசைகள் வந்து விட்டன.  அதனை தூண்ட வைத்தது விளம்பரங்களே. எங்கு பார்த்தாலும் விளம்பரங்கள் . டீவியை திறந்தாலும் விளம்பரம்.
வீட்டில் உள்ளவர்க்கும் ஓர் ஆசை வந்து விட்டது.

'எல்லோரும் கார் வைத்திருக்கிறார்களே நாமும் ஒரு புதிய கார் வைத்திருந்தால் வசதியாக இருக்கும் அத்துடன் சமுதாயத்தில் ஒரு மதிப்பு கிடைக்கும்'
'கார் வாங்குவதற்கு தேவையான பணமில்லையே!'
'அதான் இன்சால்மெண்டில் தருகின்றார்களே'
 'இன்சால்மெண்டில் வாங்கினால் இன்சால்வென்ட் ஆக  வேண்டிய நிலை வந்துவிடும்'
'நீங்கள் நல்லதே நினைக்க மாட்டீங்களா! விருப்பமில்லையென்றால் விடுங்கள்'
வீட்டில் நடந்த விவாதத்திற்குப் பின் ஒரே குழப்பம். நம்மீது அக்கறையுள்ள அண்ணனிடம் சென்று ஆலோசனைக் கேட்டேன்.அவருக்கு கார் வைத்திருந்த அனுபவமுண்டு.
'உனக்கு யாராவது வேண்டாதவர்கள் இருந்தால் அவருக்கு ஒரு கார் இனாமாக வாங்கிக் கொண்டு. அதிலேயே அவர் பல தொல்லைக்கு ஆளாகிவிடுவார்' என்றார். அவர் சொன்னதை வீட்டில் சொன்னேன்.
'அவங்கெல்லாம் கார் வைத்திருக்காங்க நாமும் கார் வாங்கினால் நமக்கு மதிப்பு கூடிவிடும் என்ற நினைப்போ!'
  கார் வாங்கியாச்சு. பெட்ரோல் போட்டு பணம் கரைய சிறிது சிறிதாக குடும்பத்தில் பணப் பற்றாக்குறை தொடங்கி விட்டது.கட்டுப்படுத்தாத மனது கவலையை தந்தது .  (அதிக) ஆசையே துன்பத்திற்குக் காரணம்


கார் உரிமையாளர் உண்மை செலவு
ஒரு கார் வாங்க விரும்புவர்கள் முதலில் சித்திக்க வேண்டியது.
 ஒரு கார் செலவு கொள்முதல் விலையில் முடிவடையவில்லை என்று நன்கு கவனமாக இருக்க வேண்டும். தேய்மானம், எரிபொருள் செலவுகள், காப்பீடு, பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல், மற்றும் விற்பனை வரி: இது  போன்ற கூடுதல் கவலைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.  வாங்கிய உடன் தகுதிவாய்ந்த சில யோசனைகளை இந்த விளக்கப்படம் விளக்கும். இந்த தகவல்  பயனுள்ளதாக அமையும்.



ஆசை