உங்கள் பையன் எங்கே படிக்கிறான் என்பதை விட அவன் எப்படி படிக்கிறான் என்பதுதான் அதை விட முக்கியம்.
அவன் படிப்புக்காக எதை இழக்கிறான் இதனையும் நாம் சித்திக்க வேண்டும். அங்கு படித்தால் நல்ல கல்வி கிடைக்கும் என்ற ஆர்வ மிகுதியால் ஐந்தாவது முதல் படிக்க வைக்க சிறு வயது பையனை குடும்பத்தினை விட்டு பிரித்து, தன் ஊரை விட்டு தொலைவில் உள்ள ஊரில் அல்லது நகரத்தில் படிப்பதற்க்காக, விடுதியில் தங்கிப் படிக்க பள்ளிக்கூடத்தில் சேர்கின்றனர்.
அவன் இந்த இளவயதில் தன் மீது பாசம் செலுத்துபவர்களை அந்த காலத்தில் இழக்க நேரிடுகின்றது. ஒன்றை தேட ஒன்று இழப்பது இயல்பு. அனைத்தும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில கிடைப்பது அறிது.பொருள் நாடி மற்ற நாடுகளுக்கு செல்லும் நிலை. வீட்டில் இருந்தால் பொருள் கிடைக்காது. இது வளர்ந்த பின் ஒரு பக்குவம் வந்த நிலையில் ஏற்படும் நிலை. இந்த நிலை சிறார்களுக்கும் உண்டாக்குவது அவசியமா! உயர் குடிப் பிறந்தோர் என்று சொல்லிக் கொள்வோரும் செல்வம் மிகுதியாக உள்ளவர்களும் தங்கள் பையன் படிப்புக்காக சிறந்த கல்வி கொடுக்க குடும்பத்தையே அவன் படிக்கும் பள்ளிக்கு அருகில் உள்ள இடத்திற்கு தற்காலிகமாக அவன் படிப்புக்காக இடம் பெயர்ந்து வாழ்கின்றனர். இது முறை. வெளி நாட்டில் நிறைய பொருள் ஈட்டும் மக்களும் தங்கள் குடும்பத்தை அங்கு அழைத்துச் சென்று தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்கின்றனர். ஆனால் தாயையும் மற்றும் குடும்பத்தையும் விட்டு பிரித்து சிறார்களை விடுதியில் தங்கிப் படிக்க வைப்பது படிக்கும் பையனின் மனதையும் தாயின் மனதையும் மிகவும் பாதிக்கும். சீன தேசம் சென்றாயினும் சீர் கல்வியைத் தேடு என்பது நபிமொழி. இது சிறார்களுக்கு சொல்லப்பட்டதல்ல.
தாய் தன் மகனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும்போது அதில் பரிவும்
இருக்கும் மற்றும் கண்டிப்பும் இருக்கும். பையனுக்கு அந்த தாயின்
கண்டிப்பு அவன் மனதை பாதிக்காது. அனால் முறையாக மனோ தத்துவம் தெரியாத தாய்
சொல்வது "அவன் எங்கே என்னிடம் படிக்கிறான் " இதனால்தான் பெண்களுக்கு கல்வி
அவசியம் என அனைவரும் சொல்கின்றனர்.
அவன் விடுதியில் உயர்ந்த உணவு கொடுப்பதாக பெருமையாக சொல்பவர்கள் அதிகம். அதில் ஒன்றை அவர்கள் கவனிக்க மறந்து விட்டனர். அந்த உணவில் அனைத்து புரதச் சத்தும் வைட்டமின்களும் இருக்கும் .ஆனால் மிக முக்கியமான வைட்டமின் "Z" இருக்காது. அந்த வைட்டமின்தான் அன்போடு பாசத்தோடு பரிமாறும் பண்பாடு. இது ஹோட்டலில் சாபிடுவதுபோல்தான். விடுதியில் அவன் இந்த இள வயதில் தனித்து விடப்பட்டதாக அவன் உணர்வான்.அவன் மனதில் படும் துயரங்களை வார்த்தையால் வடித்து எழுதும் வயதும் வரவில்லை அதனை அடுத்தவரிடமும் சொல்லி எழுத முடியாது. தானே மடலில் அவன் ஏதாவது 'உடம்பு சரியில்லை'(அது சாதரணமாகவும் இருக்கலாம் ) அல்லது 'உங்களை விட்டு பிரிந்து இருப்பது அழுகையாக வருகின்றது' என்று ஒரு மடலோ உங்களுக்கு வந்து விட்டால் நீங்கள் படும் துயரத்தினை சிறிது சிந்திங்கள்.
எனது மகனை ஐந்தாவது படிப்பதற்கு சென்னை கிரசென்ட் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்த போது நாங்கள் மிகவும் அவன் பிரிவின் ஆற்றாமையால் மிகவும் வருத்தம் கொண்டோம்.
செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.நபிமொழி
No comments:
Post a Comment