Showing posts with label மகிழ்வு. Show all posts
Showing posts with label மகிழ்வு. Show all posts

Thursday, April 17, 2014

நீ இருக்குமிட மெல்லாம் மகழ்வைத் தருகின்றது

உன் கூந்தலில்  சூட்டிய மல்லிகையின் மணம்
உன் வரவைக் காட்டுகிறது

உன் கண்களின் கனிவான பார்வை
உன் இறைபக்தியை காட்டுகிறது

உன் நெற்றியில் உள்ள குறி
உன் தொழுகையின் ஈடுபாட்டைக் காட்டுகிறது

உன் சோர்வு
உன் உடலின் நலமற்ற தன்மையை காட்டுகிறது

Monday, January 6, 2014

மறக்கவில்லை அதனால் நினைக்கவில்லை .

மறக்கவில்லை அதனால் நினைக்கவில்லை .
நெஞ்சில் நிறைவாக உள்ளதால் பகிர மனம் நாடுகிறது .
எங்கு சென்றாலும் இதயம் இவ்விடத்தை காணத் துடிக்கின்றது
அன்பால் கட்டிப்போட்டவர்
கருத்தால் கவரப் பட்டவர்
குருதி தொடர்பு மிக்கவர்
கொள்கை பிடிப்பு உள்ளவர்
தொடர்பை நாடி நிற்பவர்
தொலை தூரத்தில் இருந்து காட்சி தருபவர்
இன்னும் இன்னும் ...எத்தனையோ இங்கிருந்து
காந்தம் போல் இழுக்கிறது
/

Sunday, October 14, 2012

காட்சியைக் கண்டு மகிழ்வு! நன்றி உங்களுக்கே!


பார்த்ததை பிடித்தேன்.பிடித்ததை போட்டேன் . நினைத்ததை எழுதினேன்   நெகிழ்வு அடைந்தேன்
எதையாவது நல்லதை செய் உள்ளம் கெடாமல் இருக்க .இதுதான் வயதானோர் வழி .
இளம் வயதினருக்கு ஏதாவது ஒரு நல்ல குறிகோளுடன் கூடிய வெறி இருக்க வேண்டும் .இல்லாமல் இருந்தால் அவர் மனதை நல்வழி படுத்த திருமணம் செய்து வைப்பது உயர்வு .

Monday, July 2, 2012

மனிதன் மாற்றத்திற்கு உட்பட்டவன்.

  சிலர் நம்மை நாடி வருவது மகிழ்வு .சிலர் நம்மை விட்டு பிரியும் பொது துயரம் .மற்ற சிலர் நம்மைவிட்டு விலகும்போது ஆனந்தம். ஒருவரது செயல்பாடுகள் இத்தனை மாற்றங்களை  ஏற்படுத்துகின்றன.
சிலதை பார்க்கிறோம். சிலவற்றை கவனிக்கிறோம் மற்ற சிலவற்றை காணாமல் தவிர்க்கின்றோம்.

 சிலவற்றை படிக்கிறோம் சிலவற்றை படிப்பதை வெறுக்கிறோம் மற்ற சிலவற்றை படித்து மனதில் நிறுத்திக் கொள்கிறோம்.
சில உணவு ஒருவருக்கு உடலுக்கு ஊட்டம் தருகின்றது மற்ற சில உணவுகள் அவருக்கு ஒவ்வாமையை தந்து அவதிக்குள்ளாகின்றது. சில உணவுப் பண்டங்கள் மீது ஒருவருக்கு   மிகவும் நாட்டம் அவருக்கே மற்ற உணவைக் கண்டால் பிடிப்பதில்லை  . ஒருவருக்கு ஒருவர் சுவைப்பதிலும் ரசிப்பதிலும்  மாற்றம். ஒரே மாதிரியாக சுவைப்பதிலும் ரசிப்பதிலும் அனைவருக்கும் இருந்தால் அது திண்டாட்டதில் வந்து முடியும். பற்றாக்குறை வராமல் இருக்க இந்த மாற்று நிலை உதவுகின்றது. அனைவரும் சிகப்பு பெண்தான் வேண்டுமென்றால் இது இயந்திரத்தால் செய்யக் கூடிய காரியமல்ல. அப்படி அனைத்தும் சிகப்பாக இருந்தாலும் அது வெறுத்து விடும்.மனிதன் மாற்றதினையே விரும்புபவன். மனிதன் மாற்றத்திற்கு (குழந்தையாய் இருந்து முதியோர் வரை) உட்பட்டவன்.

Sunday, June 17, 2012

நாம் ஏன் மகிழ்வாக இல்லை?

  என் முடி இப்போது வெள்ளையாகி  விட்டது , இளமையில் இருந்த  மகிழ்ச்சி இப்பொழுது எங்கே காணாமல் போய்விட்டது.வயது வளர முடியின் நிறம் மாறுவது இயற்கை. மனதில் மாறுபடும் மகிழ்வும் குறைந்து வருவது இயற்கையாகிவிடுமோ! வயதானால் உள்ளம் பண்பட்டு துயரம் தொலைவதற்கு என்னதான் வழி!

அதற்கும் ஒரு வழியை இறைவன் காட்டாமலா இருப்பான்!

ஆசை,அளவிற்கு மீறிய விருப்பம், நினைத்தது கிடைக்காமல் போகும்போது ஏற்படும் விரக்தி ,கிடைத்ததை இழக்கும் போது அனுபவிக்கும் துயரம் அத்தனையும் வாழ்வோடு ஒன்றியதுதான். அனைத்தையும் சமநிலையாக எடுத்துக்கொள்ளும்   பக்குவம் எப்போழுதுதான் வரும்?

Wednesday, October 19, 2011

பயணம் செய்ய படங்கள் மற்றும் காணொளிகள் தூண்ட பார்த்து மகிழுங்கள் !



   பயணம் செய்வதில் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். அது பணத்தினை வீண் செலவு செய்வதாக அமைந்துவிடக் கூடாது. நம்மை நாமே சுற்றிக் கொண்டிருக்காமல் பல்வேறு மக்களை சந்தித்து பலவிதமான மக்களின் அறிவினை உள்வாங்கிக் கொள்வதில் நோக்கமாக பயணம் செய்வது சிறந்த முறையாகும் . எந்த எண்ணத்தில் உங்கள்  பயணம் உள்ளதோ அதுதான் உங்களுக்கு கிடைக்கும். உல்லாசம் தேடி மட்டும் நம் பயணம் அமைந்தால் அதில் ஒரு பயனுமில்லை. 

பயணம் செய்து பார்த்து கிடைக்கும் அறிவு  மனதில் ஆமாக பதியும்.
உலக புத்தகத்தில் ஒரு பக்கம் வாசிக்க ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம். பயணம்  மனதிற்கு மகிழ்வுடன் அறிவினையும் தரும்
 -----------------
குர்ஆன்10:22. அவனே உங்களைத் தரையிலும், கடலிலும் பயணம் செய்யவைக்கிறான்; (சில சமயம்) நீங்கள் கப்பலில் இருக்கும்போது - சாதகமான நல்ல காற்றினால் (கப்பலிலுள்ள) அவர்களைக் கப்பல்கள் (சுமந்து) செல்லும்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்; பின்னர் புயல் காற்று வீசி எல்லாப்பக்கங்களிலிருந்தும் அலைகள் மோதும் போது, நிச்சயமாக (அலைகளால்) சூழப்பட்டோம் (தப்ப வழியில்லையே)” என்று எண்ணுகிறார்கள்; அச்சமயத்தில் தூய உள்ளத்துடன், “நீ எங்களை இதிலிருந்து காப்பாற்றி விட்டால், மெய்யாகவே நாங்கள் உனக்கு நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்” என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றார்கள்.