Showing posts with label நம பெயர். Show all posts
Showing posts with label நம பெயர். Show all posts

Tuesday, June 26, 2012

மறந்துவிட்ட சத்தியங்கள்

மறந்துவிட்ட சத்தியங்கள்


 வாழ்வில் நம்மையே நினைத்துக் கொண்டிருக்கின்றோம்  . மற்றவர்களைப் பற்றியும் நினைத்துப் பாருங்கள் . நம்முடன் வரப்போவது நாம் செய்த தொண்டுகளும் நற்சேவைகளும்தான். உற்றார் உறவினர் மற்றோர் நாம் உயிரோடு இருக்கும் போது நம பெயரைச் சொல்லி அழைப்பார்கள்.  நம உயிர் நம்மை விட்டு பிரிந்து விட்டால் நம உடலை அடக்கம் செய்வதில் துரிதம் காட்டி அடக்கம் செய்வதில் முற்படுவர். அப்பொழுது அவர்கள் நமக்கு தந்துள்ள பெயர் முஸ்லிமாக  இருந்தால்  "மொவுத்தை" எப்பொழுது அடக்கம் செய்யப் போகின்றார்கள். கிறிஸ்டியனாக  இருந்தால் பிணத்தினை  எப்பொழுது அடக்கம் அல்லது  ஹிந்துவாக இருந்தால் எப்பொழுது  சுடுக்காட்டுக்கு  போகின்றார்கள்.  போய் விட்டது  நம பெயர். வந்தது மொவுத் அல்லது பிணம் என்ற புதிய  பெயர்.

'பட்டாமணியார் வீட்டில் யாராவது இறந்தால் ஆயிரம் பேர். பட்டாமணியார் இறந்துவிட்டால் பத்து பேர்' . அவரே போய் விட்டார் இனிமேல் அவரை அணுக வேண்டிய அவசியமில்லை. இதுதான் உலகம்

 கொடுத்த வாக்குறுதிகளை செயல் படுத்திவிடுங்கள். அது மக்களிடமாகவும் இருக்கலாம். இறைவன் நாடியதை அவனுக்கு கொடுத்த வாக்குறுதிகளை  செயல்படுத்திவிடுங்கள். அவைகள்தான் உங்களை தொடரக் கூடியவைகள்.
''இறந்தவரை மூன்று விஷயங்கள் பின் தொடர்கின்றன. அவை அவனது குடும்பம், அவனது சொத்து, அவனது செயல்கள் ஆகும். இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டும் தங்கி விடுகிறது. அவனது குடும்பமும், அவனது சொத்தும் திரும்பி விடுகின்றன. அவனது செயல் தங்கி விடுகிறது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் -அறிவிப்பவர்: அனஸ் (ரளி)
நூல்கள்: புகாரி , முஸ்லிம்