Showing posts with label இசைக் கருவிகள். Show all posts
Showing posts with label இசைக் கருவிகள். Show all posts

Wednesday, June 13, 2012

இசை கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லையா - 6

சபீர்: சிந்தையை மயக்கும் புத்தியை மழுங்கச் செய்யும் இசைக் கருவிகள் மார்க்கத்தில் தடுக்கப்பட்டிருந்தால் தடுக்கப்பட்டதுதான். மார்க்கத்தில் எல்லா கேள்விகளுக்கும் சாமான்யன் புரிந்து கொள்ளும் விதத்தில் பதில் கிடைத்துவிடுவதில்லை. நம்பிக்கையே ஆன்மிகத்தின் அடிநாதம். எனவே, தொடர்ந்து விவாதிக்க விரும்பினால் தயை செய்து மார்க்க ஆதாரங்களை வைத்து விவாதிக்கவும்.

”தடுக்கப்பட்டிருந்தால்” என்ற ஒரு சொல்லை அழகாகப் பயன்படுத்தி இருக்கிறீர்கள். இது நாகரிகமான செயல். பலரும் ஐயமே அற்றவர்களைப்போல தடாலடியாக முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அதை அடுத்தவர்களின்மீது ராணுவத்தனமாகப் புகுத்தப் பார்க்கிறார்கள். அதனாலேயே அவர்கள் இஸ்லாத்தில் மேன்மையானவர்கள் என்று காட்டிக்கொள்ள முயல்கிறார்கள். அவர்களின் பிழை அவர்களுக்குப் புரிவதே இல்லை. ஆனால் விபரம் தெரிந்தவர்களுக்கு அவர்களின் பிழை அழகாகத்தெரியும் அவர்களும் மிக அழகாக ஓர் நகைப்பை அள்ளித் தெளிப்பார்கள்.

குரல் வழி இசையும், கருவி வழி இசையும் தடுக்கப்பட்டதற்கு வலுவான ஆதாரங்கள் குர்-ஆனில் இல்லை. உறுதியற்ற ஹதீசுகள், அவற்றை புரிந்துகொள்ளும் நிலை ஆகியவற்றில் தடுமாற்றம் அவ்வளவுதான்.

குர்-ஆனில் தெளிவாக எவை தடுக்கப்படவில்லையோ அவற்றை நாம் செய்யலாம் அல்லது அனுபவிக்கலாம்.