Friday, June 15, 2012

வருத்தம் ஏன் ! மனம் மகிழ்வுடன் வாழ்ந்து விடு .

நாம் நம்மைப் பற்றிய எண்ணுவது  ஒருபுறம் இருக்கட்டும்; மற்றவர்களைப் பற்றி சிறிது  யோசித்துப் பாப்போம் !

மிதியடி இல்லையே என்று எண்ணாமல் கால் இல்லாமல் இருப்பவர்களைக் கண்டு ஆறுதல் அடை. பொருள் வாங்க பணம் இல்லையே என்று வருந்தாமல் நமக்கு கடன் இல்லை என
நிம்மதி கொள். வீட்டில் இறப்பு ஏற்பட்டால் கண் கலங்காதே! எத்தனையோ குடும்பங்கள் அடியோடு எதிர்பாராத வகையால் இயற்கையின் சீற்றத்தால் அழிந்துவிடுவதனை பார்க்கின்றோம்.
குழந்தைகள் படிக்க வைக்க  பணம் இல்லையே என்று வருத்தம் அடைவோர்    குழந்தைப் பெறும் பாக்கியம் இல்லாத தம்பதியர்கள்பார்த்து அமைதி அடைந்து நாம் பாக்கியம் பெற்றோர் என கருதட்டும்.தேவை மனவுறுதியும், ஆரொக்கியமும், தியாக மனப்பான்மையும், குழந்தைகளை இறைவன் அளிக்கும் மிகப்பெரும் செல்வம் என்று கருதும் மன நிலையும் தான். பணங்காசுகளோ, வசதிவாய்ப்புகளோ அல்ல.

வருத்தம் வேதையினை தந்து உடல் நலனை பாதித்துவிடும். மகிழ்ச்சி உற்சாகத்தினை தந்து ஆற்றல் உள்ளவர்களாக மாற்றும். எடுத்ததெற்கெல்லாம் குறை காண்பது தாழ்வு மனபான்மைக்கு வழி வகுத்துவிடும். வாழும் கடைசி நிமிடம் வரை மகிழ்வாக வாழ  வேண்டும். .


பாவம்   செய்து விட்டோம் என வருந்தாமல் திருத்திக்கொள்ள முயற்சி செய்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்; அவன் பால் திரும்புங்கள்; என்னைப் பாருங்கள்! நான் ஒரு நாளைக்கு நூறு தடவை பாவ மன்னிப்பு கோரி இறைஞ்சுகிறேன். அறிவிப்பவர்: அகர் பின் யஸார்(ரலி) நூல்: முஸ்லிம்
வாழ்க்கையில்  அறிந்தோ அறியாமலோ செய்த தவறு செய்வது இயல்பு .உடுத்தும் துணி அழுக்கு அடையும் பொழுது துவைத்து சுத்தம் செய்வது போல் மனதினையும் உறுதியான என்னத்துடன் இனி தவறு   செய்வதில்லை என உறுதியுடன் செயல்படு. எந்த நிமிடம் தவறு செய்து விட்டோம் என்ற எண்ணம் நமக்கு வந்து விட்டதோ, அந்த நிமிடமே படைத்த இறைவனிடத்தில் அழுது பாவ மன்னிப்பு கேட்க திரும்பவேண்டும்.
ஆதம்(அலை) ஹவ்வா(அலை) பாவமன்னிப்பு கோரியதை பாருங்கள்.
அதற்கு எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்து விட்டோம்; நீ எங்களை மன்னித்து கிருபை செய்யாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தோர்களாகி விடுவோம் என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 7:23)
நபி ஆதம்(அலை), ஹவ்வா(அலை) பாவமன்னிப்பை இரவன் ஏற்றுக்கொண்டான். அவர்களிலிருந்தும் தாம் செய்தது பாவம் என்று தெரிந்ததும், அல்லாஹ் கற்றுத் தந்தபடி பாவமன்னிப்பு கோறினார்கள். அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்தான். (அல்குர்ஆன் 2:37)
பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளை கற்றுக்கொண்டார் (இன்னும் அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்பு கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையுடையோனும் ஆவான். (அல்குர்ஆன் 2:37)
இறைவனிடத்தில் நம்பிக்கையிழந்து விடாதே.
என் அடியாளர்களே! எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்து கொண்டபோதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் நம்பிக்கை இழந்து விடவேண்டாம். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், மிக்க கருணையுடைவன் என்று நபியே நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 39:53)
முச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவமன்னிப்பு கோரலை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: திர்மிதி
நிச்சயமாக அல்லாஹ் தன் அடியாளர்களிடமிருந்து தவ்பாவை – மன்னிப்பு கோருதலை ஒப்புக் கொள்கிறான் என்பதையும், தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை ஏற்று அருள் புரிபவன். (அல்குர்ஆன் 9:104)
அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடாமல் இது நாள் வரை இருந்தவர்கள் இனியாவது அவர்கள் செய்த தவறுகளுக்காக மனம் வருந்தி திருந்தி வாழ முற்படவேண்டும்.
எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும் அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்,  (அல்குர்ஆன் 2:286)

2 comments:

ஸாதிகா said...

அருமையான ஆக்கம்.ஜஸகல்லாஹ்

ஸாதிகா said...

அருமையான ஆக்கம்.ஜஸகல்லாஹ்