Sunday, June 10, 2012

சுய விமர்சனம் தேவை.

சுய விமர்சனம் நமக்குள் செய்துக் கொள்ளவேண்டும். அது நம்மை நாமே பாராட்டி அடுத்தவரிடம்  விமர்சனம் செய்துக் கொள்வதல்ல.

சுய விமர்சனம்.
 ஒவ்வொரு நாளும் நாம் படுக்கைக்கு செல்லுமுன்பு  இன்று  நாம் ஈடுபட்ட செயல் என்ன! அது நமக்கோ அல்லது மற்றவருக்கோ நன்மையானதாக அமைந்ததா! அல்லது அது தீமையாக இருந்து நம்மையோ அல்லது நமது குடும்பத்தினரையோ அல்லது மற்றவரையோ பாதிக்கும்படி ஆக்கிவிட்டதா என்று சிறிது சிந்திக்க வேண்டும் . நாம் நல்ல காரியங்கள் செய்திருந்தால்  அதனை தொடர்ந்து செயல்பட முனைவதுடன்    மற்றவர்களயும் தூண்ட  வேண்டும் . நாம் பாதகமான செயலில்  ஈடுபட்டிருந்தால்  முதலில் இறைவனிடம் மன்னிப்பு நாடுவதொடு  யாருக்கு நாம் பாதகம் செய்தோமோ அவர்களிடமும் மன்னிப்பு கேட்பதோடு அதற்கு மாற்று வேலையாக பாதிக்கப் பட்டவர்களுக்கு நல்ல  காரியங்கள் செய்து கொடுக்க  வேண்டும்,
 நாளை செய்ய வேண்டிய வேலைகளை ஒரு திட்டம் போட வேண்டும் . முடிந்தால் அதனை எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்
நாம் யாரையும் குறைவாக மதிப்பிடாமல் இருந்து மற்றவர்களை மதிப்பதுடன் அவர்களின் உணர்வுகளையும் மதிக்க வேண்டும்.
(விஜய்  டீவீயில் நடிகர் அமீர்கான்  நடத்தும் மாற்றுத்திறன்   உள்ளவர்களுக்காக  நடத்தும் நிகழ்ச்சி நமக்குள் ஒரு  நல்ல மாற்றத்தினை உண்டாக்கும்.. அத்துடன் நடிகர்  சூர்யா நடத்தும் ஒரு கோடி நிகழ்ச்சி நமக்கு அறிவை வளர்ப்பதற்கும்  வழி வைக்கும்)

தன்னை ஒரு போதும் குறைவாக மதிப்பிடக் கூடாது


  புதிய ஆரோக்யமான   நம்பிக்கை மனநிலையில் ஒரு புத்துணர்வை மற்றும் எழுச்சியை உண்டாக்கி நாமும் ஒரு சாதனை செய்ய வேண்டும்  என்ற வேகத்தை உண்டாக்கும். தவிர தனது சொந்த வேலை விமர்சிக்க கூடாது. ஒரு சோர்வுற்ற மனதில் சுய விமர்சனம் செய்துக்கொள்ள நினைக்கக் கூடாது அது தற்கொலை போன்றதாகிவிடும்

உங்கள் செயல்திறன், வேலை, அல்லது நடத்தை பற்றி உங்களுக்குள் சுய விமர்சனம் செய்வதனை   நிறுத்த முயற்சி செய்தால்  அது உங்களை உலகின் மீது பற்று அற்றவர்  ஆக்கிவிடும்

அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) கூறியதாவது. நபி(ஸல்) அவர்கள் மிம்பர் மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு, 'உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும்; உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியதும்; தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியது" என்றும் கூறினார்கள்.

ஔடதம் (மருந்து)

அதிகமாக ஆசைப்பட்டு இருப்பதையும் இழக்க  விரும்பவில்லை.
ஆசைப்பட்டதெல்லாம் கிடைத்துவிட்டதால்  இறைவனுக்கு   வேலையில்லை.
இறைவனை நம்பி வேலையை தொடர்வதே உயர்வு.
ஈ காட்டி ஈனத் தொழில் செய்யாமல்  இருக்க விரும்பு
உயர்ந்தபின் உதவியவரை உதறிவிடாதே.
ஊசல் மனது ஒரு வேலையும் செய்யாது.
எளிய வாழ்வு எக்காலமும் மகிழ்வு தரும்.
ஏற்றம் வரும்போது எளிமை வேண்டும்
ஐயம் வர ஆசிரியரை நாடி விளக்கம் கேள்
"ஒட்டகத்தை கட்டிவிட்டு,அதன் பாதுகாப்புக்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்"
{ஒட்டகத்தை கட்டாமல்,அது பாட்டுக்கு விட்டு விட்டு,இறைவன் பாத்துக் கொள்வான் என்று இருந்து விடக் கூடாது என்று நபி அவர்கள் வலியுறுத்தினார்கள்.)
ஓடி முடி ஆனால் தடுக்கி விழாமல் பார்த்துக்கொள்
ஔடதம்(மருந்து) மழலையின் மொழி அன்னைக்கு  மருந்து. மனைவியின் மந்திரமொழி மணாளனுக்கு மருந்து.
ஃபேஸ்புக் தளத்தினால் மக்களுக்கு  ஒரு மாயை.

No comments: