ஒரு நாள் ஒரு பூ வியாபாரி முடிதிருத்தகம் சென்றார். முடி வெட்டிய பிறகு
பூ வியாபாரி முடிதிருத்துபவரிடம் பணம் கொடுத்தார் . 'நான் பணம் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் இந்த வாரம் சமூக சேவை செய்கிறேன்'.என்றார் அந்த நாவிதர்.
அடுத்த நாள் காலை, முடி திருத்தும் கடை திறக்க சென்ற போது ஒரு வாழ்த்து
அட்டை 'நன்றி' என்று எழுதி இருந்தது மற்றும் ஒரு டஜன் ரோஜாக்கள் ஒரு
பையில் இருந்தது
அன்று ஒரு மளிகை கடைக்காரர் முடி வெட்டிக்கொள்ள வந்திருந்தார். முடி வெட்டி
முடிந்தவுடன் மளிகை கடைக்காரர் முடிதிருத்துனரிடம்
அதற்குரிய பணம் கொடுத்தார் அதற்கு அந்த நாவிதர் 'மன்னிக்கவும் நான்
இந்த வாரம் சமூக சேவை செய்கிறேன்' அதனால் தயவு
செய்து பணம் கொடுக்க வேண்டாமென்றார். அதற்கு மரியாதை கொடுத்து மளிகை
கடைக்காரர் நன்றி சொல்லி விட்டு சென்றார் . அடுத்த நாள்
முடித்திருத்தகம் திருக்கும்போது 'தயவுசெய்து எனது அன்பான அன்பளிப்பை
ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற வாசகத்துடன் ஒரு வாழ்த்து அட்டையுடன் ஒரு பை
நிறைய மளிகை பொருள்களும் இருந்தன.
அந்தநாள் பாராளுமன்ற உறுப்பினகள் இருவரும் அவரது கட்சியைச் சார்ந்த
சிலரும் முடிதிருத்தகம் திறப்பதற்கு முன்பே காத்திருப்பதனைக் கண்டு முடிதிருத்துபவர்
அதிர்ச்சியுற்று 'நாம் ஒன்றும் தவறு
செய்யவில்லைங்களே' சொன்னார். அதற்கு அவர்கள் 'நாங்களும் உங்கள் சமூக
சேவையில் முடி வெட்டிக் கொண்டு உங்கள் சேவையைப் பாராட்டிவிட்டு போகலாம்
என்பதற்கு வந்துள்ளோம்' என்றார்கள்'.
இனாம் கொடுத்துவிட்டு வாக்குச் சீட்டினை வாங்கிவிட்டு இனாமாக நம்மிடம் பல
வகைகளில் நன்மை அடைந்துவிடும் காலத்தில் நாம் வாழ்கின்றோம்!
No comments:
Post a Comment