Thursday, June 7, 2012

படித்து பட்டம் வாங்குவது ஒரு பாஸ்போர்ட் மாதிரிதான் . அறிவுத் திறனோடு நன்றாக படித்து பட்டம் வாங்குவது விசா கிடைத்ததுபோல்.

  நாம் ஒவ்வொரு நாளும் ஒரு புத்தகம் படிக்க நமக்கு ஒரு தனித்துவம்  வந்தடைகின்றது. அறிவைப் பெற படிக்கின்றோம்  ஒரு நாளைக்கு ஒரு புத்தகமாவது படிப்பது நல்லது. படிப்பதில் ஆற்வம் இருக்க வேண்டும்.படிப்பது
என்றால் புத்தகத்தைப் பக்கம் பக்கமாக பிரித்துப் பார்பதல்ல. அதிலுமொரு நன்மை கிடைக்கலாம். நம்மை அறியாமலேயே நம் சிந்தையில் அது  வந்து அமர்ந்து விடலாம், படிப்பதில் ஒரு ஆர்வம் உண்டானாலே போதும் அது தொடர்ந்து நம் பழக்கதில் வந்து சேர்ந்து விடலாம் . தற்பொழுது டீவீ யும் மற்ற பொழுது போக்குகளும் நம்மை படிக்கவிடாமல் நம்மை விளக்கி வைக்கின்றது. அறிவு பெறுவதற்கு படிப்பதே சிறந்த சாதனம் .அறிவு மிகவும் சக்தி வாய்ந்தது . அது எந்த காலத்திலும் உதவலாம் .
படிப்பதில் பலவகையுண்டு.
“ Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.”—Francis Bacon
சில புத்தகங்களை மேலோட்டமாக படிப்பது,சில  புத்தகங்களைப்  படித்து கருத்தை உள்வாங்கிக் கொள்வது மற்றும் சில புத்தகங்களைப்  படித்து   உள்வாங்கி காலமெல்லாம் நினைவில் நிறுத்திக் கொள்வது.
நான் தனித்துவமான கோடில் இருந்து நீங்கள் படிக்க - திட்டங்கள் தன்னிச்சையான - ஒரு நாளைக்கு ஒரு புத்தகம்
நாம் படிக்க தேர்ந்தெடுக்கும் புத்தகம் நல்லவைகளாக இருப்பது அவசியம் . கெட்டவைதான் சீக்கிரம் நம் மனதில் ஒட்டிக்கொள்ளும்.அதனால் நல்ல கருத்துடன் அறிவையும் மற்றும் பண்பையும் வளர்க்கக்கூயதாக இருக்க வேண்டும்.

நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்ற  ஒரே நோக்கத்துடன் படிப்பவர்கள்தான் தற்போழுது அதிகமாக உள்ளனர். ஆனால் பொதுவான உலக விசயங்களில் அவர்களுக்கு நாட்டம் இல்லாமல் இருப்பதனை நாம் பார்க்கின்றோம். பொறியியர்  கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை படிக்கும் பொழுதே வேலைக்கு எடுத்து விடுகின்றார்கள். வேலைக்கு எடுக்கும்  போது அவர்கள் எடுத்திருக்கும் மதிப்பெண்களை மட்டும்  பார்க்காமல் மற்ற திறனையும் கண்காணித்தே வேலைக்கு தேர்ந்தெடுக்கின்றனர்.
சில  கல்லூரிகளில் முக்கியமாக தேர்வில் வரக்கூடிய  பாடங்களை அதிகமாக படிங்கள் என்பார்கள்.அதில் சில மாணவர்கள் அதனை மட்டும் படித்து தேர்வில் அது வரவில்லையென்றால் தோல்வியை தழுவுவார்கள். படிப்பது தேர்வுக்காக் மட்டுமில்லாமல் அறிவை வளர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும். கற்றது கைமண் அளவு  கல்லாதது உலகளவு (ஔவையார்)  
நன்றாக படித்து பட்டம் வாங்குவது ஒரு பாஸ்போர்ட் மாதிரிதான் . அறிவுத் திறனோடு நன்றாக படித்து பட்டம் வாங்குவது விசா கிடைத்ததுபோல்.


Why read a book to end in one day is a beautiful thing?

 How to find a book per day? 
More details in the post and the original

 Read more L et us read a book every day 

No comments: