பலபேர் வாழ்கையில் கணவன் மனைவி இருவருக்கும் விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம் இல்லாமல் பலநாட்கள் தம்பதிக்குள் பேசாமல் இருந்ததனை நான் அறிந்திருக்கின்றேன். ரசத்தில் சிறிது அதிக உப்பு சேர்தமையால் கணவன் மனைவியை கோபமாக பேச அவள் வருத்தமடைந்து வாயடைத்துப்போய் அதில் இருவருக்கும் மவுன விரதமாக மாறி சில நாட்கள் ஓடியதும் உண்டு .
"நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்)விட்டுவிடுவார்கள்."
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி
வாழும் ஒவ்வொரு நாளும் முக்கியமானது, இழந்த மகிழ்வு இழந்ததுதான், அதற்கு முக்கிய காரணம் கோபதையும் தாபத்தையும் விட்டுக் கொடுத்து முடிவுக்கு கொண்டு வராமல் போனதுதான்.
"உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியரிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவர்களே" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).
நூல்கள்: அஹ்மத், திர்மிதீ.
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது." - குறள்
மு.வ உரை:
இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும். -
திருக்குறள் -45