Thursday, June 14, 2012

மனித நேயத்துடன் அமைந்த இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள்.

                                               (கெய்ரோவில் அல் அஹர் பல்கலைக்கழக பள்ளிவாசல்)
அறிவைப் பெறுவது அனைவருக்கும் அவசியம்.அறிவை அடைவது சிந்தனையை  தூண்ட வழிவகுக்கும். சிந்தனையும் அறிவும் ஒரு ஒளிதரும் விளக்கு போல்.  ஒளி கிடைத்துவிட்டது!நல்லது கெட்டது தெரிந்து விட்டது. அல்லவை விடுத்து  நல்லவைதனை  செயல்படுத்துவது ஒவ்வொருமனிதனுக்கும் கடமையாகின்ன்றது.
உலகில் இருவித கல்வி கற்பிக்கப் படுகின்றது. ஒன்று மார்க்கக் கல்வி மட்டொன்று உலகக் கல்வி. இரு கல்வியும் அவசியம் தேவை. அதற்கு ஒரு வழிகாட்டியும் அவசியம் . முஸ்லிம்களுக்கு   குர்ஆன் மற்றும் சுன்னாஹ்  முக்கிய ஆதாரங்கள் (நபி முஹம்மது மரபுகள்). குர்ஆனுக்கு விளக்க உரையாக முகம்மது நபி (ஸல்)வாழ்ந்து காட்டினார்கள்.அவர்கள் மொழியும் அவர்களது வாழ்வும் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருந்ததால் குர்ஆனும்  மற்றும் சுன்னாஹ் முஸ்லிகளுக்கு வழிகாட்டியாக உள்ளது.

'நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.

 மார்க்க அறிவை பெறுவது முஸ்லிம்களுக்கு கடமையாக உள்ளது. இதனை 'மதரசா'க்களில் சொல்லிக் கொடுக்கின்றனர். ஆனால் அங்கு உலக கல்வியை கற்றுக்  கொடுப்பதில் குறைவு இருப்பதனைக் காண்கிறோம் . உலகில் ஏற்படும் மாற்றத்திற்கு தகுந்ததுபோல் அங்கும் மற்ற கல்வியையும் இணைப்பது  சிறப்பாக இருக்கும் .இதனை மார்க்க அறிஞர்கள்  ஊக்குவிக்க வேண்டும்.
'ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

நாயகத்திற்கு பின்பு இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள் பல நாடுகளில்  தழைத்தோங்கியது
துனிஸ் அல் சய்டுனாஹ்(Al-Zaytunah in Tunis) , மற்றும் கெய்ரோவில் அல் அஹர்Al-(Azhar in Cairo ) மேற்பட்ட 1,000 ஆண்டுகளுக்கு முன்  உலகின் பழமையான  பல்கலைக்கழகங்கள் உள்ளன.
 உண்மையில், போன்றே  போலோக்னா, ஹைடல்பெர்க், மற்றும் சோர்போனில் (Bologna, Heidelberg, and the Sorbonne)முதல் ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன . அல் அஹர் பல்கலைக்கழகம் உருவானது .நன்கு கல்வி கற்று பட்டம் கொடுக்கும்போது   தொப்பி மற்றும் அதற்கென தனி  அங்கி கூட அணியவைத்து சிறப்பிக்கும் முறை முதலில் அல் -Azhar  பல்கலைக்கழகத்தில் (Even the familiar academic cap and gown originated at Al-Azhar University.) உண்டானது Aftab Malik at al-Azhar University in Cairo Nuha Najem, Lecturer at Al-Azhar University's testimonial

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails