Monday, June 25, 2012

பெண்கள் ஏன் அழுகின்றனர்

Picture source


பெண்கள் ஏன் அழுகின்றனர்


கவலை  கவ்வியதாலும்  அல்லது  நினைத்த  காரியம் சாதிக்க வேண்டியும்  இருக்கலாம்

உண்மையிலேயே அழுகின்றார்களா அல்லது அழுவதுபோல் பாவனை செய்கின்றார்களா!

அழுதால் தன மீது பரிதாபப் பட்டு தன மீது கணவனுக்கு இறக்கம் வர தன்னை அமைதிப்படுத்த வருவதனை விரும்புகின்றார்களா!

தன பிறந்த இடத்தினை அதிகமாக நேசிக்க புகுந்த இடம் பிடிக்காததினால் அழுகின்றார்களா!

தன்மீது யாரும் கருணைக் காட்டவில்லையே என்ற ஆதங்கம் அவர்களை அழும் நிலைக்கு தள்ளி விட்டதா

அனைத்து வேலையும் தானே செய்யும் நிலை இருந்தும் ஒருவரும் பாசம் காட்டாமல் நிந்திக்கின்றார்களே என்ற நினைப்பு அவர்களை அழச் செய்துவிட்டதா

ஆண்களைவிட பெண்கள் உணர்ச்சி மிக்கவர்கள் அதனால் அவர்களை அறியாமல் அழுகை வந்துவிடுகின்றதா?

தான் எதிபார்த்த வாழ்வு கிடைக்க வில்லையே என நினைத்து அழுகிறார்களா.

தான் பாசம் காட்டி அன்போடு வளர்த்த பிள்ளைகள் அவர்கள் மனைவி வந்த பின் நம்மை மத்க்கவில்லையே என்பதனை நினைத்து அழுகின்றார்களா மகன் தன்னிடம் அன்பாக பேச மாட்டானா என்ற ஏக்கமா

"தாயின் காலடியில் சுவனம் இருக்கிறது" - நபி மொழி

  இதனை கிளிக் செய்து படியுங்கள்    அன்னையின் மடல்

அழுதால்தான் தான் விரும்பியது கிடைக்கும் என்ற நோக்கத்தோடு அழுகின்றார்களா

தாழ்வு மனப்பான்மை மிகுந்ததால் அழுகை அவர்களை அறியாமல் வந்து விடுகின்றதா.

தன்மீது அபாண்டமாக அவதூறு சொல்வதால் மனம் வேதனையடைந்து அழுகின்றார்களா

"எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு".

-திருக்குர்ஆன் 24:23

தொட்டால் சிலுங்கி செடிபோல் எத்தனை தடவை தொட்டாலும் உணர்ச்சி மிகைவதால்  அழுகையும் வந்து விடுகின்றதா

பத்துமாதம் வயிறில் குழந்தையை மகிழ்வாக சுமந்ததால் அப்பொழுது வரும் உடல் வேதனை அனைத்தையும் தாங்கிக் கொண்டதால் குழந்தை பெற்ற பின்பு அந்த இனிய சுமை போய்  வீட்டின் சுமை தாங்கமுடியாமல் அழுகின்றார்களா .

நாம்   பெண்கள் அழுவதற்கு பல காரணங்களை சொல்லிக்  கொண்டே போகலாம் இவைகள் அனைத்தும் உண்மையாகவும் இருக்கலாம், ஆனால் அவர்கள் அழுவதை நிறுத்துவதற்கு மனதை   கட்டுப்படுத்தினால் வீடே முன இருந்த அமைதி போய்  சோகம் நிரம்பிவிடும், பெண்கள் அழுது அதன் காரணத்தினை சொல்லி நாம் அவர்களை ஆறுதல் வார்த்தை சொல்ல முற்படும்போது அவர்கள் மனத்தில் உண்டாகும் அமைதியால் அவர்களது முகத்தில் தோன்றும் புன்னகை நமக்கு எல்லையில்லா  மகிழ்வைத் தரும், குடும்பம் என்பது இரண்டும் கலந்ததுதான். ஆண்கள் அழுவதனை அடக்குவதால் அது வெறித்தனமாக ஒரு நேரத்தில் வெளிப்படும், அவர்கள் மனதில் பெண்களைவிட கபடத் தன்மை அதிகம், அது அவன் மனதில் உள்ள கோபத்தின் தாபத்தை அதன்  உண்மையை உடனே வெளிபடுத்தாது, காரியம் ஆகும்வரை அனைத்துவகை செயல்பாட்டிலும் ஈடுபடுவான். காரியம் முடிந்த பின்பு தனது வாக்குறிதியை காற்றில் பறக்க விட்டு  விடுவான் . அது பெண்களிடம் இல்லை. நம்புவார்கள்,நம்பியது கிடைக்காமல் போக அதனை மனதில் அடக்கி வைத்திருந்து பின்பு  அது கண்ணீர் மழையாக கொட்டி அடங்கும் , பாவம்! அவர்களை அழவாவது விடுங்கள், அந்த உரிமையாவது அவர்களுக்கு கிடைத்துவிட்டுப் போகட்டும்.

"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்"
- நபி (ஸல்)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்

 பெண்கள் மிகவும் உணர்சிவசப்பட்டவர்கள்  .அவர்களது ஹார்மோன்ஸ் அவர்களுக்கு அவ்விதம் இறைவனால் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் உணர்வுகளை உடனே  வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருப்பினும் அது அவர்கள் மனதில் தேக்கி வைக்கப்படுவதால் அது மேலோங்கும்போது அழுகையாக வந்துவிடுகின்றது. இதேநிலை கணவன் மனைவி உறவுக்குள்ளும் இருக்கின்றது.அவளது மனதில் இருக்கும் ஆசையை வெளிக்காட்டமாட்டாள். அதற்கும் கணவனது தூண்டுதல்  அவசியமாகின்றது'

 பெண்களை அழ வைத்து வேடிக்கைப் பார்க்கும் உலகில் அவளது உள்ளத்தின் அழகினை நேசிக்கத் தெரியாமல் இருப்பது கொடுமை. பெண்ணின் அழகு அவள் கண்களில் இல்லை அவள் உள்ளத்தில் இருக்கின்றது.பெண்ணின் கண்கள் அவளது மனதின் திறவுகோல். அவளது மனதை நேசிக்கத் தெரிந்துக் கொள்ளுங்கள் .யாரும் எக்காலத்திலும் எந்த பெண்ணும் அழுவதற்கு காரணமாகிவிடாதீர்கள் .
அன்புடன், மகம்மது அலி,  

 இதனை கிளிக் செய்து படியுங்கள்    பெண்கள் ஏன் அழுகின்றனர் ? ஒரு அதிரடி சர்வே

Women more prone to emotional stress than men 'because of ...

Emotional Wiring Different in Men and Women | LiveScience

Why do women cry? Some good hints to understand inside world of woman. well...just nice words about woman and her creation.
 The beauty of a woman is not in the clothes she wears, the beauty of her face, or the way she combs her hair. The beauty of a woman must be seen in her eyes, because that is the doorway to her heart – the place where love resides.

2 comments:

NKS.ஹாஜா மைதீன் said...

சலாம் அய்யா...

பெண்களின் அழுகைக்கு இத்தனை காரணங்கள் இருக்க முடியுமா என சிந்திக்க வைத்திவிட்டீர்கள்...

mohamedali jinnah said...

சகோதரர் ஹாஜா அவர்கள் சிரிக்க வைத்து (நகைச்சுவையோடு கட்டுரை கொடுத்து) சிந்திக்க வைக்கின்றார், அவரது வீட்டில் அனைவரும் மகிழ்வாக இருப்பார்கள்