Tuesday, June 19, 2012

ஆசை

பற்றற்றத் துறவியும்
பற்றறுக்கப் பிறக்கும்
ஈரெழுத்து மந்திரம்
ஈர்த்திடும் தந்திரம்

தன்னம்பிக்கை மரத்தின்
தகர்க்கவியலாத ஆணிவேர்

வாழ்க்கை வணிகத்தின்
வட்டியில்லா முதலீடு

தாம்பத்திய இசையில்
தார்மீகச் சுருதி

அளவுக்கு மிஞ்சினால்
அஃதே நஞ்சாகும்
அளவோடிருந்தால்
ஆசையுன்னிடம் தஞ்சமாகும்

கடவுள் பக்திக்கும் ஆசை
காதலைச் சொல்லிடும் ஆசை
படிப்பின் பிடிப்பிலும் ஆசை
பணத்தின் தேடலும் ஆசை

ஆசையின்றி அகிலமும் அசையாது
ஆசைப்படுதல் ஆக்கத்தின் விசையாகும்

“கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்,



ஆசை
ஒரு பக்கம் தனிமை வேணும்கிறார்  
ஒரு பக்கம் ஆசை வேணும்கிறார்

ஒன்னுமே புரியலையே....இப்பவே கண்ணைக் கட்டுதே.......


ஆசையே துன்பத்திற்குக் காரணம்
(அதிக) ஆசையே துன்பத்திற்குக் காரணம்
அது அனைவரின் மண்டையில் ஏறணும்

வசனத்தைப் பாருங்க..... என்ன அருமை இன்னிக்குத் தான் வௌங்குச்சு இதன் பெருமை

எனக்கு வௌங்குனது. 

யாருக்கு அல்லாஹ் அதிகமாத்தர்ரானோ அவனுக்கு பேராசை இருக்குங்கறான்

யாருக்கு அல்லாஹ் குறைவாத்தர்ரானோ அவனுக்கு போதுமென்ற மனசு இருக்குங்கறான்

ஆஹா என்ன அருமை.

அவன் அடியார்களின் தன்மையை அறிஞ்சு  தர்ரானாம்.
( முதுவையார் வலைத்தளப் பதிவு)
With best regards
Kamal

No comments: