Showing posts with label குடும்பம். Show all posts
Showing posts with label குடும்பம். Show all posts

Wednesday, July 9, 2014

இந்திரா கிளப்பிய விவாத சுனாமி


மனசுக்குள் பெருமையும் சந்தோஷமும் வண்ணத்து பூச்சிகளாக சிறகடித்து பறந்தன.

இப்படி பரவசப்பட்டு நீண்டநாள் ஆயிற்று. வீட்டுக்குள் திரும்பி காரை நிறுத்தும்போது வாட்சை பார்த்தாள். மணி 10. நள்ளிரவுக்கு முன் வீடு திரும்பியது கடைசியாக எப்போது என்று நினைவுக்கு வரவில்லை. ’அம்மா ஆச்சரியப்படுவாள்’ என்று நினைத்தவாறு இறங்கியவள் பார்வை முன்கதவை நோக்கி வளைந்து செல்லும் படிக்கட்டில் ஏறியது.
அம்மா நின்றிருந்தாள். குபுக்கென்று பொங்கி வழிந்தது உற்சாகம்.

Saturday, February 15, 2014

குடும்பம் மகிழ்வாய் இருக்க


மனைவி  மீது  மென்மையான புரிதல் மற்றும்  நட்பு இருக்க வேண்டும் .

பண்பட்ட, மென்மையான முறையில் இனிய வார்த்தைகளைக் கொண்டு    மனைவியுடன் பேச வேண்டும் .

மனைவி  சோகமாக கவலையாக  இருக்கும்  போது அவளது கவலையை நீக்க முயற்சிக்க மனைவியுடன் நேசம் காட்ட வேண்டும்.   இரக்கம் கொண்டு அவளை சந்தோஷப்படுத்த  வேண்டும் .  சிறந்த நண்பராக  மனிவியின்  பிரச்சனைகளை தீர்க்க  மனைவிக்கு  ஆதரவாக  இருக்க வேண்டும் .

 குழந்தைகள் கல்வி கற்க அவளுக்கு உதவ வேண்டும் .
மனைவி செய்த தவறுகள் பற்றி முரட்டுத்தனமாக கோபம் கொண்டு வார்த்தைகளை அள்ளி வீசக் கூடாது.   அவளுக்கு  அமைதியாக சிகிச்சை செய்வது போல் செயல்பட வேண்டும். 

அவள்  கோபப் படும்போது  அமைதியாக இருக்க வேண்டும் .
நாம் தவறு செய்திருந்தால்  மன்னிப்பு கேட்க வேண்டும் . மனைவியிடம் மன்னிப்பு கேட்பதை மரியாதை குறைவாக கருதக் கூடாது. அன்பை அதிகப் படுத்துவது ஒரு உயர்ந்த செயல்தான் .அது ஒரு  பாக்கியமாகும் .
 " என் கணவர்  யாரையும் விட என்னை நேசிக்கிறார் . " என்று சொல்லும்படி ,நினைக்கும்படி வாழ்வது உயர்வானதே

Tuesday, January 7, 2014

அயலக வாழ்வும்... அண்டை வீடும்...

1.  எல்லோரையும் போல் நாமும் இருக்க வேண்டும் வசதி வாய்ப்புகளை பெருக்கி கொள்ள வேண்டும் என்ற நோக்கம் ஒருவகை...

2. பெரும்பாலும் அந்த ஊர் காரர்கள் வெளிநாட்டு பொழைப்பையே  நம்பி இருப்பதாலும் நாமும் போவோமே என்ற ஆசையும் ஓர் காரணம்.

3. உள்நாட்டில் அதிக வருமானம் கிடைக்க வேண்டும் என்றால் ஒன்று நன்றாக படித்து இருக்கவேண்டும் அல்லது சொந்தமாய் வியாபாரம் செய்யவேண்டும் வியாபாரம் செய்ய பணம் வேண்டும் படிப்பும் பணமும் குறைவிருந்தால் வெளிநாட்டிற்கு சென்றால்தான் அதிக பொருள் ஈட்ட முடியும் அதுவும் ஓர் காரணம்.
  
இப்படி பல  காரணங்களால் அயலகத்தில் பணிபுரிய செல்கிறார்கள் அதுபோல் பணிபுரிய சென்றவரில் ஒருவர் பற்றி இங்கே பார்ப்போம்...        
அவர் ஓரளவிற்கு படித்தவர்தான் சொந்தமாய் அவரின் தகப்பனார் செய்த தொழிலை இவர் இப்பொழுது கவனித்து வருகிறார் ஆரம்பகாலத்தில் இருந்த வியாபாரம் இப்பொழுது இல்லை கால மாற்றத்திற்கு ஏற்றாற்போல் தொழிலை மேம்படுத்தாமல் விட்டது இன்று தொழிலில் சற்று பின்னடைவு பொறுப்பேற்றக்கொண்ட மகன் மனதைரியத்தோடு முழு ஈடுபாட்டோடு சற்று சிரமம் பார்க்காது உழைத்திருந்தால் வெற்றி பெற்று இருக்க முடியும். படிப்பே இல்லாத பக்கத்துவீட்டுக்காரன் அமெரிக்கா சென்று பணத்தை வாரி வழங்குகிறான் தமது மனைவிக்கும் தாய்க்கும் சகோதரிகளுக்கும் சொல்லவாவேனும் !?

Wednesday, January 1, 2014

குடும்ப வாழ்க்கை ரகசியங்கள் - 3


மரியாதை கலந்த அங்கீகாரம்

மரியாதை என்றதும் பதற வேண்டாம். மரியாதை என்பதற்கு சமூகம் ஏகப்பட்ட அர்த்தங்களை வைத்திருக்கிறது. சிலருக்கு சாஷ்டாங்கமாய்க் காலில் விழுவது தான் மரியாதை. சிலருக்கு ஒரு சின்னப் புன்னகை கூட மரியாதை தான். சிலருக்கு வார்த்தைகள், சிலருக்கு வணக்கம், சிலருக்கு சின்னச் சின்ன செயல்களின் வெளிப்பாடுகள். மரியாதை என்பது மனித இனத்தின் தனித் தன்மை. அது கணவன் மனைவியரிடேயும் இருக்க வேண்டியது முக்கியம்.

Wednesday, October 23, 2013

வாழ்வின் பெரும் கல்வெட்டுகளில் சில வரிகளையாவது ஆழப்பதிக்க வேண்டும் !

பிறந்தநாள் கொண்டாடும் வழக்கம் கொண்டவன் அல்ல நான்.

என் பிறந்ததினம் என்பது ஆவணங்களில் புழங்கப்படும் எண்கள் மட்டுமே.

வறுமை நெரித்த பால்யத்தில்
ஏன்தான் பிறந்தோமோ என்று வருந்தியதுணடு.

பின்பு 90களில் எழுத ஆரம்பித்தபோது பேனா நண்பர்கள் பலரும்
பிறந்ததேதி பகிர்ந்து வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டதுண்டு

இடையில் வாழ்வின் மேடுபள்ளங்களில் எல்லாம் மறைந்துபோயின

Monday, June 18, 2012

குழந்தைகளைப் பாதுகாப்போம் !


ஒரு காலத்தில் ஒரு டஜன் பிள்ளைகளைப் பெற்று ஒரு கவலையும் இல்லாமல் நமது முன்னோர்கள் வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைக்கு ஒன்றோ இரண்டோ குழந்தைகளை வைத்துக் கொண்டு நமது பெற்றோர்கள் படும் பாடு சொல்லி மாளாது ! காரணம் சமூகத்தில் நிலவுகின்ற அச்சுறுத்தும் நிகழ்வுகள்.

“ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்” என்பதெல்லாம் பழைய மொழிகளாகிவிட்டன. இன்று பிள்ளைகளெல்லாம் கிரில் கேட்டுகளுக்கு உள்ளே கிரிமினல்களைப் போல அடைபட்டுக் கிடக்க வேண்டிய சூழல்.

குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக நிகழும் தொந்தரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்தகைய அச்சுறுத்தல்களிடமிருந்து அவர்களைப் பாதுகாக்க பெற்றோர் அதிக விழிப்புடன் இருக்க வேண்டியிருக்கிறது ! குழந்தைகளின் உடல் நலம் குறித்த பாதுகாப்பு உணர்வுகள் இன்னொரு பக்கம் பெற்றோர் முன்னால் வந்து நிற்கின்றன.

வீட்டுக்கு உள்ளேயும், வீட்டுக்கு வெளியேயும் குழந்தைகளுக்கு ஆபத்துகள் காத்திருக்கின்றன. அது  மனிதர்கள், விலங்குகள், அஃறிணைகள் என எந்த வடிவத்திலும் வரலாம் ! குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி ?

Wednesday, May 2, 2012

அம்மாவின் ஆற்றாமையும் அவரது அவசியமான பொய்யும்!

அன்பு மகனே உன் வருகைக்காக வழிமேல் விழி  வைத்து காத்திருந்தேன். என் மகன் பெரிய படிப்பு படித்து வேலையில் சேர்ந்து ஒரு மாதம் முடிந்து முதல் சம்பளம் இன்று வாங்கி வருவான் அதில் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ந்து இறைவனைத் தொழுது அந்த தொகையில் ஒரு பங்கை தர்மம் செய்வதோடு உறவினருக்கும் கொடுத்து ,மற்றொரு பங்கை உனது மேல்  படிப்புக்காக வாங்கிய கடனில் சிறிது கொடுத்து மீதி உள்ளதனில் சிறிது மாத செலவுக்கு சேமிப்பதோடு   மகிழ்வுடன்  நாங்களும் வெகு நாட்களுக்குப் பிறகு  நல்ல உணவு சமைத்து சாப்பிடலாம் என்ற நினைவோடு இருந்தேன் . நான் நினைத்ததை மற்றவர்களிடமும் சொல்லி மகிழ்ந்தேன்.
  பலமணி நேரங்கள் நானும் குடும்பத்தில் உள்ள அனைவரும் காத்திருந்தோம். மாலை நேரம் முடிந்தது. இரவு நேரமும் வந்தது. நீ வந்த பின்புதான் அனைவரும் சேர்ந்து உணவு அருந்தும்  முடிவுடன் இருந்தோம். நேரம் கடந்துக் கொண்டே இருந்தது . ஒவ்வொருவராக அயர்ந்து போய் உண்ணாமலேயே இருந்த இடத்திலேயே அமர்ந்தவாறே தூங்க ஆரம்பித்து விட்டனர்.
நான் மட்டும் உறங்காமல் உன் நலம் நாடி இறைவன் பெயரைச் சொல்லி ஓதிக் கொண்டிருந்தமையால் நடுநிசியில் நீ வந்து வாசற் கதவை தட்டும்போது மலர்ந்த முகத்துடன் உன்னை வரவேற்றேன். 'ஏன் இவ்வளவு நேரம்! உன் வருகைக்காக எல்லோரும் காத்திருக்கிறார்களே நேரத்திற்கே வீடு வந்திருக்கலாமே' என்றேன்!   'அம்மா நான் வருவதாகத்தான் இருந்தேன் ஆனால் என்னோடு  வேலை செய்யும்  நண்பர்கள் என்னை அவர்களுக்கு முதல் சம்பளத்தில் ஒரு விருந்து கொடு என்று பெரிய நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்து சென்று விட்டாரர்கள். நான் வாங்கிய சம்பளத்தில் பாதி செலவழிந்து விட்டது' என்றான்.
 நான் போட்ட திட்டங்கள் நிறைவேறாமல் போனதே என்ற  ஆற்றாமை மனதில் இடியாகத் தாக்கினாலும் அதனை வெளியே காட்டிக் கொள்ளாமல் 'நீ இதனை சொல்ல வேண்டாம் மாதக் கடைசியானதால் விடுபட்ட வேலைகளை முடிக்க நேரமாகிவிட்டது மற்றும் பாதி சம்பளம்தான் தந்தார்கள் மீதியை அடுத்த மாதம் தருவதாக சொல்லியுள்ளார்கள்'  என்று சொல்லிவிடு என்றேன்.
 பெற்ற மனது மகனுக்காக பொய் சொல்ல சொல்லிக் கொடுத்தது.
 தவறான காரியம் நிகழாமல் தடுக்கவும், நல்லவரைக் காப்பாற்றவும் மற்றவருக்குள் சமாதானத்தினை உருவாக்கும்  எண்ணத்தோடும் அதனால் ஒரு நல்ல காரியம் நிகழுமென்றால் பொய் சொல்லலாம். குடும்பத்திற்குள் ஒரு கவலை வராமல் இருக்க குடும்பத்தில் உள்ளோர் மகிழ்வுக்காக தாய் தனது மகனுக்காக சொல்லிய பொய்யை இறைவன் மன்னித்தருள்வான். அவன் மிக்க கருணையுள்ளவன்.

Sunday, May 15, 2011

நீடூர் ஜாமிஆ மஸ்ஜிதில் மன்சூர் அலி சொற்பொழிவு

 இன்று உலகெங்கிலும் – கல்வியாளர்களாலும், தொழில் முனைவோர்களாலும், இன்னும் பல சிந்தனையாளர்களாலும் அதிகம் பேசப்படுகின்ற ஒரு துறையே – “மனித வள மேம்பாடு” என்பது (Human Resource Development).
ஓவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் புதைந்து கிடக்கின்ற அனைத்துத் திறமைகளையும்….. கண்டுணர்ந்து, அவைகளை முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பெரிதும் உதவி செய்திடும் துறை தான் – மனித வள மேம்பாடு ஆகும். தனி மனித வாழ்விலும், குடும்ப வாழ்விலும், தொழில் துறைகளிலும், பணியிடங்களிலும் ஒரு மனிதன் முழு வெற்றி அடைவதற்கு இந்தத் துறை பெரிதும் உதவி செய்கிறது.
“மனிதர்கள் சுரங்கங்கள்! – தங்கத்தைப் போல! வெள்ளியைப் போல!” – என்றார்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.
சுரங்கங்களில் மறைந்து கிடக்கின்ற விலை மதிக்க முடியாத கனிமங்களைப் போலவே, ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் “உள்ளாற்றல்கள் – மனித வளங்கள் – மறைந்து கிடக்கின்றன!
சுரங்கங்களின் தாதுப் பொருட்களிலிருந்து “தங்கத்தை” வெளிக் கொணர்வது போன்று தான் மனித வளங்களும் கண்டுபிடிக்கப் பட்டு மெருகேற்றப் பட வேண்டும்.
   அப்படிச் செய்திடும் போது தான் – மனிதன் – தான் யார் என்பதை உணர்ந்து கொள்கிறான். அப்போது தான் அவனுக்கு தன்னம்பிக்கை (Self Confidence) ஏற்படுகின்றது. அவனே வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றான்.