Showing posts with label கலை. Show all posts
Showing posts with label கலை. Show all posts

Wednesday, November 21, 2012

இதுதான் கொலை உலகம் !

ஆயுதங்கள் விற்பனைக்கு பல நாடுகள் போட்டி !
இதுதான் கொலை உலகம் !
நாம் கலை  வளர்த்தோம் என்று பெருமை பேசுவோம் . மக்கள் தொண்டே எங்கள் கொள்கை என மார்தட் டிக்கொள்வோம்   . ஆனால் நடப்பது என்ன ?  பதவி வெறி, பண மோகம், மண் ஆசை ஜாதி,இன வெறி மற்றும் பல தோற்றங்களில் வரும் கொலை வெறி  இது தொடர்ந்து வருகின்றது  . இது இந்த நாகரிக உலகத்திலும் பாதிக்க படும் அவல நிலை . எத்தனை புகழ் வாழ்ந்த தலைவர்கள்  கொலை செய்யப்பட்டனர். மனிதன் நல்லவன் மக்கள் கொடியோர் என்பர். தனி மனிதன் அல்லது மக்கள் கொடியோர் அல்ல . இவர்களால் தூண்டப்பட்ட ஆசைதான் மிகவும் கொடிய சக்தி . ஒரு தலைவன் வீழ்த்தப் பட்டால் அதன் விளைவால் வீழ்ந்த தலைகளும் நாடும் அதிகம் . இது காலம் தொட்டு நடந்து வரும் கொடுமை .இதன் விளைவால் சில சரித்திர புகழ் பெற்ற,  மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட மாமனிதர்களை நாம் பாப்போம் . இவர்கள் நினவு நம் மனதில் காலமெல்லாம் இருந்துக்கொண்டே இருக்கும்.
மஹாத்மா காந்தி அன்பு வழியில், அகிம்சை வழியில் இந்திய நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த தேசத் தந்தை
ஆபிரகாம்  லின்கன் -அமரிக்காவின்   16 ஜனாதிபதி (ப்ரெசிடென்ட் 1861 முதல்  ஏப்ரல் 1865.வரை.அடிமை முறையை ஒழிக்க அயராது பாடுபட்டவர் .

Monday, June 25, 2012

கலைகளை கண்டு களிப்பது ஒரு கலை!

 இறைவனால் அருளப்பட்ட  அனைத்துமே அழகு. இயற்கையின் அழகைக் கண்டு மகிழ்வதில் மனம் அமைதி அடைவதுண்டு. கலையை ரசித்துப் பார்பதிலும் ஒவ்வொருவருக்கும் ஒரு வேறுபாடு ஏற்படுவதும் இயல்பு. ஒருவருக்கு பிடித்தது ஒருவருக்கு பிடிக்காமல் போகலாம்.ஆனால் அந்த கலை உருவாக்கப் பட்டதே ஒரு மகிமைதான். இறைவன் மனிதனுக்கும் ஒரு திறமையைக் கொடுத்து ஒரு கலையை உருவாக்கக் கூடிய ஆட்றலை
தந்துள்ளான். கலை என்பது ஒரு சிலையை வடிப்பது மட்டுமல்ல. அது அழகிய ஓவியமாகவோ,கவிதையாகவோ,கட்டிடமாகவோ மற்றும் பல வகைகளில் இருக்கலாம். அந்த அற்புத கலை படைப்புகள் பல கால ஓட்டத்தில் பல காரணங்களுக்காக சிதைந்துவிட்டதனயும் நாம் அறிகின்றோம். அது இயற்கையால் ஏற்பட்டதாக அல்லது மனிதனால் உண்டாக்கப்பட்ட போர், அரசியல், மத நோக்கங்கள் மற்ற பல காரணங்களும் இருக்கின்றன. உருவாக்குவது கடினம் அழிப்பது எளிமை.
எப்பொழுதும்  ஒரு கலை ஒரு  கலாச்சார பாரம்பரியங்களை விளக்கக் கூடியதாகவும் ஒரு சரித்திர காலத்தினை நமக்கு அறிவிப்பதாகவும் அமையலாம். இழந்தவைகளை   மீட்பதில் பெரு முயற்சி எடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் தாஜ்மகால்,மொகஞ்சதார மற்றும் அஜந்தா ஓவியங்கள் சிலைகள் ,மகாபலிபுரத்தில் காணப்படும்  கருங்கல் சிற்பம், மதுரை மீனாதி  மீனாட்சி அம்மன் கோவில் இன்னும் பல உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு கலாச்சார பாரம்பரியங்களை விளக்கக் கூடியதாக அமைந்துள்ளன.

 கீழ் உள்ள படங்கள்  பாரிசில் எடுத்த  படங்கள்


Monday, March 19, 2012

கலை,ஓவியம்,கவிதை வீடியோ.Art Project

வாழ்நாள் சிறிது ! வளர்கலை பெரிது!! 'தமிழில் கலை என்பதற்கு கற்றற்கு உரியவை எல்லாம் கலை  என்ற பொது வரையறையாற் தரப்படுகிறது'.கிடைத்த வாழ்வை பயனுள்ளதாய் செலவிடவேண்டும் . நம்மால் சாதனை செய்யமுடியவில்லை  என்ற எண்ணம்  மனதில் தோன்றும்பொழுது மற்றவர்கள் செய்த சாதனைகளைப் பார்க்கும் நம் மனதில்  நம்மை அறியாமலேயே ஒரு ஆர்வம் நம்மை தூண்டிவிடும். உலகத்தினை முடிந்தவரை உங்களால் முடிந்தால் பார்க்க முயலுங்கள் .அது வேடிகைக்காவும் கேளிக்கைக்காகவும் இருந்துவிடாமல் நம் அறிவை வளர்த்துக் கொள்வதற்காகவும் இருப்பது மிகவும் அவசியம் சீன தேசம் சென்றாயினும் சீர் கல்வியைத் தேடு என்பது நபிமொழி.
செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. அதனால் நம்  எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும்
அவசியம்.மகிழ்வான வாழ்வு ஆரோகியத்தின் அடித்தளம். அப்படி நாம் பெற்ற அறிவினை மகிழ்வினை அடுத்தவரிடம் பகிர்ந்துக் கொள்ளும்பொழுது நமக்குள் ஓர் மகிழ்வு வருவதனை நாம் அறிவோம்.


Wednesday, July 20, 2011

முத்தம் கொடுப்பது கலை..அதில் பல வகை

முத்தம் கொடுப்பது கலை..அதில் பல வகை. கொடுப்பதை விட வாங்குவது ரொம்ப கடினம். முதல் கோணல் முற்றிலும் கோணல் .முதல் முத்தமே செயற்கையானால் அடுத்த முத்தம் வர வழியில்லை. இயல்போடு மனதுடன் ஒன்றிய முத்தம் மன மகிழ்வினைத் தந்து உறவை வளர்க்கும். அது அழகைக்  கூட்டி ஆயுளை அதிகமாக்கும்.

முதல் முத்தம் மறக்க அடுத்த முத்தம் தொடரும் .ஒரே முத்தம் முழுமையாகிவிடாது முத்தத்தைப் பொறுத்தவரை . தொடர, தொடர தெவிட்டாதது முத்தம்தான்.அது மனதோடு தொடர்புடையதால் எண்ணங்கள் மாற சுவையும் மாறும். முத்தம் கொடுக்கப்பட்டவரின் உறவுடனும், இடத்தினையும் பொருத்து சுவையும், உணர்ச்சித் தூண்டுதலும்  மாறுபடும்.     

   முத்தம் கொடுக்கப்படுவதற்கு முன் கொடுக்கப்படுவரின் மனதில் இடம் பிடித்துக் கொள்வது நல்லது. இல்லையெனில் அது மறுக்கப்படும். முத்தம் கேட்டுப் பெறுவதல்ல. கடையில் விற்கப் படும் பொருளாகாது.அன்பு, பாசம், நேசம் போன்ற வற்றை வெளிப்படுத்தவதற்கும், ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதற்கும்  கிடைக்கும் மாமருந்து.முதல் முத்தம் அது அம்மா  தந்த முத்தம். அது பாசத்தில் கலந்த முத்தம்.அம்மாதான் நமக்கு  முத்தம் கொடுக்க சொல்லிக் கொடுத்தாள். முதலென்றால் கடைசி ..அதனை ஆண்டவன்தான் அறிவான்.  "எதிர்பாராத முத்தம்" இனிய நினைவு தரலாம். முத்தம் கொடுக்காதவர்களும் கொடுக்கப் படாதவர்களும் உலகிலில்லை.
  ஆண்களாகிய நீங்கள் மிருகங்களைப் போல் நடந்து (தாம்பத்ய உறவு) கொள்ளாதீர்கள் .(உறவுக்கு முன் )தூது அனுப்புங்கள்,அதன் பிறகு தாம்பத்ய உறவு கொள்ளுங்கள்  என்று நபி (ஸல்)கூ றியபோது,  தூது என்றால் என்ன?என்று நபித் தோழர்கள்  கேட்டார்கள். அது முத்தங்களைப்  பகிர்ந்துக் கொள்வதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.தாம்பத்ய உறவுக்காக மட்டும் இன்றி, சாதாரணமாகவும் மனைவியரை முத்தமிடுவது நபிகளாரின் நடைமுறை.   
       குழந்தைக்கு(முகத்தில் பல இடங்களில்)முத்தம் கொடுத்துப்  பாருங்கள்.
 ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து நீங்கள் சிறு குழந்தைகளை முத்தம் இடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தம் இடுவது இல்லை என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உமது உள்ளத்தில் இருந்து அன்பை கழற்றி விட்ட பின் உமக்காக நான் என்ன செய்ய முடியும்? என்று கேட்டார்கள்.மேற்கண்ட நபிமொழி குழந்தைகளை, சிறுவர்களை முத்தமிட வேண்டும் என்றும், முத்தம் இடுவது அன்பின் வெளிப்பாடு என்றும், முத்தம் இடாதவன் உள்ளத்தில் அன்பு இல்லை என்றும் தெளிவாகிறது.
 மகிழ்வின் வேறுபாடுகளை முகத்தில் காண முடியும். அகத்தின் அழகு  முகத்தில்.
  துர்நாற்றம்  மூலம் பிறருக்கு சிரமம் ஏற்படுத்துவது கூடாது.
எத்தனையோ பேருக்கு துர்நாற்றம் பிடிக்காது.  கணவன் வாயிலிருந்து அவை வந்தாலும் அது மனைவிக்கு துர்நாற்றமே. இதே துர்நாற்றத்துடன் மனைவியை முத்தமிட்டு கொஞ்சுவதோ, குழந்தைக்கு வாஞ்சையுடன் முத்தம் இடுவதோ… எப்படி சரியாகும்..?

 தம்பதியரிடையே முத்தம் கொடுத்தல்,அவர்களிடையே மன அழுத்தம் குறையும். தான் முத்தம் கொடுக்கவோ, தனக்கு முத்தம் கொடுக்கவோ யாரும் இல்லையே! என்ற சோகம் கொடுமையானது. தனித்து வாழ்பவன்  ஒன்று மிருகம் அல்லது துறவி (இந்த கால சாமியாரும் துறவியும் அல்ல )
படத்தினை அவசியம் இறுதி வரை பாருங்கள்