Showing posts with label முஸ்லிம். Show all posts
Showing posts with label முஸ்லிம். Show all posts

Wednesday, December 25, 2019

தமிழ் முஸ்லிம் கழகம் என்ற புதிய கழகம் உதயம்

‎Vavar F Habibullah‎  

தமிழ் முஸ்லிம் கழகம்

1.தமிழ் நாட்டில் பிறந்து,
வளர்ந்து முஸ்லிம்களாக
வாழும் தமிழ் இன
மக்களின் வாழ்வுரிமையை காப்பது

2.தமிழ் முஸ்லிம்கள், தற்போது
சந்தித்து வரும் நெருக்கடி மிக்க
சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு
அவர் தம் பிரச்னைகளை இலகுவாக
அணுக, தேர்ந்த நிபுணர்களைக்
கொண்டு சிறந்த பயிற்ச்சி அளிப்பது
மேலும், அவர்களது இயல்பான
பயம் களைய கவுன்சலிங்
அளிப்பது.

Tuesday, February 4, 2014

இருக்கும்போது ....

இருக்கும்போது ....

அவர் ஹிந்து
ஹிந்துவில் எந்த ஜாதி?
அது தெரியாது.
இறந்த பின் அவரை 'பிணம்' என்று
எல்லோரும் சொல்வார்கள்

இவர் கிறிஸ்தவர்
கிறிஸ்தவரில் எந்த பிரிவு
அது தெரியாது ஆனால் அவர்களுக்கு வழிகாட்டி யேசு கிறிஸ்து

கிறிஸ்தவரில் கதோலிக்கா, பிராஷ்டென்டா !
இதில் பல உட்பிரிவுளையும் திருச்சபைகளையும் கொண்டது. அங்கிலிக்கன், லூதரன்...

Tuesday, January 8, 2013

அனைத்தையும் அறிவேன்! அடுத்தவனை அறியேன்!

கல்யாணராமன் வேலைத் தேடி ஒரு அலுவலகத்திற்கு போகிறார். அங்கு பேட்டி காண்பவர்கள்  கேள்விக்கு மேல் கேள்வி கேட்கின்றனர். அங்கே கேட்ட கேள்வியும் கல்யாணராமன் சொன்ன பதிலும் மற்றும் அவருக்கு வேலைத் தருவதற்கு இறுதியாக கொடுத்த விவரமும் அறிய தொடர்ந்து படியுங்கள்!

உன் பெயர் ?
கல்யாணராமன்
உன் தந்தையின் பெயர்?
கல்யாணம்.
உன் தாயின்  பெயர்?
சீதா தேவி.
உன் பெயரில்  உன் தந்தை  பெயர் சேர்ந்துள்ளதே!
அது நாங்கள் தொடர்ந்து செய்வது.
ஏன் உங்கள் தாயின் பெயரை சேர்ப்பதில்லையா!
பழக்கமில்லை .பெண்ணாயிருந்தால் கணவன் பெயரில் சேர்த்துக் கொள்வார்கள்.
ஓகோ!  பெண்ணாயிருந்தால் பெயரில் கூட தனித்து நிற்க முடியாதோ!
அப்படியில்லை. இது தொடர்ந்து வரும் பழக்கம்.
நீ என்ன படித்திருக்கிறாய்? முன்  வேலைப் பார்த்த அனுபவம் உண்டா ?
நான் கணினி பொறியாளர்  படிப்பு படித்துள்ளேன். மதிப்பெண்களும் அதிகம் வாங்கி உள்ளேன் அனால் வேலைப் பார்த்த அனுபவமில்லை,

மற்ற அனுபவங்கள் மற்றும் பொது அறிவைப் பற்றி பேட்டி தொடர்கிறது..

Saturday, June 30, 2012

முஸ்லிம் உலகமும் மற்றும் சினிமாவும்

முஸ்லிம்களுக்கு  என்று ஒரு கொள்கையும் ஒரு கோட்பாடும் உள்ளது. சினிமா பார்ப்பது கூடாது என்பது  அதன் கொள்கை .அறிவைத் தேட இஸ்லாம் வற்புறுத்துகின்றது அது சீன தேசத்திலிருந்தாலும் நாம் சென்று கற்று வருவது நல்லது.சினிமா ஒரு மோசமான விளைவுகளை உண்டாக்குவது என்பது உண்மை. ஆனால் அது கல்வி கற்பதற்காக பார்க்க நேரிடும்போது அதனைப் பார்ப்பதில் தவறு இருப்பதாக முடிவுக்கு வந்து விடக் கூடாது.நவீன உலகில் அருமையான தொலக்காசிகள் கல்விக்காகவும் சிறப்பான படங்களைத் தருகின்றன.குறிப்பாக டிஸ்கவரி சேனல் போன்றவை  
இங்கு ஆங்கிலத்தில் பார்த்ததை தரப்பட்டுள்ளது. பாருங்கள்

Tuesday, June 12, 2012

இதுதான் இஸ்லாம், .

 இதுதான் இஸ்லாம்,
ஓர் இறைவன் ,ஒரே குர்ஆன் ,ஒரே கிப்லாஹ்,ஒரே உம்மாஹ்
ஒற்றுமை உயர்வு தரும் , பிரிவு வீழ்ச்சியை தழுவும்


One Creator. One Quran. One Qiblah. One Ummah.
United We Stand. Divided We Fall.


 இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்
 நம்பிக்கை (கலிமா)
"இறைவன் ஒருவனே. அவனே அல்லாஹ், முஹம்மது அவரது தூதர்." என மனதளவில் ஒவ்வொறு முஸ்லிமும் நம்பவேண்டும்

பிரார்த்தனை (தொழுகை)
ஒவ்வொரு முஸ்லிமும் தினமும் ஐந்து முறை தொழுகை நடத்த வேண்டும்.

நோன்பு
ஒவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாக ரமலான் மாதத்தில் பகல் வேளையில் உண்ணா நோன்பு இருக்க வேண்டும் (விதி விலக்கு உண்டு)
தானம் (ஜக்காத்)
ஒவ்வொரு முஸ்லிமும் ஆண்டுக்கு ஒருமுறை தனது மொத்த செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கை ஏழை எளியோருக்கு தானம் செய்ய வேண்டும்.( விதி விலக்கு உண்டு)

புனித பயணம் (ஹஜ்)
வசதி வாய்ப்பு படைத்த ஒவ்வொரு முஸ்லிமுக்கும், தனது வாழ்நாளில் ஒருமுறை புனித பயணம் (ஹஜ்) செய்ய வேண்டும்
(விதி விலக்கு உண்டு)



குர்ஆன் 
முஸ்லிம்களின் புனித நூல் ஆகும். முகம்மது நபிக்கு இறைவனால் அருளப்பட்டதாக குர்ஆன் நம்பப்படுகின்றது. மொத்தமாக அன்றி சிறுக சிறுக கால நேரத்திற்கு ஏற்ப குர்ஆன் அருளப்பட்டது. இது சூரா எனப்படும் 144 அத்தியாயங்களை கொண்டது. 

கிப்லா
உலகெங்கும் வாழும் இஸ்லாமியர் அனைவரும் சவுதி அரேபியா நாட்டின் மக்கா நகரில் உள்ள காபாவை முன்னோக்கி தொழுவார்கள்.


 உம்மாஹ்
 உம்மாஹ் ஒற்றுமைக்காக பாடுபடுதல் (Striving for Unity in Ummah).






ஓர் இறைவன் ,ஒரே குர்ஆன் ,ஒரே கிப்லாஹ்,ஒரே உம்மாஹ்
ஒற்றுமை உயர்வு தரும் , பிரிவு வீழ்ச்சியை தழுவும்


One Creator. One Quran. One Qiblah. One Ummah.
United We Stand. Divided We Fall.

Friday, April 27, 2012

அமெரிக்காவில் முஸ்லிம்- அமெரிக்கன் முஸ்லிம் அமெரிக்காவில் இஸ்லாம்


  அமெரிக்க முஸ்லிம்கள் - ஆய்வு தகவல்கள்

 

உங்கள் அன்றாட வாழ்வில் மார்க்கம் முக்கிய பங்கு வகிக்கின்றதா? 
இது, பிரபல காலப் (Gallup poll) நிறுவனத்தால் 2009-ஆம் வருடம் அமெரிக்க முஸ்லிம்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விகளுள் ஒன்று. 
இதற்கான பதில் -
ஆம் - 80%

முஸ்லிம் அமெரிக்கர்களில் பத்தில் எட்டு பேர் இஸ்லாம் தங்கள் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர்.   
காலப் நிறுவனத்தின் அமெரிக்க முஸ்லிம்கள் குறித்த இந்த ஆய்வறிக்கை கவனிக்கத்தக்க பல தகவல்களை நமக்கு தருகின்றது. அவற்றில் சில உங்கள் பார்வைக்காக....

1. இனப் பின்னணி: 

அமெரிக்க முஸ்லிம்கள் பல்வேறு இனப் பின்னணியை கொண்டவர்களாக இருக்கின்றனர். அமெரிக்காவில்,  ஒரு மார்க்கம் பலவித இன மக்களால் அதிகம் பின்பற்றபடுகிறதென்றால் (Most Racially Diverse Religious Group) அது இஸ்லாம் தான்.

அமெரிக்க முஸ்லிம்களில் 35% பேர் கறுப்பின மக்கள் (African Americans). இவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாத்தை தழுவியவர்கள் அல்லது தழுவியவர்களின் வாரிசுகள்.

28% அமெரிக்க முஸ்லிம்கள் தங்களை வெள்ளையர்கள் என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்.

அமெரிக்க முஸ்லிம்களில் ஐந்தில் ஒருவர் ஆசியர். சுமார் 18% அமெரிக்க முஸ்லிம்கள் தங்களை எந்தவொரு இனத்தோடும் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.

கடைசியாக, சுமார் 1% அமெரிக்க முஸ்லிம்கள் தங்களை ஹிஸ்பானிக் (Hispanic - Spanish speaking people/ஸ்பானிஷ் மொழி பேசும் மக்கள்) என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்..

2. தினசரி வாழ்வில் இஸ்லாம்:

முஸ்லிம்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாம் பெரும் பங்காற்றுகிறது. இதற்கு அமெரிக்க முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல.

சுமார் 80% அமெரிக்க முஸ்லிம்கள் தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர். இது அமெரிக்க சராசரியை விட 15% அதிகம்.


இன்னும் சற்று விரிவாக கூற வேண்டுமென்றால், அமெரிக்க முஸ்லிம்களில் பெண்கள் 82% பேரும், ஆண்கள் 78% பேரும் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.

இங்கு கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அமெரிக்க முஸ்லிம்களில் ஆண் பெண் என்று வித்தியாசம் இல்லாமல் இருபாலருடைய கருத்துக்களும் கிட்டத்தட்ட ஒன்றாகவே உள்ளன. ஆனால் அமெரிக்காவின் மற்ற மார்க்க மக்களை எடுத்துக்கொண்டால் வித்தியாசத்தை காணலாம்.

அதாவது, மற்ற மார்க்கங்களில், பெண்களுக்கும் ஆண்களுக்கும் இந்த கருத்தில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் உண்டு. உதாரணத்துக்கு, கத்தோலிக்கர்களை எடுத்துக்கொண்டால் 75% பெண்களும், 62% ஆண்களும் தங்கள் மதம் தங்களுடைய அன்றாட வாழ்வில் முக்கிய பங்காற்றுவதாக கூறியுள்ளனர்.

அமெரிக்க சராசரியை எடுத்துக்கொண்டால், 72% பெண்களும் 58% ஆண்களும் இதே கருத்தை கூறியுள்ளனர்.
 மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

Source : http://onlyoneummah.blogspot.in/2011/09/blog-post_10.html

Tuesday, February 28, 2012

மக்களுக்குள் மதப் போர்வையில் பிரிந்து நிற்பது ஏன்!


 மக்களுக்குள் மதப் போர்வையில் பிரிந்து நிற்பது ஏன்!

அரசியல் வாதிகளும் இனவெறி கொண்டவர்களும் நம்மை பிரிந்து இருக்க வைத்து தன்னுடைய ஆதாயத்தினை வளர்த்து வைக்க முயற்சிகின்றனர். இப்பொழுது இருக்கும் கல்வி  முறையும் இதனைச் சார்ந்ததாக இருக்க முயற்சி எடுக்கப் படுகின்றது .


 நான் இஸ்லாம் வழியை விரும்பியும் அறிந்தும்  பின்பற்றுபவன் .நான் பிறந்தது இறைவன் அருளால் முஸ்லிமாக. ஆனால் நான் மற்ற மார்க்கத்தினை பின்பற்றுபவரை மதிக்கின்றேன் .எனக்கு  குடும்ப  அளவிலும் தனிப்பட்ட முறையிலும் கணக்கிலடங்காத நண்பர்கள் உண்டு .இதில் நாத்திக கொள்கை கொண்டவர்களும் அடக்கம் . நான் யார் மனதினையும் புண்படுத்தும்படி எழுதுவதில்லை . நான் உலகக்  குடிமகனாக(Citizen Of  The World உலகப் பிறஜையாக) இருக்க விரும்பினாலும் இந்திய பிரஜையாக இருப்பதிலும் தமிழனாக இருப்பதிலும் பெருமையடைகின்றேன்.இஸலாம் என் வழி தமிழ் என் மொழி .     உங்கள் மார்க்கம் உங்களுக்கு உயர்வாக இருக்கலாம்.

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”
-குரான் 109:6.

நான் இஸ்லாம் வழியை விரும்பியும் அறிந்தும்  பின்பற்றுபவன்
 நான் பேஸ் புக்கில் நல்ல நண்பர்களைப்  பெற்றுள்ளேன் ஆனால் அது அதிகமாக முஸ்லிம்களாக இருக்கின்றனர்.நான் அனைவரையும் நேசிக்க மற்றும்  யார் விரும்பினாலும் தடையில்லாமல் நண்பர்களாக  ஏற்றுக் கொள்ள விரும்பினாலும் ஏற்றுக் கொள்கின்றேன்  அதில்  அதிகமாக முஸ்லிம்களாக இருக்கின்றனர்.     ஆனால் ட்விட்டரில் அப்படி அல்ல.  ட்விட்டரில் இஸ்லாமிய நண்பர்களை விட அதிகம்  இது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை. இந்தியாவில்தான் மக்களுக்குள் மதப் போர்வையில் பிரிந்து நிற்கின்றனர் அதில் தமிழ்  நாடும் விதிவிலக்கல்ல . இது மிகவும் வருந்த வேண்டிய செய்தி.எத்தனை மதங்கள்  ஜாதிகள் அவர்களுக்குள் போராட் டங்கள்!

ஒரு நபித்தோழராகிய சஹாபி நாயகத் திருமேனியை நோக்கி, ‘நம் இனத்தின் மீது பற்றுக் கொள்வது, அதிலும் தீவிரமான பற்றுக் கொள்வது தவறா?’ என வினாத் தொடுத்தார். இவ்வினாவுக்கு விடை கூற வந்த அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் ‘ஒருவர் தன் இனத்தின்மீது பற்றுக்கொள்வது இயற்கை. அது பற்றாக மட்டுமே வளர்ந்து வளமடைய வேண்டுமேயல்லாது, வெறியாக மாறிவிடக் கூடாது’ என்றார்கள்.
     
  உங்கள் மார்க்கம் உங்களுக்கு உயர்வாக இருக்கலாம்.என் மார்க்கம் எனக்கு உயர்ந்தது. இது நல்ல கொள்கையாக இருக்கலாம் என்பதே என் கருத்து. நேசிப்பதற்கும் கருத்து வேறுபாடுகளுக்கும்  நட்பில் எந்த காலத்திலும் மோதல் வரக்கூடாது . நாம் பெரியார் ,அண்ணா ,கலைஞர்  பேராசிரியர் அன்பழகன்  மற்றும் பலர்  கொண்டிருந்த கொள்கை நம்மிடமிருந்து மாறு பட்டிருந்தாலும் அவர்களது   உயரிய எழுத்துக்களை கருத்துகளை    விரும்பி  படிக்கின்றோம்.அதில் நமக்கு கட்டாயம் உடன்பாடு இருக்க வேண்டும்   என்ற அவசியமில்லை.
  நாம் பல சரித்திரங்களை[ப் நம்முடன் வாழும் மக்களைப் பற்றி அறியாமல் இருக்கின்றோம் என்பதுதான் உண்மை . என்னுடன் படித்த கல்லூரி நண்பர் என்னிடம் கேட்டார் .  முஸ்லிம்கள் வீட்டில் சைவ உணவு சாபிடுவார்களா மற்றும் உங்கள் வீட்டில் தமிழ் பேசுவார்களா என்று! நான் பிறப்பால் தமிழன்  வீட்டில் தமிழ் தவிர வேறு மொழி  பேசுவதுமில்லை மற்ற மொழியும் தெரியாது . உலகத்தில் அணைத்து நாட்டிலும் முஸ்லிம்கள் உள்ளனர் அந்தந்த நாட்டில் பிறந்தோர் அந்த மொழிதான் பேசுவர் .கேரளாவில் உள்ளவர்  மலையாளத்திலும் ஆந்திராவிலுல்லோர் தெலுங்கிலும் மற்ற இடங்களில் உள்ளவர் அந்த மொழிதான் அவர்களுக்கு தாய் மொழியாக இருக்கும் என்று விளக்கமளித்தேன். அவர் இத்தனை ஆண்டுகள் தெரியாமல் இருந்தேனே என வருத்தப் பட்டதுடன் .நாம் படிக்கும் பாடத்தில் இவ்வகையான பாடங்களும் அவசியம் சேர்க்கப் படவேண்டும் என சொன்னார். காஸ்மீரில் அதிகமாக வசிக்கும் மக்கள் முஸ்லிம்கள் அவர்கள் உருது பேசுகின்றனர். நம் நேரு அவர்களும் காஸ்மீர் வழியில்   வந்தவர்தான்.அங்கு நடக்கும் ஒரு  தீவிரவாதியும் முஸ்லிம்தான் அதற்கு பலியாவதும் முஸ்லிம்தான். தீவிரவாதத்தில் ஈடுபடுவோர் எல்லா மதத்திலும் உள்ளனர் . ஆனால் சில  தீவரவாதி நடத்தும் செயலை இஸ்லாமிய தீவிரவாதியால்  நடத்தப்பட்டது என்று பெரிதுபடுத்தி எழுதியும்  பேசியும் வருவோர்தான் உண்மையான தீவிரவாத்தினை தீண்டுவோராக உள்ளனர் . இஸ்லாம் தீவிரவாத்தினை  ஆதரிக்கவில்லை . ஜிஹாத் என்பது மனதினை கட்டுப்படுத்துவதுதான். உலகில் சமாதானத்தையும் அமைதியையும் நீதியையும். நிலைநாட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியே உண்மையான ஜிஹாத்

"முஃமின்களே!  ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்;

(அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்;

இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள்,

இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்! ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்!

எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்."
-திருக்குர்ஆன் 49:11
"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.

 Friends are like flowers நண்பர்கள் - நட்பு குறள் 

788: உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.

Saturday, January 30, 2010

இஸ்லாமியச் சட்டம் (1)


இஸ்லாமியச் சட்டம் (1)   

நீடூர் அல்ஹாஜ் ஏ.எம்.சயீத்.,
வழக்கறிஞர்.

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்: 'இவை அல்லாஹ்வின் வரைவுகள். இவற்றை நீங்கள் மீறவேண்டாம். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோர்தான் அநீதி இழைப்போராவர்.' (2:229)

உலகில் பல்வேறு நாடுகளில், பல்வேறு தத்துவங்கள் பின்பற்றப்படுகின்றன. அந்தந்த நாட்டு சூழ்நிலைகளுக்கேற்ப மனித சமுதாயத்தைக் கட்டுப்படுத்துவதற்காக முடியாட்சியாக இருந்தாலும், குடியாட்சியாக இருந்தாலும், சர்வதிகார ஆட்சியானாலும், சமயங்களில் நம்பிக்கையற்ற கம்யூனிஸ ஆட்சியானாலும் அங்கே சட்டங்கள் அவசியமாகின்றன.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நாடுகளிலும், முஸ்லிம் நாடுகள் என்று பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிற நாடுகளிலும் குற்றவியல் சட்டங்கள் நிலவரைச் சட்டங்கள், சொத்துரிமை சட்டங்கள், சான்றியல் சட்டங்கள் போன்ற விதிமுறைகள் சாதி சமயவேறுபாடின்றி அனைவரையும் கட்டுப்படுத்தும் வகையில் செயல்படுத்தப் படுகின்றன.
இந்தியவில் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், ஹிந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்சிகள், போன்ற பல்வேறு இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர். வேறு நாடுகளில் இது போன்ற பரவலாகக் காணமுடியாது. மதச்சார்பற்றக் கொள்கையை பாரதம் பின்பற்றி வருகிறது. மதங்களின் தனிப்பட்ட சட்ட திட்டங்களில் தலையிடாமல் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே விடுதலை வாங்கித் தந்தவர்களின் கனவாக இருந்தது.
'தனியார் சட்டம்' (PERSONAL LAW)என்பது, அந்தந்த மதங்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டமாகும். ஹிந்து மகவேற்புச் சட்டம் (THE HINDU ADAPTATION ACT) ஹிந்து திருமணச் சட்டம், ஹிந்து இறங்குரிமைச் சட்டம் (THE HINDU SUCCESSION ACT) ஆகியன ஹிந்து சமயத்தாரை மட்டுமே கட்டுப்படுத்தும். இதே போல முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம் முதலியன முஸ்லிம்களை மட்டுமே கட்டுப்படுத்தும்.சமயச் சட்டங்களைச் சரிவரத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், அந்தந்த சமயங்களின் தோற்றம், வளர்ச்சி, வரலாறு, தத்துவம், முதலியவற்றை ஓரளாவது அறிந்து கொள்வது அவசியமாகும். அப்படித் தெரிந்து கொள்ளாமலும், தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொள்ளாமலும் காழ்ப்புணர்ச்சியன் அழுத்தத்தில் அவதிப்படுவதன் காரணமாகத்தான், பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று சிலர் கூக்குரலிடுகிறார்கள்.