ஆக்கமும்,ஊக்கமும்,சித்தனையும்,படைப்பு
மனமும் உண்டு ஆனால் அதனை கவிதை வடிவில் கொடுக்க ஆசை. ஆசைப் படுவது இயல்பு.
அதற்கும் முயற்சியும் தேவை. சட்டியியல் இருந்தால்தேனே அகப்பையில் வரும். நினைததேல்லாம் கிடைத்துவிட்டால் இறைவனை மறப்பாய். கவிதை எழுத தாளாத ஆசை. கற்றது மறந்தது செய்யுள் எழுதுவதற்குரிய யாப்பிலக்கண இலக்கணம் காணாமல் போனது. இலக்கணத்தை
.தொலைத்ததை தேட முயற்சிகின்றேன். கவிஞன் பிறக்கிறான் பேச்சாளன் உருவாக்கப்படுகின்றான்.நான் கவிஞனாக
பிறக்கவில்லையோ! அதனை படைத்தவனே அறிவான். குறை என்னிடமிருக்க எல்லாம் வல்ல
அருட்கொடையானை குறை சொல்வது பெரிய குற்றம். அவன் செய்வது அனைத்தும்
நன்மைக்கே! வயதும் வளர்கின்றது. கடந்த காலத்தில் தொழிலிலேயே நாட்டம்போய்
ஆடி ஓடி
ஓய்ந்த காலத்தில் நினைவாற்றல் குறைந்தாலும்
உளப்பூர்வமான தொடர்ந்த முயற்சி துணை செய்யும் என்ற நம்பிக்கை. நம்பிக்கையே வாழ்வு.
கணினியை கையாள்வதற்கே
இத்தனை காலம். கற்பனை ஓட்டம் வந்து ஓட அதனை நிறுத்தி தமிழில்
மாற்றி டைப் செய்து கணினியில் கொடுக்க கூகுல் தமிழ் உதவாமல் உபத்திரவம் தருவதில் குழப்பம்
கொடுப்பது 'குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும்' நிலைதான். நினைத்தவை மறக்கடிக்க 'டைப் இன் தமிழ் கூகுல் மொழி பெயர்ப்பு-Type in Tamil Translation' உதவி செய்கின்றது ஒரு நாளாவது மீன் கிடைத்துவிடும் என்பது திண்ணம்.

வாழும் வரை ஏதாவது செய்ய வேண்டும்,
ஓய்வு எடுத்தால் நம்மை அனைவரும் ஓரம்
கட்டி
விடுவார்கள் அத்துடன் நாமும் பல வீணான சிந்தனைக்கும் உள்ளாக்கப் படுவோம்.
அதன் விளைவு கவலையில் முடியும் இருக்கும் வரை
நமக்கு தெரிந்ததை மற்றவருக்கும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் என்னை
ஆட்டிப் படைகினறது. நாம் என்ன புதுமையாகவா தந்துவிடப் போகின்றோம் என்ற
தாழ்வு மனப்பான்மை வராமல் தடைப் போடுகின்றேன். அழுக்கு சேரஆடையை துவைக்க
முற்படுகின்றோம்.படிக்க அறிவின் ஒளி கூடுகின்றது. நாம் ஏதோ மனதுக்கு வந்ததை
எழுத அதனை நாம் படிக்க ஒரு சாதனை செய்ததுபோல் மகிழ்வு வரத்தான் செய்யும் அதில் மற்றவருக்கு ஒரு பொறி கிடைத்து அதனை அவர்கள் சிறப்பாக்கி விடலாமல்லவா!
முகம்மது அலி ஜின்னா