நாம் நம்மைப் பற்றிய எண்ணுவது ஒருபுறம் இருக்கட்டும்; மற்றவர்களைப் பற்றி சிறிது யோசித்துப் பாப்போம் !
மிதியடி இல்லையே என்று எண்ணாமல் கால் இல்லாமல் இருப்பவர்களைக் கண்டு ஆறுதல் அடை. பொருள் வாங்க பணம் இல்லையே என்று வருந்தாமல் நமக்கு கடன் இல்லை என
நிம்மதி கொள். வீட்டில் இறப்பு ஏற்பட்டால் கண் கலங்காதே! எத்தனையோ குடும்பங்கள் அடியோடு எதிர்பாராத வகையால் இயற்கையின் சீற்றத்தால் அழிந்துவிடுவதனை பார்க்கின்றோம்.
குழந்தைகள் படிக்க வைக்க பணம் இல்லையே என்று வருத்தம் அடைவோர் குழந்தைப் பெறும் பாக்கியம் இல்லாத தம்பதியர்கள்பார்த்து அமைதி அடைந்து நாம் பாக்கியம் பெற்றோர் என கருதட்டும்.தேவை மனவுறுதியும், ஆரொக்கியமும், தியாக மனப்பான்மையும், குழந்தைகளை இறைவன் அளிக்கும் மிகப்பெரும் செல்வம் என்று கருதும் மன நிலையும் தான். பணங்காசுகளோ, வசதிவாய்ப்புகளோ அல்ல.
வருத்தம் வேதையினை தந்து உடல் நலனை பாதித்துவிடும். மகிழ்ச்சி உற்சாகத்தினை தந்து ஆற்றல் உள்ளவர்களாக மாற்றும். எடுத்ததெற்கெல்லாம் குறை காண்பது தாழ்வு மனபான்மைக்கு வழி வகுத்துவிடும். வாழும் கடைசி நிமிடம் வரை மகிழ்வாக வாழ வேண்டும். .