Friday, November 30, 2012

போட்டி போட்டு முன்னேறு.

போட்டி போட்டு முன்னேறு
போட்டி போடவேண்டியதில் போட்டி போடு
போட்டிக்காக போட்டி வேண்டாம்
போட்டி போடுவதில் குறிக்கோள் வேண்டும்
போட்டி போடுவது திறமையை வளர்த்துக் கொள்ள
போட்டி போட்டு பரிசுகளை அள்ளிக் கொள்ள 
போட்டி போடுவது பெருமையை நாடி அல்ல
போட்டியில் வெற்றி கொண்டால் கர்வம் கொள்ளாதே
போட்டி போடுவது மற்றவரை வீழ்த்த அல்ல
போட்டி போடுவது நாம் வெற்றி அடைய
போட்டியின் வெற்றி நிலையானதல்ல

போட்டியில் தோற்றால் துவண்டு விடாதே
போட்டியில் வேகமும் விவேகமும் வேண்டும்
போட்டியில் வெற்றி கொள்ள வெறி வேண்டாம்
போட்டியில் அச்சம் அடைய  வேண்டாம்
போட்டியின் அனுபவம்  நம் நிலை அறிய வைக்கும்
போட்டியின் தோல்வி ஆளுமைக்கு வழிகாட்டி
போட்டியின் தோல்வி மனோபலத்தின் எடைக் கல்

பேச்சுப் போட்டியின் முடிவு தர்க்கத்தின் வெற்றி அல்ல
பேச்சுப் போட்டியின் முடிவு விவாதத்தின் விளக்கம்
பேச்சுப் போட்டி வெற்றி கொண்டாட அல்ல
பேச்சுப் போட்டியின் வென்றதால் இறுமாப்பு வேண்டாம்
பேச்சுப் போட்டியில் அனைவர் பங்கும் அதில் அடங்கும்
பேச்சுப் போட்டியில் அனைத்துக் கருத்தும் உடன்பாடாகிவிட முடியாது

அறிவுக்கான போட்டி நம் அறிவை வளர்க்கும்
விளையாட்டுக்கான போட்டி நம் உடல்நலத்தை வளர்க்கும்
மூளை பயிற்சி அறிவை வளர்க்கும்
உடற்பயிற்சி உடல்நலத்தை வளர்க்கும் 
பணத்தை சேர்க்கும் போட்டியில் அடுத்தவரை வீழ்த்தும் குறிக்கோள் வேண்டாம்
நன்மை சேர்க்கும் போட்டியில் அடுத்தவரை சேர்த்துக் கொள்
இறைவணக்கத்தில் போட்டி இல்லை இறைவணக்கத்தில்  ஈடுபாடு வேண்டும்

 நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவில் என்னிடமும் ஃபாத்திமா(ரலி) அவர்களிடமும் வந்தார்கள். 'நீங்கள் இருவரும் தொழவில்லையா? என்று கேட்டார்கள். அப்போது நான் இறைத்தூதர் அவர்களே! எங்களின் உயிர்கள் அல்லாஹ்வின் கையிலுள்ளன. அவன் எழுப்பும்போதே நாங்கள் எழ முடியும் என்று கூறினேன். இதை நான் கூறியபோது எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் செல்லலானார்கள். பின்னர் தம் தொடையில் அடித்து 'மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்' (திருக்குர்ஆன் 18:54) என்று கூறிக் கொண்டே திரும்பிச் சென்றார்கள்.- 1127. அலீ(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புகாரி ஹதீஸ்


Thursday, November 29, 2012

பெரிதாகிவிடும் கவலையால் தலை சிதறிவிடுமோ!


கவலை மின்சாரம் போல் வந்து போகும் அது தற்காலிகமானதாக  இருக்கலாம் .அதுவே தொடர்ந்தால் 
மனோநிலை யில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவரிடம் போக வேண்டியதுதான் 

செல்வம், தோற்றம், குழந்தைகள், வீடு, மற்றும் திறமைகள் அனைத்தும் நாம் பெற்றிருந்தும் கவலை ஏன் மனதில் ஆட்டிப்படைகின்றது. பேராசை பெற்ற மனம் இன்னும் அதிகமாக அடைய முயலுகின்றது . அதிகம் பெற முயல்வது நன்மையை நாடி இருப்பின் தவறில்லை. ஆனால் அது அடுத்தவருடன் கணக்குப்போட்டு நமக்குள் ஓர் சோகம் வந்து ஒட்டிக்கொள்வதின் காரணமென்ன. அது மனதில் நிறைவு வராமல் வாட்டிப் படைப்பதுதான். நம்மையே நினைத்து காலத்தை ஒட்டுகின்றோம் நம்மை விட தாழ்ந்தவர் கோடானுகோடி இருப்பதனை நினைவிற்கு கொண்டு வருவதில்லை.

" நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக"
(குர்ஆன் 7:144)

வறுமை உன்னை வாட்டுக்கின்றதா   அதனால்  வேதனை உன்னை   துவள வைக்கின்றதா வருந்தாதே . நல்ல வழியில் முயற்சி செய். சோர்வு உன்னை முடக்கிவிடும். இறைவனை நம்பு உன் கடமையை செய். கிடைப்பது கிடைக்க வேண்டிய நேரத்தில் உனக்கு கிடைக்கும். உன்னைப்போல் அநேகர் உனக்கும் கீழ் பலர் .  அதனை நினைவு கொள்

உனக்கு கிடைத்த காலத்தை பயன்படுத்திக்கொள். முழு கவனமும் அதில் இருக்க வேண்டும் ஆனால் ஒரு போதும் கவலை வர கூடாது.

இறைவன் நமக்கு தாங்கும் அளவுக்குத்தான் சிரமம் தருவான். ஒரு போதும் அது நிலையாக இருந்து விடாது. துன்பத்திற்குப் பின் நிச்சயம் மகிழ்வு உண்டு.

 “நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.” (Chapter 94, Verse 6)


Wednesday, November 28, 2012

ஒற்றுமையில் சிக்குண்டி நம்மில் நாமே மோதுண்டோம்!


இஸ்லாம் என்ற வார்த்தை "சலிமா" ( "Salema") என்றஅரபி  வார்த்தையிலிருந்து வந்தது.
இஸ்லாம் என்றால் அமைதி, கீழ்படிதல், தூய்மை என பொருள்படும்.
இஸ்லாம் மார்க்க முறைப்படி இஸ்லாம் என்பது இறைவனது (அல்லாஹ்வின்) ஆணைக்கு  கட்டுப்பட்டு அவனது வழிகாட்டுதலின்  கோட்பாடுகளுக்கு இணைந்து  நடப்பதே. இதில் சமரசத்திற்கோ  மாற்றி அமைப்பதிற்கோ இடமில்லை . இஸ்லாமிய சட்டங்கள் இறைவனால் அருளப்பட்டது . மனிதனால் உறுவாக்கப்பட்ட சட்டமாக இருப்பின் தவறுகள் வரலாம் அதனை திருத்திக் கொள்ளலாம்

 இஸ்லாம் மார்க்கம் பற்றி பேசும்போது மிக்க கவனம் அவசியமாகின்றது . இதில் சர்சை செய்வது கூ டாது .
இஸ்லாம் மார்க்கம் பற்றி நல்ல நோக்கத்தோடு ஆய்வு செய்வது . விளக்கம் கொடுப்பதும் உயர்வானதே! .
நான் பார்த்த  'தூத்துக்குடி விவாத வெற்றி விழா' அறிக்கை எதில் வருகின்றது!?
"யூத நச்சுக் கருத்துகளை விதைத்து வந்த" என்ற இந்த வார்த்தைகள் சரியா! கீழ்  உள்ள அறிக்கையைப் பாருங்கள்





அன்னையின் மடல் + Love Your Mother

அன்னையின் மடல்

என் செல்லமே! நீ என்னை நேசிக்க விரும்பினால் இப்பொழுதே நேசி! பாசம் காட்ட விரும்பினால் இப்பொழுதே உன் பாசத்தைக்காட்டு!நான் இவ்வுலகை விட்டு மறைந்தபின் மீளாத்துயில் கொண்டபின்,அன்னையிடம் அன்பு காட்டத் தவறிவிட்டோமே,நம் கடமையைச் செய்ய தவறிவிட்டோமே,"தாயின் காலடியில் சுவனம் இருக்கிறது" எனும்நபி மொழியை மறந்து விட்டோமே என வருந்தும் நிலை உனக்கு வேண்டாம்.

என் செல்லமே!உன் அன்னையிடம் உன் பாசத்தைக் காட்டு பரிவைக் காட்டு.நான் நிரந்தரமாகக் கண்கள மூடிய பின் நீ என்ன கதறினாலும் நான் எழுந்து வர முடியாது!இருக்கும்போது எப்பொழுதும் அருமை தெரியாது. மறைந்த பின் கதறி என்ன பயன்?ஆண்டாண்டு அழுதாலும் மாண்டவர் மீண்டு வரமாட்டார். அந்த நிலை உனக்கு வேண்டாம் மகனே!

என் செல்லமே!உன் தாயின் முகத்தைப் பார். நரைத்த முடி, சோர்வான முகம்,தளர்ந்த உடல், முதுமையின் தாக்கம்!
மகன் தன்னிடம் அன்பாக பேச மாட்டானா என்ற ஏக்கம் - உன் தாயின் விழிகளில் தெரிவதைப் பார் மகனே!


மூன்று விஷயங்களை கண்களால் காண்பதே பாக்கியம் என்று, அன்று சொன்னார்களே அகிலத்தின் அருட்கொடை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்!அதில் ஒன்று தாயின் முகமல்லவா?

என் செல்லமே! இப்பொழுதே உன் தாயிடம் உன்
பாசத்தைக் காட்டு, பரிவைக் காட்டு,கனிவு காட்டு, அன்பாகப் பேசு,இறையருள் பெற்றிடு, இறைப் பொருத்தத்தை பெற்றிடு மகனே!

பிரசவ வேதனை... !

(*) உருக்கொள்ளத் தொடங்கியது
உள்ளுக்குள் கருவொன்று.
ஈன்று புறந்தருதல்
எந்தலைக் கடனென்று.

(*) ஆரம்ப காலங்கள்..ஆச்சர்யங்கள்.
எனக்குள்ளா?
எனக்குள்ளுள்ளேயுமா?
எதற்காக?
எப்படி?
கேள்விகளின் வேள்விகளில்
தூக்கம் தொலைக்கும்
இருட்டுப் பகல்கள்
எத்தனை எத்தனை!!

(*) அழகாக இருக்குமா?
அர்த்தங்கள் கொடுக்குமா?
இப்படி இருப்பது
அப்படி ஆகினால்
எப்படி இருக்கும்?
செப்படி வித்தை
செய்து பார்க்கும் மனசு.

தாளங்கள் போட்டு துடிப்புகள் தந்தது!

பத்தினி வேண்ட மாதம் மும்மாரி பெய்யும்
மணமாகி வரவேண்டியது
வராமல்  'மாதம்' மும்மாதமாக
கணவன் காதில் போட்டு வைக்க
'கள்ளி இத்தனைநாள் மறைத்து வைத்தாயே !'
இனிய
முத்தங்கள்  அடை மழையாய் பெய் 
நான் என்னை மறந்தேன்
நேரம் பார்த்து நேசம் காட்டி நெருங்கினார்
வாரிசு வேண்டி பொறுமைத் தேவை
அறிவுரை ஆற்றும் ஆற்றல் பெற்றேன்
அதிசயம் ஆனால் உண்மை அடங்காதவர் அடங்கினார்

சுமப்பதில் சுகம் சுமையே தெரியாத சுமை
புளிப்பு  தேடி மறைத்து உண்பதில் மகிழ்வு
வெறுப்பில்லா  வேதனையற்ற வாந்தி
வாந்தி வந்தாலும் மருந்து தேடா மனம்
பிள்ளதாச்சியென்
 பெருமகிழ்வு தரும் பெரும்பேறு

தாளங்கள் போட்டு துடிப்புகள் தந்தது
வயிற்றில் தாங்கியது வெளியே வந்துவிட்டது
மடிப்புகள் மடியோடு வந்துவிட்டது
மடிப்புகள் வந்தாலும் ஆசை போகவில்லை
மச்சான் கொடுத்த முத்தம் நெஞ்சில் நின்றதால்

மச்சான் பறந்து விட்டார் பணம் சேர்க்க
நித்தம் நித்தம் நினைவில் வந்து நினைவூட்ட
ஆசை வந்தாலும் அடக்கிக் கொள்வதும்
ஒலுச் செய்து மனதை அமைதியாக்கி
இறைவனைத் தொழுது நிறைவு கொள்வேன்

Tuesday, November 27, 2012

கிறுக்கல் வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவர்கள் வாழ்கையில் விளையாடுகின்றனர் .

பள்ளிக்கூடம்   வருவேன்  தொடர்வேன் 
பள்ளிக்கூடம் தொடர தினம் அடி வாங்குவேன்
பள்ளிக்கூடம் பெயர் கேட்டால் ஏதாவது சொல்வேன் 
புத்தகத்தை தொடுவேன் படிக்கமாட்டேன்
நோட்டுப் புத்தகத்தை எ டுப்பேன் கிறுக்குவேன் 
பொருள் புரியும் முன்னே பள்ளி செல்கிறேன்
பள்ளி சென்ற காரியம் புரியாமல் திரும்புகிறேன்
மதியம் உணவை திரும்ப வீடு கொண்டுவருவேன்
விளையாடவிட்டால் விளையாடுவேன்

வீட்டுக்கு வந்து டீவீயில் 'கேம்' விளையாடுவேன்
அண்ணன் துப்பாக்கி படம் பார்க்க நானும் பார்ப்பேன்
அந்த துப்பாக்கி எனக்கும் வேண்டும் என்று கதறுவேன்
அம்மா  துப்பாக்கி வாங்கி கொடுப்பாள்
துப்பாக்கியை வைத்து சுட்டு சுட்டு பழகுவேன்
அப்பா வந்து துப்பாக்கியை பிடுங்குவார்
'பாவம் பயனை அழவிடாதீங்க' அம்மா சொல்வாள்
'பயனை கெடுக்கிறாய் '  என்பார் அப்பா
'அவன் சின்ன பையன்தானே மூன்று வயதுதானே' என்பாள் அம்மா
'அடுத்த வீட்டு மூன்று வயது பயன் என்னம்மா இங்கிலீஸ் பேசுறான்'  அப்பா சொல்வார் .
'அவங்க வீட்லே எல்லோரும் இங்கிலீஸ் பேசுறாங்க' அதான் அவன் பேசுறான்
'என்னது எதிர்த்து பேசுறாய்' என்று என்னிடம்  பிடுங்கிய துப்பாக்கியை அம்மா மீது கோபமாய் வீசினார்
அம்மா என்னையும் அழைத்துக் கொண்டு பாட்டி வீட்டுக்கு வந்து விட்டாள்
அப்பாடி இனி நான் நல்லா விளையாடலாம்! பள்ளிக்கூ டம் போக வேண்டாம்!

எனது மூன்று வயது பள்ளிக்கூட கிறுக்கல் வாழ்க்கைக்கு  ஆசைப்பட்டு  அவர்கள் வாழ்கையில் விளையாடுகின்றனர் .

வாங்க விக்கிப்பீடியாவில் எழுதலாம்.

இணையத்தில என்ன தேடினாலும் அதிகளவு செய்திகளைப் பரிந்துரைப்பது விக்கிப்பீடியாதான். இதுஒரு கட்டற்ற கலைக்களஞ்சியமாகும். இதில் நீங்களும் தங்கள் கருத்துக்களை வெளியிடலாம். இதன் உள்ளே  சென்றால் போதும் நீங்கள் எவ்வாறு தங்கள் பதிவுகளை உள்ளீடு செய்யலாம் என்று நெறிமுறைகள் எளிய முறையில் உள்ளன.

நான் முதலில் விக்கிப்பீடியாவில் பதிவுசெய்தது நான் இளங்கலை படித்த இராமசாமித் தமிழ்க்கல்லூரியின் விவரம் தான். அடுத்து எனது சுயவிவரம். அடுத்து, நான் பணிபுரியும் கல்லூரியின் விவரம், அடுத்து சங்கஇலக்கியங்கள் தொடர்பான செய்திகளை இணைப்புகளை உள்ளீடுசெய்யத்தொடங்கினேன். அதனால் விக்கிப்பீடியாவுக்குவந்த பார்வையாளர்கள் எனது வலைப்பதிவையும் பார்வையிடத் தொடங்கினார்கள். அதன் புள்ளிவிவரத்தைத்தான் கீழே பார்க்கிறீர்கள்.

அதனால் வலை உறவுகளே நீங்கள் என்னதுறை சார்ந்தவராக இருந்தாலும் தங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவிலும் பதிவு செய்யுங்கள்.

எதிர்காலத்துக்கு இது மிகவும் பயனுள்ள ஒரு களமாக இருக்கும்.

முனைவர்.இரா.குணசீலன் 

நன்றி   Source : http://www.gunathamizh.com

என்றுதான் தீரும் இந்த பாகுபாடு !


ஜாதிகள் இல்லையென்று சொல்வோர் சொல்லட்டும்
ஜாதியைச் சொல்லி அழைத்தால் தண்டனை இருந்தும்
ஜாதிகள் இல்லாமல் போய்விட்டதா?
ஜாதிக்காக ஒரு மந்திரி
ஜாதிக்கு ஒரு தொகுதி வீட்டுக் கொடுத்தல்
ஜாதியை உண்டாக்கி தான் வளர்ந்தோர்
ஜாதியில் மேல் ஜாதி மற்றும் கீழ்ஜாதி
ஜாதி வேண்டாம் ஆனால் ஜாதி அடிப்படையில் அனைத்தும் வேண்டும்!
வேலையில் சேர்க்க பள்ளிக் கூடத்தில்  சேர்க்க மதம் அல்லது ஜாதிப் பெயர் 
"ஜாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம் - பாப்பா"-பாரதியார்
பாரதி பாப்பாவுக்கா பாடினார் !

உயர்தினையில் ஜாதியைப் பிரித்தோர்
அஃறினை யிலும் ஜாதியைப் பிரித்தார்
உயர்தினையில் ஜாதியைப் பிரித்தது தான் மட்டும் வளர
அஃறினை ஜாதியைப் பிரித்தது பொருட்களின் விவரமறிய

ஜாதி பெயர் அழைத்தால் கோபம் வரும்
ஜாதி பெயர்
அழைத்தால் சிலருக்கு பெருமையாகவும் இருக்கும்

ஜாதி பன்மையாக இருக்கலாம் அது ஆண் ஜாதி
ஜாதி பன்மையாக இருக்க முடியாது அது பெண்சாதி

'என்
பெண்சாதி' என்று பெருமைக் கொள்வோர் 'பெண் ஜாதிக் குணமே இப்படித்தான்' என்று வசைபாடுவார்

ஒன்றே
குலம் ஒருவனே தேவன் என்று பெருமை பேசும் தமிழர்  பண்பாடு போனதெங்கே!

Monday, November 26, 2012

துப்பாக்கி எடுத்துவிட்டான்

துப்பாக்கி எடுத்துவிட்டான் - இந்தியன்
துப்பாக்கி எடுத்துவிட்டான்

சுதந்திரம் இழந்து
புழுவாய்ப் பூச்சியாய்
அடிமையாய்க் கிடந்த நாட்களில்கூட
அகிம்சையைத்தான் கையில் எடுத்தான் - இந்தியன்
அகிம்சையைத்தான் கையில் எடுத்தான்

இன்றோ
துப்பாக்கி எடுத்துவிட்டான் - இந்தியன்
துப்பாக்கி எடுத்துவிட்டான்

அண்ணல் காந்தியின் அகிம்சா வேதங்களை
நொறுக்கிப் புதைத்து புதைத்த இடத்தில்
நெடுமரங்களே வளர்த்து விட்டான்
இந்தியன்
ஆனால்...
அமிதாப் அங்கேயும்
அஜித்குமார் இங்கேயும்
அரிதாரம் பூசிக்கொண்டு
பொய்த் திரையில் எடுத்ததை
நிஜமாகவே எடுத்துக்கொண்டான்

தீன் பெறுதல் ஞானம் பெறுதல்

தீன் பெறுதல் ஞானம் பெறுதல்
ஞானத்தின் திறவுகோல் நாயகம்

தீனைப் பெற்றோர் வெற்றிப் பெற்றோர்
தாவிச் சென்று தீனைப் பெற்று
தீனை விட்டு தானும் கெட்டார்
தீனில் தேடல் வழி தேடல்
இல்லாததை தீனில் புகுத்தி
தீனில் சொல்லாததை மனதில் நிறுத்தி
தீனையும் கெடுத்தார் தானும் கெட்டார்

தீனில் ஆய்வு கொள் அறிவு பெற்று இறைவனைத் தேடு
தீனில் வீண் விவாதம் செய்து தானும் கெட்டு மற்றவரையும் கெடுக்காதே
தீனில் வாதம் செய்து போட்டி போட்டு பெருமை கொள்ளாதே
தீனின் வாழ்வில் போட்டி இல்லை பொறாமை இல்லை
தீனில் உயர்ந்தோரில்லை  தாழ்ந்தோரில்லை
தீனின் வாழ்வில் நிம்மதி உண்டு  நிறைவு உண்டு மகிழ்வு உண்டு

Friday, November 23, 2012

சமாதான உடன்படிக்கை தொடரவேண்டும் அதற்கு இப்பொழுதே வெளியேறுங்கள் !

ஏற்கனவே பாலஸ்தீனத்தில் அமைதி ஒப்பந்தம் உள்ளது?
பாலஸ்தீனத்தில் நிராயுதபாணியாக, அப்பாவி மக்களை, 
விவசாயிகளை மற்றும் இளைஞர்களை தங்கள் சொந்த நிலத்தில் வாழ முடியாமல் சுட்டுத் தள்ளுவது எந்த விதத்தில் நியாயம்!  தொடர்ந்து அமைதி இருக்க எவ்வாறு முடியும் ?

உலகின் பிற நாடுகள்  எப்படி நிம்மதியாக வாழ  முடியும்! உயர்ரக  துப்பாக்கி வீரர்கள் மற்றும் உயர்ரக ஆயுதங்கள்
இயக்கும்  வீரர்கள் அப்பாவி மக்களை  பாலஸ்தீன குடிமக்களை சுட்டுக் குவிக்கும் கொடுமை நீட்டிக்க வேண்டுமா?

இதற்கு சரியான நடவடிக்கைதான்  என்ன?

READ . . .
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

please get this out right away (the PEACE AGREEMENT MUST CONTINUE)

Bismillah Rahman Raheem





Salam
alaykum - please forward to everyone you know - immediately. We want
real peace and we are willing to work for it and be patient. That is the
Muslim way.



Is the Peace Agreement in Palestine
over already? Can there be continued peace with unarmed, innocent
farmers and youth being shot dead for walking in their own land?

How can the rest of the world stand by and see soldiers and snipers using high
powered weapons shoot and kill and wound
helpless citizens in broad daylight on video?

What is the proper action to take right now?


It is never hopeless unless you give up hope. We have to be patient and
listen to the leadership. Hamas and Palestinian leaders are saying
clearly, "THE TRUCE IS NOT BROKEN - THE PEACE AGREEMENT IS STILL IN
PLACE..."



READ . . .

www.IslamNewsroom.com/news-we-
need/2012



 READ . . .

www.IslamNewsroom.com/news-we-
need/2012


Here are 3 things to HELP YOU:

1 Share true Islam with my new videos www.WhatsIslam.com 

2 Share ANSWERS TO ATTACKS ON ISLAM video www.TubeIslam.com/
video/11623




3 Get the BEST ANSWERS from www.SheikGoogle.com



Now You Can Help Me Give Free Qurans, Books, CDs & satellite TV for Islam SUPPORT NOW: 
www.DonateForIslam.com

Salam alaykum,

Yusuf
Estes


by mail from  TubeIslam

Thursday, November 22, 2012

சம்சாரமே நீ கூப்பிட்ட நேரத்தில் வர மறுப்பாள்

வார்த்தைகளை நேசிக்கிறேன்.ஆனால் பிழையில்லாமல்  எழுதத் தெரியாது
கற்பனை வரும் எழுத முற்பட்டால் வார்த்தைகள் வராது
படிப்பேன் , கல்லூரி வரை படிக்க வாய்பில்லை கவிதை படிப்பேன் கவிதை எழுத யாப்பிலக்கணம் தெரியாது
பேசுவேன் ,பாடவும் ஆசை ,  குரல் வளமில்லை

அழகை கண்டு மயங்குகின்றேன் , நான் அழகானவனில்லை
கடற்கறையில் காதல் செய்கிறார்கள், யாரும் என்னை கண்டு கொள்ளவில்லை
திருமணம் செய்ய ஆசை, யாரும் பெண் தர விரும்பவில்லை
குழந்தைகள் மீது கொள்ளை ஆசை, அவர்கள் மிட்டாய் கேட்கிறார்கள்
மிட்டாய் வாங்க கடைக்குப் போனால் பணம் கேட்கிறார்கள்

நண்பர்கள் சேர்ந்தார்கள்,  அவர்களோடு இணக்கமாக இருக்கத் தெரியவில்லை
பணம் சேர்க்க ஆசை, அதற்கு தவறான வழி தெரியாததால் பணம் சேர்க்க முடியவில்லை
ஊரைச் சுற்றி உலகத்தை சுற்றிப் பார்க்க ஆசை அதற்கு மந்திரியாக வேண்டும்
அரசியலில் ஈடுபட்டு மந்திரியாக விருப்பம்,  வாக்குசீட்டில் என் பெயர் இல்லை.

அனைத்திலும் ஆசை, ஒன்றுமே எனக்கு கிடைப்பதில்லை
கிடைத்ததை வைத்துக் கொள்வற்கும் அச்சமாக உள்ளது திருடன் திருடி விடுவானென்று
நீண்ட வாழ்வுக்கு ஆசைப்பட்டேன் , மின்சாரமில்லாமல்  கொசுக்கடியால் வியாதி வந்து சேர்ந்தது
இனானமாக அனைத்தும் தந்தார்கள்  ஊரெங்கும் மருத்துவரில்லா  வைத்தியசாலை உட்பட அரசுக்கோ மக்களைப் பற்றி அக்கறை இல்லை .நானும் மக்களுள் ஒருவன்
நான் ஏன் என்னைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டும் !

மறு  லோகம் நினைத்து இந்தலோகத்தில் வாழ்வோர் சிலர்
இந்த லோகத்தையே நினைத்து வாழ்வோர் சிலர்
இறு  லோகமும் நினைத்து வாழ்வோர் சிலர்
இத்தனையும் நினைத்தவர் மின்சாரத்தை நினைக்கவில்லை
நம்மை மின்சாரம் நினைக்க வைத்துவிட்டது .

நீ என்ன மந்திரவாதியா! நீ  நினைத்த போதெல்லாம் நான் வர
உன் சம்சாரமே நீ கூப்பிட்ட நேரத்தில் வர மறுப்பாள்
நான் உன்  சம்சாரமும்  அல்ல,  நீ என் கணவனும் அல்ல
எனக்கென்று ஒரு மரியாதையுண்டு 
முன்பே உன் அழைப்பின் திட்டத்தில் நான் இருந்திருக்க வேண்டும்

ஆசை வேண்டாம் கிடைப்பது கிடைக்கட்டும்
ஓசை வேண்டாம்  புலம்பல் வேண்டாம்
நேசம்  வேண்டும் இறைவன் நேசம் வேண்டும்
அவன் கொடுப்பது கொடுக்கட்டும்
தேடல் வேண்டும் கொடுப்பது அவனாக இருக்கட்டும்

Wednesday, November 21, 2012

பணிப்பெண் வாங்கிய சாட்டை அடி தண்டனை.


 மன்னன் அறையை சுத்தப்படுத்த சென்ற பெண் வேலையின் அயர்வினால் தன்னையறியாமல் மன்னனின் படுக்கையில் சாய்ந்து உறங்கிவிட்டாள் . மன்னன் தனது படுக்கையில் பணிப்பெண் உறங்குவதைக் கண்டு வெகுண்டு அவளுக்கு தண்டனையாக சாட்டையால் அடிக்க அப்பணிப்பெண்  சிரித்துக் கொண்டே இருந்தாள்.
மன்னனுக்கு கோபம் அதிகமாக நான் அடிப்பது உடலில் நோவு தரவில்லையா! சிரிக்கின்றாயே என்றான்.
 அதற்கு அப்பணிப்பெண் "சில துளி நேரங்கள் தூங்கியதர்க்கே இத்தனை சாட்டையடி ஆனால் காலமெல்லாம் நீங்கள் இதில் உறங்குகின்றீர்கள்  உங்களுக்கு இறைவன் கொடுக்கப் போகும் தண்டனையை நினைதேன்,அதன் நிமித்தம் சிரிப்பு வந்தது" என்றாள்
மன்னன் தன் தவறை உணர்ந்து அப்பணிப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்டான்.இறைவனிடன் பாவமன்னிப்பு தேடி வேண்டினார்

இது ஒரு சரித்திர நிகழ்வு

மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள். அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்.
நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.-திருக்குர்ஆன் -4:36


இதுதான் கொலை உலகம் !

ஆயுதங்கள் விற்பனைக்கு பல நாடுகள் போட்டி !
இதுதான் கொலை உலகம் !
நாம் கலை  வளர்த்தோம் என்று பெருமை பேசுவோம் . மக்கள் தொண்டே எங்கள் கொள்கை என மார்தட் டிக்கொள்வோம்   . ஆனால் நடப்பது என்ன ?  பதவி வெறி, பண மோகம், மண் ஆசை ஜாதி,இன வெறி மற்றும் பல தோற்றங்களில் வரும் கொலை வெறி  இது தொடர்ந்து வருகின்றது  . இது இந்த நாகரிக உலகத்திலும் பாதிக்க படும் அவல நிலை . எத்தனை புகழ் வாழ்ந்த தலைவர்கள்  கொலை செய்யப்பட்டனர். மனிதன் நல்லவன் மக்கள் கொடியோர் என்பர். தனி மனிதன் அல்லது மக்கள் கொடியோர் அல்ல . இவர்களால் தூண்டப்பட்ட ஆசைதான் மிகவும் கொடிய சக்தி . ஒரு தலைவன் வீழ்த்தப் பட்டால் அதன் விளைவால் வீழ்ந்த தலைகளும் நாடும் அதிகம் . இது காலம் தொட்டு நடந்து வரும் கொடுமை .இதன் விளைவால் சில சரித்திர புகழ் பெற்ற,  மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட மாமனிதர்களை நாம் பாப்போம் . இவர்கள் நினவு நம் மனதில் காலமெல்லாம் இருந்துக்கொண்டே இருக்கும்.
மஹாத்மா காந்தி அன்பு வழியில், அகிம்சை வழியில் இந்திய நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த தேசத் தந்தை
ஆபிரகாம்  லின்கன் -அமரிக்காவின்   16 ஜனாதிபதி (ப்ரெசிடென்ட் 1861 முதல்  ஏப்ரல் 1865.வரை.அடிமை முறையை ஒழிக்க அயராது பாடுபட்டவர் .

நீ ஒரு "அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஃ”


அன்போடு அழகாக  வந்து “நான் எப்படி இருக்கிறேன் சொல்லுங்கள்” என்றாள்.

“என் அன்பு தேவதையே நீ ஒரு  அ  ஆ  இ  ஈ உ ஊ எ ஏ ஐ  ஒ ஓ ஃ”  என்றேன்.

“நான் என்ன ஒரு அரிச்சுவடியா! ஒன்றும்  அறியாதவளா? ” என்றாள்.

“அரிசுவடியில்தான் எல்லாமே ஆரம்பமாகின்றது . உன்னை வைத்துத்தான் குடும்பமே தொடர்கின்றது.

நீ இல்லையெனில் நானில்லை” என்றதுடன் 
“நீ என் அன்பானவள் ,ஆசைநாயகி .இனியவள் .
உன் மீது எனக்கு உள்ள ஈடுபாடு அதிகம் அளவற்றது” என்று அன்புடன் ஆசைகொண்டு இனிய ஈடுபாட்டுடன் உயிராக ஊடல் கொண்டேன்.
அவள் இதயம் இப்போது என் வசம் ஆகும் என நம்பினேன்.
ஆனால் அவள் நம்பவில்லை. கோபம் கொப்பளித்தது.அனல் பார்வை. இயற்கையான பிடிவாதம் . வாதத்துக்கு மருந்துண்டு. பிடிவாதத்திற்கு மருந்தேது!  என்னிலை பரிதாபமானது.வேடிக்கை விபரீதமானது. எல்லாம் ஏமாற்றம்.ஐயகோ! என் செய்வேன் .என்னிலை பரிதாபமானது.
ஒட்டலின்றி ஓட்டமெடுத்தேன் எஃகான உள்ளத்தோடு ஒளடதம் (மாற்று மருந்து) நாடி .

சீன ஏழை விவசாயி தன் மனைவியுடன் கடுமையாக உழைத்து பணம் ஈட்டி செல்வந்தன் ஆன பின் கடுமையாக வயலில் உழைத்ததினால் அவனது மனைவியின் அழகு குறைய அவன் வேறு பெண்ணை நாடி செல்கின்றான் . அவனது  மனைவி மிகவும் மன வேதனை அடைகின்றாள்.
பள்ளிக்கூடம் செல்லும் தன் மகளுக்கு சூ  மாட்டி விடும்போழுது அந்த பெண் குழந்தை வலி தாங்காமல் கதறுகின்றாள் .அப்பொழுது தாய் சொல்லும் வார்த்தை “மகளே  இந்த  வலியினை தாங்கிக் கொள் உனக்கு திருமணம் ஆன பின் உன் கால் அழகாக இல்லை என்று உன் கணவன் உன்னை விட்டு பிரிந்தால்  அந்த மன வலியினை உன்னால் தாங்கிக்கொள்ள முடியாது என  அழுகின்றாள். 

யார் ஆட்சி செய்தால் நமக்கு என்ன!

 சந்தைக்கு பொருள் அதிகம் வந்தால் பொருட்களின் விலை குறையும்
தேவை அதிகரித்து பொருள் கிடைப்பது தட்டுப்பாடானால் விலை ஏறும் – இது நியதி
இப்பொழுது நிலையில் அந்த நியதியில் மாற்றம் காணப்படுகின்றது. உற்பத்தி நிலையின் அதிநவீன மாறுபாடடின் காரணத்தினால் பல பொருட்கள் சந்தையில் பொருட்கள் நிறைந்து கிடைக்கின்றன (அந்நிய கம்பனிகளால் தயாரிக்கப் படும் பொருட்கள்–செல்போன்,கார் மற்றும் பல ) ஆனால் விலை அதிமாகிக்கொண்டே வருகின்றது . சந்தைக்கு பொருள் அதிகம் வந்தாலும் பொருட்களின் விலை குறையவில்லை. இது ஒரு நிலை.

தேவை அதிகரித்து பொருள் கிடைப்பது தட்டுப்பாட்டினால் விலை ஏறும்.
 பெட்ரோல், கேஸ் தட்டுப்பாடு காரணமாக விலை ஏற்றம். நடுத்தர மக்கள் நிலை திண்டாட்டம்
டாலர் வீழ்ச்சியாலும் பொது மக்கள் நிலை தடுமாற்றம் அந்நிய நாட்டு முதல் போடும் கம்பனிகளால் உள்நாட்டு சிறு தொழில்கள் அழியும் நிலை . அனுமதி கொடுக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு குறிப்பாக அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு மின்சாரத்தை விற்பதில் மக்களுக்கு மின்சார தட்டுப்பாடு அதிகமாகி மக்கள் அவதியடைகின்றனர்
அதற்கு காரணம் அரசுக்கு வருமானம் கிடைக்கின்றது அவர்கள் வேலை செய்பவர்களுக்கும் உயர்ந்த ஊதியம் தருகின்றனர் மற்றும் அதிக லாபம் வைத்து விற்கின்றனர். வேலை செய்ய வருபவர்கள் அதிக ஊதியம் எதிர்பார்பதால் வேலைக்கும் ஆள் கிடைபதில்லை. பலர் அயல் நாடு சென்று வேலை தேடிக்கொண்டனர்.
இங்குள்ளோருக்கு இனாம் பொருட்கள் மற்றும் இனாம் பணங்கள் கிடைக்க வாய்புள்ளது அதனால் வேலை தேடுவதும் குறைத்து விட்டது . ஆனால் மாநிலம் விட்டு மாநிலம் போய் அதிக சம்பளத்தில் வேலை செய்கின்றனர் .தமிழ்நாட்டு மக்கள் கேரளாவுக்கும் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கும் இப்படி ஒரு மாற்றம்.

ஓர் இந்தியா அனைவரும் இந்திய குடிமக்கள் என்ற கொள்கையில் சிலர் மாறுபாடான வகையில் செயல்படுகின்றனர். குஜராத் மற்றும் மும்பை மாநிலத்தில் உள்ளோர் சிலர் பீகார் மக்கள் இங்கு வந்து வேலை செய்யக் கூடாது என தடை போடுகின்றனர்.
தமிழ்நாட்டில் ஒரு கட்சி வந்தால் ஒரு திட்டம் போடுகின்றது. அடுத்த ஆட்சி வேறு கட்சி வசம் வந்து விட்டால் முந்தைய ஆட்சியின் திட்டங்களும் நடைபெற்று வந்த கட்டுமான வேலைகளும் தொடரப்படாமல் விடப்படுகின்றன.
யார் ஆட்சி செய்தால் நமக்கு என்ன! நாம் அதனால் பயன் பெட்றோமா! என்ற அலட்சியப் போக்கும் சுயநல மனநிலையும் மக்கள் மனதில் நிலைத்து விட்டது.
திட்டம் போடும் கட்சி போக வரும் கட்சி அந்த திட்டத்தை கைவிட மற்றும்  வேறு திட்டம் வகுக்க  மக்கள் வரிப்பணம் வீனடைய மக்கள் பாடு திண்டாட்டமாக அமைகின்றது .
நாடு பாதுகாப்பு கொடுத்தால் மட்டும் போதாது .மக்களுக்கு நன்மை செய்யக் கூ டிய அரசாகவும் இருக்க வேண்டும் . ஐந்து வருடம் நம் ஆட்சிதான் என்ற மனப்பக்குவம் போகி போலீஸ் ஆட்சியாக இல்லாமல் வரும் காலத்தை சிந்தித்து செயல்பட வேண்டும்.

Tuesday, November 20, 2012

நாம் சமைத்து கொடுப்பது பெரிய தண்டனையா!


பொருள் ஈட்ட குடும்பத்தை விட்டுப் பிரிந்து இடம் மாறி போக வேண்டிய நிலை.
அங்கு  பின் அம்மா விசாரிப்பது ' தம்பி எப்படிடா இருக்கே . உடம்பை பார்த்துக்கோ . நேரத்திற்கு சாப்பிடு'
'ஏதோ இருக்கேன்மா .ஹோட்டல் சாப்பாடுதான் சரியில்லை வயிறு கோளாறு பண்ணுது அதனாலே அறையிலே தங்கி இருக்கும் நாங்கள் சேர்ந்து நாங்களே சமைத்து சாப்பிடலாமென்று  இருக்கோம்' மகன்.
 'உடம்பை பார்த்துக்கோப்பா' அம்மா
நேரம் ஆச்சும்மா வேலைக்கு போகணும் அப்புறமா பேசுறேன். மகன்.
இது நாம் கேட்ட உரையாடல்தான்.

விடுமுறைக்கு  ஊர்  வந்த பின்...
'வயிறார சாப்பிட்டு வருசமாச்சு.'  இப்படி சிலர்.
வெளிநாடு சென்று ஊர் வந்தால் கல்யாண வீட்டு பிரியாணியை சாப்பிட மிக்க ஆர்வம் . என்னதான் வீட்டில் பிரியாணி சமைத்தாலும் பண்டாரி வைத்து பெரிய  செம்பு சட்டியில் ஆக்கிய பிரியாணியை சாபிடுவது மிகவும் சுவைதான்.
உண்பது வாழ்வதற்கு . வீட்டில் இருக்கும் பொழுது நமக்கு வகை வகையாய் சமைத்து கொடுக்க வீட்டில் மகளிர் அந்த வேலையில் ஈடுபடுவதால் நமது வேலை சாபிடுவது மட்டும்தான் . வீட்டை விட்டு பொருள் நாடி வெளிநாடு சென்ற பிறகு உணவு விடுதியில்  சாப்பிட முற்பட்டால் திரட்டிய பணமும் போய் உடலும் பாதித்துவிடும் . நாமே சமைத்து சாப்பிடும் பொழுது மன மகிழ்வும் உடல் நலமும் கிட்டுவதோடு பணமும் சேமிக்க முடியும் .
மனைவியுடன் “உணவில் உப்பில்லை!  அல்லது இவ்வளவு காரமா! ,உனக்கு உன் அம்மா சமைக்க கற்றுக் கொடுக்க வில்லையா! ” இப்படி ஏக தாளமாக இளக்காரமாக பேசினோம். அதற்கு அவள் “ஏன் நீங்கள் சமையுங்களேன்” என்று ஒரு நாள் கூட சொன்னதில்லை . நாமும் ” நான் சமைக்கிறேன் பார் ” என்று சொல்ல மனமும், தைரியமும் இல்லை . அப்படி நாம் சமைத்து கொடுப்பதுதான் அவளுக்கு கொடுக்கும் பெரிய தண்டனையாக அமைந்துவிடும் என்பது மனைவிக்கு தெரிந்திருப்பதால் அவள் “ஏன் நீங்கள் சமையுங்களேன்” என்று ஒரு நாள் கூடசொல்ல மாட்டாள்.

பெண்களுக்கு தனது தாய் சொல்லித் தந்த சமையல் கலைதான் தெரியும்.  அதில் புதுமை காண நாட்டம் இருக்காது .ஆனால் ஆணுக்கோ புதுமை நாடும் நாட்டம் இருக்கும் . 'ஆட்டுக்கறி ஆனத்தில் முருங்கக்காய் போடு என்று சொன்னால்' அது அவர்களுக்கு அது பிடிக்காது .நாமோ அப்படியும் செய்து சாப்பிட்டுப் பார்ப்போமே என்ற ஆவல் அதிகமாகும் . அது மாதிரி சமைத்து பார்த்து சாப்பிடும்போது நமக்கு மிகவும் சுவையாக இருககும் .காரணம் அது நம்மால் உருவானது .பெண்கள் அதனை விரும்பினாலும் சொல்வதற்கு சிறிது தயங்கலாம். பின்பு அவர்களே அதனை தொடர்வார்கள்

சமைக்கத்  தெரியாதே என்ற கவலை வேண்டாம் . இதோ சில வீடியா உங்களுக்கு.   சமைத்து மகிழ்வோடு உணவு அருந்தி வாழுங்கள் .
இப்பொழுது மனைவியுடன் போட்டி போடலாம்!

Monday, November 19, 2012

எந்த மனிதனும் திறமையுள்ள மருத்துவரையே நாடுவான்.

பால்தாக்கரேயைக் கார்டூனிஸ்ட் என்றும் காலமிஸ்ட் என்றும் புனிதப் பசுவாக்க முயலும் ஊடகங்கள் அவரது மருத்துவர் ஒரு முஸ்லிம் எனச் சொல்லி பால்தாக்கரேயை மதச்சகிப்புத்தன்மை மிக்கவராகக் காட்ட முயல்கின்றன. தன் உயிரின் மீதும் உடல் நலத்தின்   மீதும் அக்கறையுள்ள எந்த மனிதனும் திறமையுள்ள மருத்துவரையே நாடுவான். தன் உயிர் மீது அக்கறை உள்ளவன் அதைக் காப்பாற்றுவதில் ஜாதி மதம் பார்க்க மாட்டான். அப்படித்தான் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பால்தாக்கரேவுக்கு ஜலீல் பார்கர் மருத்துவர். இதனால் பால்தாக்கரே மனித நேயமிக்க பண்பாளர் என்று நிறுவ  ஊடகங்கள் முயல்வது வெட்கக்கேடு.

மகாராஷ்டிரர் தவிர பிறர் மும்பைக்கு வருவதற்கு  விசா வாங்க வேண்டும் என்று திமிராகச் சொல்லியும்  டெல்லியில் பிறந்ததால் பெருமைப்படுகிறேன் எனச் சொன்ன ஷாருக்கான் டெல்லிக்கே போய் விடட்டும் என்று மிரட்டியும்  தாம்  முதலில் இந்தியன் பின்னரே மும்பைக்காரர் என்று கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் சொன்னதைக் கண்டித்தும் .இந்தியவின்  ஒருமைப்பாட்டைக் கேலிக்குள்ளாக்கிய நபருக்கு இந்திய தேசீயக் கொடி போர்த்தி அரசு மரியாதையுடன் தகனம்.

இந்த நாட்டின் சட்டங்களுக்கோ நீதிமன்றங்களுக்கோ கட்டுப்படாமல்  ரவுடியிஸம் செய்ததால்  போலீஸ் நெருங்கக் கூட அஞ்சும் தாதாவாக இருந்ததால்.....   ..கிருஷ்ணா கமிஷன் முடிவைச் செயல்படுத்த முடியாமல் அரசை மிரட்டியதால்........ அரசு மரியாதையுடன் சவ அடக்கம் என்றால் அடுத்த அரச மரியாதை மும்பை தாதா தாவூதுக்குக் கொடுக்கலாம்

பால்தாக்கரே  குற்றவாளி என  கிருஷ்ணா கமிஷன் முடிவு செய்தும் அவர் மீது வழக்குப் பதியப்பட்டும் கூட அவரை நெருங்க முடியாத சட்டத்தால், அரசால் . பால்தாக்கரேவுக்கு அரசு மரியாதை கொடுக்கப்பட்டு  தகனம் செய்யப்பட்டதோடு நீதியும் புதைக்கப்பட்டு விட்டது.


Read more about புதைக்கப்பட்ட நீதி
http://www.inneram.com/

கர்ப்பம் தரிக்க எந்த நேரம் நல்ல நேரம்!!



By . மயிலாடுதுறை டாக்டர்.M.Aஹாரூன்

MD(MA) D.ACU. Ph.D (Cey) MNSA (INDIA)

யுனானி – லேசர் அக்குபஞ்சர் சிறப்பு மருத்துவர்

குழந்தையின்மை என்பது ஆண் – பெண் இருவர்களில் ஒருவருக்கோ அல்லது  இருவருக்கோ ஏற்படும் உடல் ரீதியான குறைபாடு ஆகும்.

குழந்தையில்லாதவர்கள் யுனானிஇ ஆங்கில மருத்துவம், சித்தா,

ஆயுர்வேதம் இப்படி பல வகையான மருத்துவங்களை மேற்கொண்டு

குழந்தை பாக்கியம் அடைகின்றனர்.

மனித உடலில் ஏற்படும் நோய்களும், குறைபாடுகளும், நமது உடலில்

ஏற்படும் இரசாயன மாற்றமே (ஊர்நுஆஐஊயுடு ஐஆடீயுடுயுNஊநு)

என்கின்ற மேலே நான் குறிப்பிட்ட மருத்துவங்கள். இதன்படி

மூலிகைகள் மற்றும் செயற்கை இரசாயனங்களை கொடுத்து குழந்தை

பாக்கியம் அடைய செய்கின்றனர்.

தாய்மைக்கு சில வழிகள்

 தாய்மைக்கு சில வழிகள்

சொல்லித்தெரிவதில்லை எனும் "கலை" சிலருக்கு சொல்லித்தான் புரிய வைக்கணும்

2012 New Palestine Video - Sami Yusuf ft Outlandish - Try Not To Cry

Sami Yusuf ft Outlandish 'Try Not To Cry'
The suffering inflicted by Israel on the Palestinian people shows that it has forgotten the Jewish scriptures, Archbishop Emeritus Desmond Tutu said on Saturday.

"They have forgotten their own history. They have forgotten what their own prophets have said about our God," Tutu said in his opening address to the International Russell Tribunal on Palestine.

"We worship a God that is naturally biased in favour of the suffering, the underdog, those who are suffering underfoot ... God is always on the side of the oppressed. In the Holy Land, the Palestinian people are the ones suffering."

Tutu said it pained him that a people who went through great suffering could in turn cause others to suffer.

"There is a great deal of preventable suffering being caused by people who themselves suffered so deeply ... who have gone through a crucible of suffering.

திரும்பவும் வந்து சரி பார்த்து தொடர்கின்றேன்

கேஸ் கிடைக்காது விறகு வாங்கணும் ,தண்ணீர் கிடைக்காது கோகோகோலா அல்லது தாகம் தீர்க்க டாஸ் மார்க் கடையில் பீர் வாங்கணும். காலைக் கடன் முடித்து சுத்தப்படுத்த தண்ணீர் இல்லாததால் டிச்சு தாள் வாங்கணும் இந்த கமென்ட் அடிப்பதற்குள் மின்சாரம் போச்சு தவறு திருத்தமுடியாது , காலை ஆறு மணிக்கு போன மின்சாரம் ஒன்பதுக்கு வந்து திரும்ப 12 க்கு போய் ஆறு மணிக்கு வந்து முப்பது நிமிடம் இருந்து போய்விட்டது .திரும்ப வருமோ! வராதோ! வந்தாலும் மணிக்கு ஒருதடவை வந்து பூச்சாண்டி காட்டும். மின்சாரம் இருந்தால் திரும்பவும் வந்து சரி பார்த்து தொடர்கின்றேன்.

Sunday, November 18, 2012

நாங்கள் (காசா ஒரு பாடல்) கீழே போக மாட்டோம் - மைக்கேல் ஹார்ட் - அதிகாரப்பூர்வ வீடியோ

நாங்கள் (காசா ஒரு பாடல்) கீழே போக மாட்டோம் - மைக்கேல் ஹார்ட் - அதிகாரப்பூர்வ வீடியோ Michael Heart - Interview - Video Bio - Part 1

உங்க ரயில் எங்கேயிருக்குன்னு இனி கூகுல் மேப்பிலேயே பார்க்கலாம்

நான் சென்ற புதன்கிழமை சென்னையிலிருந்து பெங்களூருக்கு வர மாலை 5:25 மணிக்கு ஒரிசாவில் இருந்து வரும் ஒரு  சிறப்பு வண்டியில் டிக்கட் பதிவு செய்திருந்தேன்.  சென்னை நகரப் பேருந்தில் அடிச்சு பிடிச்சு அங்கே போனதுக்கப்புறம்தான் சொல்றாங்க அந்த வண்டி மூணு மணி நேரம் லேட்டுன்னு.  அப்புறம் கடைசியா 9:45 மணிக்குத்தான் வந்தது.  இது முதலிலேயே தெரிஞ்சிருந்தா நான் வீட்டிலேயே இருந்திட்டு வந்திருப்பேனே என்று நினைத்தேன்.  இனி அந்த பிரச்சினை இல்லை, எங்கே வரும், எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய  நேரத்துக்கு ஒருபோதும் கரெக்டா வராது, எப்பவுமே தப்பான நேரத்துக்குத்தான் வரும் என்ற நிலையில் உள்ள உங்கள் ரயில் எந்த ஒரு நேரத்திலும் எங்கேயிருக்குன்னு இனி இணையத்திலேயே தெரிஞ்சுக்கலாம்!!  இந்தத் தகவல் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் புதுப்பிக்கப் படும்,  CRIS என்னும் ரயில்வே பொதுத் துறை நிறுவனம் ரயில் யாத்ரியுடன் இணைத்து தயாரித்துள்ள இந்த செயலி [Application] இணைய இணைப்புள்ள கைபேசியிலும் செயல்படும்.
நீல நிறத்தில் உள்ள ரயில்கள் சரியான நேரத்திலும், சிவப்பு வண்ணத்தில் அம்புக்குறியிட்ட ரயில்கள் கால தாமதமாகவும் இயங்குகின்றன.

சொந்த வீடு (கவிதை)


வரைமுறையாய் கட்டிய வீட்டை
அறைஅறையாய் சென்று
கண் குளிர ரசித்தான்...!

அரையாண்டு உழைப்பில்
வானுயர்ந்த தன் கனவை
அணுவணுவாய் புசித்தான்...!

தரைமுதல் தளம் வரை - பல
தலைமுறை தாங்கும்படி
நிலையாய் கட்டுவித்தவன்..!

நரைவிழுந்த அப்பாவுக்கு
நடுக்கூடப் பக்கத்தில் - தனி
அறையை ஒப்புவித்தான்..!

மனைவி மக்களுக்கு
மேல்தள அறைதனை - அவரவர்
விரும்பியபடி தந்தவன்...

ஆளுக்கொரு அறையை
ஆளச்செய்து விட்டு
ஆசையாய் கட்டிய இல்லத்தில்
தான் மட்டும் தங்காமல்...

தன் பிழைப்பைத் தேடி  - பொருள்
ஈட்ட பறந்து சென்றான்
கட்டிய வீட்டின் கடனை அடைக்க
அயல்நாடுக்கு ,,,,!

by Suresh Subramanian
ரிஷ்வன் கவிதைத் துளிகள்
Source : http://www.rishvan.com

சுமைதாங்கியாக வாழ்வதே சுகம் .

உறவின் முதியவர் ஒருவரை வழியில்  சந்திதேன்
'மாமா ஒரு ஆலோசனை உங்களிடமிருந்து தேவை'
 'என்ன சீக்கிரம் சொல்லுங்கள்  எனக்கு ஓய்வில்லை போக வேண்டும்'
'எனது மகனுக்கு நிறைய பேர் பெண் தருவதாக சொல்கிறாகள். பையன் அதிகமாக படித்து நிறைய சம்பாதிகின்றான் .
உறவுக்காராகள் வேறு மிகவும் நிற்பந்திகிரார்கள் உங்கள் ஆலோசனை சொலுங்களேன்'
'தம்பி முதலில் நீ உனது இறுதி கால வாழ்வுக்கும் மற்றும் நீ அந்த பையனுக்கு செலவு செய்த பணத்தையும் அவனது வருமானத்திலிருந்து சேர்த்துக் கொள் பின்பு அவனுக்கு திருமணம் செய்து வைப்பதைப்  பற்றி முடிவு செய்யலாம்'
என்று சொல்லிவிட்டு தொடர்ந்தார்
'நான் உறவினர் அல்லாத  பெண்ணைத்தான் எனது  பையனுக்கு மணமுடித்தேன் .இப்பொழுது அந்த பெண் நினைத்தபடி பையன் மாறி விட்டான் அத்துடன் அந்த பெண் ஒரு நாளைக்கு ஒன்று சொல்கின்றது .அதனை புரிந்துக் கொள்ளவே முடியவில்லை . இன்னும் நான் சுமைதாங்கியாக இருகின்றேன், அதனால்
 தெரியாத கழுதையை விட தெரிந்த கழுதை நல்லது. தெரிந்த கழுதை எப்படி உதைக்கும் என்பது தெரியும் . இதை நினைவில் வைத்து செயல்படு' என்று சொல்லிவிட்டு அடுத்து நான் பேசுவதற்குள் நடையைக் கட்டினார்.
தெரிந்த கழுதையிடம் கேட்டது தவறாக போய் விட்டதே மனதை குழப்பி இதயத்தில் சுமையைத் தந்து விட்டாரே
என்று மனமுடைந்து எனது நடையை தொடர்ந்தேன் .கண்டவர்களிடம் ஆலோசனைக் கேட்பது ஆபத்தாகிவிடும் என்பதை அறிந்தேன்.
 

 நாமே நம் மனைவிக்கு அடிமை நாம் சொல்வதையா அவள் கேட்கப் போகிறாள் முடிவை மனைவியே எடுக்கட்டும். நாம் எப்போழுதும்போல் சுமைதாங்கியாக இருப்போம் .இதுவே எனது முடிவு.

மனைவி சொல் கேட்டு மானமும் போச்சு வாழ்வும் போச்சு !

தெரு ஓரம் அழகிய வாகனம்
ஓடிப்போய் ஓர் அலசல் பார்வை
உறவினர் ஓசைக் கேட்டு உறங்க
மென்மையான ஒலி எழுப்ப
விழித்துப் பார்த்து வாழ்த்து சொன்னார்

வாங்க வாங்க வீடு வரை வாங்க
வார்த்தை மதித்து வந்தார்
கட்டிய வீட்டை காட்டி விளக்கம் கொடுத்தேன்
படுக்கை அறை அதில் குளியல் அறை
 பெரிய கூ டம் சின்ன கூ டம்
அடுப்பங்கறை அதில் பொருட்கள் வைக்க இணைப்பு அறை
மகளுக்கு, மகன்களுக்கு தனித் தனி அறை
வீடனைத்தும் சலவைக் கல் பதிப்பு
பார்த்தார்! அங்கும் இங்கும் பார்த்தார்
தொழ வேண்டும் தொழ அறை உண்டா! என வினவினார்
'பெரிய அறையில் தொழலாம்' என்றேன்
'வேண்டாம் !  அருகில் பள்ளி அங்கு தொழ செல்கிறேன்' என்றார்

புறப்பட்டு முன் ' உங்களிடம் ஓர் உதவி'
'சொல்லுங்கள் நேரம் ஆனது '

வயதிற்கு வந்த மகள்களுக்கும் மகன்களுக்கும் திருமணம் செய்து வைக்க விரும்பினேன்
வாழ்கைப் பட்டவள் நல்ல வீடு இருப்பின்  நல்ல வரம் கிடைக்குமென்றாள்
வசதியாக வீடு கட்டியதில் சிறிய கடன்
கட்டிய வீட்டைப் பார்த்து செலவந்தர்கள் ஓடிவர
மக்களுக்கு சிறப்பாக திருமணம் முடித்ததில் பெரிய கடன்

Saturday, November 17, 2012

சீனா பயண அனுபவம்! - (பகுதி 9)

                                         [ 9 ] பயண அனுபவங்கள் – சீனா

ஸ்ஸீ” “ ஸ்ஸீ “ Xie Xie  [ நன்றி வருகிறேன் ] எனச்சொல்லி மகிழ்ச்சியோடு விடை பெற்றுக்கொண்டு அடுத்த பூத்திற்கு சென்று கொண்டு இருந்தேன். அப்போது எனக்கு எதிரே இன்ப அதிர்ச்சியாக எனது நிறுவனத்தின் உரிமையாளர் !

பரஸ்பரம் நலம் விசாரிப்புகளை முடித்துக்கொண்டு தான் வழக்கமாக தங்கி வரும் ஹோட்டலைப் பற்றிக் கூறினார். இங்கே ஒன்றைக் குறிப்பிட ஆசைப்படுகிறேன். வணிகச் சந்தைகள் நடைபெறும் தினங்களில் குவாங்சோ நகரிலுள்ள தர சான்றிதழ் பெற்றுள்ள அனைத்து தங்குமிடங்களிலும் வாடகையை கணிசமாக உயர்த்திருப்பார்கள். உதாரணமாக சாதாரண நாட்களில் இரன்று மூன்று தர சான்றிதழ் பெற்றுள்ள தங்குமிடங்களில் நாள் ஒன்றுக்கு USD 100 என்றால் வணிகச் சந்தை நடைபெறக்கூடிய தினங்களில் USD 500 என நிர்ணயித்து இருப்பார்கள். எனது நிறுவனத்தால் எனக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் நான் தங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளேன். காரணம் செலவீனங்களை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பாதுகாப்பானதாகவும் இருக்கும். மேலும் சுயமாக சமைத்து உணவருந்துவதற்கும் ஏற்றதொரு இடமாக இருக்கும். ஏராளமான தொழிலதிபர்கள் தங்களின் தொழில் நிமித்தமாக வருகை தரும் போது அவர்கள் தங்கிச்செல்வதற்கு இது போன்ற அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு நிறுவனங்களின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து பூத்துகளுக்கும் செல்ல வேண்டியிருப்பதால் தனித்தனியே கவனம் செலுத்துவது என்று முடிவு செய்து ஆளுக்கொரு பகுதிகளை பிரித்துக்கொண்டோம்.

சற்று சிந்தியுங்கள் !

பிறப்பது உறுதியில்லை இறப்பது உறுதி!

இருக்கும் வரை பெயர் சொல்லி அழைப்பார்கள். இறந்த பின் அவருக்கு வரும் பெயர் 'உடல்' 'பிணம்' 'மையித்'. அவர் அல்ல அது .
அது நம்மை கடந்து செல்லும்போது யாராக இருந்தாலும் எழுந்து நின்று மரியாதை செய்வது நம் கடமை .
மனிதனின் தீர்ப்பு தவறாக இருக்கலாம் .இறைவன் தீர்ப்பு தவறாக இருக்க முடியாது
 அல்லாஹ் தனது திருமறையிலே அல்அஸ்ர் எனும் 103 வது அத்தியாயத்தில், எந்தக் காலத்தை மனிதன் வீணடித்துவிடக்கூடாதோ அந்த காலத்தின்மீது சத்தியமிட்டு கூறுகின்றான்.
''காலத்தின் மீது சத்தியமாக, மனிதன் நட்டத்திலிருக்கிறான். எவர்கள் விசுவாசங்கொண்டு நற்கருமங்களைச் செய்தும், சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும், பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அத்தகையோரைத் தவிர''

 மரணம் ... ஒவ்வொரு ஆத்துமாவும் மரணத்தை சுவைத்தே தீரும் !

.ஒருவர் தவறு நமக்கு வழி காட்டியாக முடியாது.
இறந்த உடலை திட்டுவது நமது பண்பாடு அல்ல .
இறைவன் முற்றும் அறிந்தவன்

"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும். (திருக்குர்ஆன் 42:43)

“இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன். ”(திருக்குர்ஆன் 24:22)

மீண்டும் பேசுங்கள் மத நல்லிணக்கவியலாளர்களை அழைத்து !

புதிய தலைமுறை" தொலைகாட்சி "நேர்பட பேசு" நடிகர் விஜய் வீட்டு முன் நடந்த போராட்டம் பற்றிய விவாதம் பல கேள்விகளை எழுப்பு
கிறது.

1- ஷாஜி,அஜயன் பாலா, மனுஷ்ய புத்திரன் மூவரும் திரைத்துறை சம்பந்தப்பட்டவர்கள்.

2- வணிக ரீதியாக நடந்தது என்பதை எந்த முறையிலும் ஏற்கவியலாது.

3- ஷாஜி இரண்டு முறை பாரக் ஒபாமவை முஸ்லிம் என்று வலியுறுத்தும் படியே ஆலாபணை செய்து கொண்டிருந்தார்.

4- அரசியல் நோக்கம் என்பது போராட்டத்தை உணர்வுகளை மொக்கை படுத்தும்படி பேசியதும் சரியல்ல.

5- மனுஷ்ய புத்திரன் நடுநிலைமையோடு பேசியது பாராட்டத்தக்கது.

6- தமிழ் சினிமா என்பது மிகப்பெரிய குப்பைக்கூடமாகி விட்டது என மனுஷ்ய புத்திரன் கூறியது நல்ல பதிவு.

7- ஒவ்வொரு திரையரங்குகளுக்கு முன்னால் போராட்டம் நடத்தியிருக்கவேண்டும் என அஜயன் பாலா கூறியது "சட்ட ஒழுங்கு" பிரச்னையை கொண்டு வருவதை மறந்தது ஏன்?

8- நமது பெரும்பாலான இயக்குனர்கள் சமூக அறிவில்லாமல்தான் படம் எடுக்கின்றனர் ( மனுஷ்ய புத்திரன்)

9- "டேம் 999" ஐயும் "துப்பாக்கி"யையும் ஒப்பிட்டு பார்த்தது சரியல்ல.

10- படங்கள் வந்தபோது, வந்த பின்னரும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன என்பதை எல்லோரும் மறந்தது ஏனோ?

(வசூல் ராஜா பெயருக்கே எதிர்ப்பு)
(வாட்டர்" ஷூட்டிங்கையே நடத்த விடாமல் தடுத்தது)

ஆக மொத்தம் நேர்பட பேசியது நேரம் கடக்க பேசியதானது வருந்த்தத்தக்கது. மீண்டும் பேசுங்கள்
முஸ்லிம் சமூகவியல், மத நல்லிணக்கவியலாளர் களை அழைத்து.

 
- Zafrullah Rahmani

தயவுசெய்து கீழ் உள்ளதை சொடுக்கி காணொளி  பாருங்கள் 
துப்பாக்கி படத்தின் தாக்கம் புதிய தலைமுறையின் நேர்...

மை நேம் ஈஸ் கான்!

சரியாக எத்தனை ஆண்டுகளுக்கு முன்பாக என்பது நினைவில்லை. 1999 உலகக்கோப்பை போட்டியாக இருக்கலாம். இந்தியா-பாகிஸ்தான் ஆடும் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது. வெற்றி நிலை மாறிக்கொண்டே இருந்தது. அண்ணாசாலை விஜிபி ஷோரூமுக்கு முன்பாக சாலையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தியா தோற்பது போன்ற ஒரு சூழல்.

நடுத்தர வயதுடைய ஒருவர் வெறுப்பாக சொன்னார். “துலுக்கப் பசங்கள்லாம் கொண்டாடுவானுங்க! பாகிஸ்தான் ஜெயிக்கப் போவுது!!” இத்தனைக்கும் அப்போது இந்திய அணிக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்தவர் முகம்மது அசாருதீன்.

இறுதியில் வென்றது இந்தியா. சாலை என்று பாராமலும் ‘ஹூர்ரே’ என்று குரலெழுப்பி, ஹைவோல்டேஜ் மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்தவர் கமெண்டு அடித்த நடுத்தர வயதுக்காரர் அல்ல. அவருக்கு அருகில் இருந்த இளைஞர். தலையில் வெள்ளைத் தொப்பி. திருவல்லிக்கேணிகாரராக இருக்கலாம்.

நியாயமான காரணங்கள் ஏதுமின்றி, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இஸ்லாமியரை இழிவுபடுத்தும் தேசமாக இந்தியா இருக்கிறது. ‘பாகிஸ்தான் ஜெயிக்க வேண்டும்’ என்று சொல்லக்கூடிய ஒரு இஸ்லாமியரை கூட இதுவரை நான் சந்தித்ததேயில்லை. ஒரு இஸ்லாமியனாக பிறந்திருக்கக் கூடாதா? என்று நான் ஏங்கியிருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள்தான் அனேகம்.

* - * - * - * - * - *

உன்னுடன் வருவது யார் ?

இறுதி  வரை என்ற வார்த்தை பல காரணங்களுக்காக   பயன்படுத்தப் பட்டாலும் இறப்புதான்   இறுதி என்று நாம் எண்ணுகின்றோம் . இதய‌ம் துடி‌க்கவில்லை, செ‌ல்க‌ளி‌ன் இய‌க்க‌ம் ‌நி‌ன்று போனது ‌‌அதனால்  மரண‌‌ம். அந்த இறப்பும்,மரணமும்  இறுதி இல்லை என நம்புவதும் உண்டு. மறுலோகம் என்பர் மார்க்கம் பேசுபவர் .அதை நம்பாதவர் இயற்கை என்பர் .
மடிதல் என்று கிடையாது உரு மாறுகின்றது. இலை விழுந்தால் எரு ,  அவ்வளவுதான் .  ஏன் இறப்புக்கு நாம் பயப்படுகின்றோம் .  வாழ்வே மாயம்,  பின்  ஏன் இத்தனை விளையாட்டு. தேவை தான் !
உலகம் உருள்வதுபோல் மனித வாழ்வும் மற்ற பிறவும் உருள்வதற்காக.
பால் உணர்வால் உலகம் உருள்கின்றதா?  அதற்கு பணம், அதிகாரம், புகழ் தேவையா !
பட்டாமணியார் வீட்டில் இறப்பு விழுந்தால் ஆயிரம் பேர் பட்டாமணியார் இறந்தால்  பத்து பேர் இது அறிந்த உண்மை .
என்ன ஆனது பணமும், புகழும், அதிகாரமும் .

உன்னுடன் வருவது யார் ?

அன்றே பட்டினத்தாரின் கவிதை மனித வாழ்வினை அறிய வைத்தது .
“அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி அம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு
கைத்தலை மேல்வைத் தழுமைந் தருஞ்சுடு காடுமட்டே,
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே.”



''இறந்தவரை மூன்று விஷயங்கள் பின் தொடர்கின்றன. அவை அவனது குடும்பம், அவனது சொத்து, அவனது செயல்கள் ஆகும். இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டும் தங்கி விடுகிறது. அவனது குடும்பமும், அவனது சொத்தும் திரும்பி விடுகின்றன. அவனது செயல் தங்கி விடுகிறது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரளி)
நூல்கள்: புகாரி , முஸ்லிம்


துப்பாக்கி படத்தின் தாக்கம் புதிய தலைமுறையின் நேர்பட பேசு



"மசாலா கருத்துக்கள்" மக்கள் மத்தியில்.  தொலைக் காட்சியில் விவாதம். கருத்து சுதந்திரத்தின் எல்லை. உன் உரிமை என்னுரிமையை பாதிக்காது பார்த்து கொள்வது உன் கடமை . அடுத்தவர் மனதை பாதிக்கும் படி நடப்பதும் பேசுவதும் படம் எடுப்பதும் உரிமை மீறல்தான்.

மனுஷ்ய புத்திரன் நடுநிலைமையோடு பேசியது பாராட்டத்தக்கது.

Friday, November 16, 2012

புனித நபி பற்றி தகவல் தரும் மிக அழகான சிலைடு ஷோ(ஆங்கிலத்தில்)



தகவல் தந்தவர் A.H  பாருக் அலி

துப்பாக்கி காட்டி பணம் பண்ணும் கூட்டம் அழிவுக்கு வித்திடுகின்றது

துப்பாக்கி கலாசாரம் மனதில் இன்னும் இருந்துக் கொண்டே இருக்க அதை வைத்து தானும் பிழைக்க அலைகிறது சில மனித கூட்டம் மற்றும் சில நாடுகள் .
மக்கள் வாழ்விழந்து வாடும் நிலை. அகதிகளாக அலையும் நிலை. மொழிக்காகவும் சுமரியாதைக்காகவும் போராடும் நிலை . எங்கு பார்த்தாலும் அகதிகள் .
 

இதே நிலை நபிகள் நாயகத்திற்கு மற்றும் அவர்கள் தோழர்களுக்கும் வந்தது . ஓர் இறைக் கொள்கையை எடுத்துச் சொல்ல  முற்படும்போது . மக்காவை விட்டு அகதியாக மதினா சென்றார்கள் .இறைவனது நாட்டம் மதீனா மக்கள் நாயகத்தையும் மற்றும் அவர்களது தோழர்களையும்  நேசத்தோடு வரவேற்றார்கள் . அவரகளது அன்பு மொழி மற்றும் கொள்கையின் சிறப்பு அவர்களுக்கும்  மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் மிகப் பெரிய அழியாத வெற்றியை தேடித் தந்தது. இன்னும் தந்துக் கொண்டே இருக்கின்றது . இது தனது சுய லாபத்திற்காக நடந்தது அல்ல . மக்கள் நல் வாழ்விற்காக மற்றும் இறைவனது நேசத்திற்காக .

மனிதன் தனது சுய நலத்திற்க்காக துப்பாக்கியை படமாக்கி விளையாடுகின்றான். இதன் முடிவு அழிவு நிலையை மக்களுக்கு ஊக்குவிக்கின்றது .துப்பாக்கி காட்டி பணம் பண்ணும் கூட்டம் அழிவுக்கு வித்திடுகின்றது
துப்பாக்கி விளமபரம் வேகமாக நடைபெறுகிறது தீபாவளி முடிந்த பின்னும் .நாம் என்ன அமேரிக்காவில் வாழ்கிறோமா! வெக்கமாக, கேவலமாக இருக்கிறதுஒரு நடிகர் முஸ்லிமாக நடிக்கப் போகிராராரம் முஸ்லிம்களை திருப்திப்படுத்த. யாரும் முஸ்லிமாக நடிக்க வேண்டாம் .முஸ்லிமாக வாழுங்கள் .

 வெத்துத் துப்பாக்கியை வைத்து பையன்கள் விளையாடுவதை பார்த்தேன். பயலுகள் சிறு வயதிலேயே துப்பாக்கி பிடிக்கும் குணம் வந்து கெட்டு விடுவார்கள் என நினைத்து பிடுங்கி தூர வீசினேன் .அப்பொழுதான் நிம்மதி ஆனது மனம் .

Thursday, November 15, 2012

மறுமலர்ச்சியை எதிர்நோக்கிமற்றுமொரு புத்தாண்டு

உலக மக்களிடையே மலர்ச்சியை எதிர்நோக்கி புதுவருடப்பிறப்பு என ஆங்கில நாட்காட்டியின் அடிப்படையிலான ஜனவரி மாதத்தின் முதல்நாள் பல்வேறு அனாச்சார களியாட்டங்களுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.



உலகின் அதிவேக வளர்ச்சியில் தங்களையும் பிணைத்துக் கொண்ட, இந்நவீன உலகின் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்களும் அதே தினத்தைப் புதுவருடப்பிறப்பாக மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவதும், இஸ்லாமிய வருடப்பிறப்பான இச்சிறப்புமிகு முஹர்ரம் மாதத்தில் எம்பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட ஆஷூரா, தாசுஆ தின நோன்புகளை நோற்காமல் அல்லது இம்மாதத்தின் மகத்துவத்தை உணராமல் ஏதோ  கடமைக்காகச் செய்வதுபோல் நோன்பு வைப்பதும் எங்கும் பரவலாக இன்று காணமுடிகிறது.

இஸ்லாமிய சமூகத்தின் ஒரு பெரும்பகுதி ஒருபுறம் அன்னியக் கலாச்சாரத்தில் வீழ்ந்து இஸ்லாமியக் கலாச்சாரத்தை மறந்து கொண்டிருக்கும் அதேவேளை, இச்சமூகத்தின் மற்றொரு பெரும்பகுதியோ இஸ்லாம் வெறுக்கும் பல்வேறு அனாச்சாரச் செயல்களில் தன்னை ஈடுபடுத்தி, மற்றவர்களின்முன் இறைவன் அளித்த உயர்ந்த வாழ்க்கை நெறியைக் கேலிக்குள்ளாக்கி வருகின்றது.

இவ்வாறு முஸ்லிம் சமூகத்தை மேற்கத்தியக் கலாச்சாரங்கள் கொள்ளை கொண்டிருக்கும் இந்நவீன காலகட்டத்தில் ஒவ்வொரு முஹர்ரம் மாதத்தின் பிறப்பும், இஸ்லாமிய உலகை நோக்கி இழந்து போன தங்களின் கலாச்சாரத்தை மீண்டெடுக்க மௌன அழைப்பு விடுத்து அமைதியாக சென்று கொண்டிருக்கின்றது.

ஒவ்வொரு முஹர்ரம் மாதத்தின் பிறப்பும் இஸ்லாமிய உலகிற்குப் புத்துணர்ச்சியைத் தந்து, வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைப்பதற்கு பதில் எவ்வித உணர்வுமின்றி சாதாரணமாகக் கடந்து செல்வதற்குக் காரணம் இம்முஸ்லிம் சமூகம் சங்கைமிக்க முஹர்ரம் மாதத்தின் மகத்துவத்தைச் சரியாக உணராததும், இஸ்லாமியக் கலாச்சாரத்தைப் பேணுவதன் கட்டாயத்தை அறியாததுமாகும்.

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு:

இம்முஹர்ரம் மாதம் அல்லாஹ்வின் மாதம் என எம்பெருமானார் (ஸல்) அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட சிறப்புமிகு மாதம் ஆகும்.

முஹர்ரம் மாதத்திற்கென்று பல்வேறு தனிச்சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் தலையாயவை இரண்டாகும்.

Wish you a very happy, blessed new Hijri Islamic New year

Wish you a very happy, blessed new Hijri Islamic New year   May Allah bless each and everyone of you during this blessed New Year!

JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

 

Wednesday, November 14, 2012

நான் ஒரு பெண்!


நான் ஒரு பெண்!

o நான் ஒரு பெண் என்பதால் இரண்டாம் பாலினத்தைச் சேர்ந்தவள்.

o நான் ஆண்களின் உலகில் பிறந்தேன். ஆண்களின் மொழியை கற்றுணர்ந்தேன். ஆண்களின் இல்லங்களில் வசிக்கிறேன். ஆண்களின் பள்ளிகளில் படித்து, ஆண்களின் அலுவலங்களில் பணிபுரிந்து, ஆண்கள் விதிக்கும் விதிகளைக் கடைபிடித்து வாழ்கிறேன்.

o திரும்பத் திரும்ப ஒரே பாடத்தைத்தான் சிறுவயதில் இருந்து கற்றுக்கொடுக்கிறார்கள். பிடிவாதம் பிடிக்காதே. விட்டுக்கொடு!

o என் இளைய சகோதரனும்கூட என் மீது அதிகாரம் செலுத்துவதை என்னால் தவிர்க்க இயலவில்லை.

o நான் அதிகம் தூங்கக்கூடாது. ருசியான உணவை நாடக்கூடாது. சத்தம் போட்டுப் பேசக்கூடாது.

o நான் வீட்டு வேலைகளை பழகிக்கொள்ளவேண்டும். என் சகோதரர்களுக்கு அந்த அவசியம் இல்லை.

o எனக்கு மட்டும் Good Touch, Bad Touch கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். என்னை அணுகுபவர்களிடம் நான் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

பாலியல் விருப்பம் இனிய இன்பங்களுள் தலையானது.

 பாலியல் விருப்பம் என்பது தண்ணீர் அருந்த அல்லது உணவு உண்பதற்கு ஆசைப்படுவதுபோல் அல்ல. உடல் நெருக்கம்  வெறுமனே  உடலோடு இச்சைகாக இணைவதல்ல .அது  உறவை மேன்மை வேண்டி நிகழும் நிகழ்வு .தாம்பத்ய வாழ்க்கையில் அனுபவிக்கக் கூடிய இனிய  இன்பங்களுள் தலையானது பாலியல் (உடலுறவினால்) அடையும் இனிய மகிழ்வு . இதுதான் கணவன் மனைவி இருவரையும் ஒருமனப்படுத்துவது, பரவசப்படுத்துவது, ஒன்றுபட்டுவாழ வைப்பது. ஒருவருக்காக மற்றவர் தியாகம் செய்யும் மனோவுறுதியைக் கொடுப்பது. இந்த சுகத்தை எதிர்நோக்கியே பெரும்பாலானவர்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

இஸ்லாமிய திருமண ஒப்பந்தம் ஒரு வரையறைக்குள் உட்படுத்தப்பட்டது.ஒரு பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் உள்ள கடமையை முக்கியத்துவம் கொடுப்பதாக உள்ளது . கணவன் மனைவி  இருவருக்கும் நிகழும் உடலுறவு உன்னதத் தன்மையுடையதாக உள்ளது . உறவினால் உண்டாகும் குழந்தையை பாதுகாக்க வேண்டிய கடமை இருப்பதால் அதில்  வெறும் பாலியல் உறவாக மட்டும் நினைத்துவிட முடியாது . பாலியல் உறவு உடற்சேர்கையாக மட்டும் கருதக் கூ டாது அது அதற்கு மேல் பரம்பரை என்பதில் முக்கிய இடம் வகிக்கின்றது. காமத்தினால் ஏற்படும் நிகழ்வல்ல .காதலினால் நிகழும் கிளர்ச்சி அது பரம்பரையை வளர்க்கும் முயற்சி . உணர்ச்சி இருபாலருக்கும் இருப்பது இயல்பு. உணர்ச்சி அற்ற வாழ்வு விரயம்.அதனால்தான் இறைவன் இருபாலருக்கும் உணர்ச்சியை  தூண்டும்  சக்தியை  நமக்குத் தந்து  அதன் வழியே  குடும்பங்கள் செழிக்கவும், தம்பதிகள் மகிழ்வாக  இருக்கவும், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும், உலகம் தழைக்கவும் வைக்கின்றான்.

Tuesday, November 13, 2012

சீனா பயண அனுபவம்! - (பகுதி 8)

                                               [8] பயண அனுபவங்கள் – சீனா


சுவையான ‘கிரீன் டீ’ யை அருந்திக்கொண்டே எங்களின் பேச்சு சந்தை நிலவரம், எரிபொருள் மற்றும் காப்பர் போன்றவற்றின் விலையேற்றத்தைப் பற்றி அமைந்தது.

அப்போது எனது பேச்சு ‘எக்ஸ்க்ளுசிவ்’ பற்றி அமைந்தன. தொழில்துறையில் எனக்கு பிடிக்காத வார்த்தை என்றால் அது ‘எக்ஸ்க்ளுசிவாகத்தான் இருக்கும் காரணம் உற்பத்தியாளர்கள் ‘எக்ஸ்க்ளுசிவ்’ என்ற பெயரில் தங்களின் நிறுவனங்களில் உற்பத்தி செய்யக்கூடிய ஒரு பொருளின் ஏக போக உரிமத்தை நிபந்தனையின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சந்தைகளின் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்குவதே ! இவ்வாறு செய்வதனால் வாடிக்கையாளர்கள் அப்பொருளை விருப்பம் போல் விலையை நிர்ணயித்து சந்தைகளில் விற்பனை செய்வதற்குரிய வழிமுறைகள் ஏராளமாக இருப்பதும், இதனால் பாதிக்கப்படுவது நுகர்வோர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

முழுமையான நெருக்கம் கிடைக்க முடியுமா!

 ஆத்ம நண்பன் , உயிருக்கு உயிரான தோழன், இவர்களிடம்  முழுமை உண்டா!

அறிவை சொல்லித் தந்த ஆசிரியர் எனப்படுவோர்  இந்த வட்டத்தில் வருவாரா!

இனிய வாழ்வை தருபவராக கருதப்படும் மனைவியினால் முழுமையான வாழ்வை பெற்றுவிட முடியுமா ! 

பாசத்தை தந்த பெற்றோர் நம் மனதில் முழுமை பெற்று விடுவார்களா!

யாரிடம்தான் முழுமையான நெருக்கம் கிடைக்கும்!

நண்பனிடம்  கருத்து ஒற்றுமை கிடைக்கும். உயிரைக்கொடுத்து உதவுவார்கள் பெற்றோர்கள். மனைவி நமக்கு நல்லது கெட்டதுகளில் பங்கு பெறுவாள் மற்றும் உடலோடு ஒன்ற உடலுறவு தருவாள் .  பின் யாரிடம்தான் முழுமை கிடைக்கும்.!
முழுமையான நெருக்கம் கிடைக்க ஆசைப்பட்டு நாம் நொறுங்கி விட வேண்டியதுதான்.
முதுமை கிடைத்தாலும் முழுமை கிடைக்காது.
முழுமையான நெருக்கம் என்பதின் இலக்கணம்தான் என்ன ?
முழுமை என்பது ஆன்மிகம் ,உணர்வு அறிவு உடல் உறவு இத்தனையும் உள்ளடக்கியதுதான்

ஆன்மிகம் அடங்கிய ( spiritual)  உணர்ச்சி வயப்பட்ட (emotional  ) அறிவு சார்ந்த (intellectual ) உடல் உறவு (physical relation  ) இத்தனையும் உள்ளடக்கிய உறவோடு நமக்கு கிடைக்கும் மனிதரை பெற முடியுமா?  

குர் ஆனை புரிந்து கொள்ள மொழிபெயர்ப்புகள் போதாது!


குர் ஆனை புரிந்து கொள்ள மொழிபெயர்ப்புகள் போதாது!

திருக் குர் ஆனை நாம் ஆழமாக புரிந்து கொள்ள – அதன் மொழிபெயர்ப்புகள் போதாது என்பது ஏற்றுகொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும்.

ஒரு எடுத்துக் காட்டு:

வ ஆஷிரூஹுன்ன பில் ம’-ரூஃப்! – இது சூரத்துன் நிஸாவின் 19 வது வசனத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே.

இதற்கு எப்படி மொழிபெயர்க்கப் படுகிறது என்று பார்ப்போமா?

“இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் – இது தமிழில் குர் ஆன் வலை தளத்தின் மொழிபெயர்ப்பு. ஜான் ட்ரஸ்ட் மொழிபெயர்ப்பும் இதுவே.

“மேலும் அவர்களுடன் அழகான முறையிலும் நடந்து கொள்ளுங்கள்” – இது சவூதி அரசால் வெளியிடப்பட்டுள்ள சங்கைமிக்க குர் ஆன் மொழிபெயர்ப்பில் இருந்து.

“அவர்களோடு நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள்.” – இது IFT – யின் திருக்குர் ஆன் மொழிபெயர்ப்பிலிருந்து.

“மேலும் அவர்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத்தன்மையுடனும்) நடந்து கொள்ளுங்கள்” – இது அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்களின் மொழிபெயர்ப்பு.

ஆனால் அரபி மூலத்தில் உள்ள இரண்டு சொற்களையும் நாம் சற்று ஆழமாக இங்கே பார்ப்போம்.

ஒன்று: ஆஷிர் (அய்ன் – ஷீன் – ரா)

இம்மூலச் சொல்லிலிருந்து பிரிகின்ற பல சொற்களுடன் திருமறை வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

முதலில் ஆங்கில அகராதி மொழிபெயர்ப்பை எடுத்துக் கொள்வோம்.

‘Ashara – to divide into tenths; to be on intimate terms, associate (closely with someone). associate with one another

‘Ishrah – (intimate) association, intimacy, companionship, relations, (social) intercourse. company. conjugal community, community of husband and wife

‘Ishaar – with young, pregnant(animal)

‘Asheer – companion, fellow, associate, friend, comrade

‘Asheerah – clan, kinsfolk, closest relatives, tribe

அகராதியில் காணப்படும் அனைத்து பொருள்களையும் நாம் உற்று நோக்கினால் – ஆஷிர் என்ற சொல்லின் பொருள் – நெருக்கம், நெருங்கியிருப்பவை, நெருங்கிய தோழமை ஆகியவற்றைச் சுற்றியே இருக்கின்றன என்றே புரிகிறது.  இது ஏன் மொழிபெயர்ப்ப்புகளில் பிரதிபலித்திடவில்லை என்பதே எம் கேள்வி.

Monday, November 12, 2012

கருத்து வேற்றுமையை அங்கு வந்து கொட்டுகிறார்கள்.



பேஸ் புக்கில் சில முஸ்லீம்கள் இஸ்லாத்தைப் பற்றி அதிகமாக எழுதுவதோடு தங்களது கருத்து வேற்றுமையை அங்கு வந்து கொட்டுகிறார்கள். படமோ அதிகம் . இஸ்லாத்தின் உள்ள சிறப்புகளை சொல்வதில் சிறப்பு .சிந்தனை நமக்கும் நல்வழி காட்டுவதோடு மற்றவருக்கும் பயன்படத்தக்கதாக இருக்க வேண்டும்.  கடையில் உயர்ந்த, நிறைவாக சரக்கு இருப்பினும் சரியான முறையில் விற்பனை செய்யும் திறன் அற்றோர் இருப்பின் சரக்கு  விற்பனை ஆகாது தங்கி விடும்.

 இஸ்லாம் உயர்வானது என்று சொல்லும் நாம் அதனை முதலில் முறையாக தொடந்து செயல் படுத்துகிறோமா என்ற சுய சிந்தனை தன்னாய்வு வேண்டும் . வார்த்தைகள் விளையாடி பயன்தரா. செயல்பாடு சிறப்பு தரும் . அன்பு வழி நாடி செயலில் ஈடுபட முயல்வதே உயர்வு.

  வார்படம்கொண்டு  அச்சடிக்கும் வகையாக இல்லாமல் சொல்வதை சிறப்பாக மனதை தடவி விடுவதுபோல் ஒரு ஔடதமாக அமைய வேண்டும் .கவர்ச்சி வேண்டாம் கனிவு வேண்டும். சுவனம் மற்றும் நரகத்தையே பேசி இறைவன் தந்த இனிய கருத்துகள் எடுத்தாளப் படாமல் விடுபட்டுப் போகின்றன.