Wednesday, November 7, 2012

சீனா பயண அனுபவம்! - (பகுதி 7)

                                      [7] பயண அனுபவங்கள் – சீனா

எண்ணற்ற நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் எனது சீனப் பயண அனுபவங்களை தொடர்வதில் மகிழ்கின்றேன்.

இதற்காக தொலைப்பேசியிலும், மின்னஞ்சலிலும், வீடு தேடி வந்தும், என்னை நேரில் காணும் போதும் எனது எனது சீனப் பயண அனுபவங்களை தொடரச்சொல்லிக் அன்புடன் கேட்டுகொண்ட உறவினர்கள், நண்பர்கள், சகோதர, சகோதரிகள் என அனைவருக்கும் என் நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதிய தொழில் முனைவோருக்கு நல்லோதொரு வழிகாட்டியாக அமைய எல்லாம் வல்ல இறைவனின் நல்லருள் அனைவருக்கும் கிட்டட்டும் என்று பிரார்த்தனை செய்தவனாக மீண்டும் தொடர்கிறேன்...

சீன தேசத்தில் “Air-condition” சாதனங்களை தயாரிக்கக் கூடிய முதல் பத்து நிறுவனங்களில் ஒன்றாகிய குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்குச் சென்றேன்.

இங்கே பெரிய நிறுவனங்களைப் பொறுத்தவரையில் உலக சந்தைகளைக் கீழ் கண்டவாறு பிரித்துருப்பார்கள்



Europe

America

Middle East & North Africa

South East Asia

Australia & New Zealand

ஒவ்வொரு சந்தைகளுக்கும் ஒரு நிர்வாகி எனவும், அவர்களுக்கு கீழ் இரு உதவியாளர்கள் என்று பணியில் அமர்த்தி அவர்களின் பணியாக வாடிக்கையாளர்களின் தேவைகள் என்ன ? என்பதை ஆய்வு செய்தல், சந்தைகளின் நிலவரம், வாடிக்கையாளரின் தேவைகளுக்கேற்ப பொருட்களின் விலைகளை உறுதி செய்தல், வாடிக்கையாளர் எதிர்நோக்கும் அனைத்து தேவைகளையும் தயாரிப்பு பிரிவுக்கு எடுத்துச்சென்று வாடிக்கையாளர் - தான் பணிபுரியும் நிறுவனம் ஆகிய இருவருக்குமிடையே ஒரு பாலமாக இருந்து தகவல் தொடர்புகளை பரிமாறிக்கொள்வது, வாடிக்கையாளரின் தேவைகளை உரிய நேரத்தில் பூர்த்தி செய்வது  போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள்.

சீன நிறுவனங்களைப் பொறுத்தவரையில் வாடிக்கையாளர்களை வரவேற்கும் பண்புகள் மிகச் சிறப்பாகவே இருக்கும். எந்தவித பாகுபாடுகள், ஏற்றதாழ்வுகள் இருக்காது. அவர்கள் இந்தியாவிலிருந்து வந்தவராக இருந்தாலும் சரி அல்லது அமெரிக்காவிலிருந்து வந்தவராக இருந்தாலும் சரி ஒரே மாதிரியான வரவேற்பும், அணுகுமுறையும் இருக்கும். [ ஆனா நம்மாளுக வசதி படைத்தோருக்கு ஒரு அணுகு முறை எனவும், ஏழை எளியோருக்கு  மற்றொரு அணுகு முறை எனவும் இருப்பார்கள். குறிப்பாக திருமண வைபவத்தில் நடக்கும் வரவேற்பிலும், விருந்து உபசரிப்பிலும் இவற்றைக் கண்கூடாக் காணலாம். அதே போல் ஏழை வீடுகளில் நிகழும் இறப்புகளுக்கு சென்று வரும் கூட்டமும் குறைவாகக் காணப்படும் என்பதை நாம் மறுக்க இயலாது. ] வாடிக்கையாளர்களோடு தொடர்புகளை வலுப்படுத்தும் விதமாக  நட்புடன் பழகக்கூடிய அவர்களின் அணுகுமுறை என்னை வியக்க வைத்தன.

அடுத்தது அவர்களின்  சுறுசுறுப்பு, நேரந்தவறாமை போன்றவற்றை பற்றிக் குறிப்பிட வேண்டும். தங்களின் பொறுப்பின் கீழ் எடுத்துக்கொண்ட ஒவ்வொரு வேலைகளையும் விரைவாக முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் என்பதும் இதற்காக சுறுசுறுப்புடன் செயலாற்றி எடுத்துக்கொண்ட காலத்திற்குள் வேலைகளை விரைந்து முடித்துக் கொடுத்து தங்களின் மேலாளரிடம் பாராட்டுகளைப் அவ்வப்போது பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. [ இங்குள்ள சமூக அமைப்புகள் நடத்தும் கூட்டத்திற்கு நேரந்தவறாமையை கடைபிடிப்பதில் இருக்கும் இடைவெளியை கவனத்தில் கொண்டால், மிகப்பெரிய கிலோ மீட்டர் தூரத்தில் நாம் உள்ளோம் என்பதை மறுக்க இயலாது ]


அந்நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் தலைமை நிர்வாகியின் பரஸ்பரம் நலம் விசாரிப்பு போன்ற வாடிக்கையான வரவேற்பை முடித்துக்கொண்டு அமர்ந்து பேச இலகுவாக முதல் தளத்திற்குச் சென்றோம்...

சுவையான ‘கிரீன் டீ’ யை அருந்திக்கொண்டே எங்களின் பேச்சு சந்தை நிலவரம், எரிபொருள் மற்றும் காப்பர் போன்றவற்றின் விலையேற்றத்தைப் பற்றி அமைந்தது.

அப்போது எனது பேச்சு ‘எக்ஸ்க்ளுசிவ்’ பற்றி அமைந்தன.

அது என்ன Exclusvie  !?

சேக்கனா M. நிஜாம்

Source : http://nijampage.blogspot.in/



சீனா பயண அனுபவம்!
 சீனா பயண அனுபவம்! - (பகுதி 2)
 சீனா பயண அனுபவம்! - (பகுதி 3)
 சீனா பயண அனுபவம்! - (பகுதி 4) 
 சீனா பயண அனுபவம்! - (பகுதி 5)
 சீனா பயண அனுபவம்! - (பகுதி 6)

No comments: