மன்னன் அறையை சுத்தப்படுத்த சென்ற பெண் வேலையின் அயர்வினால் தன்னையறியாமல் மன்னனின் படுக்கையில் சாய்ந்து உறங்கிவிட்டாள் . மன்னன் தனது படுக்கையில் பணிப்பெண் உறங்குவதைக் கண்டு வெகுண்டு அவளுக்கு தண்டனையாக சாட்டையால் அடிக்க அப்பணிப்பெண் சிரித்துக் கொண்டே இருந்தாள்.
மன்னனுக்கு கோபம் அதிகமாக நான் அடிப்பது உடலில் நோவு தரவில்லையா! சிரிக்கின்றாயே என்றான்.
அதற்கு அப்பணிப்பெண் "சில துளி நேரங்கள் தூங்கியதர்க்கே இத்தனை சாட்டையடி ஆனால் காலமெல்லாம் நீங்கள் இதில் உறங்குகின்றீர்கள் உங்களுக்கு இறைவன் கொடுக்கப் போகும் தண்டனையை நினைதேன்,அதன் நிமித்தம் சிரிப்பு வந்தது" என்றாள்
மன்னன் தன் தவறை உணர்ந்து அப்பணிப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்டான்.இறைவனிடன் பாவமன்னிப்பு தேடி வேண்டினார்
இது ஒரு சரித்திர நிகழ்வு
மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள். அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்.
நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.-திருக்குர்ஆன் -4:36

1 comment:
கடவுளின்முன் ஏழை பணக்காரன் அனைவரும் சம்மே
Post a Comment