Friday, November 9, 2012

மீன் முருங்கைக்காய் குழம்பு

மீன் முருங்கைக்காய் குழம்பு
– அறுசுவை

தேவையான பொருள்கள்
மீன் – 1/2 கிலோ

முருங்கைக்காய் நறுக்கியது – 150கிராம்

மல்லித்தூள் – 100கிராம்

சிவப்பு மிளகாய் – 8கிராம்

மஞ்சள் தூள் – 2கிராம்

மிளகுத்தூள் – 4கிராம்

வெந்தயம் – 2கிராம்

தேங்காய் எண்ணெய் – 50மிலி

தேங்காய் – 1

வெங்காயம் – 300கிராம்

கொடும்புளி(Cocum) – 15கிராம்

உப்பு – தேவையான அளவு

தக்காளி – 80கிராம்

இஞ்சி, பூண்டு கலவை – 10கிராம்

கடுகு – 3கிராம்

கருவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு

சமையல் குறிப்பு விபரம்

செய்வது: எளிது
நபர்கள்: 4
கலோரி அளவு: NA
தயாராகும் நேரம்: 20 (நிமிடம்)

சமைக்கும் நேரம்: 30 (நிமிடம்)

முன்னேற்பாடுகள்:

1. மீனை நன்கு சுத்தப்படுத்தி தேவையான அளவில் நறுக்கிக் கொள்ளவும்.
2. துருவிய தேங்காய், மல்லித்தூள், சிவப்பு மிளகாய், மஞ்சள் தூள், வெந்தயம் மற்றும் மிளகுத்தூளை வறுத்துக்கொள்ளவும்.
3. மேற்கூறிய அனைத்தையும் நைசாக அரைத்து கொள்ளவும்.
4. கொடும்புளி (cocum) ஐ நீரில் நனைத்து ஈரமாக வைத்துக்கொள்ளவும்.
5. வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் நறுக்கவும்.

செய்முறை:

6. எண்ணெயை சூடாக்கி, கடுகைத் தாளித்து, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் முருங்கைக்காயை அதில் இட்டு வதக்கவும்.
7. பின்னர் இஞ்சி, பூண்டு கலவையையும் அரைத்த மசாலாவையும் சேர்த்து வதக்கவும்.
8. அத்துடன் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடி, கொடும்புளி(cocum), மீன், மற்றும் தேவையான அளவில் நீர் இட்டு மிதமான சூட்டில் சமைக்கவும்.
9. இப்போது தக்காளித் துண்டுகளைச் சேர்க்கவும்.
10. குழம்பு நன்கு சுண்டும் வரையில் மிதமான தீயில் சமைக்கவும்.
11. குழம்பை அடுப்பிலிருந்து இறக்கும் போது வறுத்த கறிவேப்பிலைகளை தெளித்து சூடாகப் பரிமாறவும்.

தொகுப்பு: அபூ ஸாலிஹா
மீன் முருங்கைக்காய் குழம்பு

நன்றி :http://www.satyamargam.com

1 comment:

சேக்கனா M. நிஜாம் said...

படிக்கும் போதே நா ஊறுகிறது :)

நல்லதொரு குறிப்புகள்

தொடர வாழ்த்துகள்...