இஸ்லாம் என்ற வார்த்தை "சலிமா" ( "Salema") என்றஅரபி வார்த்தையிலிருந்து வந்தது.
இஸ்லாம் என்றால் அமைதி, கீழ்படிதல், தூய்மை என பொருள்படும்.
இஸ்லாம் மார்க்க முறைப்படி இஸ்லாம் என்பது இறைவனது (அல்லாஹ்வின்) ஆணைக்கு கட்டுப்பட்டு அவனது வழிகாட்டுதலின் கோட்பாடுகளுக்கு இணைந்து நடப்பதே. இதில் சமரசத்திற்கோ மாற்றி அமைப்பதிற்கோ இடமில்லை . இஸ்லாமிய சட்டங்கள் இறைவனால் அருளப்பட்டது . மனிதனால் உறுவாக்கப்பட்ட சட்டமாக இருப்பின் தவறுகள் வரலாம் அதனை திருத்திக் கொள்ளலாம்
இஸ்லாம் மார்க்கம் பற்றி பேசும்போது மிக்க கவனம் அவசியமாகின்றது . இதில் சர்சை செய்வது கூ டாது .
இஸ்லாம் மார்க்கம் பற்றி நல்ல நோக்கத்தோடு ஆய்வு செய்வது . விளக்கம் கொடுப்பதும் உயர்வானதே! .
நான் பார்த்த 'தூத்துக்குடி விவாத வெற்றி விழா' அறிக்கை எதில் வருகின்றது!?
"யூத நச்சுக் கருத்துகளை விதைத்து வந்த" என்ற இந்த வார்த்தைகள் சரியா! கீழ் உள்ள அறிக்கையைப் பாருங்கள்
தீன் பெறுதல் ஞானம் பெறுதல்
தீன் பெறுதல் ஞானம் பெறுதல்
ஞானத்தின் திறவுகோல் நாயகம்
தீனைப் பெற்றோர் வெற்றிப் பெற்றோர்
தாவிச் சென்று தீனைப் பெற்று
தீனை விட்டு தானும் கெட்டார்
தீனில் தேடல் வழி தேடல்
இல்லாததை தீனில் புகுத்தி
தீனில் சொல்லாததை மனதில் நிறுத்தி
தீனையும் கெடுத்தார் தானும் கெட்டார்
தீனில் ஆய்வு கொள் அறிவு பெற்று இறைவனைத் தேடு
தீனில் வீண் விவாதம் செய்து தானும் கெட்டு மற்றவரையும் கெடுக்காதே
தீனில் வாதம் செய்து போட்டி போட்டு பெருமை கொள்ளாதே
தீனின் வாழ்வில் போட்டி இல்லை பொறாமை இல்லை
தீனில் உயர்ந்தோரில்லை தாழ்ந்தோரில்லை
தீனின் வாழ்வில் நிம்மதி உண்டு நிறைவு உண்டு மகிழ்வு உண்டு
ஏதுண்டு உம்மிடத்தில் என்பார் ?
ஏதுண்டு உம்மிடத்தில் என்பார்?
வேதமுண்டு எம்மிடத்தில் என்போம்
வேதத்தை உம்மனத்தில் நிறுத்தினாயா என்பார்?
பேதமை எம் மனதில் ஊன்றியதால் பொருள் விளங்காமல் போயிற்று
சேதம் வராமல் சேர்த்து வைத்தேன்
கல்லாமை கல் நெஞ்சம் உருவாகியது
சேதமின்றி பொருளறிந்து பெற்ற வேத அறிவு விளக்கம் கொடுத்தது
கல் நெஞ்சம் கருகி மேன்மையை அடைத்த உள்ளம் ஒளி வீச உணர்கின்றேன்
ஒற்றுமையில் சிக்குண்டி நம்மில் நாமே மோதுண்டோம் கல் நெஞ்சம்
ஒற்றுமையின் உயர்வை வேதம் காட்ட சிக்கல் அவிழ்ந்தது
புல்லுரிவிகள் புகழ் நாடி .பணம் நாடி நம்மை பிரித்தாளும் சக்தியை முறியடித்தோம்
வேதம் அறிந்து கல்விகற்று களையடுக்க வேண்டும்
அயலானின் ஆற்றலால் நம்மாற்றல் வீழ்ந்திடுமோ!
செயலானின் ஆற்றல் ஓய்ந்த்திடுமோ !
அறிவின் ஆக்கம் அனைத்தையும் வெல்லும்
'சீன தேசம் சென்ராயினும் சீர் கல்வியை நாடு' என நபி மொழி இருக்க
நக்குள்ளே ஒளிந்திருக்கும் ஆற்றல் ஒளியாய் வீச மற்றவர் நம் வழி நாடுவார்
ஒதுவோம் பொருள் அறிந்து ஓதுவோம்
ஓதிய வழியே வாழ்ந்து மறை ஒளி மிளிரச் செய்வோம்
இறைவன் காட்டிய வழி வாழ்வின் நன்னெறி
இறைவனைத் தொழுது நிறைவு கொள்வோம்
முகம்மது அலி ஜின்னா ('நீடூர் அலி')
2 comments:
தகவலுக்கு நன்றி
ஒன்றை எதிர்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதையே மறந்து செயல்படுகிறார்கள். தாங்கள் சுட்டிக்காட்டியதுபோல் அறிவுபூர்வமாக எதையும் அணுக வேண்டும். மேலும் நாம் செய்யும் இந்த செயல் குர்ஆன் ஹதீசுக்கு முரண்படாமல் இருக்கிறதா என்று சிந்தித்து செயல்பவேண்டிய மவ்லவிகள் நாம் சொன்னால் மக்கள் ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவது சரி அல்ல.
Post a Comment