நீல நிறத்தில் உள்ள ரயில்கள் சரியான நேரத்திலும், சிவப்பு வண்ணத்தில் அம்புக்குறியிட்ட ரயில்கள் கால தாமதமாகவும் இயங்குகின்றன.
மஞ்சள் வண்ணத்தில் உள்ள கோடு ரயில் செல்லும் பாதையைக் குறிக்கிறது.
ரயில் இயங்குவது பற்றிய தகவல்கள். நான் பாட்னாவில் இருந்து சென்னை வழியாக பெங்களூரு வரும் சங்கமித்ரா விரைவு வண்டியைத் தேர்ந்தெடுத்தேன்.
ரயில் ரேடார் [RailRadar] எனப்படும் இந்த வசதியை இந்திய ரயில்வே நிர்வாகம் சென்ற புதன் கிழமையன்று கூகுல் மேப்பில் அறிமுகப் படுத்தியுள்ளது. ரயில்வே இயக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்ப்பட்ட வண்டிகளில் 6500 வண்டிகள் தற்போது இந்த வசதியில் சோதனை முறையில் சேர்க்கப் பட்டுள்ளன, விரைவில் எல்லா வண்டிகளும் சேர்க்கப் படும்.
இதைப் பயன்படுத்த எந்த வண்டியின் பெயரையோ, நம்பரையோ நினைவில் வைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அது புறப்படும் இடம் சேரும் இடத்தை உள்ளிட்டாலே போதும், அதற்கிடையே ஓடும் எல்லா வண்டிகளும் காண்பிக்கப் படும், நீங்கள் அவற்றில் தேவையானதை தேர்ந்தெடுத்து அது குறித்த தகவல்கள் [புறப்படும்/சேரும் நேரங்கள், வண்டி செல்லும் வழி, நிற்கும் நிலையங்கள்/நேரங்கள், சரியான நேரத்தில் இயங்குகிறதா/கால தாமதம் எவ்வளவு, நிலையத்திற்கு எந்த நேரத்துக்கு வரக்கூடும் முதலான தகவல்கள்] அத்தனையும் பெறலாம்.அல்லது கூகுள் மேப்பில் ஏதாவது ஒரு ரயில் நிலையத்தை ஜூம் செய்து பெரிதாக்கினாலே போதும் அங்கிருந்து செல்லும் வண்டிகள் அத்தனையும் காண்பிக்கும், அவற்றில் உங்கள் ரயிலைத் தேர்ந்தெடுத்தும் பார்க்கலாம்..http://railradar.
தமிழ் தாயகத்துக்காக
குரு ஐயப்பன்
அன்புடன் மின் அஞ்சல் வழி தகவல் தந்தவர் :
என்றென்றும் அன்புடன்
அபு ஜைனப் (ஹாஜா மொஹைதீன்)
1 comment:
Usefull Information...!
Post a Comment