Saturday, November 17, 2012

சற்று சிந்தியுங்கள் !

பிறப்பது உறுதியில்லை இறப்பது உறுதி!

இருக்கும் வரை பெயர் சொல்லி அழைப்பார்கள். இறந்த பின் அவருக்கு வரும் பெயர் 'உடல்' 'பிணம்' 'மையித்'. அவர் அல்ல அது .
அது நம்மை கடந்து செல்லும்போது யாராக இருந்தாலும் எழுந்து நின்று மரியாதை செய்வது நம் கடமை .
மனிதனின் தீர்ப்பு தவறாக இருக்கலாம் .இறைவன் தீர்ப்பு தவறாக இருக்க முடியாது
 அல்லாஹ் தனது திருமறையிலே அல்அஸ்ர் எனும் 103 வது அத்தியாயத்தில், எந்தக் காலத்தை மனிதன் வீணடித்துவிடக்கூடாதோ அந்த காலத்தின்மீது சத்தியமிட்டு கூறுகின்றான்.
''காலத்தின் மீது சத்தியமாக, மனிதன் நட்டத்திலிருக்கிறான். எவர்கள் விசுவாசங்கொண்டு நற்கருமங்களைச் செய்தும், சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும், பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அத்தகையோரைத் தவிர''

 மரணம் ... ஒவ்வொரு ஆத்துமாவும் மரணத்தை சுவைத்தே தீரும் !

.ஒருவர் தவறு நமக்கு வழி காட்டியாக முடியாது.
இறந்த உடலை திட்டுவது நமது பண்பாடு அல்ல .
இறைவன் முற்றும் அறிந்தவன்

"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும். (திருக்குர்ஆன் 42:43)

“இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன். ”(திருக்குர்ஆன் 24:22)



 சேக்கனா M. நிஜாம் says...

மரணத்தின் நிலைக்கு வந்துவிட்டால்........

1. இனி நீங்கள் மையித் என்ற பெயரில் அழைக்கப்படுவீர்கள்!

2. அனைவரும் அறிந்துகொள்ள வேண்டி, அனைத்து மஸ்ஜித்களிலும் உங்களின் மரண அறிவிப்புத் தகவல் அறிவிப்புச் செய்யப்படும்!

3. உங்கள் உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் என அனைவரும் வருகை தந்து, உங்களின் மையத் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் (“சலாம்”) எனக் கூறுவார்கள்.

4. சுத்தமான முறையில் குளிப்பாட்டப்படுவீர்கள்.

5. ஏறக்குறைய 12 மீட்டர் அளவுள்ள வெள்ளைத் துணியால் கஃபனிடப்படுவீர்கள்!

6. வீட்டிலிருந்து “சந்தூக்” எனும் பெட்டியில் உங்களை (மையத்தை) வைத்து கப்ர்ஸ்த்தான் நோக்கிக் கொண்டுச் செல்லப்படுவீர்கள்.

7. கப்ர்ஸ்த்தானில் ஆறு அடி நீளம், முன்று அடி அகலம், ஐந்து அடி ஆழத்தில் வெட்டப்பட்ட குழியில் அடக்கம் செய்யப்படுவீர்கள்!

8. “உன் இறைவன் யார்? உன் மார்க்கம் எது? உன் வழிகாட்டி ( நபி ) யார்?

போன்ற கேள்விகள் கேட்கப்படுவீர்கள்! பதில் சொல்லத் தயாராகுங்கள்!

“உங்களுக்காக தொழுகை வைக்கப்படும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்!”

என்ற அறிவிப்புப் பலகை வாசித்த நினைவு உண்டுதானே ?

No comments: