Wednesday, November 21, 2012

இதுதான் கொலை உலகம் !

ஆயுதங்கள் விற்பனைக்கு பல நாடுகள் போட்டி !
இதுதான் கொலை உலகம் !
நாம் கலை  வளர்த்தோம் என்று பெருமை பேசுவோம் . மக்கள் தொண்டே எங்கள் கொள்கை என மார்தட் டிக்கொள்வோம்   . ஆனால் நடப்பது என்ன ?  பதவி வெறி, பண மோகம், மண் ஆசை ஜாதி,இன வெறி மற்றும் பல தோற்றங்களில் வரும் கொலை வெறி  இது தொடர்ந்து வருகின்றது  . இது இந்த நாகரிக உலகத்திலும் பாதிக்க படும் அவல நிலை . எத்தனை புகழ் வாழ்ந்த தலைவர்கள்  கொலை செய்யப்பட்டனர். மனிதன் நல்லவன் மக்கள் கொடியோர் என்பர். தனி மனிதன் அல்லது மக்கள் கொடியோர் அல்ல . இவர்களால் தூண்டப்பட்ட ஆசைதான் மிகவும் கொடிய சக்தி . ஒரு தலைவன் வீழ்த்தப் பட்டால் அதன் விளைவால் வீழ்ந்த தலைகளும் நாடும் அதிகம் . இது காலம் தொட்டு நடந்து வரும் கொடுமை .இதன் விளைவால் சில சரித்திர புகழ் பெற்ற,  மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட மாமனிதர்களை நாம் பாப்போம் . இவர்கள் நினவு நம் மனதில் காலமெல்லாம் இருந்துக்கொண்டே இருக்கும்.
மஹாத்மா காந்தி அன்பு வழியில், அகிம்சை வழியில் இந்திய நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த தேசத் தந்தை
ஆபிரகாம்  லின்கன் -அமரிக்காவின்   16 ஜனாதிபதி (ப்ரெசிடென்ட் 1861 முதல்  ஏப்ரல் 1865.வரை.அடிமை முறையை ஒழிக்க அயராது பாடுபட்டவர் .


ஜான்  F. கென்னெடி  (1917 – 1963)
 
 மார்டின்  லூதர்  கிங் , Jr.தனது இள வயதில் 1964, அமைதிக்கு நோபெல்  பரிசு வாங்கியவர். ஐக்கிய அமெரிக்காவில் சமூக உரிமைக்காக போராடிய மாபெரும் மனிதர்“என் சவ அடக்கத்தின்போது என்ன பேசப்பட வேண்டும்? இன்று காலை அதைப்பற்றிச் சில வார்த்தைகளைச் சொல்ல விரும்புகிறேன்.

தன் சவ அடக்கத்தின்போது என்ன பேச வேண்டும் என்பதை மார்ட்டின் லூதர் கிங் இவ்வாறு கூறியுள்ளார்.”என் சவ அடக்கத்தின்போது நீண்டபொழுதைச் செலவிட வேண்டாம். சீக்கிரமே அது நடந்து முடியட்டும். என் சவ அடக்கத்தின் இறுதிக்கட்டமாக அனுதாப வார்த்தைகளைப் பேசுவதற்காக சிலரை நீங்கள் அழைத்து வரும்போது நீண்ட நேரம் பேசவேண்டாம், சுருக்கமாக உங்கள் உரை இருக்கட்டுமென்று அவர்களிடம் சொல்லுங்கள்.உலக அமைதிக்காகப் பாடுபட்டதற்காக எனக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி எதுவும் குறிப்பிட வேண்டாம், அது அவ்வளவு முக்கியமில்லையென்று அவர்களிடம் சொல்லுங்கள்.
அந்த நாளில் பசித்தவர்களுக்கு உணவளிக்க நான் பாடுபட்டேனென்று நீங்கள் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன். நிர்வாணமாக நின்றவர்களுக்கு எல்லாம் உடையளிக்க உயிர் உள்ளவரை உழைத்தவன் நானென்று அந்தாளில் என்னைப்பற்றிக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன். சிறையில் வாடியவர்களை எல்லாம் உயிர் உள்ளவரை நான் தேடிச்சென்று பார்த்து ஆறுதல் கூறியவன் என்று நீங்கள் என்னைப்பற்றிக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன்.மனித குலத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவன் நானென்று அந்த நாளில் என்னைப் பற்றி நீங்கள் குறிப்பிட வேண்டும். நீதிக்காகத் தமுக்கடித்தவன் நானென்று தாராளமாகச் சொல்லுங்கள். உலக அமைதிக்காக தமுக்கடித்தவன் நானென்று சொல்லுங்கள்.”
 பெனசிர்  புட்டோ  ( 1953 – 2007) : பாகிஸ்தான்.

எதற்கு எடுத்தாலும் அமரிகாவை புலன் விசாரணை நடத்த அமெரிக்காவை  அதிலும் குறிப்பாக எப்.பி.ஐ., விசாரணை நடத்த வலியுறுத்தப்படுவர்  கடைசியில் ஒரு வகையாக முடிக்கப் படும் . காலம் ஓடும் .மக்கள் மறந்து விடுவர் காரணம் அடுத்த கொலை நிகழ்வு உலக நிகழ்வில் பரபரப்பாக பேசப்படுவதால் !

இதுதான் கொலை உலகம்! இப்பொழுது பல நவநாகரீக  ஆயுதங்கள் விற்பனைக்கு  பல நாடுகள் போட்டி போடுகின்றனவே !

இன்னும் பலர் . ....

No comments: