Monday, November 12, 2012

பெயர் வைத்த காரணம்!


1941ஆண்டு ஏப்ரல் 12 மதராசில் முஸ்லிம் லீக் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டிற்கு காயிதே அக்லம் முகம்மது அலி ஜின்னா கலந்து கொண்டார்கள். எனது தகப்பனார் நீடுர் .ஹாஜி .சி .ஈ அப்துல் காதர் சாகிப் அவர்கள் மாயவரத்திலிருந்து மதராசுக்கு தனி ரயில் வண்டி ரிசர்வ் செய்து மாயவர சுற்று வட்டார இஸ்லாமிய மக்களை அழைத்துச் சென்றார்கள்.மதராஸ் முஸ்லிம் லீக் மாநாடு நடந்த அன்று எனது அன்புத் தங்கை பிறந்ததால் அந்தப் பெயர் எனது அன்புத் தந்தையால் பாத்திமா ஜின்னா எனப் பெயர் வைத்தார்கள்.காயிதே அக்லம் முகம்மது அலி ஜின்னாஅவர்களின் தந்கையின் பெயர் பாதிமாஜின்னா. அவர்களும் அந்த மாநாட்டில் கலந்துக் கொண்டார்கள்.
காயிதே ஆஸம் முகமதலி ஜின்னா அவர்களின் மீது கொண்டிருந்த மட்டற்ற மதிப்பும் மரியாதையை நிலைப்படுத்த 1938ல் நான் பிறந்ததும் எனக்கு முஹமதலி ஜின்னா என்று பெயர் சூட்டினார்கள். எங்கள் ஊரிலேயே முதன் முதலாக "முஹமதலி ஜின்னா" என்று பெயர் சூட்டப்பட்டது எனக்குத்தான்.

நன்றாக படித்துப் பாருங்கள் எனது தகப்பனார் அவர்கள் கைப்பட எழுதியது முஸ்லிம் லீக் மாநாடு பற்றியும் மற்றும் பல செய்திகள்

" பாத்திமா ஜின்னா பிறந்தது மதராஸ் முஸ்லிம் லீக் மகாநாடு நடந்த சமயம் "

1 comment:

சேக்கனா M. நிஜாம் said...

தங்களின் சமூகப்பணி சிறக்க என் வாழ்த்தும் / துஆவும்....