கவலை மின்சாரம் போல் வந்து போகும் அது தற்காலிகமானதாக இருக்கலாம் .அதுவே தொடர்ந்தால்
மனோநிலை யில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவரிடம் போக வேண்டியதுதான்
செல்வம், தோற்றம், குழந்தைகள், வீடு, மற்றும் திறமைகள் அனைத்தும் நாம் பெற்றிருந்தும் கவலை ஏன் மனதில் ஆட்டிப்படைகின்றது. பேராசை பெற்ற மனம் இன்னும் அதிகமாக அடைய முயலுகின்றது . அதிகம் பெற முயல்வது நன்மையை நாடி இருப்பின் தவறில்லை. ஆனால் அது அடுத்தவருடன் கணக்குப்போட்டு நமக்குள் ஓர் சோகம் வந்து ஒட்டிக்கொள்வதின் காரணமென்ன. அது மனதில் நிறைவு வராமல் வாட்டிப் படைப்பதுதான். நம்மையே நினைத்து காலத்தை ஒட்டுகின்றோம் நம்மை விட தாழ்ந்தவர் கோடானுகோடி இருப்பதனை நினைவிற்கு கொண்டு வருவதில்லை.
" நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக"
(குர்ஆன் 7:144)
வறுமை உன்னை வாட்டுக்கின்றதா அதனால் வேதனை உன்னை துவள வைக்கின்றதா வருந்தாதே . நல்ல வழியில் முயற்சி செய். சோர்வு உன்னை முடக்கிவிடும். இறைவனை நம்பு உன் கடமையை செய். கிடைப்பது கிடைக்க வேண்டிய நேரத்தில் உனக்கு கிடைக்கும். உன்னைப்போல் அநேகர் உனக்கும் கீழ் பலர் . அதனை நினைவு கொள்
உனக்கு கிடைத்த காலத்தை பயன்படுத்திக்கொள். முழு கவனமும் அதில் இருக்க வேண்டும் ஆனால் ஒரு போதும் கவலை வர கூடாது.
இறைவன் நமக்கு தாங்கும் அளவுக்குத்தான் சிரமம் தருவான். ஒரு போதும் அது நிலையாக இருந்து விடாது. துன்பத்திற்குப் பின் நிச்சயம் மகிழ்வு உண்டு.
“நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.” (Chapter 94, Verse 6)
No comments:
Post a Comment